31 டிசம்பர், 2012

bye bye 2012


2012, சொல்லிக் கொள்ளும்படியான வருடமாக இல்லையென்றாலும், நிச்சயமாக மோசமான வருடம் இல்லை.
வருடத்தின் தொடக்கத்தில் திடீரென அர்த்தமில்லாத ஏதோ ஒரு மிதப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இதுதந்த எதிர்மறையான கூடுதல் உற்சாகத்தில் இலக்கு நோக்கிய பாதையை கொஞ்சம் தவறியிருக்கிறேன். எல்லாமே எனக்குத் தெரியும், என்னைவிட்டா வேறு யார் இருக்கா என்றெல்லாம் கொஞ்சம் முட்டாள்த்தனமாக இருந்திருக்கிறேன். நல்லது, கெட்டதை எடைபோட முடியாமல் குழம்பியிருக்கிறேன். போதாக்குறைக்கு எப்பவுமே இல்லாத ஆசையாக சினிமா ஆசை வேறு. டிஸ்கஷன், லொட்டு, லொசுக்கென்று நிறைய நேரம் தேவையில்லாமல் வீணானது.
நல்ல நண்பர்கள் வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். தவறாக எடுத்துக் கொள்வேனோ என்று நினைக்காமல் சரியான நேரத்தில் இதையெல்லாம் சுட்டிக் காட்டினார்கள். ஆகஸ்ட்டு மாத வாக்கில் ஏதோ ஒரு போதிமரத்தடியில் மல்லாந்து படுத்திருந்தபோது திடீரென்று ஞானம் வந்துவிட்டது. காலத்தை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்று அடுத்த இருமாதங்களுக்கு பொறுமையாக அசை போட்டேன். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பது தெளிவாய் புரிந்தது.
வருடத்தின் கடைசி இரு மாதங்களில் கிடைத்திருக்கும் ‘எனர்ஜி லெவல்’ முன்னெப்போதும் இருந்ததில்லை. இதே லெவல் அடுத்த வருடமும் நீடித்தால் நிச்சயமாக ஏதோ ஒரு கோட்டைக்கு ராஜாதான். வருடத் தொடக்கத்தில் ஏற்பட்ட பேரழிவுகளை கடைசியில் வேகவேகமாக சீரமைக்க முடிந்தது. குறிப்பிடும்படியாகவும் பணியாற்ற முடிந்தது. என்ன ஒரே வருத்தம். பதினாறு அடி பாயவேண்டிய இடத்தில் நாலு அடிதான் பாய்ந்திருக்கிறேன். இந்த தூரத்தையும் சேர்த்து அடுத்தாண்டு கூடுதலாக பாய்ந்தாக வேண்டும். 2013 முழுக்க நிற்க நேரமிருக்காது என்று தோன்றுகிறது.
தீவிரமாக யோசித்துப் பார்த்தால் வருடம் முழுக்க மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன். இந்த மனநிலையை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கு என்னை சுற்றியிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

10 கருத்துகள்:

 1. நீங்கள் பல பல உயரங்களுக்கு கண்டிப்பாக செல்ல போகிறீர்கள் என்பது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.
  இதை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லவில்லை. உணர்ந்து தான் சொல்கிறேன்.உங்கள் உழைப்பும் சுறுசுறுப்பும் என்னக்கு பிடித்துள்ளது.உங்களுக்காக என்னுடைய பிராத்தனை எப்பொழுதும் உண்டு...

  ********

  நானும் எனது இலக்குகளை அடைந்தே தீருவேன்.

  பதிலளிநீக்கு
 2. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
  உங்களது பதிவுகளை மிகச் சமீபத்தில்தான் முதன்முறையாகப் படித்தேன். உங்கள் எழுத்து நடையும், பதிவிடும் நேர்த்தியும் அபாரமானவை!
  நேரம் கிடைக்கும்போது உங்களது பழைய பதிவுகளையும் படித்து(பயனடைந்து)விட்டு அவ்வப்போது இங்கே தலைகாட்ட முயற்சிக்கிறேன்.

  Have nice days through the year ahead!

  பதிலளிநீக்கு
 3. lucky
  wish you and your family a happy prosperous successful and healthy 2013. ungal santhoshamum vaazhkaiyil vetrikkana theeviramum maenmelum valarnthu sirakkattum.
  tamizh nilavukku aaseervathangaludan anbu muthangalum

  anbudan
  sundar g rasanai chennai

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் யுவா

  நிச்சயம் அடுத்த ஆண்டு பல அடி முன்னே வைப்பீர்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. சூப்பர் யுவா! வாழ்க வளமுடன்! நான்கடி பாய்ந்தாலும் பாய்தல் சாத்தியமே எனும் நம்பிக்கை ஔடதம் மனத்தை பலமாக்கியுள்ளதே! முதலடி நாம் வைத்தால் மறு அடி இறை வைக்கும்! ;-) கலக்குங்கள்!

  பதிலளிநீக்கு