10 செப்டம்பர், 2012

ஒரு தலைகுனிவு. ஒரு பெருமிதம்.


தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் தரக்குறைவாக சித்தரித்து சிங்கள ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ‘கார்ட்டூன்’ உலகளாவிய பத்திரிகையுலகத்தையே கறைப்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு ‘கண்டனம்’ தெரிவித்துக் கொண்டிருந்தபோது புரியவில்லை. ஃபேஸ்புக்கில் படம் போடும் நண்பர் கார்ட்டூன் பாலாவை விடவா மோசமாக கார்ட்டூன் போட்டுவிட்டார்கள் என்று சாதாரணமாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன். கார்ட்டூனை பார்த்ததும்தான் புரிந்தது. நம்ம ஊரு ஆட்கள் ’ஹசந்தா விஜநாயகே’ என்கிற அந்த கார்ட்டூன் மனநோயாளியின் பக்கத்திலேயே வரமுடியாது என்று. ‘லக்பீமா நியூஸ்’ செய்வது பத்திரிகை வியாபாரம் அல்ல. பத்திரிகை விபச்சாரம். பத்திரிகையில் பணிபுரிபவன் என்கிற வகையில் இச்சம்பவத்துக்காக தலைகுனிகிறேன்.

* - * - * - * - *

எமெர்ஜென்ஸிக்குப் பிறகு பிறந்த தலைமுறை சூடு, சுரணையற்றது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சுயமரியாதை இயக்கத்தின் உரிமைப்போர், இந்திய சுதந்திரப் போர், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர், எமர்ஜென்ஸி அடக்குமுறைக்கு எதிரான போர் என்று தமிழக அளவில் நாம் கேள்விப்பட்ட சிவிலியன்கள் பங்குபெற்ற போராட்டங்களின் தீவிரம் கடந்த நாற்பதாண்டுகளாய் காணப்பட்டதாக நினைவேயில்லை. ஈழத்தமிழருக்கு ஆதரவான போக்கு எப்போதுமே பரவலாக இருந்ததாக நினைவில்லை. இடஒதுக்கீடு, ஊழலுக்கு எதிரான சிந்தனை போன்ற சமூகக்கோபங்களும் கூட மெஜாரிட்டியான மக்களின் உணர்வாக இல்லாமல் சிறு சிறு குழுக்களின் போராட்டங்களாகவே இருக்கிறது.

நான் பிறந்ததிலிருந்து முதன்முறையாக மாபெரும் மக்கள் பங்கேற்புடன் கூடிய போராட்டத்தை கூடங்குளம் விவகாரத்தில் காண்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்தை காக்க மக்கள் குடும்பம், குடும்பமாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதை தமிழகத்தில் காண்பது இமாலய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம்தான் மேற்கு எல்லையோர தமிழகத்தை முல்லைப் பெரியாறுக்காக திரளவைத்தது.

போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது எத்தனையோ கொச்சைப் பிரச்சாரங்கள் நடந்தது. அரசுடன், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதற்கு துணைபோனார்கள். ஆனால் முழுக்க முழுக்க மக்களை மட்டுமே நம்பி, இன்று நாட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் கூடங்குளம் போராளிகள். அணு உலையை மூடவேண்டும் என்கிற அவர்களது நோக்கம் வெல்லாமல் போகலாம். ஆனால் தமிழனுக்கு போர்க்குணம் இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்த வகையில் மகத்தான வெற்றியை கண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இன்னுமோர் இடத்தில் அணுவுலை அமைக்க அரசு திட்டமிட்டால், ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கூடங்குளம் மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கூடங்குளம் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.

(படம் உதவி : வினவு தளம்)

7 கருத்துகள்:

 1. ஒரு ஓவியம கார்டூன் என்று சொல்லப்பட அடிப்படையாக மூன்று யோகியதாம்சங்கள் தேவை:
  1.புத்திசாலித்தனம் கலந்த நகைச்சுவை
  2.நாகரீகம்
  3.விமரிசக்கப்பட்ட நபரும் ரசிக்கும் வண்ணம் இருத்தல்.
  இம்மூன்றும் அறவே அற்ற ஒரு அசிங்ககத்தைப் பற்றி யாரும் பேசுவத்தையே தவிர்ப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
 2. like this Unity in diversity. Good lucky, we dmk supporters prove we are just principle fighters. Thalaivar should condemn this cartoon.

  பதிலளிநீக்கு
 3. Dear Yuva,

  Double Thanks,
  1.Though you have different views about our CM & PM, but condemned the insulting cartoon.
  2.Supporting Koodankulam people. They proved that still tamils are sensitive about their rights.
  -Siva

  பதிலளிநீக்கு
 4. Manmohan Singh is definitely of that type. He is a gem, the cartoonist has wrongly depicted our PM.

  பதிலளிநீக்கு
 5. தமிழனுக்கு போர்க்குணம் இன்னமும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்த வகையில் மகத்தான வெற்றியை கண்டிருக்கிறார்கள்- :)

  பதிலளிநீக்கு
 6. இந்தியாவில் இன்னுமோர் இடத்தில் அணுவுலை அமைக்க அரசு திட்டமிட்டால், ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கூடங்குளம் மக்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

  Cant agree more

  பதிலளிநீக்கு