January 8, 2013

ஜென்னீ

நீதானே என் பொன்வசந்தம்படத்தில் சமந்தாவின் பேரழகையும், அபாரமான நடிப்பையும் பலரும் விதந்தோதுகிறார்கள். தினகரன் வெள்ளிமலர் தன்னுடைய நடுப்பக்கத்தை சமந்தாவுக்கு ஒதுக்கி ‘it’s a girl thing’ என்று தலைப்பிடுகிறது. காட்டாறாய் அடிக்கும் சமந்தா மழையில் அடித்துப்போன சந்தனமரங்களில் ஒருவர் வித்யூலேகா. பவுர்ணமியின் போது நட்சத்திரங்கள் ஒளிமங்கி தெரிவது இயல்புதான்.
சமந்தாவுக்கு தோழியாய் தொடக்கத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில், கல்லூரியில், பிற்பாடு படத்தின் இறுதிக்காட்சி வரைக்கும் இரண்டாம் நாயகியாய் கலக்கிய ஜென்னீ இவர்தான். தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வித்யூவுக்கு இதுதான் முதல் படம். படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவரே சொந்தக்குரலில் நடித்திருக்கிறார்.

படம் நெடுக வரும் ஜென்னி இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பாதியின் ஓபனிங் ஹீரோயின். வருண் நித்யாவுக்கு இடையேயான அபாரமான காதலுக்கு நடுவில் இவருக்கும் சந்தானத்துக்கும் திடீரென லவ் தோன்றும். விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா பாணியில் வித்யூ நீலப்புடவையில் என்ட்ரி கொடுக்கும்போது தியேட்டரே அலறும். இவர்களது குறும்புக்காதலை க்யூட்டான பாட்டு போட்டு கவுரவப்படுத்தியிருப்பார் இளையராஜா.

றுபது ஆண்டுகளுக்கு முன்பு அடையாரில் ராமச்சந்திரன் என்றொரு நடிகர் வசித்து வந்தார். அவரது அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் அடிக்கடி மருத்துவமனைக்கு ராயப்பேட்டை வரவேண்டி இருந்தது. அந்த காலத்தில் அடையாருக்கும், ராயப்பேட்டைக்குமான பயணமே கூட நெடும்பயணம்தான். ஜட்கா வண்டி அல்லது ரிக்‌ஷாவில் வரவேண்டும். உடல்நலம் குன்றியிருந்த அம்மா அலைக்கழிக்கப்படுவதை விரும்பாமல் ராயப்பேட்டையிலேயே அவருக்கு வசதியாக ஒரு வீடு வாடகைக்கு தேடினார் ராமச்சந்திரன்.

லாய்ட்ஸ் சாலையில் இப்போதைய அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகில்- ஏ.வி.ராமன் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. இவர் ராஜாஜியின் நெருங்கிய நண்பர். இவரது வீடு ராமச்சந்திரனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் சினிமாக்காரர் என்பதால் வீடு தர ஏ.வி.ராமன் மறுத்துவிட்டார். காங்கிரஸ்காரரான ராமச்சந்திரன் ராஜாஜியிடம் சிபாரிசுக்கு சென்றார். ‘சினிமாக்காரராக இருந்தாலும் சொக்கத்தங்கம்’ என்று ராஜாஜி சான்றிதழ் கொடுக்க, ராமச்சந்திரனுக்கு வீடு கிடைத்தது.

இதற்கிடையே ராமச்சந்திரன் சினிமாவில் வளர்ந்து எம்.ஜி.ஆர் ஆகிவிட்டார். ஆனாலும் அதே வீட்டில் வாடகைக்கு அண்ணன் குடும்பத்தோடு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி சதானந்தவதி அம்மையார் இந்த வீட்டில்தான் காலமானார். போலவே எட்டாவது வள்ளலை ஈன்றெடுத்த அன்னை சத்யாவும் இங்கேதான் இயற்கையோடு இணைந்தார்.

வீட்டு உரிமையாளர் ஏ.வி.ராமனின் மகனான வழக்கறிஞர் வி.பி.ராமன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். பிற்பாடு ஈ.வி.கே.சம்பத்தோடு தமிழ் தேசியக்கட்சி கண்டவர்களில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆரும் இப்போது திமுக என்பதால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். தன் தாய் வாழ்ந்த வீடு என்பதால் அந்த வீட்டை விலைக்கு வாங்க எம்.ஜி.ஆர். விரும்பினார். வி.பி.ராமனும் பெருந்தன்மையோடு மிகக்குறைந்த விலைக்கு வீட்டை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தந்தார்.

எம்.ஜி.ஆர் ஆசையோடு அந்த வீட்டுக்கு ‘தாய்வீடு’ என்று பெயரிட்டார். அவரது சக தொழில் போட்டியாளரான சிவாஜியின் போக் ரோடு வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்பது பெயர். இந்த தாய்வீட்டில்தான் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பொங்கல் விழா நடைபெறும். பிறப்பால் மலையாளி என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கொண்டாடிய பண்டிகைகள் பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டும் மட்டும்தான். பொங்கல் விழாவின் போது எம்.ஜி.ஆருடைய ஸ்டண்ட் கோஷ்டியினர் நாடகம் போடுவார்கள். எம்.ஜி.ஆரது படங்களில் கொடூரமான வில்லன்களாக தோன்றும் அவர்கள் அன்று ‘நல்ல’ கேரக்டர்களில் உருக வைப்பார்கள். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். அன்று தாய்வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கைக்கு கிடைத்ததை எல்லாம் அள்ளி அள்ளி கொடுப்பார் எம்.ஜி.ஆர்., தாய்வீட்டு பொங்கல் விழாவுக்கு அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுண்டு.

நியாயமாகப் பார்க்கப்போனால் எம்.ஜி.ஆரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான அந்த ‘தாய்வீடு’தான் அவரது நினைவு இல்லம் ஆகியிருக்க வேண்டும். இப்போது அந்த வீடு யாருடைய ஆளுகையில் இருக்கிறதோ தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே நன்றி மறவாமல் வி.பி.ராமனை தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆக்கினார்.  அவருக்கு இரண்டு மகன்கள். இளையவர் பி.எஸ்.ராமன். இவரும் 2006ல் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக பதவியேற்றார்.
மூத்தவர் மோகன்ராம். நாம் அடிக்கடி சினிமாக்களில் பார்க்கும் அதே மோகன்ராம்தான். சினிமா, டிவி நாடகங்களின் படப்பிடிப்புக்கு தன் வீட்டை தந்துவந்த இவரும் தற்செயலாக நடிகர் ஆனதாக சொல்வார்கள். படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை ‘மர்மதேசம்’ தொலைக்காட்சித் தொடர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது.

தாய்வீட்டின் நிஜவாரிசான மோகன்ராமின் வாரிசுதான் நம்ம ஜென்னீ.

21 comments:

 1. நல்ல கட்டுரை யுவா...

  ReplyDelete
 2. V.P raman -advocate general in MRG period

  B.S.Raman -advocate general in Last karunanithi period

  B.S.Raman's daughter married to Selvaragavan.

  ReplyDelete
 3. அந்த கடைசில 'நம்ம ஜென்னீ'ன்னு சொன்னீங்க பாருங்க...அழகு. எங்கிருந்து நூல இழுத்தா சுவாரசியமா இருக்கும் நல்லா தெரிஞ்சிவைச்சிருக்கீங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. திருத்திட்டேன் கார்த்தி. நன்றி

  ReplyDelete
 5. திருத்திட்டேன் கார்த்தி. நன்றி

  ReplyDelete
 6. எப்புடி எப்புடி எப்புடி இப்படி வசீகரிக்க வைக்குரிங்க.... ஒரு போட்டோ போட்டு டைட்டில் குடுத்து முடிச்சா சொல்ல வேண்டிய விசயத்த இவ்வளவு விஷயம் கலந்து சொல்றிங்க.... வசீகரிப்பு...

  ReplyDelete
 7. நம்பவே முடியவில்லை. அப்பப்ப மோகன்ராம் சாட்டில் வருவார். சில முறை பேசியும் இருக்கேன். அவர் மகள் என தெரியவில்லை. நல்லநடிப்பு

  ReplyDelete
 8. நீங்க சொன்னதுக்கு அப்புறமா பார்த்தால் மோகன்ராமின் ஜாடை ஜென்னீக்கு இருக்கு.மோகன்ராம் ஓவர் ஆக்ட் செய்வார். எனவே நாடக நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஃப்ரெண்டா நடிக்கவே இவ்ளோ பேக்-க்ரெவுண்ட் தேவை இருக்கா.

  ReplyDelete
 9. உங்கள் பதிவு மிக அருமை!

  ReplyDelete
 10. அழகா அடுக்கி எழுதி இருக்கீங்க யுவா.

  ReplyDelete
 11. Interesting!!! if you post both photos together we would not require to read all this info. Thanks.

  ReplyDelete
 12. His nephew is married to Selvaragavan I think!

  ReplyDelete
 13. R P Rajanayagam ..எழுதியது போல் இருக்கு யுவா .. வாழ்த்துகள்

  ReplyDelete
 14. ப்ப்பா அருமை......அருமையான நடை

  ReplyDelete
 15. சிறந்த எழுத்தாளர்தாங்க நீங்க: 'ஜென்னி'யை அறிய அடையார் ராமச்சந்திரனில் இருந்து ரோடு போட்டிருக்கிறீர்களே, அபாரம்!

  மோகன்ராம் ஒரு நாய் இழுவைக்கு கஸ்தூரிரங்கன் சாலையில் இளைப்பதை அடிக்கடி பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆரை ஆதரித்த குடும்பம் என்று இனி நினைக்காமல் இருக்க முடியாது!

  ReplyDelete
 16. ஜென்னி, நீ நல்லா வருவ.....

  ReplyDelete
 17. well written yuva

  -Abdus Samadh

  ReplyDelete
 18. Really Good One Yuva !!

  ReplyDelete