12 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் காட்சி – சில விளம்பரங்கள்


முத்து காமிக்ஸின் நாற்பதாண்டு பயணநிறைவை கொண்டாடும் வகையில் ‘never before special’ஐ கொண்டு வந்திருக்கிறது. 456 பக்கங்கள். ரூ.400/- விலை. தரமான இந்த வண்ணப் புத்தகத்தின் விலை நியாயமாகப் பார்க்கப் போனால் ஆயிரம் ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

புத்தகக் காட்சியின் முதல் நாள் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன் முத்து காமிக்ஸ் ஸ்டால்தான். பயங்கர கூட்டம். முத்துவின் நிறுவனர் சவுந்தரபாண்டியன், ஆசிரியர் எஸ்.விஜயன், விஜயனின் மகன் என்று மூன்று தலைமுறையையும் ஒருங்கே ஸ்டாலில் காணமுடிந்தது. காமிக்ஸ் வாசகர்களோடு அவர்களது உரையாடல் நெகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியது.

நெவர் பிஃபோர் ஸ்பெஷலைத் தவிர்த்து பழைய லயன்/முத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டால் எண் 343.

ஸ்டால் எண் 300ல் ‘ஸ்டார் காமிக்ஸ்’ விற்பனைக்குக் கிடைக்கிறது. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக் கோட்டை இன்னமும் குறைந்த பிரதிகளே மிச்சமிருக்கின்றன. விலை ரூ.100. ஹார்ட்பவுண்ட் அட்டை, கண்ணைப் பறிக்கும் வண்ணமென்று இந்த காமிக்ஸும் பட்டாசுதான்.

இணையத்தில் பிரபலமான நண்பர் நர்சிம்மின் ‘ஒரு வெயில் நேரம்’ சிறுகதைத் தொகுப்பு பட்டாம்பூச்சி பதிப்பகத்தில் கிடைக்கும். இணையத்தில் எழுதிய சில சிறுகதைகள், இதழ்களில் வெளிவந்தவை என்று கலந்துக்கட்டி தொகுப்பாக்கி இருக்கிறார்கள். கதைகளில் ஆர்வமிருக்கும் வாசகர்கள் வாங்கலாம். நிச்சயம் ஏமாற்றாது என்பதற்கு நான் கேரண்டி. நர்சிம்மின் ‘உன்னை அழைத்துப்போக வந்தேன்’ கவிதைத் தொகுப்பும் இதே பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ’கேபிளின் கதை’ நாகரத்னா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. நம் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போய்விட்ட ‘கேபிள் டிவி’யின் பின்னணியை அறிந்துக்கொள்ள இந்நூல் உதவும்.

சத்ரபதி வெளியீடான ‘சின்மயி விவகாரம் : மறுபக்கம்’ ஒரு முக்கியமான நூலாக படுகிறது. பணத்திமிர் பிடித்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும், பிரபலங்களும் சாமானிய மனிதர்களை போட்டுத் தள்ளுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறைதான். அதை ஓர் எழுத்தாளர் தட்டிக்கேட்டு, விவகாரத்தின் முழுமையான பார்வையை ஒரு நூலாக கொண்டுவருவது எனக்குத் தெரிந்து இதுதான் முதல்முறை. “முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்” என்கிறார் விமலாதித்த மாமல்லன். அவர் எழுத்தாளர்தான் என்பதை இந்நூல் நிரூபிக்கிறது. கிழக்கு, காலச்சுவடு ஸ்டால்களில் இந்நூலை வாங்கலாம்.

8 கருத்துகள்:

 1. லக்கி .
  ஆஹா அருமை. நமது இதயம் கவர்ந்த வீரர்களான இரும்புக்கை மாயாவி, மான்ட்ரெக் , ரிப்கெர்பி மற்றும் , வேதாளர் புத்தகங்கள் கிடைக்கின்றனவா?

  பதிலளிநீக்கு
 2. சத்ரபதி வெளியீடான ‘சின்மயி விவகாரம் : மறுபக்கம்’ ஒரு முக்கியமான நூலாக படுகிறது. பணத்திமிர் பிடித்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும், பிரபலங்களும் சாமானிய மனிதர்களை போட்டுத் தள்ளுவது ஆண்டாண்டு காலமாக நடைமுறைதான். அதை ஓர் எழுத்தாளர் தட்டிக்கேட்டு, விவகாரத்தின் முழுமையான பார்வையை ஒரு நூலாக கொண்டுவருவது எனக்குத் தெரிந்து இதுதான் முதல்முறை. “முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன்” என்கிறார் விமலாதித்த மாமல்லன். அவர் எழுத்தாளர்தான் /////////////////


  இந்த வரிகளுக்காகவே பல 100000000000000000.......

  +++++++++++++++++கள் இந்த போஸ்ட்-க்கு............

  பதிலளிநீக்கு
 3. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று ஒரு பழியுரை பரப்பப்பட்டு வருகிறது. ஒரு தீவிரவாதி முஸ்லிமாக இருக்க முடியாது. ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருக்க முடியாது. இப்படி சொன்னவர் வேறு யாருமல்ல. நமது பாரத பிரதமர் மன்மோகன்சிங். உண்மையான இஸ்லாம் ஒரு சாந்தி மார்க்கம். சாதி பேதமற்ற சமத்துவ மார்க்கம். அந்த மார்க்கம் பற்றி விரிவாக அறிய விரும்புகிறீர்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு. தமிழுலகால் கவிக்கோ என்று கொண்டாடப்படும் அப்துல் ரஹ்மான் தமக்கே உரிய அழகிய முறையில் இஸ்லாத்தை விளக்கும் பதினோரு ஒலித்தட்டுகளை (DVD) ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கேட்டு பயன் பெறுங்கள். கிடைக்கும் இடம் :சென்னை புத்தக கண்காட்சி. ஸ்டால் எண் 104 ரஹ்மத் பதிப்பகம்

  பதிலளிநீக்கு
 4. Yuva.. thanks for the information about Maamallan's book.  by-Maakkaan.

  பதிலளிநீக்கு
 5. @உசிலை விஜ‌ய‌ன் :பழைய புதிய காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கிறது நண்பரே. ஸ்டால் நம்பர் 343 முத்து காமிக்ஸ். விஜயன் சார் எழுதும் ப்ளாக்கயும் படியுங்கள்.

  http://lion-
  muthucomics.blogspot.fr/

  இது என்னுடைய ப்ளாக்

  www.comicsda.com

  பதிலளிநீக்கு
 6. இந்ததடவை உங்கள் 'அழிக்கப் பிறந்தவன்' புத்தகத்துக்கு விளம்பரம் பண்ணவில்லையா?

  பதிலளிநீக்கு