4 டிசம்பர், 2013

மசாலாவே வாழ்க்கை!

தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும் இடைவெளிகளையும் நிரப்புகின்றன. எல்லா துறைகளுமே தொடர்ச்சியான இயங்குதலுலை நடத்த இது அத்தியாவசியமான பணியும் கூட.

துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. பல்வேறு காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் ஏற்பட்ட தொய்வு இதற்கு காரணமாகிறது. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்த எங்களுக்குதான் சமையலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ‘மசாலா’ எவ்வளவு அவசியமானது என்று தெரியும். நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது இதையெல்லாம் மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.  இதன் விளைவே LIPS (எ) Life is pulp society. நாங்கள் நம்பும் கருத்தாக்கங்களுக்கு எங்களுடைய பங்காக எதையாவது செய்யவேண்டும். அது நமது கடமையும் கூட.

LIPS அமைப்பின் தொடக்கம் வரும் ஞாயிறு (08-12-2013) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் நிகழ்கிறது.

எங்களது முதல் நிகழ்வே ‘வாசகருக்கு மரியாதை’

வாசகர்தான் வேர் என்கிற அடிப்படையில், வெகுஜன இதழ்களை வாசிக்கவும், வாசித்தபின் அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் (நம் மொழியில் சொல்லப்போனால் பின்னூட்டம், கமெண்ட்) கடந்த முப்பத்தைண்டு ஆண்டு காலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வாசக மனங்களின் மன்னன் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு சிறியளவில் பாராட்டு விழா நடத்துகிறோம். ‘அந்நியன்’ திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரத்துக்கு வாத்யார் சுஜாதா, அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களது பெயரை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்திரிகை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாராட்டு விழாக்கள் நிறைய நடைபெற்றிருக்கிறன. நாம் நடத்தப்போவது அப்படியே உல்டா. ஒரு பத்திரிகை ஆசிரியர், வாசகரை பாராட்டுகிறார். அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களை கவுரவித்து உரையாற்ற குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியர் அண்ணன் தி.முருகன் அவர்கள் பெருமனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறார். இடம் கொடுத்து உதவும் பனுவல் புத்தக நிலையத்தாருக்கும், பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவோ எழுத்தாளர்களோடு ‘வாசகர் சந்திப்பு’ நடைபெற்றிருக்கிறது. ஒரு வாசகரோடு வாசகர் சந்திப்பு நடத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தொடர்ச்சியாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். உங்களது அன்பான வருகையும், அவசியமான ஆலோசனையும் எங்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறோம். ஞாயிறு காலை உங்கள் அனைவரின் அப்பாயிண்ட்மெண்டும் எங்களுக்கு தேவை.

10 கருத்துகள்:

 1. 'வாசகர்தான் வேர்' உண்மை . நன்றி சொல்கிறேன் ஒரு வாசகனாக

  பதிலளிநீக்கு
 2. துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது.
  -- Maybe the quality has degraded - thats why people are avoiding it.

  One example, nowadays Vikatan and Kumudam give too much importance to cinema and news about actors. Bulk of the rest is politics. Its time for introspection.

  Pull is the best strategy not Push.

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான முயற்சி. விழா வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் தோழர். நிச்சயம் கலந்துகொள்வேன் !

  பதிலளிநீக்கு
 5. நல்ல முயற்சி. வாழ்த்துகள். PULP யுகம் மீண்டும் மலரட்டும். அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிளிந்து தொங்க வேண்டாமா?

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள்! முக்கியமான நிகழ்ச்சி! உண்மை, விடுதலையில் தொடர்ந்து கேள்விகள் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் கொரநாட்டுக் கருப்பூர் தியாகராஜன் உள்ளிட்டவர்களை நாங்கள் சிறப்பித்திருக்கிறோம். கலைஞர் தொலைக்காட்சியில் கூட அவர் பேசியிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரை நான் நூலகங்களுக்குள் நுழைந்த 1999-2000 ஆண்டு முதல் தொடர்ந்து படித்து வருகிறேன். அந்நியன் படத்தின் இந்தப் பெயரைக் கண்டதும், அந்தப் படத்தில் நான் ரசித்த முதல் (ஒரே!) விசயமாக அது தான் இருந்தது. அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே இருந்ததுண்டு. விகடன் மாணவப் பத்திரிகையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் பேனா வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பதையும் விகடன் பதிவுகளின் மூலம் அறிந்திருக்கிறேன். LIPS தொடக்கத்திற்கும் வாசக மன்னர் சத்தியநாராயணன் பாராட்டப்படுவதற்கும் என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள்! முக்கியமான நிகழ்ச்சி! உண்மை, விடுதலையில் தொடர்ந்து கேள்விகள் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் கொரநாட்டுக் கருப்பூர் தியாகராஜன் உள்ளிட்டவர்களை நாங்கள் சிறப்பித்திருக்கிறோம். கலைஞர் தொலைக்காட்சியில் கூட அவர் பேசியிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரை நான் நூலகங்களுக்குள் நுழைந்த 1999-2000 ஆண்டு முதல் தொடர்ந்து படித்து வருகிறேன். அந்நியன் படத்தின் இந்தப் பெயரைக் கண்டதும், அந்தப் படத்தில் நான் ரசித்த முதல் (ஒரே!) விசயமாக அது தான் இருந்தது. அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே இருந்ததுண்டு. விகடன் மாணவப் பத்திரிகையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் பேனா வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பதையும் விகடன் பதிவுகளின் மூலம் அறிந்திருக்கிறேன். LIPS தொடக்கத்திற்கும் வாசக மன்னர் சத்தியநாராயணன் பாராட்டப்படுவதற்கும் என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. Best wishes. Thiruvanmiyur is very far away either from Koyambedu and Central. Very difficult to travel the distance for the visitors. However, மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு