21 பிப்ரவரி, 2014

நாற்பதும் நமதே, நாடும் நமதே!

மாண்புமிகு ஈழத்தாய் டாக்டர் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜனித்த அறுபத்து ஆறாவது பெருநாள் இவ்வருஷம் 24-02-14 அன்று வரவிருப்பதை அம்மாவின் விசுவாசிகளும், அன்பர்களும் அறிந்ததே. இந்த எண்களை கூட்டி வாசித்த கணிதவியல் பேராசியர்களும், ஆராய்ச்சியாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் கூட்டுத்தொகை 40 வருகிறது என்கிறார்கள். வரக்கூடிய சித்திரை மாதம் (ஆங்கிலத்தில் மே) புரட்சித்தலைவி அவர்களின் சோவியத் கூட்டணி தமிழகம் மற்றும் புதுவை பாராளுமன்றத்தின் நாற்பது தொகுதிகளையும் வெல்லப்போகிறது என்பதன் குறியீடாகவே தங்கத்தாரகை தாயின் இவ்வருட பிறந்தநாள் அமைந்திருக்கிறது என்று பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் இந்த போக்கினை அவதானிக்கிறார்கள். குடிகாரர்களும், தீயசக்திகளும் இந்த அறிவியல் மற்றும் இலக்கிய பேருண்மையை விரைவில் உணர்வார்கள்.

இந்த நாற்பதை மட்டுமே வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் எப்படி இந்திய தாய் திருநாட்டுக்கு பிரதமர் ஆக முடியுமென்று அண்டோமேனியா அடிமைகளும், தேநீர்கடை மாஸ்டரின் தேவாங்குகளும் கெக்கலிக்கிறார்கள். அங்கேதான் இருக்கிறது புரட்சித்தலைவியின் சாமர்த்தியம். தேசிய ஆன்மீக தமிழ் நாளிதழான ஸ்ரீ தினமலர் நம் தங்கதாயை சோவியத் தாய் என்று தலைப்புச்செய்தியாக குறிப்பிட்டிருப்பதை மானமுள்ள உலகத்தமிழர்கள் அறிவார்கள். எனவே சோவியத் தாயின் தவப்புதல்வர்களாம் பிரகாஷ்காரத், பரதன் போன்ற தோழர்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மேற்குவங்காளம், பீகார், நேபாளம், ரஷ்யா, மக்கள் சீனம், புரட்சி கியூபா போன்ற இந்திய மாநிலங்களிலும் ’புரட்சித்தலைவியே பிரதமர்’ என்கிற கோஷத்தை முன்வைத்து நமக்கு வாக்குகள் சேகரிக்க இருக்கிறார்கள். தோழர்களுக்கு எப்படி தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்று அப்பகுதிகளுக்கு சென்று அம்மாவின் ரத்தத்தின் ரத்தங்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

அம்மா பிரதமர் ஆன அடுத்தநொடியே இந்தியா சோஷலிஸ்ட்டு யூனியன் நாடாக மாற்றம் பெறும். தமிழ் ஈழம் பிறக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிக்கை வாசித்து தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு கனவு நனவாகும். ஆஸ்திரேலியாவில் அம்மா மெஸ் திறக்கப்படும். வெள்ளை மாளிகை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகும். பாகிஸ்தானுக்கு பல்லு உடைக்கப்படும். ஐ.நா.சபையில் சீனாவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும். சோவியத் ருஷ்யா அம்மாவின் ஆளுகைக்குள் வரும். அமெரிக்காவின் அணுகுண்டுகள் பறிமுதல் செய்யப்படும். ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். உலக மக்கள் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும். செவ்வாய் கிரகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா புகழ் ஓங்குக.

10 கருத்துகள்:

 1. //செவ்வாய் கிரகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும்//. Idhu onnu poadhume amma PM aagarakku..

  பதிலளிநீக்கு
 2. சிரித்துவிட்டேன் (லக்கிலுக்) யுவகிருஷணா!

  பதிலளிநீக்கு
 3. சினிமா தியேட்டரை எங்கு திறக்கலாம்..................

  பதிலளிநீக்கு
 4. வெள்ளை மாளிகை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகும்//
  வெள்ளை மாளிகையை கலைஞரா கட்டினார்???????

  பதிலளிநீக்கு
 5. hehehe. however it is very funny that all the internet media has started praising jaya that she has done something wonderful. only a month back jaya refused parole to nalini for visiting her 90 year old father.

  சவுக்கு சொம்பு சத்தம் வழக்கத விட ஜாஸ்தி ஆயிடுச்சு. திமுக க்கு அவளவு பெரிய பிரச்சினையா இருந்த மின் வெட்டு பத்தி எந்த பத்திரிகையும் இப்ப வாயே திறக்கறது இல்லை.

  பதிலளிநீக்கு
 6. sorry for a late reply... 38 is to ADMK. 2 to BJP and 0 to DMK.... big ZEROOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO to Congress

  Regards
  Ranga

  பதிலளிநீக்கு