6 ஆகஸ்ட், 2013

பாரதி கண்ணம்மா

பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர் என்றெல்லாம் இணையத்தளங்களில் சேரன் மீது ஏராளமான விமர்சனங்கள்.
மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்கள் சேரனின் மகள் தாமினியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தவை. காதலனுடன் தான் சேர்ந்திருக்கும் படம் ஒன்றினை தாமினி பதிவேற்றி இருக்கிறார். அதை சேரன் ‘லைக்’ செய்திருக்கிறார். போலவே விழா ஒன்றில் சேரனுடன் தாமினியின் காதலர் சந்துரு இருக்கும் படம். கடந்த ஜூன், 13 அன்று பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கும் சேரன் ‘லைக்’ இட்டிருக்கிறார்.

இதிலிருந்து சேரன் தன்னுடைய மகளின் காதலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் காதலுக்கு எதிரானவர் அல்ல என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சந்துரு குறித்து சமீபத்தில் அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஊடகங்களில் சேரன் சொல்வதைப் போல சந்துருவின் பின்னணி, சேரனின் முதல் மகளிடம் முறைகேடாக இணையத்தளத்தில் சாட்டிங் செய்தது போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். எனவேதான் தன் மகளுக்கு இவர் ஏற்றவரல்ல என்கிற அடிப்படையில் காதலை எதிர்த்திருக்கலாம். ஒரு தகப்பனாக தன் கடமையை சேரன் சரியாகதான் செய்கிறார் என்று தோன்றுகிறது.

காதலை ஆதரிக்கிறோம் என்கிற பெயரில் சேரனின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை (அது இன்று சந்திக்கே வந்துவிட்டிருந்தாலும்) கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவர் காதலுக்கு எதிரானவர் என்று ‘பிம்பம்’ கட்டியெழுப்புவது வடிகட்டிய அயோக்கியத்தனம். சேரனோ, சந்துருவோ, தாமினியோ சாதி பற்றி எதுவுமே இதுவரை பேசாத நிலையில், இளவரசன் – திவ்யா காதலோடு இதை ஒப்புமைப்படுத்திப் பேசுவது அறிவார்ந்த செயல் அல்ல. குறிப்பாக பாமகவும், அதன் தொண்டர்களும் இவ்விவகாரத்தில் மைலேஜ் தேடுவது பச்சை சந்தர்ப்பவாதமே தவிர வேறெதுவுமில்லை.

பதினெட்டு வயது பெண்ணுக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்றால் சட்டப்படி இருக்கிறது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் துணை சரியான துணையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பெற்றோர் கருதும் நிலையில், அப்பெண்ணின் காதல் கண்ணை மறைக்கிறது எனும்போது சட்டம் வெறும் சட்டமாக மட்டும் செயல்படக்கூடாது. அப்பெண்ணுக்கு தகுந்த நிபுணர்களின் கவுன்சலிங் தேவை. நீதிமன்ற கண்காணிப்பில் அப்பெண்ணிடம் பெற்றோர் தங்கள் தரப்பை பேசுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். சேரன், சந்துரு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது காவலர்களால் விசாரித்து உண்மை வெளிவரவேண்டும். ஒரு பெண்ணை ஏமாற்றும் நோக்கில் சந்துரு காதலித்திருந்தால் அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை சேரன் பொய் சொல்லியிருந்தால் சந்துருவுக்கு ஆதரவாக சட்டம் செயல்படவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் தாமினியின் உரிமையை அதே சட்டம் உறுதி செய்யவேண்டும்.

21 கருத்துகள்:

 1. Unbiased article Yuva. I appreciate your politeness and patience in judging the situation.
  Well written.

  பதிலளிநீக்கு
 2. 'துணை சரியான துணையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பெற்றோர் கருதும் நிலையில், அப்பெண்ணின் காதல் கண்ணை மறைக்கிறது எனும்போது சட்டம் வெறும் சட்டமாக மட்டும் செயல்படக்கூடாது'. -
  சரியாகச் சொன்னீர்கள் .
  பெத்த மனம் பிள்ளையின் நலம் நாடும்

  பதிலளிநீக்கு
 3. Exactly True. All Love and lovers are not true and every parent has the right to voice their opinion. Blindly supporting love marriages would set a bad trend

  பதிலளிநீக்கு
 4. what you recommend is 100% right. proves that the law is an ass and judges may not have the skills to discuss marriage counselling. when someone has lost her heart, i dont know if any counselling re common sense would be effective. this girl is used to living in a posh locality, has a room of her own with attached bathroom has a car of her own, eats out in the best of restaurants at will...and now going to share a one room portion in choolai, with a shared latrine if at all and no running water. i guess this is what love does...best wishes to her. feel sorry for cheran.

  பதிலளிநீக்கு
 5. மிகச் சரியான கருத்துடன் கூடிய பதிவு
  எதையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது மட்டுமல்ல
  எதிர்ப்பதும் கூட பத்தாம்பசலித்தனம்தான்
  சரியான நேரத்தில் சரியான பதிவு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. Divya's husband was a minor but you are supporting it.
  In this case, both are major but you are against it.

  Who will decide whether a major has taken the right decision? Define right decision?
  In Madras family court, majority of divorce is filed by arranged marriage couples only. Can we say the parents made wrong decision?

  Character of Chandru - as a father Cheran does not like her lover. Even after all these accusations, the girl does not believe those accusations and still loves him. She should be allowed to choose her life - good or bad.

  Divya's father died when his daughter left him. No one cared.
  Cine star Cheran cried when his daughter left him. Every one cares and suddenly whole Tamilnadu is against love marriage.

  It was these greedy cine people who taught all sort of non-sense love stories to the youth in their illogical movies. You mix poison in public well, it will kill everyone eventually.

  I remember a story in Kumudam long time back, it was written by Balakumaran or Sujatha or some big shots - more than 10 years back.
  A Writer would be tried in court for spreading sex feelings among youth. The writer with his smart replies will escape that case.
  But when he goes home, his daughter would have consumed poison because her lover would have got her pregnant and ditched her using the same dialogues and techniques written by the father in his story.

  பதிலளிநீக்கு
 7. பாமரனோ பிரபலமோ யாராயிருந்தாலும் தம் மக்கள் தப்பான வழியில் செல்வதை விரும்பமாட்டார்கள். தலைவலியும் திருகுவலியும் தத்தமக்கு வந்தால்தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
 8. கவுன்செல்லிங் அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தையா போட்டு பயமுறுத்துறீங்க


  ஒரு தந்தை தன மகனுக்கு/மகளுக்கு உலகிலேயே சிறந்த கல்லூரியில் இடம் வாங்கி வருகிறார்.ஆனால் 18 வயது கடந்த அந்த மகள்/மகன் என்னால் படிக்க முடியாது,நான் வேலைக்கு போகிறேன் என்று காவல்துறையில் சிப்பாயாகவோ,அல்லது ரயில்வே போர்ட்டர் பற்றி நாவல் எழுத போகிறேன் என்பதால் சில காலம் போர்ட்டராக வேலை பார்க்க செல்ல போகிறேன் ,எழுத்தாளர் ஆவது தான் என் லட்சியம் , துப்புரவு பணியாளர் வேலை தான் எனக்கு பிடித்து இருக்கிறது ,அதை செய்ய போகிறேன் .கண்யாச்த்ரியாக தான் ஆக விரும்புகிறேன்,இப்போது மோடி ஜுரம் பிடித்து இருப்பதால் ,மோடி பிரதமராக வேண்டி இந்தியா முழுவதும் சுற்றி ஊர் ஊராக சென்று அவருக்கு வாக்கு சேகரிக்க போகிறேன் என்றால் அது தவறா

  நல்லதை ,சிறந்ததை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டமா.தனக்கு பிடித்தது என்பதற்கு மதிப்பே இல்லையா
  பாலியல் தொழில் புரியும் பெண்ணை நான் மனதார விரும்புகிறேன் ,அவளை மணந்து கொள்ள போகிறேன் என்று மகன்/தம்பி சொன்னால் ,அவர்களுக்கு கவுன்செல்லிங் கொடுக்க வேண்டும் என்போமா
  கண்ணகி/நல்லதங்காள் போல கணவன் வேறு பெண்களுடன் தொடர்பு கொள்ள தன பணத்தை/உழைப்பை தந்த பெண்களை தெய்வமாக வணங்கி கொண்டு,அவர்களை காவிய தலைவிகளாக்கி விட்டு,பெண் பித்தன் ,குடிகாரன்,பல வயது மூத்தவன்,இரண்டாம் தாரம் என்றாலும் பணக்கார உறவுக்காரன் என்பதால் மணந்து கொள்ளம்மா ,இந்த த்யாகத்தின் மூலம் உன் குடும்பத்தவர் வாழ்வில் வழி பிறக்கும் என்ற பெற்றோர் /உற்றார் கெஞ்சலுக்கு செவிசாய்த்த பெண்ணை மகளிர் குல மாணிக்கமாக புகழ்ந்து விட்டு ,சொந்தமாக ஒரு பெண் முடிவு எடுக்கும் போது குதிப்பது ஏனோ
  ஊரில் பெண் பித்தர்கள் யாருக்கும் திருமணம் நடப்பது இல்லையா. மணமகனுக்கு பெண் தொடர்புகள் இருந்தது என்று தெரிந்தால் எந்த பெற்றோரும் பெண் கொடுப்பது கிடையாதா

  பதிலளிநீக்கு
 9. அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை,அவளுக்கு வெறும் பெண் குழந்தைகள் தான் ,மாமா வேறு யாரையாவது மணந்து கொண்டு அக்காவையும் ,குழந்தைகளையும் நடுத்தெருவில் விடுவதை விட நீயே திருமணம் செய்து கொள் என்று பல வயது வித்தியாசத்தில் தங்கையை இரண்டாம் தாரமாக தருபவர்களுக்கு குறைவில்லாத மண் நம் மண்

  நம்ம சாதியில எவனுக்கு தொடுப்பு இல்லாம இருக்கிறது ,எவன் குடிக்காம இருக்கிறான் ,கல்யாணத்துக்கு
  பிறகு அவனை வழிக்கு கொண்டு வருவது உன் கையில் தான் இருக்கிறது என்று உறவு மாப்பிள்ளையை மணந்து கொள்ள பெண்ணிடம் வாதாடும் தகப்பனகளுக்கும் இங்கு குறைவு கிடையாது.

  இங்கு பெரிய பிரட்சினையே பொட்டை கழுதை,உனக்கு என்னா தெரியும் ,நீயா ஒரு முடிவு எடுக்கிறதா எனபது தான்

  பதிலளிநீக்கு
 10. well said........it will be happen .....it end more controversies in love marriage yuva...

  பதிலளிநீக்கு
 11. Sorry for Cheran, since whole Tamilnadu recently witnessed a true love ended very sadly, so many people looking this issue as same thing. Evidence after evidence shows chandru's entire family is fraudulent, but people accuse Cheran not letting her daughter to marry him.

  பதிலளிநீக்கு
 12. திவ்யா இதே போல வேலை வருமானம் இல்லாத திருமண வயதான 20 வயது கூட நிரம்பாத ஒரு இளைஞனை காதலித்து திருமண செய்ய முன்வந்தபோது அதை தடுக்க எதிர்க்க அவரது தந்தை அல்லது தாய்க்கு உரிமை இல்லையா? உனக்கு திருமண வயதான 21 வயது நிறைவடையவில்லை, ஒரு பெண்ணை காப்பாற்றும் அளவுக்கு சுய வருமானம் இல்லை என யதார்த்தத்தை அந்த இளைஞனுக்கு அவரது பெற்றோர் உட்பட யாருமே எடுத்து சொல்லாதது என்? எல்லோரும் சாதியை ஒழிக்கவே அவதாரம் எடுத்தது போல் ஒரு பக்கமாக பேசுவது ஏன்? சாதிய உணர்வு என்பதை விட தான் கைப்பிடித்து நடக்க பழக்கி 20 ஆண்டுகளாக வளர்த்த மகள், ஒரே ஆண்டில் தன்னை விட தான் காதலித்தவன் தான் முக்கியம் என முடிவெடுத்து தந்தையை அலட்சிய படுத்தியது தானே நாகராஜை தற்கொலைக்கு தள்ளியது. இந்த உணர்ந்து பார்க்கவேண்டிய உண்மையை எல்லோரும் வசதியாக மறந்துவிடுவது ஏன்? பிரபலம் என்பதால் சேரனுக்கொரு நீதி, சாதாரணமானவர் என்பதால் தர்மபுரி நாகராஜ்க்கொரு நீதியா?

  பதிலளிநீக்கு
 13. நாகராஜனின் தற்கொலைக்கு சாதிவெறி ஓநாய்கள்தான் காரணம். ஒரு குடும்பப் பிரச்சினையாக முடிந்திருக்க வேண்டிய விஷயத்தை சாதிவெறி ஓநாய்கள் ஊதிப்பெருக்கி நாகராஜன் தற்கொலை, சாதிகலவரம், இளவரசன் மரணம் என்று தீப்பற்றவைத்து குளிர் காய்ந்தார்கள். சேரன் தன்னுடைய மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சாதிவெறியின் காரணத்தால் அல்ல.

  சாதிவெறியர்கள் தலையிடாமல் இருந்திருந்தால் நாகராஜனின் குடும்பப் பிரச்சினை இதேமாதிரியான பார்வையைதான் பெற்றிருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. யுவக்ரிஷ்ணாவின் அருமையான, தெளிவான பதிவு இந்த விஷயம் பற்றிய என் எண்ணத்தை மெதுவாக திருப்பிக் கொண்டிருந்த வேளையில் பூவண்ணனின் "நல்லதை ,சிறந்ததை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டமா.தனக்கு பிடித்தது என்பதற்கு மதிப்பே இல்லையா" என்ற கேள்வி செவிலில் அறைகிறதே! என் செய்ய!!

  பதிலளிநீக்கு
 15. ஒருவன் ஒரு கொள்கைக்காக கீக்குளிக்க முயலுவானாயின் அவன் சார்ந்த இயக்கம் அதை வேடிக்கைத் தான் பார்க்கும். அதன் பிறகு அவனை தியாகியாக்கி அதன் வாயிலாக குளிர்காயும். ஆனால் அவனது பெற்றோரோ உற்ற உறவினர்களோ நண்பர்களோ அதை தடுக்கத்தான் முயல்வார்கள். பூவண்ணன் பார்வை அந்த இயக்கத்தின் பார்வையை போன்றது. நாம் உற்ற உறவினர்களாக நண்பர்களாக இருப்பவர்கள் என்பதை அந்த நாலு பேரும் தெரிந்து தெளிந்து கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 16. தீகுளிப்பவனும் ,பாலியல் தொழிலாளியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்வதும் ஒன்றா .

  நீங்கள் கோடி ரூபாய் செலவு செய்து வைத்து கொடுக்கும் கடையில் முதலாளியாக இருக்க எனக்கு விருப்பமில்லை .எனக்கு பிடித்த ஆட்டோ ஒட்டுகிறேன்,தொழுநோய் மைய்யத்தில் பணி செய்ய போகிறேன் என்றால் தடுப்பவர்கள் தான் நன்மையை நாடுபவர்களா.

  ஓரின சேர்க்கையாளர் என்றால் அவர் விருப்பம் என்பவர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்கள்,அதை எதிர்ப்பவர்கள் தான் நன்மையை நாடுபவர்களா

  கூட படிக்கும் மிக ஒழுக்கமான ஆண்/பெண்ணை காதலித்து திருமணம் செய்தாலும் சொத்து கிடைக்காது/டௌரி கிடைக்காது என்று அறிவுரை கூறி பிரிப்பவர்கள் தான் மிக நல்லவர்கள் போல

  பதிலளிநீக்கு
 17. தனி மனித விருப்பங்களை தடுப்பது அடுத்தவர்களின் தலையாய கடமை என்று எண்ணுவது வேதனை


  திருமண வயதை அடைந்த ஆணோ,பெண்ணோ (குற்றவாளியாக சிறையில் இல்லாத-இதில் கூட தூக்கு தணடனை கைதியாக இருந்து பல வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த த்யாகுவை எழுத்தாளர் தாமரை திருமணம் செய்து கொண்டார்.கடத்தல் மன்னன் சோப்ராஜை அவனுடைய பெண் வக்கீல் திருமணம் செய்து கொண்டார் )தனக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுப்பதை தடுப்பது ஞாயம் என்று வாதிடுவதை விட அடிப்படை உரிமைகளுக்கு எதிரான நிலை வேறு எதுவும் கிடையாது.


  ஆணோ பெண்ணோ பல பெண்களோடு/ஆணோடு தொடர்பு இருந்த ஒருவரை திருமணம் செய்ய கூடாது என்று எந்த அடிப்படையில் தடுக்க முடியும்.அப்படி பலரோடு தொடர்பில் இருந்த ஒருவருக்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம்,ஆனால் காதலித்து தீர்மானம் செய்ய கூடாது எனபது சரியா
  20 வயது வித்தியாசத்தில் இரண்டாம் தாரமாக திருமணங்கள் நடப்பது இல்லையா.கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பல வருடங்களாக சக்கரைநோய் உள்ள என் நோயாளி ஒருவர் தன மனைவி இறந்த பிறகு அவர் மகனை விட குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்.
  அதை யாரும் எதிர்க்கவில்லை.ஆனால் அந்த பெண் அப்படி ஒருவரை காதலித்து இருந்தால் ஊரே பொங்கி எழும்.இது ஏன்.

  ஏழை பெண் என்றால் மாப்பிள்ளை எப்படி இருந்தாலும் சரி.அப்பன் ஏழையாக,குடிகாரனாக இருந்தால் பெண்ணுக்கு இப்படி தான் மாப்பிள்ளை பார்க்க முடியும் என்பதை எந்த வித சலனமும் இல்லாமல் ஏற்று கொண்ட சமூகம் மேஜர் ஆன ஒரு பெண் அதே போல குறை உடைய ஒருவரை தேர்ந்தெடுத்தால் குதிப்பது ஏன்

  இரண்டாம் தாரம்,விவாகரத்து ஆனவர்களுக்கு திருமணம் நடப்பது இல்லையா.பணக்கார பெண் என்பதால் உனக்கு ஏனம்மா இந்த தலை எழுத்து என்று வாதிடுவது தான் நன்மையை நாடுவதா

  ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவனை மணந்தால் வாழக்கை கடினம்
  கோடி ரூபாய் சம்பாதிக்கும் பெற்றோர் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்து கொள் என்பதை கூட மிகவும் சரி என்று ஞாயபடுத்தலாம்

  பதிலளிநீக்கு
 18. பூவண்ணன் இப்படி பக்கம் பக்கமாக விதண்டாவாதம் செய்வது வீண் வேலை. தனி மனித விருப்பம் உரிமை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. நான் சொல்ல வந்தது ரொம்ப சிம்பிள். தன் அன்புக்குரிய ஒருவர் தன் சுய விருப்பத்தின் பேரிலோ கொள்கையின் பேரிலோ சிக்கலில் மாட்டி சீரழிய போகிறார் என தெரியவந்தால் அதை வேண்டாம் என அறிவுறுத்துதல் கடமை. உரிமையை விட கடமை பெரிது.

  பதிலளிநீக்கு
 19. பாலாஜி சார்

  நீங்கள் சொல்வது என்னன்னா

  சந்துரு என்ற இங்கு குறிப்பிடப்படும் ஒருவருக்கு அவரது தாய்.தந்தை பார்த்து

  சோழன் அல்லது பாண்டியன் என்ற துணை நடிகர் மகள் ,அல்லது தந்தையை இழந்த ஏழை பெண் ஒருவரை மணமுடிக்க பேசி மணமுடித்தால் ,அவர்கள் நமக்கு உறவாக/நட்பாக இருந்தால் அங்கு சென்று அவர்களை வாழ்த்துவோம்.அவர் யார் என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம்.ஆனால் ஒரு 20 வயது பெண் அவரை விரும்பி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் அதை தடுப்பது கடமை எனபது தானே

  இதில் ஏதாவது ஞாயம் இருக்கிறதா.அப்பா ,அம்மா,இல்லை உறவு பார்த்து இரண்டாம் தாரமாக,குடிகாரனுக்கு,பல பெண்களோடு தொடர்பில் இருந்தவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அதில் தவறு கிடையாது.ஆனால் ஒரு மேஜர் ஆன பெண் அதே போல் ஒருவனை விரும்பி திருமணம் செய்து கொண்டால் பெரிய தவறு என்று வாதிடுவது சரியா

  பதிலளிநீக்கு