March 28, 2013

மக்கள் ஃபீலிங்ஸ் – அதிரடி சர்வே

மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி ஆட்சி நடத்துகிறார்?
 • நன்றாக 
 • மிக நன்றாக
 • மிக மிக நன்றாக 

தமிழின துரோகியான கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி? 
 • மோசம் 
 • படுமோசம் 
 • படுபடுமோசம் 

ஈழத்தமிழர், இந்தியத்தமிழர், மலேசியத்தமிழர், சிங்கப்பூர் தமிழர், தென்னாப்பிரிக்க தமிழர் மற்றும் உலகத்தமிழர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக காணப்படும் தமிழர் யார்?
 • வை. கோபால்சாமி 
 • வைக்கோ 
 • கலிங்கப்பட்டி வையாபுரி கோபால்சாமி 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா?
 • மாட்டேன் 
 • மாட்டவே மாட்டேன் 
 • கண்டிப்பாக மாட்டேன் 

அரசியல்சாரா தலைவர்களில் யார் தேர்தல் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 
 • இயக்குனர் சீமான் 
 • நடிகர் சீமான் 
 • செந்தமிழன் சீமான் 

இந்த சர்வேயில் பங்குபெற உங்களது வாக்குகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம். வாக்களித்தவர்களின் பெயரை சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு பரிசாக “நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடல் காலர்ட்யூனாக வைத்துக்கொள்ள ‘ஏர்டெல்’லில் லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் சார்பாக காசு கட்டப்படும். ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு அதே பாடல் ரிங்டோனாக அனுப்பி வைக்கப்படும்.

17 comments:

 1. I am not using any caller tune and ringtone to my mobile Yuva Krishna.

  ReplyDelete
 2. Enna uttutinkale: vijayakanth

  ReplyDelete
 3. மிக மிக நன்றாக
  படுபடுமோசம்
  கலிங்கப்பட்டி வையாபுரி கோபால்சாமி
  கண்டிப்பாக மாட்டேன்
  செந்தமிழன் சீமான்

  Yuva sent me the answers secretly.

  ReplyDelete
 4. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா?

  கண்டிப்பாக மாட்டேன்

  இந்தக்கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கும் வகையில் கேள்விகளை அமைத்துவிட்டீர்களே நண்பரே,.

  ReplyDelete
 5. Include option D.All the above also

  ReplyDelete
 6. EEZHA NALANUKKAAGA SUYANALAM PAARAA SUTHTHIRATHAARI YAAR?

  * THAMIZHINATH THALAIVAR KARUNA NITHI

  * SEMMOZHI PULAVAR KARUNA NITHI

  * VAAZHUM VALLUVAR KARUNA NITHI

  * KAAVIYATHTHALAIVAN KARUNA NITHI

  INTHA KAYLVIYA MARANTHUTTINGANNU NINAIKKIRAYN KIRUSHNA..

  ReplyDelete
 7. தமிழ் நாட்டு அரசியல்,

  * நல்லா இல்ல
  * நல்லாவே இல்ல
  * ரொம்பவே நல்லால்ல

  ReplyDelete
 8. appadiye ithula intha kelviyaiyum serththirukalam:

  Tamilnattu tamilargal:

  kenaigal
  romba kenaigal
  romba romba kenaigal

  ippa ellam namma makkal ippadi than irukkanga when comes to politics.

  ReplyDelete
 9. செம நக்கல் தலைவா.. இப்போதைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை இப்படித்தான் இருக்கின்றன.... ஒரே சாய்சையே மாற்றி மாற்றி போட்டு தேர்ந்தெடுக்கச் சொல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பதிலை நம் விருப்பமாக எதிர்பார்க்கிறார்கள்..

  ReplyDelete
 10. நல்ல முயற்ச்சி! என்ன செய்ய? ஞாபகமறதி அதிகமாதானே இருக்கு

  ReplyDelete
 11. இந்த இரண்டு மட்டும் உம் மனதில் இருந்து வந்ததாக இருக்கட்டும்!!!!

  தமிழின துரோகியான கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி?
  படுபடுமோசம்
  வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா?
  கண்டிப்பாக மாட்டேன்

  ReplyDelete
 12. அருமை கழக கண்மணிகளே , நீங்கள் சொல்வது போல ஜெயலலிதாவின் இன்றைய சட்டமன்ற தீர்மானத்தின் பின்னால் அரசியல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம் . ஆனால் அந்த எழவுக்காகவேனும் நீங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இதை செய்யவில்லை என்று தான் கேட்கிறோம். மத்திய அரசோடு "நீக்கு போக்காக" தான் இருக்க முடியும் என்று சட்டமன்றத்திலே சொன்னீர்களே அதன் பின்னால் இருந்தது மிகக் கேவலமான ஈனத்தனமான அயோக்கியத்தனமான அரசியல் துரோகத்தின் கோர முகமில்லையா ...?

  நீங்கள் முழு மூச்சாக மல்லுக்கு நிக்க வேண்டியது தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவோடோ , அதை பாராட்டிய வைகோவோடோ அல்ல ..உங்கள் தலைவர் சொன்னாரே "சொக்கத் தங்கம் சோனியா காந்தி" என்று அவரிடம் தான் நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டும் . முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகு , பார்வதி பெருமாட்டி திருப்பி அனுப்பப்பட்ட பிறகெல்லாம் தானே சொக்கத் தங்கம் சோனியா என்று பட்டமளித்தார் .? அப்போதெல்லாம் உங்கள் தலைவருக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை காங்கிரஸ் துரோகம் செய்கிறது என்று .எனவே நீங்கள் மல்லுக்கு நிக்க வேண்டியது காதுகேட்காத சிங்கிடமும் , இத்தாலி தகரத்திடமும் தான் .

  ஜெயலலிதாவின் ஆட்சியில் குளறுபடிகள் இருக்கிறது தான் . அதை நாம் விமர்சிக்கிறோம் தான் . ஆனால் இன்றைய தீர்மானங்கள் உண்மையில் ஒரு தைரியமான தேவையான மிக அவசியமான தீர்மானங்கள் . அவை பாராட்டுக்குரியவை ! அவர் பாராட்டுக்குரியவர் !!!

  ReplyDelete
 13. 7 வாட் பேட்டரி வாங்கி கொடுத்த பதினெட்டு வயது பேரறிவாளனுக்கு மரணதண்டனை. ஆனால் மூன்று AK-56 ரக துப்பாக்கிகள், 450 தோட்டாக்கள், ஒரு 9mm துப்பாக்கி மற்றும் 20 க்கும் மேற்பட்ட கையெறி குண்டுகள் பதுக்கி வைத்திருந்து கைது செய்யப்பட்ட முப்பத்து நான்கு வயது சஞ்சய்தத்திற்கு தண்டனை ரத்தா?

  - புதிய தலைமுறையில் மனுஷ்யபுத்திரன்

  ReplyDelete
 14. என்ன யுவா,
  கலைஞர் மிகவும் பயப்படுவது எதற்கு?
  1. ஸ்டாலின்-அழகிரி சண்டை பார்த்து
  2. கனிமொழி, ராசா, மற்றும் பலரை நெருக்கும் 2g வழக்கு
  3. சில படங்களை தயாரிக்க எப்படி பணம் வந்தது என்று தெரியாத நிலையில் 20 கோடி கார் எங்கே பணம் எங்கே என்ற நெருக்கடி.
  4. 2009 இல் ஏன் பதவி விலகவில்ல்லை என்று எல்லோரும் நெரக்கடி தரும் நிலையில் எப்படி தமிழின தானை தலைவர் என்ற பட்டத்தை தக்க வைத்து கொள்வது என்ற கவலை?

  இந்த கேள்விகள் யுவாவிற்கு தோன்றியதற்கு காரங்கள் என்ன?
  1. கலைஞரின் கேள்வி-பதில் அறிக்கைகள் படித்து
  2. தயாநிதி மாறனின் தின கரனில் வரும் கருத்து கணிப்புகள் படித்து

  ReplyDelete
 15. 1.இரண்டு மணி நேரம் மின்சாரமில்லை என்பதர்க்கே அத்தனை ஓலம்
  மின்சாரம் எப்போது வரும் என ஏங்கி நிற்கும் நிலை இப்போது
  இதற்கு விடையாக பதில் சொல்ல தேர்தல் எப்போது வரும் ஏங்கி நிற்கும் நிலை
  2.
  'தமிழின துரோகி' இப்படி ஒன்றை சொல்ல உன் மனம் நாட்டியது இதற்கு நீர் உம்மையே வருந்திக் கொள்வீர்
  3.விடிவெள்ளி மறைந்து நிற்க வானமே மேகம் சூழ்ந்து விட்டது.விடிவெள்ளி வரும்.தற்போதைக்கு மின்னலாய் வருவோர் பலர்
  4.மறைமுக வாக்குச் சீட்டு நிலவுகின்றது .விடை சொல்வது வீண்
  5.காளான்கள் மறைந்து போகும் நிலையானதல்ல

  ReplyDelete
 16. First question answer option shud be like this
  a)nanraaga
  b)paravaayillai
  c)mosam

  ReplyDelete