9 நவம்பர், 2013

தன்வி வியாஸ்

எப்படி மனசுக்குள் வந்தாரென்றே தெரியவில்லை. வசதியாக சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டார் தன்வி வியாஸ். குஜராத்தி பெண்களுக்கே உரிய உயரமும், உடற்கட்டும் அசலாக அமைந்திருக்கிறது. கிராஃபிக் டிசைனரான தன்வி, வதோதரா என்கிற சிறுநகரில் பிறந்து அடித்துப் பிடித்து எப்படியோ குறிப்பிடத்தக்க அழகிப்போட்டியான மிஸ் ஃபெமினாவில் முடிசூட்டிக் கொண்டார்.

தமன்னா கலர். ஆரம்பகால நமீதா உடல். சராசரி இந்தியப் பெண்களுக்கே உரிய மங்களகரமான முகம். சிரிக்கும்போது கன்னத்தில் கிளாமராக குழி விழுகிறது. உதடுகள் ஹாட்டின் வடிவம். சாராயத்தில் ஊறவைத்த கண்கள். பார்த்ததுமே டக்கீலாவை கல்ப் அடித்தது மாதிரி உடலெல்லாம் கிறுகிறுக்கிறது. கிட்டத்தட்ட 'கொமரம்புலி’ நிகேஷா பட்டேல் லுக். நமீதா, நிகேஷா, தன்வி என்று அடுத்தடுத்து குஜராத்தி அழகிகள் தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக கவர்ச்சி சுனாமி கிளப்பிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இங்கே மோடி அலை அடிக்குமோவென்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.

ஆர்.எம்.கே.வி., ஹீரோ சைக்கிள்ஸ், பேண்டலூன்ஸ், ஜேபி சிமெண்ட்ஸ் என்று குறிப்பிடத்தக்க டிவி கமர்சியல்களில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ அவருக்கு போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது.

’டைரக்டர் ஆஃப் காதலில் விழுந்தேன்’ பி.வி.பிரசாத்தின் எப்படி மனசுக்குள் வந்தாய்?’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ படத்தில் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஸ்கோப் இருக்கும் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஃபேமிலி டிராமா மொக்கைதானென்றாலும் தன்வி தனியாக கவனிக்கப்படுமளவுக்கு செம பெர்ஃபார்மண்ஸ் கொடுத்திருக்கிறார். தாவணி, சேலை, சுடிதார், மாடர்ன் ட்ரெஸ் என்று எந்த அலங்காரத்திலும் எடுப்பாக இருக்கிறார்.

‘நேனு ஏம் சின்ன பிள்ளனா?’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா?’ என்று அர்த்தம். தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சேலை, ஜாக்கெட்டை துறந்து டூ-பீஸில் தன்வி தோன்றும் அதிரடிக் காட்சியில் ரசிகர்கள் கோரஸாக ‘நூவ்வு சின்னப் பிள்ளா லேது’ (நீ சின்னப் பொண்ணு கிடையாது) என்று கத்துகிறார்கள்.

தென்னிந்தியாவில் ஒரு ‘ரவுண்டு’ கட்ட வாய்ப்பிருக்கிறது. தெலுங்கின் மஞ்சு சகோதர்கள், தமிழின் சிம்புகள் க்ரூப்பில் சிக்காமல் இருக்கும் பட்சத்தில்.

4 கருத்துகள்:

  1. சமீபத்திய படமொன்றில் கன்னட ரவிச்சந்திரன் நிகேஷா பட்டேலுடன் இந்த வயதில் செம ஹாட்டான பாட்டுக்கு ஆடியிருப்பார் பாருங்கள். நிகேஷா பட்டேலின் ஒவ்வொரு அசைவும் .. அதுவும் வீணையை மீட்டுவது போன்ற ஒரு ஸ்டெப் வரும்...யப்பா.

    பதிலளிநீக்கு
  2. அந்த குறிப்பட்ட காட்சிக்கு லிங்க் தந்திருந்தால், தமிழ் மக்களுக்கு சொர்க்க வாசலை திறந்து விட்டது போலிருக்கும்

    பதிலளிநீக்கு
  3. படம் எப்ப சார் ரிலீஸ் ஆகும்?

    பதிலளிநீக்கு