7 மே, 2013

வாழ்த்துகள் தலைவரே


2006 வாக்கில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, அதன் மூலம் முதன்முதலாக தொலைபேசியில் பேசியவர் அவர்தான். முன்பாக மெயிலில் உரையாடியிருந்தோம்.

உங்க எழுத்துலே சுஜாதா வாசனை இருக்கு

சரிங்க. மாத்திக்கறேன்

எதுக்கு மாத்திக்கணும்.. அப்படியே இருக்கட்டுமே?

சுஜாதா வாசனை இருக்கிறதாவென்று தெரியாது. ஆனாலும் அவர் சொன்னதால் அப்படியே இருத்திக் கொண்டேன். தன்னை குறும்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். குறும்படங்களுக்காக தனியாக ஒரு வெப்சைட் நடத்துகிறேன் என்றார். ‘நாளைய இயக்குனருக்குவெகுகாலம் முந்திய காலம் என்பதால், இதற்கெல்லாம் தனியாக வெப்சைட்டா என்று ஆச்சரியப்பட்டேன். அந்த வெப்சைட்டில் அவர் இயக்கியஆக்ஸிடெண்ட்டோடு வேறு சிலரின் படங்களும் ஏற்றப்பட்டிருந்தது.

கதை சொல்லிக்கிட்டிருக்கேன் தலைவரே. புரொட்யூஸர் கிடைச்சதுமே படம்தான்அடிக்கடி சொல்வார். “பாம்புகூட படம் எடுத்துடிச்சி. நீங்க சீக்கிரமா எடுங்க தலைவரேஎன்று சிலமுறை கலாய்த்திருக்கிறேன். அப்போது ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தில் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக இருந்தேன். “எங்க ஆபிஸ்லே மொத்தமா பத்து படம் எடுக்கப் போறாங்க. நீங்களும் ட்ரை பண்ணலாமில்லே?” என்றேன். “எங்க சித்தப்பாதான் உங்க சேர்மேன். தெரியுமா?” என்று ஆச்சரியப்படுத்தினார். அங்கே கதை சொன்னாரா என்று தெரியவில்லை.

சில நாட்களில் அவரும் வலைப்பூ எழுத வந்தார். சிறுகதை, சினிமாவென்று மசாலாதான். சக போட்டியாளர் என்பதால் நண்பர் என்றும் பார்க்காமல் பின்னூட்டங்களில் பின்னி பெடல் எடுத்துவிடுவேன். பயங்கர சண்டை நடக்கும். சில பேர் விலக்கிவிட முயற்சிப்பார்கள். பல பேர் தூண்டிவிட்டு குளிர் காய்வார்கள். யாருக்குமே தெரியாது. அவரும் நானும் ஏற்கனவே நண்பர்கள் என்று. அவருடைய கருத்துகளை நானோ, என்னுடைய கருத்துகளை அவரோ அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. நண்பர்களாக இருக்க ஒத்த கருத்து இருந்தே ஆகவேண்டுமா என்ன?

பதிவுகளில் எழுதியதையெல்லாம் தொகுத்து வரிசையாக புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்தார். அவர் புத்தகங்களை வெளியிடவே புதியதாக பதிப்பகங்களும் தொடங்கப்பட்டன. அவரது சிறுகதைத் தொகுப்புக்கு விமர்சனக்கூட்டம் நடத்தினார்.

நீங்க பேசணும் தலைவரே

இதுமாதிரி புக்கு பத்தியெல்லாம் இதுவரைக்கும் பேசினதில்லை தலைவரே

அதனாலே என்ன.. எனக்கு நீங்க பேசுனா சந்தோஷமா இருக்கும்

முதன்முதலாக புத்தக விமர்சனத்தை மேடையில் செய்தது அவருக்காகதான். அதற்குப் பிறகு நான்கைந்து சான்ஸ் கிடைத்துவிட்டது. நல்ல ராசியான ஆள் அவர்.

அழிக்கப் பிறந்தவன்தொடர்கதையாக என்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். அதை படித்தவர் உலகநாதனிடம் பேசியிருக்கிறார். உலகநாதனும், அவரும் இணைந்துதான் அதை புத்தகமாக கொண்டுவந்தார்கள். முன்பே வேறு சில நண்பர்களுக்கும் இதேமாதிரி உதவியிருக்கிறார். பொதுவாக நட்பு வட்டத்தில் இருக்கும் எல்லோருடைய சுக துக்கங்களுக்கும் முன்வரிசையில் வந்து நிற்கும் குணம் கொண்டவர். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் அவரை வெறுப்பதற்கு ஒரு காரணம் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர் மீது எதற்காகவாவது கோபம் வந்தாலும், நேரில் அவர் முகத்தை பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும். ஒருமாதிரி காமெடியான முகம் கொண்டவர். எப்போதும் புன்னகையோடே “வாங்க தலைவரே” என்று எதிர்கொண்டு கட்டிக் கொள்வார் (தொப்பைதான் கொஞ்சம் இடிக்கும்).

சாண் ஏறினால் முழம் சறுக்குவது சினிமாத் தொழிலின் பண்பு. ஆனால் சோர்வில்லாமல் பல்லாண்டுகளாக சறுக்கி, ஏறி, சறுக்கி, ஏறி இன்று ஒருவழியாக சிகரத்தை எட்டிவிட்டார். நண்பர்களின் வெற்றி, நம்முடைய வெற்றி. ‘தொட்டால் தொடரும்’ வெள்ளிவிழா காண வாழ்த்துகள் தலைவரே. ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்.

17 கருத்துகள்:

 1. //ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்.//

  Why I love blog :)))

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் கேபிள் ஜீ

  பதிலளிநீக்கு
 3. //எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம்///

  ஆமாம்

  பதிலளிநீக்கு
 4. நன்றி தலைவரே.. மொக்கைன்னா விமர்சிக்க எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனமார்ந்த வாழ்த்துகள்.... உங்க பதிவை பல ஆண்டுகளாக தொடர்ந்து படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் ஒருவன்...

   உங்களுக்கு தெரியாத சூட்சமமா, சினிமாவில்...

   ஒரு சூப்பர் படத்திற்கு காத்திருக்கிறோம்...

   நீக்கு
  2. //ஆனா, படம் மொக்கையா வந்தா எந்த தயவுதாட்சண்யமும் பார்க்க மாட்டோம். // :) :) :) செம்ம பஞ்ச் லைன்

   நீக்கு
 5. நல்ல பதிவு...

  இயக்குனராகும் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்..

  கேபிளின் மிகப்பெரிய பலம் அவரது வெகு ஜன ரசனை

  படம் படுக்குமா.... பத்திக்கும்மா....... என இவரை கேட்டாலே போதுமானது... அப்படி ஒரு திரைப்படத்தை அலசி ஆராய்ந்து பீராய்வதில் வல்லவர்...

  தொலைக்காட்சி ப்ளாக், சினிமாவில் பயிற்சி என நீண்ட கால இவரது முயற்சி வெற்றிக்கு வித்திடும் என நம்புவோம்...

  கலக்குங்க கேபிள்...

  இன்றைய காலம்... இளைய தலைமுறையினருக்கு உகந்ததாகவே உள்ளது... எனவே நீங்கள் வெற்றி பெருவீர்கள்....

  பதிலளிநீக்கு
 6. I am a regular reader for both of u. I wish all the best for cable. I met him in a book fair and took a photo with him. Really i will feel very proud if the film was different from others. I always use to watch films only after reading is review. All the best

  பதிலளிநீக்கு
 7. கேபிளுக்கு வாழ்த்துகள்.... லக்கி நீட் ரைட்டப்... கலக்கலோ கலக்கல்.

  பதிலளிநீக்கு
 8. கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள், யுவா வாழ்க உங்கள் பணி...

  பதிலளிநீக்கு
 9. அண்ணே ‘தொட்டால் தொடரும்’ படத்துக்கு விமர்சனம் ரெடியா இருக்கு. போட்டுருவமா?

  பதிலளிநீக்கு
 10. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  உங்கள் நேர்மை எனக்கு பிடித்துள்ளதுங்க யுவா..

  பதிலளிநீக்கு