22 நவம்பர், 2013

தருண் தேஜ்பால்

இந்தியப் பத்திரிகையுலகில் பணிபுரியும் இளம் பத்திரிகையாளர்களின் Idol Journalistகளில் ஒருவரான தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செய்தியை வாசித்தவுடனேயே ஆத்திரம்தான் வந்தது. ஆத்திரம் அறிவிழக்கச் செய்யும். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிக இழிவான மொழியில் ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன். அதை வாசித்த என்னுடைய நலம் விரும்பியான, தமிழ் இதழியல் துறையில் மரியாதையாக மதிக்கப்படும் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக கண்டித்தார். தன் துறையின் இளையவர்கள் தடம் மாறிச் செல்லும்போது ஒரு ஆசான் எதை செய்யவேண்டுமோ அதைதான் அவர் செய்தார். ஏன் அவ்வளவு கேவலமான மொழியை பயன்படுத்தினேன் என்று கொஞ்சம் விரிவாக சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு மனிதனையோ, இயக்கத்தையோ, லட்சியத்தையோ, கொள்கையையோ வீழ்ச்சி அடைய செய்யவேண்டுமானால் ஓர் ஆதிகாலத்து தந்திரம் இருக்கிறது. மண், பொன், பெண். நாகரிக உலகில் மண்ணைக் காட்டி மயக்குவது இன்று கடினம். அப்படி மயங்கியவர்கள் நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே இருக்கிறார்கள். பொன்னுக்கு மயங்கியவர்கள் ஊழல் வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டைக் காட்டிலும் மூன்றாவதான ‘பெண்’தான் ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக வீழச்செய்கிறது. இதுதான் என்றுமே வெல்லக்கூடிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கிறது.

உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.

நிறைய உதாரணங்களை பட்டியலிட முடியும். கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த அற்புதமான திராவிட இயக்கம் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிளவுப்பட்டது என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்தால், ‘பெண்ணுடல்’ அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டதை உணர்ந்துகொள்ளலாம். உலகளவில் பார்த்தோமானால் சமகால உதாரணங்களாக ஆனானப்பட்ட கிளிண்டனும், ஜூலியன் அசாஞ்சேவுமே கூட இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.

குறிப்பாக அரசியல், சினிமா, ஊடகம் மூன்று துறைகளிலும் ஒருவரை முற்றிலுமாக அழித்தொழிக்க பெண் புகார் குற்றச்சாட்டு போதுமானது. நம்மூரில் கூட சமீபத்தில் இரு ஊடக குழுமங்களுக்கு இடையே நடந்த பனிப்போரில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்பது நமக்கே தெரியும்தானே.. இணையத்திலும்கூட சில இலக்கியவாதிகள் இதனால்தானே ‘டவுசர்’ கழட்டப்பட்டார்கள்? தன் நிழலைக்கூட நம்பாதவர்கள் மட்டுமே தங்கள் இமேஜை நல்லபடியாக வரலாற்றில் பதியவைக்க முடியும்.

உறுதிப்படுத்தப்பட்ட சில அரண்மனை ரகசியங்களை இதுமாதிரி பொதுவிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும். உறுதியானவர்களை உடையவைக்க காலம் காலமாக ‘காமம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் மதுர்பண்டார்க்கரின் திரைப்படங்கள் சில இப்பிரச்சினையை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.

தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு வருவதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக, ஓர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். பவா செல்லத்துரையின் பதினைந்து வயது மகனுக்கு சொல்வதைப்போல, எல்லாருக்குமாக ‘அட்வைஸ்’ செய்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் பிரபலம் அடைபவர்களுக்காக அவருடைய பேச்சு அமைந்தது. “வளர்ந்து வருபவர்கள் ‘பெண்’ விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். மொத்த உழைப்பும் வீணாகிவிடும். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்த உண்மை” என்றார். பாலுமகேந்திரா சொன்னதுமே நிறைய பேர் சிரித்தார்கள். அவரும் புன்முறுவலோடு சொன்னாலும், அதற்குப் பின்னான அவரது நிரந்தர வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அவருக்கு சமூகத்தில் இருக்கும் இமேஜ் அதுமாதிரியானது. ஏதாவது பழைய பாலுமகேந்திரா படங்களின் பாடல்களை டிவியில் போடும்போது, அவரை சிலாகித்துப் பேசுவேன். அம்மாவுக்கு கோபம் வரும். “அந்தாளு ஒரு அயோக்கியன்” என்பார்கள். அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. ஷோபா தலைமுறை ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது மூத்தப் பத்திரிகையாளர்களும் பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸைதான் எனக்கும் சொல்வார்கள். “இந்த துறையிலே ரொம்ப ஈஸியா கிடைக்கும் தம்பி. இந்த வேலையோட தன்மை அப்படி. சோத்து மூட்டைக்குள்ளே பெருச்சாளி பாய்ஞ்சா மாதிரி பாய்ஞ்சிடாதே. லைஃபே ஸ்பாயில் ஆயிடும்” என்பார்கள். சொன்னவர்கள் பெரும்பாலும் அவர்கள் லைஃபை ஏதோ ஒரு கட்டத்தில் ‘ஸ்பாயில்’ செய்துக்கொண்டவர்கள்தான். அனுபவம்தான் பெரிய ஆசான். தற்காலிக மகிழ்ச்சியையும், அதன் பிறகான முடிவேயில்லாத துயரத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சொன்னால் சரியாகதானிருக்கும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், ‘ஆணாகப் பிறப்பதே பாவம்’ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பொதுவில் அவமானப்படுகிறார்கள் என்பதோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லையே. காலத்துக்கும் குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பார்கள்?

தருண் மீது புகார் கொடுத்த பெண், தருணின் மகளுக்கு தோழர் என்கிறார்கள். எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் :-(

தருண் தேஜ்பாலின் தற்போதைய வீழ்ச்சி, கிளிண்டனுக்கு விரிக்கப்பட்ட ‘கண்ணி’ மாதிரி இருக்கக்கூடுமோ என்று எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது. இதற்காக புகார் கொடுத்த பெண்ணை நான் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமில்லை. புகார் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு ‘நிகழ்தகவு’க்கும் வாய்ப்பிருப்பதை நாம் பரிசீலித்தாக வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ‘Sting operation’க்கு பேர்போன தெஹல்காவும், அதனுடைய ஆசிரியரும் என்னென்ன பூதங்களை, விளக்கைத் தேய்த்து வெளிவரச் செய்வார்களோ என்கிற அச்சம் ஏராளமானோருக்கு இருக்கக்கூடும். இந்த குற்றச்சாட்டு தெஹல்காவை முடக்கச் செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். முறையாக புகார் தெரிவிக்கப்படாத நிலையில் அவசரம் அவசரமாக கோவா முதல்வர் இப்பிரச்சினையில் காட்டும் கூடுதல் ஆர்வத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால்.

மீண்டும் பாலுமகேந்திராவுக்கே வருகிறேன். பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு படத்தின் காட்சியை விவரித்துச் சொல்வார். ஒரு கலைஞன் தன் எதிரியிடம் சொல்வானாம். “என்னை என்ன வேண்டுமானாலும் அவதூறாக திட்டிக்கொள். அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என் உழைப்பை மட்டும் பழிக்காதே. நான் அதற்கு விசுவாசமாக இருக்கிறேன்”

தருண் தேஜ்பால் மீது எனக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.

31 கருத்துகள்:

 1. This article seems very one sided just because he is famous and she is not. As a woman, I fully understand what she must have went through and what kind of courage she must have had to come in public with this accusation especially when we still face so much gender inequalities. I'm a software professional, & most of the times, when we meet new management people, we are always looked upon on how we dress, or how is our body language and honestly, there is some expectation when you are woman who want to be treated equally for brains & hard work and not for anything else. I support this woman strongly as you may see, for tejpal;s shameless act, his daughters are abused for no fault of theirs. Please come out of your 'idol' shell and try to be impartial & truthful to facts. I normally do not comment, just a passer by reader but this one, I had to as I feel every woman has to stand up for their right and support each other. Thanks, Neha

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. " there is some expectation when you are MEN who want to be treated equally for brains & hard work and not for anything else.
   I would like to re tweet the same statement but with tha small correction.
   I have with my wide open eyes with all my senses active seen thousands of girls who are ready to accept gains from their senior management which is conferred to them just because they wear CHUDI, SAREE and by birth they are GIRLS.
   I am a poor MAN and I beg this senior management community and vociferously CRY the same powerful phrase.

   "" there is some expectation when you are MEN who want to be treated equally for brains & hard work and not for anything else.
   "

   Oh my senior management when will you accept the hard work dedication of us the poor MEN against the body language and the dressing style of girls.

   These senior management who stick their tongue out for the body language and the dressing of girls and do such many favours to them are the ones who get caught when one of the thousands revolt.

   So either way THE TRUE TONGUE INSIDE MEN ARE ALWAYS PUNISHED.

   Please try to weigh things from both the sides.

   நீக்கு
  2. Wow Mr, Anonymous, decency seems to be overrated here. I have no intention of justifying some women;s acts. Like you said, even here, that woman might have easily got whatever kind of promotion she had in mind, but she chose right path & can you even imagine how much suffering she must be going thro now JUST for doing the right thing. I have no respect for men like you & will not be following this post anymore. At least I had the guts/courage to post my name in public...Leave the rest to your guess. -Neha

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. யுவா... 'பெண்' விசயத்தில் ஆண்கள் வழுக்க கூடியவர்கள் தான். அந்த வழுக்கள் நீங்கள் எடுக்கும் அரசியல் சமூக மத நிலைப்பாட்டின் இருபுறமும் நடக்கின்றது. ஏனனில் அது மனிதனின் ஆதி அடிப்படை உந்துதல். ஆனால் நம் மதிப்புக்குள்ளானவர்கள் மீது அந்த பழி விழும் போது உடனே அதனனை சந்தேகப்படுவது எதிர் தரப்பினர் மீது குற்றம் கூறிய உடனேயே அதையே முடிவாக எடுத்து வாதிப்பது - அதுதானே அரசியல்.

  பதிலளிநீக்கு
 4. தேஜ்பாலை நினைத்து வருந்துகிறேன். மோடி சதி செயல்தான் இது, தாங்கள் குறுவது போல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Please read TEJPAL comments ji...a really gem man ..accepted his graveness of terrific mistake.
   He is a role model for all ..the guts to open
   It is personal and handled in humanity based ..not to mix in slum

   நீக்கு
  2. Ananymous! How can you drag Modi into Tejpal's misbehaviour? What is the connection? Dont
   write some bullcrap just because you do not like a person.

   நீக்கு
 5. dont be soo much confused...

  you one this say "Sathi" .. and again say she is son;s freind...


  so son's friend dose Sathi agaist him ?


  dont be confuse....

  பதிலளிநீக்கு
 6. I understand Tejpal has voluntarily accepted his misdemeanour and has stepped down from editor post for 6 months. So complaint seems to be valid and true.

  Issue is Indians are indisciplined - I have worked for long in USA - have seen lot of high profile executives who follow a simple rule at work place "Never shit where you eat".
  What this means they will never show their personal weakness at office. After work hours they visit strip clubs or bars where they go wild get drunk or gamble or f*ck with girls. But they behave like a gentleman in office. Thats the discipline Indians need to learn.

  பதிலளிநீக்கு
 7. BECAUSE YOU ARE SUPPORTING CONGRESS. YOU DONT WANT TO BLAME TARUN PAUL.
  IF A PERSON IS SUPOORTING CONGRESS, CAN HE TRY TO RAPE ANY GIRL?
  CAN YOU SAY ONLY NON CONGRESS PARTIES WILL DO MALPRACTICES?
  YOU INDIRECTLOY BRANDED THAT GIRL AS A PROSTITUTE. YOUR POLITICAL SUPPORT TO A PARTICULAR PRTY MAY LEAD YOU TO SAHAMEFUL STATEMENT.

  பதிலளிநீக்கு
 8. Excellent article.....Just because your ilk want to defeat BJP at any cost, lots of such articles are being written in FB. I can see your guru writing atleast 4 posts in FB on this and he looks very nervous. And why all his sting operations were on BJP and others opposed to congress....were congress such a holy cow. The fate of congress is such that, without any opposition in media, any sting by tehelka and such other groups, and being the ruling the party, the scams of theirs are so big that they eventually come out. Just imagine if tehelka had done a sting on congress, we could be seeing one sensational news everyday. But they won't as Tehelka is groomed and paid by Congress..that's why none of them have opened their mouth and BJP is trying to exact the revenge as expected.

  பதிலளிநீக்கு
 9. Luckylook,

  You completely lost my respect. Even though you take completely opposite political views,
  I visit your site everyday. But today is the last day.

  Victim is Tarun Tejpal's friends daughter. Victim knows Tarun Tejpal from the age of four.
  Victim's father also was a journalist and he is no more.

  Hes after all your idol so can blame on BJP. Big deal..

  Like idol... Like his sishyas.....

  btw be careful.. BJP might do a sting op on you also....

  பதிலளிநீக்கு
 10. கமெண்டு போடுறவங்க பதிவை படிச்சிட்டு போடுங்கப்பா. பெரிய ரோதனையா போவுது :-(

  பதிலளிநீக்கு
 11. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருடங்கள் கூட சிறைச்சாலை செல்ல வேண்டும். குற்றம் நிரூபிக்கபடாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மிக கடுமையான தண்டனை தருவார்களா இல்லை சும்மா கோர்ட் கேஸ் என்று அலைவதோடு முடிந்து விடுமா??
  பாலுமகேந்திரா பிடிக்கும் என்று பொதுவில் பகிர்ந்து கொள்வதற்கு கூட பயம் தான்.

  பதிலளிநீக்கு
 12. இந்த விஷயத்தில் நான் யுவகிருஷ்ணாவின் கருத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன்.

  ஒருத்தனை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் எடுக்கும் கேவலமான ஆயுதம்தான் பாலியல் புகார். (அதே போல ஒரு பெண்ணை எதிர்க்க கையாளப்படும் கேவலமான வழிமுறைதான் பாலியல் வன்முறை). இதில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பிறகும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பமுடியும், திரும்பவேண்டும் என மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இன்றைய பெண்களும் அதனை கடந்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் மீது பாலியல் புகார் கூறப்படுமானால் (அது நிரூபிக்கப்படக்கூட வேண்டியதில்லை) அவன் தரம்தாழ்ந்தவனாக சித்தரிக்கப்படுகிறான். இது ஒரு பெண்ணாதிக்க உலகின் அடையாளம்.

  பொதுவாழ்வில் இருக்கும் ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுமக்களுக்கு அவசியமற்றது. (இதே விஷயத்தை நான் மோடிக்கும் பொருத்திப்பார்க்கிறேன், அவர் அந்த பெண்ணை அவளுடைய தந்தையின் வேண்டுகோளின்பேரில் கண்காணித்திருந்தாலும்தான் என்ன தவறு? அந்த பெண் அவளது தந்தையை சார்ந்து இருக்கும்போது அவருடைய நம்பிக்கைக்கு உரியவராக இருக்கவேண்டும். அதனை உறுதிப்படுத்த கண்கானிப்பது தவறல்ல. )

  தனிப்பட்ட வாழ்க்கையில் தருண் தேஜ்பால் அவர்கள் எப்படி இருந்தால் என்ன? அவர் மீதான என்னுடைய மரியாதை குறையப்போவதில்லை.

  சரி, இப்போது இந்த குறிப்பிட்ட விஷயத்துக்கு வருவோம். ஆண்- பெண்ணுக்கு இடையிலான நட்பில் எது எல்லை என்பதை எப்படி அறியமுடியும். ஒரு பெண் நெருங்கிப்பேசுதல், குழைந்து பேசுதல், தொட்டுபேசுதல் இவற்றிலிருந்து ஒரு ஆண் என்ன மாதிரியாக புரிந்துகொள்ளுவான்? எந்த எல்லைவரை தான் இந்த பெண்ணோடு பழகலாம் என்பதை எதிலிருந்து வரையறுப்பது? இன்றைக்கு நமது மற்றும் ஒட்டுமொத்த மனித சமூகத்திலும் ஆண் பெண் உறவில் ஆண்தான் முதல் அடி எடுத்துவைக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் "வேண்டாம், இதற்குமேல் நெருக்கம் காட்டக்கூடாது" என்று ஒரு பெண் உணர்த்திவிட்டால் ஆண் அதற்குமேல் வரப்போவதில்லை. ஒரு பெண்தொட்டு பேசும்போது, குழைந்து பேசும்போது இந்தப்பெண்ணுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்று இயல்பாக அந்த இடத்தில் நெருக்கம் வரும். விருப்பமில்லை என்றால் அதற்கான சமிக்ஞையை கொடுத்தால் ஆண் நெருங்குவதில்லை. அந்த பெண் இரண்டு நாட்கள் தருண் அவர்களுடன் தங்கியிருந்திருக்கிறார். தருண் தன்னுடன் நெருக்கமாக பழகுவது பிடிக்கவில்லை என்று கூறியும் தருண் வலுக்கட்டாயமாக தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் தவறு தருணுடையது. ஆனால் அந்த பெண் அவ்வாறு மறுத்ததாக குறிப்பிடவில்லை. அப்படியானால் இதில் தருணின் மீது எங்கே குற்றம் வந்தது? இதில் அந்த பெண்ணை வபுறுத்தி அல்லது அந்த பெண்ணின் விருப்பத்திற்கெதிராக எதுவும் செய்யாத போதும் ஆணின் (இந்த இடத்தில் தருண்) மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில் பெண்ணாதிக்கம் வெற்றிபெற்றுவிட்டது. இது பொதுச்சமூகத்தின் மனதை பெண்ணாதிக்கத்துக்கு தகுந்தவாறு வடிவமைப்பதில் பெண்ணாதிக்கவாதிகள் பெற்றுள்ள வெற்றி.

  இதில் அந்த பெண்ணின் மீதான பங்கை "VICTIM" என்று கூறி பூசி மெழுக முடியாது. நடந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் பங்குண்டு (CO-PARTNER) (அந்த பெண் மறுப்பு காட்டாத வரையில்). பாலியல் குற்றம் என்பது துணையின் விருப்பத்திற்கு எதிராக உறவுகொள்வதுதான். (பெண்ணாதிக்க்வாதிகள் கூறுவதுபோல் "துணையின் சம்மதமில்லாமல்" உறவு என்பதில்லை. ஒரு பேச்சுக்காக இதனை நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப்பார்ப்போம்.

  கனவன் மனைவிக்கு இடையில் நடக்கும் உறவில் சில நூறு முத்தங்களாவது ஒவ்வொரு நாளும் இருக்கும். ஒவ்வொரு முத்தமும் துணையின் அனுமதி அல்லது சம்மதத்தை பெற்றா கொடுக்கப்படுகிறது? அப்படியானால் அந்த முத்தங்கள், தொடுதல்கள் பாலியல் அத்துமீறலா? என்ன விளக்கம் இது?

  பெண்ணாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழத் தயாரான ஒரு உலகில் அதனை கேள்விக்கு உட்படுத்திய யுவகிருஷ்ணாவின் மீதான எனது மதிப்பும் கூடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1. This 'untoward incident' happened in GOA in THINK 2013 which was organized by tehelka.

   2. That girl's job was to accompany one of the chief guest till the event gets over.

   3. The girl was allotted room in different hotel as per her 'leaked' mail and Taru Tejpal's whole family was there. (As per Victim's mail, the girl shared the sexual assualt of Tarun Tejpal with his daughter Tiya Tejpal, and her friends.)

   4. The girl is the daughter of Tarun Tejpal's old collegue and close friend of Tarun Tejpal's elder daughter Tiya Tejpal.

   Tarun Tejpal age - 50, Girls age is - 22. So simply u r doubting the character of the girl based on the little knowledge u have about the complete letters leaked in the social media.

   5. As per some twitter profile mentions, Union minister Kabil sibal is Uncle of Taru Tejpal (not verified)

   6. If this is consensual sex between a 50 yr old editor in chief and a 22 yr old journalist in a event organized by Tehelka, why there is applogy from Tarun Tejpal and stepping aside 6 months in the first place if it is 'Consensual Sex' or 'Sexual Affair'??? Any Logic???

   That was a mail sent to Tehelka manging editor Shoma Choudry which was leaked first along with the Victim's mail to Shoma Choudry.

   7. After the leaked mails being taken by the Main Stream Media and Social Media, The stand of Shoma Choudry and Tarun Tejpal is changing from 'untoward incident' to 'consensual sex'.

   Will u accept the same logic if it happens to ur sister or daughter or anyone close to u???
   Its simply testing the girl's character.

   8. So a well reputed person (to the public) can rape a girl in his organization and use his power to blackmail her, and then take moral ground of "Stepping aside 6 months".
   Is it is acceptable to u??

   9. This is not a political case or sting operation as tehelka done all these years. This is Tarun Tejpal's mistake and his character which was now openly out. (If you read the victim's mail you can clearly )

   10. You can argue that there is two side of every story. But that's not the case of all tehelka exposes which were done for political purposes (read for Congress). If Tehelka does any sting operation, then the media simply follows it and there is no story of two sides. Congress is in Center only bcos of tehelka. Now the karma is catching them bcos of the mistake of Tarun Tejpal.

   10. U cannot maintain double standards as per your convenience on the person involved. Till this sexual assualt happened, all the big media people in NDTV, IBN, Times Now and other new channels were inviting rape survivors to their channels and were talking like 'Yokkians'. Now Tarun Tejpal is one of them, They try to shift the case from 'rape or sexual assualt' to 'Consensual Sex'. Don't simply believe the news shown by national news channels.

   Mathavanuku vantha Takkali Chutney, Ungaluku Vantha Rattham ah???

   நீக்கு
 13. உங்களுக்கு சொன்ன அளவுக்கு அவருக்கு யாரும் சொல்லவில்லையோ? ஒரு குற்றசாட்டு/சிறு பிறழ்வு நமக்கு ஒரு நல்ல பத்திரிகையாளரை பறித்து கொள்ள போகிறது.

  பதிலளிநீக்கு
 14. தங்கள் கருத்துக்கு மாறுபடுகிறேன். தங்கள் புரிந்துணர்வுக்கு வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. //
  உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.//

  டியர் யுவா, இந்த பதிவோட மூலக்கருத்து more or less அர்த்தம் உள்ளது.ஆனா நீங்க உணர்ச்சிமயமா இந்த பதிவ போடும்போது அதைய ரொம்பவே மிகை படுத்திடீங்க.

  ஆண்கள்ளல் பெண்கள் exploit செய்யப்படும் நிகழ்வுகளின் சதவீதம் அதன் vice - verse வை காட்டிலும் மிக அதிகம். நாம் முதலில் கவலைப்படவேண்டியது அதை பற்றித்தான்.

  பெண்கள் ஆண்களை exploit செய்யும் நிகழ்வுகள் மிக குறைவே. ஆனால் அந்த குறைவான சதவீதம் நடப்பது பெரிய இடங்களில் என்பதால் விரைவாக அது limelight டுக்கு வந்து விடுகிறது.

  இங்கே இன்னொரு உண்மை, ஆண்கள் பெண்களை exploit செய்யும் போது பெரும்பான்மையான வேலைகளில் அது அந்த ஒருவனின் eccentric மனநிலையால் நிகழ்த்தப்படும் வன்கொடுமையாகவே அது நிகழ்கிறது.

  அதே வேலையில் ஒரு பெண் ஒரு ஆணை exploit செய்கிறாள் என்றால் அதன் பின்னே வேறு ஒரு ஆணின் தூண்டுதல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.

  தருணூடைய நேர்மையான தொழிலை அவமதிக்க/ அவரின் செயல்களை தடுக்க அவரின் விரோதிகள் அவரை அநியாயமாக இழிவுபடுத்துகிறார்கள் எனபது உங்கள் கோபமா அல்லது தருணை ஒரு பெண் இழிவுபடுத்துகிறாள் என்பதால் இந்த கொந்தளிப்பா ???

  தருணை வேறு ஏதாவது ஒரு வழியில், அவரது விரோதிகள்,அவரை பழியில் சிக்கவைதிருந்தால் நீங்கள் இவ்வளவு தூரம் உணர்சிவசப்படமாட்டீர்கள் என்பது எனது ஆரூடம்! : )

  பதிலளிநீக்கு
 16. //உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.//

  உங்களுக்குத் தெரிந்த உண்மை மூத்த பத்திரிகையாளரான தருணுக்குத் தெரியாமல் போய்விட்டதோ? விந்தைதான்.

  அதாவது போகட்டும். அவர் நேர்மையில் காந்திக்கு மேலானவர் என்றால் எதற்காக 6 மாதம் வனவாசம் செல்வதாக சொல்ல வேண்டும்? ஏன் தன் மீது வீசப்படும் அவதூறை எதிர்த்துப் போராடலாமே?

  பாஜக பொறி வைத்து அவரை பிடித்தது என்பதை நான் நம்பவில்லை. ஆனால் தருணின் சூழ்நிலையைக் கொண்டாடுகிறார்கள் என்பது 200% உண்மை. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் தனக்குச் சிக்கலை உண்டாக்கிக் கொள்ளும் தருணின் அறிவை எண்ணி எண்ணி....

  அது போகட்டும், தெகல்காவோ, கோப்ரா போஸ்டோ இதுவரை காங்கிரஸ் கட்சியின் ஊழலை வெளிக் கொண்டு வந்திருக்கிறதா என்ன? அதிகாரத்தில் ஒருபக்க சார்பாக விளையாடினால் எதிர்பக்கத்தின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியது வாடிக்கைதானே?

  அப்பப்போ கலகக்குரலும் படியுங்க.

  பதிலளிநீக்கு
 17. சரிடா. அப்புறம் ஏன் அட்வைஸை ஏத்துக்காம பொண்ணுங்க பின்னாடி சுத்துற?

  பதிலளிநீக்கு
 18. இவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஆண்கள் பத்திரிகையாளர்களாக இந்த சமூகத்தின் அநீதிகளை எதிர்த்து போராடி வருகிறார்கள் என்பது உங்கள் பதிவைப் பார்த்தால்தான் விளங்குகிறது... எப்படி இவ்வளவு கயமையான ஒரு உலகத்தில் நீங்களெல்லாம் நியாயத்திற்காக போரடிவருகின்றீர்கள் என்பதை நினைத்தால் உண்மையில் கண்ணீர் துலிர்க்கிறது...

  பதிலளிநீக்கு
 19. Nowadays everything is politics., now you are one sided of pro congress and anti BJP. reasons can be many., and its your blog., you can write what you feel., I regret to read this post., because I am in the opposite side.,

  பதிலளிநீக்கு
 20. STILL THAT VICTIM'S PHOTO NOT PUBLISHED. HER NAME ALSO NOT KNOWN. IN THIS CONDITION, TEJPAL's ( CONGRSS/DMK) SUPPORTES ARE BLAMING THE GIRL AS A CHARACTERLESS GIRL. NOW MAHATMA, GNANI TEJPAL ALSO QUESTIONED THE GIRL'S CONDUCT IN HIS ANTICIPATORY BAIL. YUAV KRISHNA, PLEASE GIVE JUDGEMENT TO KILL THE GIRL BY STONE THROWING. CAN YOU ACCEPT A CONGRESS SUPPORTER BLAMED LIKE THIS? YOU ARE BLAMING READERS ALSO THEY COULD NOT UNDERSTAND YOUR ARTICLE. YOU ARE ALSO AN INTELLECTUAL LIKE TARUN. HOW FOOLISH PEOPLE LIKE US CAN UNDERSTAND?
  BUT ONE THING IS SURE. IF THIS TARUN DID ABY STING OPERATION AGAINST DMK, YOU WILL BE THE FIRST PERSON TO DEGRADE HIM!

  பதிலளிநீக்கு
 21. தருண் தேஜ்பால் தன் மீது வீசப்படும் அவதூறை எதிர்த்துப் போராடலாமே?

  பதிலளிநீக்கு
 22. Charu support panra atkal ellarum intha mathiri matterla sikkikiranga.... Mothala Nithyananda..ippa tharun...Konja naala Tarun tejpal-a aaha hohonu thooki pidikkum pothe nenachen ippidi ethavathu aagumnu... Charu-voda magimaye magimai.....!!!!

  பதிலளிநீக்கு
 23. மோடி மட்டும் இதுக்கு விதிவிலக்கா ? #என்னாங்கடா உங்க விளக்கம் #Rubbish

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய கார்பொரேட் உலகில் இது போன்ற ஒரு பத்திரிக்கையாளரை நினைத்து கூட பார்க்க முடியாது.

   தருண் தேஜ்பால் ஒரு லெஜென்ட் என்றால் அது மிகையாகாது.

   இதில் நூறு சதவீதம் சூழ்ச்சிதான் எந்த வித சந்தேகமும் இல்லை.

   இந்தியாவில் உள்ள அணைத்து மாஸ் மீடியாவும் ஒரு பக்கம் (மோடி ஆதரவு) - தெஹெல்கா மட்டும் மற்றொரு பக்கம். மனிதன் என்ன செய்வார்.

   யுவா சொல்வது போல் // எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால். //

   மோடி வெறியர்களுக்கு இதில் உள்ள நியாயம் சுட்டு போட்டாலும் புரியாது.

   நீக்கு
 24. //Will u accept the same logic if it happens to ur sister or daughter or anyone close to u???// Discuss to the point, why drag individual and their family. which create enmity and subject get diverted . jokin.jey

  பதிலளிநீக்கு