23 மார்ச், 2016

டிவி விவாதம்

இந்த தேர்தலின் ஸ்பெஷல் காமெடியே டிவிக்களில் நடைபெறும் விவாதங்கள்தான். மிக சீரியஸான பாவனையில் நடத்தப்படும் இந்த காமெடிஷோக்களில் குறிப்பாக அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என்று பட்டங்கள் கொடுக்கப்பட்டு விவாதிக்கும் தேங்காய்மூடி பாகவதர்கள்தான் ஸ்பெஷலோ ஸ்பெஷல். ஒன்றுமே இல்லாத சப்பை மேட்டரை, அவர்களுடைய உள்மன விருப்பங்களை ஏதோ பெரிய வரலாற்றுப் பின்னணியோடு அரசியல் ஆய்வுகளை நடத்தி முடித்த பாவனையில் சிறுபத்திரிகை மொழி ஸ்டைலில் ஜாங்கிரி பிழிகிறார்கள். உரித்துப் பார்த்தால் ஒன்றும் தேறாது.

டிவி விவாதங்கள் எப்படி நடைபெறுகிறது என்று உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் ஸ்னாப்.

தங்கராஜ் போண்டா (நெறியாளர்) : நீங்க சொல்லுங்க. மக்கள்நலக் கூட்டணியோடு தேமுதிக சேர்ந்திருக்கு. பழம் விழுந்திருப்பது பாலிலா அல்லது பாமாயிலிலா?

பெருமாள் சனி : இது நிச்சயமா அதிமுகவுக்குதான் சாதகம். நாம இங்கே நடத்த வேண்டிய விவாதமே அதிமுக எப்படி ஜெயிக்கும், திமுக எப்படி தோக்கும்னுதான். இதுலே பார்த்தீங்கன்னா கேப்டன் ரெண்டு விஷயத்தை தெளிவுப் படுத்தியிருக்காரு. அதைதான் யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க. ஒண்ணு, அவரு மக்கள்நலக் கூட்டணியோடுதான் கூட்டு சேர்ந்து போட்டியிடறேங்கிறதை தெளிவா சொல்லியிருக்காரு. இதை ஏன் யாரும் பேசமாட்டாங்கறாங்கன்னு எனக்கு தெரியலை. இன்னொண்ணு திமுக கூட்டணியில் அவர் இல்லேங்கிறதை ரொம்ப தெளிவா சொல்லியிருக்காரு. அவர் சொன்னதை அப்படிதான் புரிஞ்சுக்க முடியும். அதிமுகதான் ஜெயிக்கும். 1967லேயும் அப்படிதான் நடந்தது.

போண்டா : சமந்த் சார், அதிமுகதான் ஜெயிக்கும்னு அவரு சொல்லுறாரு. நீங்க என்ன சொல்றீங்க?

சமந்த் சி. லட்சுமணன் : அவரு சொல்றதை அப்படியே ஏத்துக்க முடியாது. ஏன்னா பொலிடிக்கல் சினாரியோ ரொம்ப மாறியிருக்கு. நான் என்ன நினைக்கிறேன்னா அதிமுகதான் எலெக்‌ஷனில் ஜெயிக்கப் போவுது. பார்லிமெண்டில் பிஜேபி ஜெயிச்சது. ஆனால் தமிழ்நாட்டில் பிஜேபி சொல்லிக்கறமாதிரி இல்லை என்பதால் திமுக தோற்கணும்னா அதிமுகதான் ஜெயிக்கணும். அப்படிதான் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பேசுது. மக்கள் இந்த அடிப்படையில்தான் ஓட்டளிக்கப் போறாங்க. அமெரிக்காவிலும் அப்படிதான் நடக்கப் போவுது. ஐரோப்பாவிலே கூட....

போண்டா : நீங்க வேற விவாதத்துக்கு போறீங்க. அதிமுக ஜெயிக்கும் என்று பெருமாள் சனி சொல்கிறார். அவரை மறுத்து அதிமுகதான் ஜெயிக்கும் என்று சமந்த் சி.லட்சுமணன் சொல்கிறார். இப்படி இருவேறு கருத்துகள் இந்த விவாதத்தில் முன்வைக்கப்படுகிறது. யார் ஜெயிப்பார்கள் என்று சின்ன விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்ப்போம்.

(விளம்பரம் ஒளி-ஒலிபரப்பாகிறது : அதிமுக அமோக வெற்றி. தத்தி டிவியின் மாபெரும் கருத்துக் கணிப்பு. நாளை இரவு 7.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்)

போண்டா : மக்கள்நலக் கூட்டணியின் முடிவு திமுகவுக்கு பாதிப்பா, அதிமுகவுக்கு அனுகூலமா என்கிற இந்த விவாதத்தில் புது விருந்தினர் சேர்ந்திருக்காங்க. மக்கள், அதிமுக வெற்றி பெறும், அதிமுக அமோக வெற்றி பெறும்னு இருவேறு கருத்துகளை சொல்லிக் குழப்பறாங்க. பேனு ஜேம்ஸ், நீங்க இதை ஒத்துக்கறீங்களா?

பேனு ஜேம்ஸ் : அப்படி சொல்ல முடியாது. நாம முக்கியமா பார்க்க வேண்டிய விஷயம் இங்கே ஒண்ணு இருக்கு. டெல்லியிலே கேஜ்ரிவால் வின் பண்ணியிருக்காரு. அதுமாதிரி இங்கே விஜயகாந்த் வின் பண்ண மாட்டாரு என்பதால் அதிமுகவுக்கு எட்ஜ் இருக்கு. ஆனா காஷ்மீர் எலெக்‌ஷன் ரிசல்ட்ஸை நாம இங்கே கம்பேர் பண்ணி பார்க்கணும். அப்புறம் வெஸ்ட் பெங்கால்லே என்ன நடந்ததுன்னு பார்த்தோம்னாதான் எப்படி இங்கே ஏடிஎம்கே நிச்சயமா வின் பண்ண போகுதுங்கிறதை விளக்கமா சொல்ல முடியும்.

போண்டா : விவாதத்தையே வேற பரிமாணத்துக்கு கொண்டு போயிருக்கீங்க. பத்திரிகையாளர் பணி சார், நீங்க சொல்லுங்க. உங்க அனுபவம் என்ன சொல்லுது?

பணி : இவங்க மூணு பேரு சொல்றதையும் அப்படியே ஏத்துக்க முடியாது. அப்படியே நிராகரிக்கவும் முடியாது. கேப்டன் நிச்சயமா கருணாநிதியை தோக்கடிச்சிருக்காரு. ஆனா கேப்டன் ஜெயிக்கலே. ஜெயலலிதா, கருணாநிதியை 2011, 14னு ரெண்டு எலெக்‌ஷனில் ஜெயிச்சிருக்காங்க. 2016ம் அப்படிதான் இருக்கும்னு கெஸ் பண்ண முடியுது. பட், இன்னும் நிறைய டைம் இருக்கு. அந்த டைமெல்லாம் முடிஞ்சப்பவும் ஏடிஎம்கேதான் ஜெயிக்கும்னு யூகிக்கிறது ஒண்ணும் பெரிய பெட் இல்லை.

போண்டா : நிகழ்ச்சியை முடிக்க வேண்டிய நேரம் வந்துடிச்சி. கடைசியா ஒரு வரியிலே உங்க இறுதிக்கருத்தை சொல்லுங்க.

பெருமாள் சனி : ஏடிஎம்கே ஜெயிக்கும்

பேனு ஜேம்ஸ் (ஆவேசமாக) : இதை நான் மறுக்கறேன். அதிமுக வெற்றி பெறும்.

சமந்த் சி.லட்சுமணன் : நோ, நோ. என் பொலிட்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸை வெச்சு சொல்றேன். இவங்க ரெண்டு பேரும் சொல்றது தப்பு. ஏடிஎம்கே ஆட்சியமைக்கும்னுதான் மக்கள் நினைக்கறாங்க. நானும் நம்பறேன்.

பணி : மூணு பேரும் மூணுவிதமா பேசுறாங்க. மக்கள் பேசுறதைதான் பத்திரிகையாளன் பேசமுடியும். அதிமுக வெல்லும். ஆனா இப்பவே நான் இதை கமிட் பண்ணிக்க விரும்பலை.

போண்டா : நாலு பேரும் நாலு வெவ்வேறு கருத்துகளை சொல்லியிருக்காங்க. மக்கள் என்ன கருத்தை சொல்லுறாங்கன்னு மே 19 வரைக்கும் காத்திருப்போம். நன்றி!

9 கருத்துகள்:

 1. பேனு ஜேம்ஸ் இது பி ஜே பி சார்புடையவர் .இவரை சமூக ஆர்வலர் என்று சொல்லி வருவதால் யார் நம்புவர்

  பதிலளிநீக்கு
 2. திமுக வின் நிரந்தர ஆதரவாளன் என்ற முறையில்
  சொல்கிறேன்.பத்திரிகை,போலீஸ்,அதிகார வர்க்கம்
  இந்த மூன்றுமே ஆத்தாவை பார்த்ததும் பேதியாவதன்
  குறைந்தபட்சம் ஒன்னுக்கு போவதன் மர்மம் என்ன?
  பார்ப்பனீயம் என்று ஜல்லியடிக்க வேண்டாம்.
  இந்த மூன்று துறைகளிலும் ஊடுருவி நிற்கும்
  பார்ப்பனியம் மறுக்க இயலாத ஒரு காரணி.
  அதை தாண்டி பயம்.ஆம் பயம் தான் மூல காரணம்.
  ஆத்தாவுக்கு எதிராக ஒரு துரும்பை
  கிள்ளி போட்டாலும்ரிவிட் நிச்சயம்
  என்ற அச்சமே அத்தனைக்கும் காரணம்.
  ஜெயா புடவை உடுத்திய ஆம்பள.

  நம்ம தலைவருக்கு அதெல்லாம் ரொம்ப தூரம்.
  கட்சிக்காரன் மேல நடவடிக்கை எடுக்கவே ஒரு
  மாமாங்கம் யோசிப்பாரே.உங்க மனசாட்சி கட்டாயம்
  இதை ஒத்து கொள்ளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. She will lose if she has not done good to people. Simple. These arguments are baseless for a person like me. Parpaniyam ellam iththu pona arguments. Now there are many non brahmins in very high post. Having more power. If they are addict to another paapaan and his tricks, that is their mistake. Try to correct them. Not any paapaan. Paapaan maara maattan. Seththa viduvaan doctor, seththaalum vida mattaan paapaan.

   Amma is CM bcoz people voted. Not because of 3% brahmins in TN.

   Avar katchi aalu mela natavatikkai etuthaa enna etukkalainaa enakkenna ? Rivet adicha ennakenna illatti enakkenna ? Atha vechu ennaala vote poda mutiyaathu. My vote will change based on circumstances. I will vote kaliagnar one time. Amma another time. If needed Captain also.

   நீக்கு
 3. கொண்டித்தோப்பு கடா குமார் என்ன சொல்லவர்றாருனா....அது சரி கடா குமார். நிரந்தர ஆதரவாளர்னு சொல்லுற கட்சிக்கு முன்னாள் அ.வைப்போட மறந்துட்டீங்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடிமைகளின் கூடாரத்தில் என்னை நினைத்து
   பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது?
   எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?

   நீக்கு
 4. ji first of all let me know how these guys are given the names as political commentators... who authorised them as political commentators...sumant was conducting quiz programmes in sports....

  பதிலளிநீக்கு
 5. ji first of all let me know how these guys are given the names as political commentators... who authorised them as political commentators...sumant was conducting quiz programmes in sports....

  பதிலளிநீக்கு
 6. பெரும்பாலான இந்திய ஊடகங்களின் பிடி
  பார்ப்பனர்களிடம் இருக்கிறது. அவர்கள்
  தன்னியல்பாக ஜெயலலிதாவையும்
  பாஜகவையும் ஆதரிப்பவர்கள். அதனால்தான்
  சொந்த கட்சி அலுவலகத்துக்கு ஆண்டுக்கு
  இருமுறை வரும் ஜெயலலிதாவை சிறந்த நிர்வாகி
  என பல்லண்டுகாலமாக மக்களை நம்ப வைத்தார்கள்.

  ஜெயலலிதாவை நல்லவராக காட்டுவது என்பது
  கருவாட்டை மீனாக மாற்றுவதைக்காட்டிலும் சிரமம்.
  அதனால்தான் அவருக்கு எதிரணியில்உள்ள
  கருணாநிதியை மிக மோசமானவராக காட்டி
  ஜெயாவின் கோட்டை சிறியதாக்க முற்படுகிறார்கள்.
  மேலும் ஒரு காலத்தில் பார்ப்பன ஆதிக்கம்
  ஒழிக்கப்பட காரணமான பெரியாரின் குழுவில்
  இருந்தவர் எனும் பரம்பரைப் பகை இவர்களுக்கு
  இப்போதும் தொடர்கிறது.(பாஜகவோடு கூட்டு
  சேர்ந்த பிறகும், ராமானுஜர் கதை எழுதியபிறகும்)
  ராஜாஜிக்குப் பிறகு நமக்கு வாய்த்த சொத்து
  ஜெயலலிதா என்று சோ பூரித்து போவது
  இதனால்தான்.

  ஊடகங்கள் கிட்டத்தட்ட முற்றான
  பாஜக அதிமுக சார்பு நிலையில் இருக்கின்றன.
  ஜெயாவின் எதேச்சதிகாரத்தால் பார்ப்பனர்களுக்கும்
  இழப்புக்கள் ஏற்படுகிறது, ஆனால் ஜெயா அவர்களது
  சாதி ஆதிக்கத்தின் முகம் என்பதால் சகித்து கொள்வார்கள்.
  தமிழ்வழிக் கல்வி, தமிழில் அர்ச்சனை,
  சமூகநீதி போன்ற திராவிட இயக்க கொள்கைகளில்
  திமுக பெயரளவுக்குத்தான் செயல்படுகிறது என்பது
  தமிழ்தேசிய மற்றும் சில இந்நாள் & பழைய
  இடதுசாரி இயக்கத்தவர்கள் குற்றச்சாட்டு.
  பெயரளவுக்குக்கூட செயல்படுபவர்கள் இருக்ககூடாது
  என்பது பார்ப்பன லாபியின் அஜெண்டா அதனால்தான்
  எத்தனை இணக்கமாக செயல்பட்டாலும் திமுகவை
  ஒழித்துக்கட்ட அவர்கள் முனைகிறார்கள்.
  (மேலே உள்ளது தோழர் வில்லவன் பதிவிலிருந்து.நன்றி!)

  சின்னகுத்தூசி பிறப்பால் ஒரு பார்ப்பனர்.
  ஆனால் பார்ப்பனீயத்துக்கு எதிராக இறுதிவரை
  எழுதி வந்தார்.தன்னை ஒழித்துகட்ட துடிக்கும்
  சோ வீட்டு திருமணத்திற்க்கு ஓடி செல்லும்
  கலைஞர் கடைசிவரை அவரை பெரிதும் நேசித்த
  சின்ன குத்தூசிக்கு உரிய மரியாதையை
  கொடுக்கவில்லைஎன்பது பெரும் வருத்தம்.

  அனானி நண்பருக்கு,உடுமலைபேட்டையில்
  கொல்லப்பட்டவன் தன்னைவிட தாழ்ந்தவன்
  என்பது வெட்டியவனின் ரத்தத்தில் காலம்
  காலமாக ஊறிப்போன விஷயம்.
  காரணம் ரொம்ப சிம்பிள்.
  உங்கள் மனு தர்மம். அது உங்களுக்கும் தெரியும்.

  பதிலளிநீக்கு
 7. KONDI IYYAH BRAHMINS WOULD NEVER INDULGE IN MURDERS FOR INTERCASTE MARRIAGE
  MOST OF THEM DO NOT CHEAT
  MOST OF THEM NEVER HATE OTHERS THOUGH THEY MAY NOT CARE
  MOST OF THE BRAHMINS ARE NOT SUPERSTICIOUS
  THEN WHY HATE BRAHMINS BRO

  பதிலளிநீக்கு