13 செப்டம்பர், 2012

ஆளும் கருப்பு, அகமும் கருப்பு


ஸ்ரீரங்கத்து ரங்கநாயகியும், காவிரி தந்த கலைச்செல்வியும், ஈழத்தாயும், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழினத் தலைவியாகவும் விளங்கும் தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகம்.

சரித்திர பிரசித்தி வாய்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றினால் சூழப்பட்டும், மிகப்பெரிய ராஜகோபுரத்தினை உடைய திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ ரங்கநாத சாமி ஆலயம் அமைந்திருப்பதுமான, அம்மா அவதரித்த ஸ்ரீரங்கத்தில் முழக்கமிட்டிருக்கிறார்.

“ஆளும் கருப்பு, அகமும் கருப்பு” - பேரரசு மாதிரி டைரக்டர்கள் கூட இப்படி ‘பஞ்ச்’ அடிக்க முடியாது. அதுதான் அகிலம் காக்கும் அம்மா.

இதுவரை தன்னை எம்.ஜி.ஆர் என்று சொல்லிக்கொண்டு கூலிங்க்ளாஸ் போட்டு, டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் குழந்தைகளான தமிழக மக்களை ஏமாற்றிவந்த குடிகார திம்மிக்கு சரியான கும்மாங்குத்து. இவர் குடிப்பவர் என்கிற உண்மையை கண்டுபிடித்து உலகுக்கு முதலில் சொன்னவரே அம்மாதான்.

குடிகாரராக இருந்தபோதிலும் தெய்வத்தாய் வாழும் ஆலயமான போயஸ்கார்டனுக்கு வந்து, “குடிக்கமாட்டேன்” என்று சத்தியம் செய்ததால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த கேடுகெட்ட மொடா குடிவெறியரை கூட்டணிக்கே நம் தங்கத்தாரகை சேர்த்துக்கொண்டார் என்கிற ரகசியம் ஸ்ரீமான் சோவை தவிர்த்து எத்தனை பேருக்கு தெரியும்?

அதிசயங்களுக்கு எல்லாம் அதிசயமாக வாழும் அம்மாவின் அருட்தொண்டனான நான் அப்போதே அபசகுனமாக நினைத்தேன். குடிகாரரை போய் கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறாரே, நாளைக்கு நாமே இவரது கட்சிக்காரர்களோடு சியர்ஸ் சொல்லவேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று.

அதுபோலவே ஆதிபராசக்தி அம்மாவின் கூட்டணியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகிவிட்டதும் மீண்டும் ரகசியமாக குடிக்கத் தொடங்கினார் குடிகாரர். அதுவும் அம்மாவின் ஆட்சியில் சீரும் சிறப்புமாக நடைபெறும் நமது டாஸ்மாக்கிலேயே சரக்கு வாங்கி குடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் தினமும் கலாட்டா செய்திருக்கிறார். விடுவாரா நம் அம்மா? கூட்டணியை விட்டு டிஸ்போஸபிள் க்ளாஸ் மாதிரி தூக்கியெறிந்துவிட்டார்.

இவர் குடிவெறியர் என்று உலகத்துக்கே அறிவித்த அம்மாதான் இப்போது இவர் கருப்பு நிறமும் கொண்டவர் என்பதையும் கண்டறிந்து சொல்லியிருக்கிறார். இவ்வளவு நாட்களாக சினிமாவில் ரோஸ் பவுடர் மேக்கப் போட்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தவர், இப்போது சாயம் வெளுத்துப்போச்சே என்று குடித்துவிட்டு ஊளையிட்டுக் கொண்டிருப்பார். சைட் டிஷ்ஷாக ஊறுகாயை கொடுத்து தன் பக்கத்தில் அவரை சேர்த்துக்கொள்ள மூத்த திராவிட திம்மியும் நரித்தனமாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பார்.

வேண்டுமென்றால் பாருங்களேன். குடிகாரர் கருப்பு நிறமுடையவர் அல்ல என்று கூட நிரூபிக்க மூத்த திராவிட திம்மி தலையால் தண்ணீர் குடிப்பார். அதையும் தாண்டி அம்மாவை கூட கருப்பு என்று வாய்கூசாமல் பொய் சொல்லவும் முனைவார். அதனால் எல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அம்மாவின் கலர் இங்கிலாந்தை ஆளும் எலிசபெத் ராணிக்கு கூட இல்லையென்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

இந்த குடிகாரரைப் போலவே நன்றி மறந்த இன்னொரு குடிகாரரும் இருக்கிறார். அம்மா தொலைக்காட்சி விழாவில் அருள்மிகு அம்மா முன்னிலையிலேயே மூத்தத் திம்மியின் பெயரை புகழ்ச்சியாக உச்சரித்திருக்கிறார். அதை தொலைக்காட்சியில் பார்த்த எனக்கே வாயும், வயிறும் எரிந்தது. நேரில் பார்த்த தாயுள்ளம் கொண்ட அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும். அவரும் கருப்புதான். அவரும் குடிவெறியர்தான். ஆற்றல்மிகு அம்மா ஒருநாள் அவருக்கும் பூசை வைப்பார். அப்போது நாம் பார்த்துக் கொள்வோம்.

அடுத்து மாண்புமிகு அம்மா என்ன சொல்வார், யாரை சொல்வார் என்பதை அவரது அரும்பெரும் தொண்டனான நான் அறியமாட்டேனா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதைதான் சொல்லப் போகிறார்.

“அவருக்கு தலைக்கு மேலும் ஒன்றுமில்லை. தலைக்கு உள்ளும் ஒன்றுமில்லை”

17 கருத்துகள்:

 1. ஆரூர் மூனா செந்தில்07:35Edit
  யுவா இருய்யா எங்க ஏரியா தேமுக நகர செயலாளரிடம் போட்டு கொடுக்கிறேன். அவர் நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகும் வழியில் காரை ஏத்தி நசுக்கி விடுவார்.

  Aravindan K07:38
  //நசுக்கி விடுவார்.// எதை.?

  ஆரூர் மூனா செந்தில்07:39Edit
  வண்மையாக கண்டிக்கிறேன், நீங்கள் எப்படி குடிகாரர்களை கிண்டலடித்து பதிவு போடலாம். நான் ஒரு குடிகாரன், இருங்கள். குடிகாரர்களை, அதுவும் தமிழகத்தின் வருமான தெய்வங்களை கிண்டலடித்து பதிவு போட்ட உங்களை ரெண்டு சாத்து சாத்த கடும் குடிகாரர்கள் உங்கள் ஏரியா நோக்கி வருகிறார்கள்.

  ஆரூர் மூனா செந்தில்07:39Edit
  அரவிந்தன் அண்ணே, அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்.

  ஆரூர் மூனா செந்தில்07:41Edit
  திரு.யுவா, நான் விடமாட்டேன். குடிகாரனான என்னை வைத்து விளையாடி இருக்கிறீர்கள். குடியைப் பத்தி பதிவு போடும் முன் என்னை கலந்து ஆலோசித்திருக்க வேண்டாமா? நான் ஏற்கனவே பூஸ்டில் வேறு இருக்கிறேன்.

  ஆரூர் மூனா செந்தில்07:42Edit
  பதிலளிக்க வேண்டும் கவிஜர் யுவாவே.

  ஆரூர் மூனா செந்தில்07:43Edit
  நான் விட மாட்டேன். நீங்கள் எப்படிங்க குடிகாரனை ஏத்தி விடுற மாதிரி பதிவு போடலாம்.

  ஆரூர் மூனா செந்தில்07:45Edit
  யோவ் பதிலளிக்க யாராவது வாங்கய்யா, நான் வேற புல் மப்புல இருக்கேன். யாரும் சீண்டலனா தூங்கிட போறேன்.

  Aravindan K07:47
  மணி எட்டுதானே ஆச்சு அதுக்குள்ளே என்ன தூக்கம்

  ஆரூர் மூனா செந்தில்08:05Edit
  அரவிந்தன் அண்ணே. நான் ஆறு மணிக்கே ஆப் போட்டுட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. யுவா,"மூத்த திராவிட திம்மி" என்று யாரை குறிபிடுகிறீர்கள் ?

  பதிலளிநீக்கு
 3. “அவருக்கு தலைக்கு மேலும் ஒன்றுமில்லை. தலைக்கு உள்ளும் ஒன்றுமில்லை”

  :)

  பதிலளிநீக்கு
 4. கடந்த மாதம் முழுவதும் விஜயகாந்த் ஊர் ஊராக சென்று கூட்டம் போட்டு "என் கலரு கருப்பு என் மனசு வெள்ளை , அந்தம்மா கலரு வெள்ளை மனசு கருப்பு" அப்படின்னு பேசிட்டிருந்தாரு . அதற்குதான் முதல்வர் "அவரின் நிறமும் கருப்பு உள்ளமும் கருப்பு" ன்னு சொன்னாங்க .இப்போது ஜெவை ஜாதிப்பெயர் சொல்லி திட்டும் புரட்சியாளர்கள் கடந்த மாதம் விஜயகாந்தை ஏன் ஜாதிப்பெயர் சொல்லி திட்டவில்லை ? கருணாநிதி உள்ளிட்ட மற்ற தலைவர்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்ட துணிச்சல் இருக்கிறதா ?face-bookil,Nambikai raj......

  பதிலளிநீக்கு
 5. வெடிஞ்ச வுடன் எந்திருச்சு இந்த நியூஸ்சை படித்த நம் பத்திரிக்கையாளர் பருப்பு பரமேசு, பசி தூக்கம் மறந்து டக்கீலா அடித்தது போல வேற்று உலகத்தில் சஞ்சரித்து விட்டார்.

  டெசோவால் ஈழமக்களுக்கு சொர்க்கத்தை காட்டிய ஈழத் தந்தை பேஸ்புக் புகுந்து அப்படியே பின் வாசல் வழியாக துரத்தப் பட்ட சம்பவத்தை டிஸ்யு பேப்பரால் துடைத்து எறிந்து விட்டு இந்த பதிவை எழுத ஆரம்பித்து விட்டார்.

  இதை எழுதி முடித்த சந்தோசம் மற்றும் நிம்மதியில் ஆயிரம் கொசு கடித்தாலும் கூவம் ஆற்றங்கரையோரம் கயித்து கட்டிலில் கையை தூக்கி அக்குளை சொரிந்து கொண்டு காலை அகட்டி வைத்து தூங்கி வானுலக ரம்பை நமீதாவுடன் கனவுலகில் மானாட மயிலாட சோவுக்கு ரிகர்சல் செய்ய ஆரம்பித்தார்.

  நாளை காலை கழகத்தின் கஜ்ஜி கொள்கை பரப்பு செயலாளர், பெரியார் கண்ட புதுமை பெண், புரட்சி ஆண்டி குஸ்பூ அவர்கள், பரமேசுவின் பதிவை படித்து விட்டு உச்சி மோந்து, அவரது துணைவன் (கணவன் அல்ல.... இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது) நடிக்கும்/இயக்கம் படத்தில் பதிவுலக நம்பியார் கேபிள் சங்கருடன் இணைந்து வசனம் எழுத வாய்ப்பு கொடுப்பார்.

  இரண்டு பெரும் சேர்ந்து எதோ ஒரு சாப்பாட்டு கடையில் உட்கார்ந்து பாராட்டா சாப்பிட்டு கொண்டே டிஸ்கசன் செய்வார்கள். கேபிள் சங்கருக்கு ஒரு பதிவும் ரெடி.

  இதன் மூலம் சுஜாதா விருது வாங்கிய பரமேசு, திரை துறையிலும் சுஜாதா விட்ட இடத்தை தன்னிடம் இருந்த அழுக்கு துண்டை போட்டு பிடிப்பார்.

  ஆகவே பரமேசு, பிருமாண்ட இயக்குனர் ஊழலுக்கு எதிராய் படமெடுத்து அதை பின்னாளில் ஒழித்த, சங்கருடன் இணையும் நாள் கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது எனலாம்.

  பதிலளிநீக்கு
 6. வடபழனி வடை என்கிற பெயரில் கமெண்டு போட்டிருக்கும் டயப்பர் வாயர் சார்,

  நகைச்சுவை என்பது வாசிப்பவருக்கு ஏற்பட வேண்டிய உணர்வு. அதை எழுதுபவர் சீரியஸாகவும், சின்சியராகவும் எழுதவேண்டும். நாமே எழுதி நாமே சிரித்துக்கொண்டால் அதற்கு பெயர் அவலச்சுவை.

  எழுதுவதற்கு முன்னால் கொஞ்சமாவது உழைப்பை கொட்டுங்கள். நீங்கள் விரும்பும் புகழ் நீங்கள் அறியாமலேயே உங்களை தேடி வரும். அதற்கு முன்னால் எழுதும்போது மட்டுமாவது வஞ்சமும், வன்மமும் இல்லாத மனவோட்டத்தை அமைத்துக்கொள்ள பயிற்சி எடுங்கள்.

  btw, நீங்கள் அனானியாக போட்ட ஆபாச கமெண்டு பற்றி எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் வாசிப்பவர்களுக்கு இடையூறாக இருக்குமே என்று நிராகரித்திருக்கிறேன். மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 7. ஜாதி வெறி கொண்ட ஜெயலலிதாவுக்கு புதிதாக நிறவெறியும் வந்துவிட்டதோ?

  ஒருவர் உருவத்தை பற்றி பேசுபவர்கள் நல்ல மனிதர்கள் இல்லை.

  பதிலளிநீக்கு
 8. வஞ்சப் புகழ்ச்சி அணியின் உச்சத்தையே தொட்டு, கடைசி வரியில் ஒரு ஹைக்கூ கவிதை நுடபத்தோடு முடித்துள்ளீர்கள், பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 9. "அவருக்கு தலைக்கு மேலும் ஒன்றுமில்லை. தலைக்கு உள்ளும் ஒன்றுமில்லை”
  ////////////////////////

  அவரும் "சோ"ம பானம் அருந்துபவரா?

  பதிலளிநீக்கு
 10. //சைட் டிஷ்ஷாக ஊறுகாயை கொடுத்து தன் பக்கத்தில் அவரை சேர்த்துக்கொள்ள மூத்த திராவிட திம்மியும் நரித்தனமாக திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பார்.

  வேண்டுமென்றால் பாருங்களேன். குடிகாரர் கருப்பு நிறமுடையவர் அல்ல என்று கூட நிரூபிக்க மூத்த திராவிட திம்மி தலையால் தண்ணீர் குடிப்பார். அதையும் தாண்டி அம்மாவை கூட கருப்பு என்று வாய்கூசாமல் பொய் சொல்லவும் முனைவார்.//

  இங்கு "மூத்த திராவிட திம்மி" என்பது தரையில் இருக்காவிட்டால் தமிழினத் தலைவராகவும்,தண்ணீரில் தள்ளிவிட்டால் கட்டுமரமாகவும், மாறும் திறன் படைத்த 'மஞ்சளை'க்குறிக்கும் எனும்பட்சத்தில்,பச்சை,வெள்ளை கறுப்பு பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் டபுள் ஓகே!

  SO (சோ), முடிவில் அவர் கதியும் அதான் என்கிறீர்கள்!..

  பதிலளிநீக்கு