December 24, 2012

காலத்தின் அடையாளம்!


ஒரு துறையில் இருபத்தி மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை என்பதே சாதனைதான். அதிலும் சாத்தியமான உச்சபட்ச சாதனைகளோடு நீண்டகால சேவை என்பது “இனிமேல் ஒருத்தன் பிறந்துதான் வரணும்” என்கிற வார்த்தைக்கு மிகப் பாந்தமாக பொருந்துகிறது.

இதனால்தான் சச்சின் தான் வாழும் காலத்தின் அடையாளமாக வரலாற்றில் அறியப்படப் போகிறார். கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் பாக்கியம் அது. கலைஞர்-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல், இளையராஜா-ரகுமான் என்று அவரவர் காலக்கட்டத்தின் அடையாளங்களாக மாறிப்போனவர்களுக்கு சமமான இன்னொரு எதிர்போட்டியாளரும் சமகாலத்தில் இருந்திருப்பார். சச்சினுக்கு நிகராக மட்டுமல்ல, அவரை நெருங்கக்கூடியவர்களும் கூட அவர் காலத்தில் இல்லை. அவ்வாறு சச்சினுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டவர்களும் கூட கடைசியில் சச்சினுக்கு சரணகோஷம் போட்டுவிட்டு ஓய்வெடுத்ததுதான் வரலாறு.

‘கிரிக்கெட் ஒரு மதமென்றால், சச்சின்தான் அதன் கடவுள்’ என்கிற வாக்கியம் சும்மா போகிறபோக்கில் சொல்லப்பட்டதல்ல. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்ப்பது இந்தியர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்தான். ஏனெனில் இங்கே ஒரு தலைமுறைக்கு சச்சின் என்றால் கிரிக்கெட், கிரிக்கெட் என்றால் சச்சின். “கவாஸ்கரும், ஸ்ரீகாந்தும் ஓபனிங் இறங்குறப்போ...” என்று பழம்பெருமை பேசும் பெருசுகளும் அவரை ரசித்தார்கள். சைக்கிள் ட்யூப் பால், தென்னை மட்டை பேட்டோடு தெருவில் கிரிக்கெட் ஆட இறங்கிய வாண்டுகளும் அவரை ரசித்தார்கள்.

நண்பன் ஒருவன் அவனைவிட கூடுதலாக ஒரு வயதுள்ள பெண்ணை காதலித்தான். கல்யாணம் என்று வரும்போது அது ஆட்சேபணைக்குரிய அம்சமாக அவனது பெற்றோரால் முன்வைக்கப்பட்டது. “சச்சினைவிட அஞ்சலி அஞ்சு வயசு பெருசுப்பா” என்று அவன் சொன்ன சமாதானம்தான், சச்சின் ரசிகரான அவனுடைய அப்பாவை கன்வின்ஸ் செய்தது.

அவரது கேரியரின் கடைசிக்கட்டங்களில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் எக்காலத்திலுமே மோசமாக விளையாடியவர் அல்ல என்பதே நிம்மதியாக இருக்கிறது.

குட்பை சச்சின்!


12 comments:

 1. அப்பாடா! யாரையும் திட்டாத ஒரு கட்டுரை...

  ReplyDelete
 2. சீனு, நீங்கள்லாம் இன்னும் இங்கிட்டு இருக்கீங்களா சாமி? :-)

  ReplyDelete
 3. அருமையான கட்டுரை, டாடா சச்சின்.

  ReplyDelete
 4. Naangal aatchikku vanthaal meendum sachin cricket aaduvaar... :)

  ReplyDelete

 5. At last... at last.... at least ...... being known the hesitation of selectors to select him in the ODI squad, he announced his retirement. If it was anounced a few months back, he could have saved his face. Now its too late that somebody have to push him out.

  ReplyDelete
 6. என்னை பொறுத்தவரை சச்சினின் இந்த முடிவு மிக மிக தாமதம்..

  தென்னை மட்டை பேட்டை ஞாபக படுத்தியமைக்கு நன்றிங்க :-)

  ReplyDelete
 7. cricket will never forget sachin...

  ReplyDelete
 8. மிக அருமையாக சொல்ல எழுதப்பட்ட.. கருத்து... இனி எத்தனை பேர் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்த போகிறார்களோ... (என்னையும் செய்ததுதான்..) மேட்சில் சச்சின் அவுட் என்றால் அவரை ( பௌலரையும் சேர்த்தே )திட்டிக்கொண்டே TV யை அணைத்தார்கள் அனேகர். நன்றி.

  ReplyDelete
 9. yuva avargaley , we expect more from you but ur simply completed, we know ur busy but u need to spend some time becasus sachinnnnnnnnnnnnn

  ReplyDelete
 10. சச்சின் செய்தது சேவை யா ?

  ReplyDelete
 11. இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்.

  ReplyDelete