24 அக்டோபர், 2014

கத்தி கத்தி பேசும் கத்தி

கொல்கத்தா ஜெயிலில் இருந்து கத்தி தப்பிக்கும் முதல் காட்சி. சட்டென்று ‘முப்பது நிமிடங்களுக்கு முன்னால்’ போடும் ட்விஸ்ட் கொடுக்கும் லாவகம். ‘அடடே! துப்பாக்கியை மிஞ்சிடும் போலிருக்கே’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், மசமசவென்ற திரைக்கதையால் அப்படியே சரிய வைத்துவிட்டார் முருகதாஸ். ஜீவானந்தத்தை கதிரேசன் முதன்முதலாக பார்க்கும் காட்சி எப்படிப்பட்ட ப்ளாக். ஆனால் ரொம்ப சாதாரணமாக ‘அட என்னை மாதிரியே இருக்கானே?’ என்று 1965ல் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ டபுள் ஆக்‌ஷன் ரோல் சீன் மாதிரி ரொம்ப சப்பையான பிரசண்டேஷன். கத்தியும் ஹீரோயினும் முதன்முதலாக சந்திக்கும் காட்சிகள். கத்தியின் காமெடி போர்ஷன் எல்லாம் எவ்வளவு ஜவ்வென்று மனசாட்சியுள்ள நீதிபதி குன்ஹா படம் பார்த்தால் நேர்மையாக தீர்ப்பளிப்பார்.

ஜெயிலுக்குள் ப்ளூப்ரிண்ட் பார்த்து கத்தி ஸ்கெட்ச் போடும் பர்ஸ்ட் சீன் செமை என்றால், அதே கத்தி செகண்ட் ஹாஃபில் மெட்ராஸின் ப்ளூப்ரிண்டை கேட்கும்போது தியேட்டரே வெடிச்சிரிப்பில் வெடிக்கிறது. அந்த ப்ளூபிரிண்ட் காமெடி முடிவதற்குள் அடுத்த காமெடி. மொத்தமாக போய் எல்லாரும் தண்ணீர் வரும் பிரும்மாண்ட குழாய்க்குள் அமரும் போராட்டத்தை தொடங்குகிறார்கள். இந்த ஐடியா மட்டும் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பே ‘லீக்’ ஆகியிருந்தால், மக்கள் முதல்வரை கர்நாடக அரசு விடுதலை செய்யக்கோரி இதே போராட்டத்தை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தலைமையில் திரையுலகினர் நடத்தியிருப்பார்கள்.

குழாய் போராட்டம் நடத்தி சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை உண்டாக்கி நாடெங்கும் டிவிகளில் இளையதளபதியின் படத்தை ஊடகங்கள் விடாமல் காட்டிக் கொண்டிருக்க, தெம்மாங்கு மேற்குவங்க போலிஸார் மட்டும் கர்மசிரத்தையாக டிவியே பார்க்காமல் கத்தியை சின்சியராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டையே உலுக்கும் இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும்போது போலிஸும், மக்கள் முதல்வரின் அரசாங்கமும் தேமேவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று பொருள்பட ஏ.ஆர்.முருகதாஸ் படமெடுத்திருப்பது கொஞ்சமும் நியாயமே அல்ல.

கூடுதலாக மேற்குவங்க போலிஸார் தமிழ்நாட்டுக்கு வந்தபிறகும் கூட விரைப்பாக மேற்குவங்க காவல்துறை யூனிஃபார்மையே அணிந்துக்கொண்டு அலைவார்கள் என்று காட்சிப்படுத்தியிருப்பது அம்மாநில காவல்துறையையே களங்கப்படுத்திய மாபெரும் குற்றமாகும்.

மாஸ் மாஸ் என்று அணில்குஞ்சுகள் வாள் வாளென்று கத்தும் அந்த காய்ன் – லைட் ஃபைட்… தேவுடா… “மொத்த காசையும் சீக்கிரம் கொட்டி தொலைடா சனியனே” என்று தியேட்டரில் ஒருவர் பொறுமை இழந்து கத்திக் கொண்டிருந்தார்.

‘சென்னைக்கு தண்ணீ கட்டு’ என்று முருகதாஸ் காட்சிப்படுத்திய காட்சிகளுக்கு ஆர்ப்பாட்டமாக சிரித்து கைத்தட்டிய ரசிகர்களுக்கு உட்லண்ட்ஸ் தியேட்டர்காரன் சூப்பராக தண்ணி காட்டினான். படம் முடிந்து டாய்லெட்டுக்கு போய்விட்டு கைகழுவ குழாயை திறந்தால் நோ வாட்டர். நல்லவேளை, நானெல்லாம் ஒண்ணுக்குதான். உள்ளே சில பேர் ரெண்டுக்கு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கதி என்னவாகியிருக்குமோ?

சரி. இந்த எழவையெல்லாம் விடுவோம். நாலு படம் நடித்தால் ஒரு படம்தான் தேறும் என்பது இளையதளபதியின் விதி. ஒரு படம் சூப்பர் என்றால், அடுத்த படம் படுமொக்கை என்பது ஏ.ஆர்.முருகதாஸின் ஜாதகம். அவங்களோட ப்ளூப்ரிண்டில் அப்படிதான் எழுதியிருக்கு. யாரென்ன செய்துவிட முடியும்?

ஆனால் மீடியாக்காரன் எல்லாம் கேனக்கொண்டையென்று நினைத்துக்கொண்டு செகண்ட் ஹாஃபில் முருகதாஸ் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே. அட.. அட.. உப்புப் போட்டு உணவு உண்ணக்கூடிய மீடியாக்காரன் இந்த படத்தை பார்த்தால் நியாயமாக காறித்துப்ப வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடந்துவிட வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. படம் பார்ப்பதற்கு முன்பே ‘கத்தி சூப்பர், கத்தி சூப்பர்’ என்று கத்தி கத்தி ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அதே மீடியாக்காரர்கள் போட்ட ஸ்டேட்டஸ்களை பார்த்தால் அவ்வளவு விரைவில் தமிழ் ஊடகவியலாளனுக்கு சுரணை வந்துவிடாது என்கிற நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படவில்லை. இதே கத்தி ஆதரவு ஆவேசம் விரைவில் பத்திரிகை விமர்சனங்களிலும், சேனல் டாப் 10 நிகழ்ச்சிகளிலும் உறுதியாக வெளிப்படும் என்று நம்பலாம்.

சினிமாக்காரனை பொறுத்தவரை மீடியாக்காரன் ஜோக்கர். ஜோல்னா பை போட்டுக்கொண்டு, பேனாவும் ஸ்க்ரிப்ளிங் பேடுமாக க்ளைமேக்ஸில் யாரையோ கேணைத்தனமாக கேள்வி கேட்பான். அல்லது மைக்கை நீட்டிக்கொண்டு ‘நீங்க பதில் சொல்லியே ஆகணும்’ என்பான். அல்லது வில்லனை பற்றி ஏதோ செய்தி போட்டு கொலை செய்யப்படுவான். தமிழ் சினிமாவில் PRESS என்பது அட்மாஸ்பியர் பிராப்பர்ட்டி. அவ்வளவுதான்.

இப்படி ஆபத்தில்லாத ஜந்துவாக சினிமாவில் வலம் வந்துக் கொண்டிருந்த பிரெஸ்காரனை எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கேவலப்படுத்தி ‘கத்தி’ எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தண்ணூத்து மக்கள் கொடுக்கும் ஃப்ளாஷ் நியூஸை செய்தித்தாள்களும், டிவிசேனல்களும் போட மறுக்கிறார்கள் என்பதற்கு முருகதாஸ் வைத்திருக்கும் வசனங்களும், காட்சிகளும் அவ்வளவு கேவலமானவை. மீடியா வெளிப்படுத்தாமல் எந்த செய்தியை தானாகவே புலனாய்வு செய்து முருகதாஸ் தெரிந்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த படத்தில் கொட்டாவி வரும் வரைக்கும் அவர் அள்ளி வைக்கும் புள்ளிவிவரங்களை மீடியா இல்லாமல் இவராகவே ஞானப்பால் குடித்து அறிந்துக் கொண்டாரா? விதர்பா விவசாயிகளின் தற்கொலையில் தொடங்கி, தஞ்சை விவசாயி எலிக்கறி சாப்பிட்டது, மீத்தேன் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு, காவிரி நீருக்கு விவசாயிகள் போராட்டம், முல்லை பெரியாறு போராட்டம் என்று எல்லா செய்திகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் மக்கள் முதல்வரின் அரசுக்கு பயந்து பயந்து எடுக்கும் சினிமாக்கள் கொண்டுச் சென்றதா அல்லது கத்தியில் கேவலப்படுத்தப்பட்ட ஊடகங்கள் கொண்டுச் சென்றதா?

எப்போதிலிருந்து முருகதாஸ் கார்ப்பரேட்டுகளை தீவிரமாக எதிர்க்கும் நக்சல்பாரியாக மாறினார் என்று தெரியவில்லை. அவரது கஜினி படத்தை ரிலையன்ஸ் ரிலீஸ் செய்ததே, அப்போதிலிருந்தா? அல்லது ஹாலிவுட் கார்ப்பரேட் சினிமா நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸோடு காண்ட்ராக்ட் போட்டாரே அப்போதிலிருந்தா? இல்லையேல், குடிசைத்தொழில் நிறுவனமான ‘லைக்கா’விடம் கத்தி படம் இயக்க கை நீட்டி அட்வான்ஸ் வாங்கினாரே, அப்போதா?

ஆனாலும் முருகதாஸுக்கு தில்லு ஜாஸ்திதான். கோகோ கோலா அம்பாஸடரை வைத்தே கோகோ கோலாவின் நிலத்தடி நீர் சுரண்டலை அம்பலப்படுத்தி இருக்கிறாரே. முருகதாஸும், விஜய்யும் நல்ல விஷயம்தானே பேசியிருக்கிறார்கள், அதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று வழக்கம்போல இணைய மங்குனிகள் ஆங்காங்கே கலகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அட மண்ணாந்தைகளே, இதைகூட காசு வசூல் பண்ணதான் பேசுகிறார்கள். ஒரு போராட்டத்துக்கு கூப்பிடுங்களேன். மக்கள் முதல்வருக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களை மக்களுக்காக அரைநாளாவது வந்து உட்காரச் சொல்லுங்களேன். அப்போது தெரியும் அவர்களது அக்கறை. இந்தியா சிமெண்ட்ஸின் சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் அம்பாஸடர், ஜாய் ஆலுக்காஸின் விளம்பரத் தூதர் சொல்லிதான் தெரியவேண்டுமா கார்ப்பரேட் சுரண்டல் என்றால் என்னவென்று. அந்த அளவுக்கா தமிழர்கள் அறிவுகெட்டு போயிருக்கிறீர்கள்?

‘திமுகவை தாக்கி டயலாக் வைத்துவிட்டார்’ என்று இணைய பார்ப்பனர்களும், திடீர் தமிழின இடிதாங்கிகளும் ஆவேசமாக ஆனந்தம் அடைகிறார்கள். அரசியல்வாதிகளை கிடுக்கிப்பிடி பிடித்திருப்பதாக புளங்காங்கிதம் அடைகிறார்கள். அட தொண்ணைகளா. அவ்வளவு தில்லு ஏ.ஆர். முருகதாசுக்கும், விஜய்க்கும் இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? அப்படி நெஞ்சிலே மஞ்சா சோறு இருந்திருந்தால் பட ரிலீஸுக்கு முந்தையநாள் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வந்திருக்குமா? இல்லையேல் நிஜமாகவே முருகதாஸுக்கு இந்த அறவுணர்ச்சியெல்லாம் இருந்திருந்தால் முன்னாள் முதல்வரின் – திமுக தலைவரின் பேரனிடம் சம்பளம் வாங்கி படம் இயக்கி இருந்திருப்பாரா?

சினிமாக்காரர்கள் பேசும் நியாயம் தர்மம் அறம் எல்லாம் வெறும் துட்டுக்காகதான். இந்த தலைமுறை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சதுரங்க வேட்டையில் கொஞ்சம் கத்திப் பேசி ‘ரைஸ் புல்லிங்’ செய்வாரே நட்ராஜ்? அதே டெக்னிக்கைதான் இதே கத்தியும் செய்திருக்கிறது. இங்கே எவனுக்கும் விவசாயியையும் தெரியாது. விவசாயத்தையும் தெரியாது. அதனால்தான் உள்ளே விசில் அடித்துவிட்டு வெளியே வந்து டாஸ்மாக்கில் சரக்கடிக்கிறான்.

நாளையே விவசாயத்துக்கு ஆபத்து விவசாயிக்கு பிரச்சினை என்றால் அட்டக்கத்தி வீரர்கள் விஜய்யோ, முருகதாஸோ எட்டிப் பார்க்கப் போவதில்லை. டேன்ஸுக்கு மார்க்கு போடுறவன், கள்ளக்காதல் நியூஸு போடுறவன் என்று கத்தியால் ஆபாசமாக விமர்சிக்கப்படும் பத்திரிகைக்காரன்தான் பஸ் புடிச்சி வரப்போகிறான். கடந்த இரண்டு  நாட்களாக மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற வயல்களை படம்பிடித்து அவன்தான் பத்திரிகையில் போட்டோ போட்டுக் கொண்டிருக்கிறான். கத்தி கதாநாயகனும், இயக்குனரும் எவ்வளவு கலெக்‌ஷன் என்று ஊர் ஊராக போன் போட்டு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய உண்மையான முகம்.

22 கருத்துகள்:

 1. அந்த அளவுக்கா தமிழர்கள் அறிவுகெட்டு போயிருக்கிறீர்கள்?
  அறிவு கெட்டு போனதினால் தான் இன்னும் DMK & ADMK-கு ஓட்டு போடுகிறார்கள். நீயும் DMK-கு வக்காளத்து வாங்குகிறாய்

  பதிலளிநீக்கு
 2. என்ன சாரே சுள்ளுன்னு ஏறுதோ? இன்னும் நெறைய்ய்ய்ய்ய எதிர்பாக்குறோம்! வேணும்னா ரூம் போட்டு கட்டிங் சாப்ட்டு கொஞ்சம் யோசிகளேன்! அடுத்த மனுஷ்யபுத்திரன் ரெடி! யார்ரா அங்க! அண்ணனுக்கு ஒரு கர வேட்டி பார்சல்!

  பதிலளிநீக்கு
 3. siva padathe vimarsikerathu pathil athi enna karuthu solla varanga parunga..vivayasayathayum patriyum..endriya mediakale thol vuripayuthayum neenga athai eduthu kolla vendum..seer thooki paarka therinthavana nalla ezhuthalan..

  பதிலளிநீக்கு
 4. பாஸ் எத்தன பத்திரிக்க காரங்க எத்தன சினிமாவ வகுந்திருப்பங்க ... கொஞ்சூண்டு கத்தில வகுந்ததுக்கு தாங்களுக்கு அறக் கொந்தளிப்பு வந்துவிட்டதே


  சினிமா காரங்க காசுக்காக மட்டும் தான் உழைக்கிறாங்க
  மீடியா காரங்க எப்பவுமே சமூக சேவை தான் பண்ணுவாங்க
  தியாகிங்க என்னைக்காவது சம்பளம் கேட்ருப்பங்களா...?

  கலைஞர் டிவி ல கலைகருக்கும் திமுகவிற்கும் எதிராகவோ ஜெயா டிவி ல ஜெயலலிதாவிற்கு எதிராகவோ பத்திரிக்கை காரங்களால அறக் கொந்தளிப்பை நிகழ்த்த முடியுமா ?...

  பத்திரிகை தொழிலாளர்களுக்கு கொஞ்சம் சமூகம் சார்ந்து வேலை பார்ப்பதால் அதைப் பற்றிய புரிதல் சாமானியர்களை விட கொஞ்சம் அதிகம் ... மற்ற படி அறம் தர்மம் எல்லாம் மற்ற தொழிலில் இருக்கும் அளவுதான்....

  தமிழன் இன்னும் இந்த பத்திரிக்கையாளர்களை எல்லாம் அறிவுஜீவிகள் சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்தனையாளர்கள் என நினைத்தாலும் முட்டாள் தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பத்திரிகை தொழிலாளர்களுக்கு கொஞ்சம் சமூகம் சார்ந்து வேலை பார்ப்பதால் அதைப் பற்றிய புரிதல் சாமானியர்களை விட கொஞ்சம் அதிகம் ... மற்ற படி அறம் தர்மம் எல்லாம் மற்ற தொழிலில் இருக்கும் அளவுதான்....//

   Well said Vishnu....

   நீக்கு
 5. This is not a movie review......
  of course director did a mistake...
  But you have to be neutral allways know.....
  Yuva, You got angry, as he show all media people like dumps. This is written to scold him back completely. But last two paragraphs are really true.......

  பதிலளிநீக்கு
 6. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 7. யாராவது இவர்ட்ட இது படம்னு சொல்லலாமே ...

  அரசியல்வாதிக்கும் / போலிசுக்கும் எதிரா பேசும் லட்சகணக்கான படத்துக்கு என்ன சொல்றீங்க ???????

  குடிக்கவும், கொள்ளையடிக்கவும், கள்ளக்காதல் செய்யவும் சொல்லும் படங்களை விட சத்தியமா இது நல்ல படம் தான் !!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 8. எத்தனை பத்திரிக்கையளர்களுக்கு தொழில் தர்மம் தெரியும். மக்களின் முதல்வர் வழக்கை பற்றி ஆரம்பம் முதலே தொடர்ந்து கட்டுரை வெளியிட்ட ஒரே பத்திரிக்கை ஜூனியர் விகடன் என்று உங்கள் சமூகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவரே தெரிவித்திருக்கிறார். பத்திரிக்கை தர்மம் மற்றும் அறம் என்னவென்றால் தெரியாதவர்கள் எல்லாம் சினிமாகாரர்களை விமர்சனம் செய்ய தகுதியுடையவர்கள் அல்ல. முருகதாஸ் மற்றும் விஜய் இருவரும் முழு நேர வியாபாரிகள். காசு கொடுத்தால் மிரட்டலுக்காக எதையும் செய்யும் கும்பல் தமிழ்நாட்டின் சாபம்.

  பதிலளிநீக்கு
 9. ஆயிரம் சொல்லுங்கள், இன்றைக்கு மீடியா மற்றும் பத்திரிக்கைகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுடையது அல்லது அரசியல் சார்புடையதுதான். நேரடியாக அரசியல்வாதிகளுடையது இல்லாத மீடியா பெரும்பாலும் தொழிலதிபர்களுடையது(அவர்கள் அரசை/கட்சியை சார்ந்தே இருக்கிறார்கள் ) வடநாட்டில் சமீபத்தில் கூட நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மோடியை விமர்சித்த கேஜரிவல் செய்தியை வெளியிட்ட TV யை அம்பானி வாங்கி அதன் தலைமை செய்தியாளரை வெளியேற்றினார்கள்.இங்கேயும் அப்படிதான் நடக்கிறது. பெரும்பாலும் நடநிளையான செய்திகள் வெளிவருவது இல்லையே. நீங்கள் வேண்டுமானால் நேர்மையான பத்திரிக்கையாளர் என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் பெரும்பாலோர் அப்படி இல்லை என்பதே நிஜம், அதவது இந்த விஜய் மற்றும் முருகதாஸ் வியாபாரத்திற்காக தான் இதை செய்திருக்கிறார் என்பது எந்த அளவிற்கு நிஜமோ அதே போலத்தான், மீடியா மற்றும் பத்திரிக்கைகள் பரபரப்பிற்கும், வியபாரததந்திரதிக்காகவும் செய்கிறார்கள் என்பத்தும் நிஜம்.

  பதிலளிநீக்கு
 10. என்ன சாரே சுள்ளுன்னு ஏறுதோ கவர்ந்த காவியம் - கத்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல, விவசாயத்தை முதுகெலும்பாய் கொண்டுள்ள இந்தியாவில் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.. பூசணிக்காய் கொடியில் படர்கிறதா, செடியில் பூக்கிறதா, மரத்தில் காய்கிறதா, என்பது அனைவருக்கும் ஒரு சாட்டையடி.. " பசிக்காக பிச்ச கேக்கல, விவசாயத்துக்கு தண்ணி தான் கேக்குறோம்" என்கிற பொழுது கண்ணீர் வருகிறது, "கம்யூனிசம் னா என்ன, - பசி முடிஞ்சதுக்கு அப்புறம் சாப்புட்ற ஒரு இட்லி கூட அடுத்தவனுக்கு சொந்தமானது " என்கிற பொழுது வலிக்கிறது... "2G னா என்ன, காத்துல ஊழல் பண்ற உலகம்யா இது..." – துடிக்கிறது பல போராட்டங்களை உலகிற்கு எடுத்துக்காட்டிருக்கிறார் இயக்குனர், பொழுதுபோக்கு படங்களுக்கு நடுவே உலகின் அத்தியாவசிய படங்களுக்கு முக்கியத்துவம் கண்டு நடித்த விஜய் அவர்களுக்கும் நன்றி.. இப்படத்திற்கு எத்தனை மதிப்பெண் என்று தெரியாது, ஆனால் ஒவ்வொருவரும் பார்த்து உணர்ந்து களமிறங்க வேண்டிய நேரமிது..

  பதிலளிநீக்கு
 11. அடுத்த விஜய் படத்துக்கு - அது எந்த கதையாய் இருந்தாலும் சரி, எந்த தலைப்பில் இருந்தாலும் சரி, யார் இயக்கி இருந்தாலும் சரி, படம் நல்லா இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி - விமர்சனம் எழுதினால் இப்படி தான் இருக்கும் என்று இப்போவே யூகிக்க முடிகிறது. விமர்சனம் செய்பவன் என்பவன் நடுநிலையாக இருக்க வேண்டும். தன் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு விமர்சிக்க வேண்டும். மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல் விமர்சிப்பது இந்த தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு செய்யும் துரோகம்.

  பதிலளிநீக்கு
 12. இது விமர்சனம் இல்லை... உங்களின் தனிப்பட்ட வெறுப்பை காண்பிப்பது போல் உள்ளது யுவா... உங்களிடம் இருந்து இதனை எதிர் பார்கவில்லை.

  பதிலளிநீக்கு
 13. கேன்சர் மருந்தின் விலை ரூ 8500/- ஆக இருந்தது, அதாவது காங் ஆட்சியில் மருந்து விலை கட்டுப்பாட்டின் படி, ஆனால் மோடி அமெரிக்கா சென்று திரும்பியவுடன், அங்கே போடப்பட்ட ஒப்பந்தம், மற்றும் ஒபாமாவின் உத்தரவு படி, அமெரிக்க நிறுவனத்திற்கு சாதகமாக அந்த கட்டுப்பாடு விளக்கப்பட்டது, இப்போது அதே மருந்தின் விலை ரூ 108000/-, இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனை எத்தனை மீடியா மற்றும் பத்திரிக்கைகள் நாட்டு மக்களுக்கு எடுத்து சொன்னது? இதை ஏன் எடுத்து சொல்லவில்லை என்று அவர்களால் சொல்ல முடியுமா? இதை சொல்லாமல் தடுத்தது எது என்றாவது சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 14. As a DMK hard core cadre, you expressed your feelings. People like you only occupied the "press".
  This is the curse of Tamilnadu. Mr. SS Chandran criticized ADMK in many films. Have you opposed that? Pl. dont preach anything. People are having every right to critcize press as "cover"people.

  பதிலளிநீக்கு
 15. // விமர்சனம் செய்பவன் என்பவன் நடுநிலையாக இருக்க வேண்டும். தன் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு விமர்சிக்க வேண்டும். //
  +1

  பதிலளிநீக்கு
 16. இது சினிமா விமர்சனமா அல்லது சொந்த வெறுப்புகளின் வெளிக்கொணர்வா ??
  விமர்சனமாக ஆரம்பித்து வெறுப்பை கொட்டுவதிலேயே குறியாக இருந்திருப்பது சரியா??

  ARMம் விஜயும் வியாபாரிகள்தான் என்பது உலகுக்கே வெளிச்சம். ஆனால் பத்திரிகைக்காரர்கள் அப்படியா ? அவர்களின் உண்மையான சுயம் என்றாவது அறிய முடியுமா ?? சிந்தித்துப் பாருங்கள்.

  நீங்கள் வேண்டுமானால் சமூக அக்கறை மட்டுமே உள்ளவராக இருக்கலாம். ஆனால்
  உங்கள் இனத்தின் பலர் எப்படி?? சிந்தித்துப் பாருங்கள்.

  உங்களுக்கு வசதிப்பட்ட விஷயங்களில்தான் அறப்போராட்டம் எல்லாம்.

  இன்னும் சொல்லப் போனால் நம் நாட்டின் இன்றைய நிலைமைக்கு முதல் காரணமே
  பத்திரிகைகளும் பத்திரிகைக்காரர்களும்தான் - எவ்வளவுக்கு எவ்வளவு சமூக சீரழிவுகளை மக்களிடையே கொண்டு சென்றுள்ளீர்களோ அதற்கும் மேலாக ஒன்றுமில்லாத உப்புக்குப் பெறாத பலரையும், பற்பல விஷயங்களையும் ஊதி ஊதி "பரபரப்பு சேர்க்கிறோம்", "வெட்ட வெளிச்சம்" ஆக்குகிறோம் என்று பெரிதாக்கி பெரிதாக்கி குட்டிச்சுவராக்கியது யார்??

  அவ்வளவு ஏன், PRESS என்று துண்டு சீட்டில் எழுதி வாகனத்தில் ஒட்டிக் கொண்டு wrong parking முதல் சமூக அக்கறையுடன் இப்படி பல சித்து வேலைகள் செய்வது யார்??

  The status of our country is such that we suffer from unbelievable levels of trust deficit and indifference. In this milieu no one is prepared to listen to no one else. As if this confusion is not enough, we are all so used to shooting the messenger no matter what the message is.

  தெருவில் குப்பை போடுவது என்னை மட்டும் தவிர மற்ற எல்லோரும்தான் என்று நாம் ஒவ்வொருவரும் திடமாக நினைத்துக் கொண்டிருக்கும் சூழலில் எங்கு நாம் உருப்படுவது.

  If you think you are different, then I guess it is high time you consciously practise the art of commenting without your personal bias invading & dominating your commentary.

  Plus you may also want to realize - for instance - whatever you say, ARM & Vijay's reach is multifold compared to yours. No matter what, whatever they make will reach millions. But you are not in that league. Your reach comparatively is limited - and you need to figure out how to sensibly maximise it. One way to start with is to ensure your readers realize you are neutral.

  பதிலளிநீக்கு
 17. I read this just because its "Yuvakrishna". Next time I wont and I ll maximum tell my friends not to read you anymore. As said this is not a review rather a very partial aggressive bitching about the film.

  பதிலளிநீக்கு