August 31, 2012

ஸ்ரீதேவி விஜயம்


ஆர்.பாலகிருஷ்ணன் என்கிற சுத்தபத்தமான பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. பால்கி என்றால் போதும். விளம்பர ஏஜென்ஸிகளின் வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தின் தலைவர். ‘கறை நல்லது’ என்கிற கருத்துக்கு சொந்தக்காரர் என்றால்தான் இந்தியாவுக்கே இவரை தெரியும்.

இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகர். இளையராஜாவின் இசையால்தான் இவருக்கு சினிமா என்கிற துறையே பிடித்தது. சினிமாவில் எழுபதுகளை கட்டி ஆண்டவர்கள் அனைவரும் பால்கிக்கு ஆண்டவர்கள். அவ்வகையில்தான் அமிதாப். திடீரென்று ஒருநாள் இரவில் பால்கி இயக்குனர் ஆனார். அவரது ஆண்டவர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ஹீரோ. படம் ‘சீனி கம்’. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னொரு படம் எடுத்தார். இதிலும் அமிதாப்தான் ஹீரோ. படம் ‘பா’. இரண்டு படத்துக்குமே இளையராஜாதான் இசை.

அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுந்தபோது ஒரு படம் தயாரிக்கப் போகிறேன், நான் இயக்கப் போவதில்லை என்றார். சில நாட்கள் கழித்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் கவுரி ஷிண்டே என்று அறிவித்தார். கவுரி யாருமில்லை பால்கியின் திருமதிதான்.

கவுரி படமெடுப்பது பெரிய சாதனையோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வோ இல்லை. அவரது படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இதை மாற்றியிருக்கிறது. நம் விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகளை ஒரு கலக்கு கலக்கினார், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். 96ல் அணில்கபூரின் அண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். 97ல் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து நடிக்க வருகிறார் என்பதால்தான் கவுரியின் திரையுலகப் பிரவேசம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
படத்தின் பெயர் இங்கிலீஷ் விங்கிலீஷ். அமெரிக்காவுக்கு ஒரு குடும்பம் குடிபெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு இங்கிலீஷ் தெரியாது. குடும்பத்தில் குழந்தைகள், கணவர் எல்லோரும் இதற்காக அவரை கிண்டலடிப்பது வழக்கம். அமெரிக்க குடியுரிமை அதிகாரிகூட “தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசி, எங்கள் நாட்டில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார். ஸ்ரீதேவி எப்படி இங்கிலீஷ் கற்றுக் கொள்கிறார் என்பதுதான் மீதி கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை இழைத்து, என்.ஆர்.ஐ குடும்பங்கள் காட்டும் பகட்டினைப் பற்றிய பகடிதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று இப்படத்தின் ட்ரைலர் மும்பையில் வெளியிடப்பட்டது. அன்றுதான் ஸ்ரீதேவியின் 50வது பிறந்தநாளும் கூட. ஒரே வாரத்தில் யூட்யூப் தளத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரைலரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். படம் ஷ்யூர் ஹிட், குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் அள்ளோ அள்ளுவென்று அள்ளும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஸ்ரீதேவிக்காகவும், பால்கிக்காகவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அமிதாப் ஒப்புக் கொண்டாராம். இந்திப்படவுலகில் அமிதாப்பின் cameo role, படங்களுக்கு பெரிய ஓபனிங்கை பெற்றுத் தருவதாக ஒரு செண்டிமெண்ட். சமீபத்தில் கூட போல் பச்சன், நூறு கோடி அள்ளியதற்கு அவர் ஒரு பாடலில் தோன்றியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் தங்கள் மொழியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியை ரசிக்கப் போகிறார்கள். குறிப்பாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் அக்டோபரிலோ, நவம்பரிலோ (அனேகமாக தீபாவளிக்கு கூட இருக்கலாம்) வெளியாகும்போது பரபரப்பு பற்றிக்கொள்ளப் போகிறது. ஏனெனில் இந்தியில் அமிதாப் நடிக்கும் ரோலில் தமிழில் தோன்றப் போகிறவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இதற்காக தயாரிப்பாளர் அளிக்க முன்வந்த சம்பளப் பணம் வேண்டாமென்று மறுத்திருக்கிறார் தல. மேலும் போக்குவரத்து, உடை, உதவியாளர் பேட்டா, என்று அவருக்கான இதரச் செலவுகள் அனைத்தையும் தன்னுடைய சொந்த செலவிலேயே செய்துக் கொண்டிருக்கிறார். மூத்த கலைஞரான ஸ்ரீதேவிக்கு செய்யும் மரியாதையாக இதை ‘தல’ எடுத்துக் கொண்டாராம்.


துக்கடா (மொழி அரசியல் ஆர்வமில்லாதவர்கள் வாசிக்க வேண்டாம்) :

படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன். அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் ஸ்ரீதேவி சொல்கிறார். “எனக்கு ஆங்கிலம் சரியாக வராது”

அதிகாரி கேட்கிறார் “ஆங்கிலம் தெரியாமல் எங்கள் நாட்டில் எப்படி இருப்பாய்?”


அதிகாரியோடு பணியாற்றும் இந்தியர் ஒருவர் உடனே சொல்கிறார். “இந்தி தெரியாமலேயே நீ எங்கள் நாட்டுக்கு வரலாம்”


இந்த காட்சி ட்ரைலரில் ஓடும்போது வட இந்திய திரையரங்குகளில் க்ளாப்ஸ் எகிறுகிறதாம். வட இந்தியர்களின் மொழிப்பற்றை நாம் பாராட்டுகிறோம். அதே நேரம் இதே கருத்தை எழுபது/எண்பது வருடங்களாக தம் மொழிக்காக திராவிட இயக்கம் இங்கே முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மொழிக்காக போராடியவர்களை ரவுடிகள் என்று இந்தியாவின் பிரதமரே கூட விமர்சித்திருக்கிறார். “இந்தி தெரியாதா? நீ எப்படி இந்தியன் ஆவாய்?” என்கிற வட இந்தியர்களின் அகம்பாவமான கேள்வியை இதுவரை கோடிமுறையாவது தென்னிந்தியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.


இந்திக்காரர்கள் தங்களை பெருந்தன்மையான இந்தியர்களாக இன்று உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த குடியுரிமை அலுவலகக் காட்சி ‘இந்தி’யப் பெருந்தன்மையைதான் வலியுறுத்துகிறது. உண்மையில் நாம்தான் பெருந்தன்மையாளர்கள். தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் தொழில்நடத்தி, பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்த இந்திக்காரர்களை அனுமதித்திருக்கிறோம்.
இங்கே வாழ்பவர்கள் தமிழ்தான் கற்கவேண்டும், தமிழ்தான் பேசவேண்டும் என்று நாம் நம் மொழியை திணித்ததில்லை. இந்தியாவின் பிராந்திய மக்களுக்கு இருக்கும் இந்த பெருந்தன்மையை, இந்தி பேசும் மெஜாரிட்டியினர் மதிக்கவேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும்.

16 comments:

 1. துக்கடா தூள்!

  ReplyDelete
 2. செய்தியும் அருமை, அதைவிட துக்கடா பகுதி சூப்பரு!

  ReplyDelete
 3. வந்தாரை வாழவைத்து வலுக்கட்டாயமாக தமிழை திணிக்காமல் இருக்கும் தமிழ்நாட்டில் தான் இந்தி பாடம் கட்டாயம் என்ற நிலையும்,தமிழை இரண்டாம் மொழிப் பாடமாக எடுக்கும் நிலமையும் மேலோங்கி நிற்கிறது. .
  கொடுமை. .

  ReplyDelete
 4. Very rarely your post has some meaning... this is one such post...

  that last paragraph is more meaningful....

  G Hariprasad

  ReplyDelete
 5. ஹை ஸ்ரீதேவி திரும்பவுமா..

  ReplyDelete
 6. // தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் தொழில்நடத்தி, பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்த இந்திக்காரர்களை அனுமதித்திருக்கிறோம்.//

  Aangilam, endroru buffer mozhi illathappo idhu avlo easy yaa mudinjuthaa ?.

  Namma sedu modhal kondu, Thamizh thappa pesinaalum, THamizh kathukka maatennu sonnathilla

  ReplyDelete
 7. “இங்கிலீஷ் விங்கிலீஷ்“ எதிர்பார்ப்பை அதிகம் தூண்டிவிடுகிறது..
  உங்கள் பதிவிலும கூட.
  துக்கடா கலக்கல்.
  :-)

  ReplyDelete
 8. தமிழ் நாட்டில் இருக்கும் வட இந்தியரை விட்டு விடுங்கள். இன்று தமிழ் நாட்டில் இருக்கும் பள்ளி மாணாக்கர்களில் எத்தனை பேருக்கு சுயமாக ஒரு கட்டுரை ஒரு பக்கத்திற்கு தமிழில் பிழையின்றி எழுதத் தெரியும்? திராவிட ஆட்சி வந்த பின்புதானே மெட்ரிக் பள்ளிகள் வர ஆரம்பித்தன? இன்று அப்பள்ளிகள் புற்றீசல்கள் போல் எங்கும் வந்து விட்டனவே?

  திராவிடக் கட்சிகள் 45 ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கின்றன. உயர் கல்வியை தமிழில் கொண்டு வர ஒரு நடவடிக்கையும் இது வரை ஏதுமில்லை. அரசாங்க அலுவல்கள் கூட முழுவதும் தமிழில் கிடையாது.

  MGR முதல்வராக இருந்த போது, தமிழ் நாட்டில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் குறைந்த பட்சம் 13 வாரங்களுக்கு தமிழ்த் திரைப்படம் காட்டப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். Casino , Emerald , Blue Diamond , Safire போன்ற திரையரங்குகள் அதற்குப்பின்தான் தமிழ்ப் படங்கள் காட்ட ஆரம்பித்தன. இந்த உத்தரவு பின்பு செயலிழந்து விட்டது. இன்றைய நிலைமையை நான் கூற வேண்டியதில்லை.

  எனக்கொரு அச்சம் உண்டு. இன்னும் ஒரு 20 ஆண்டுகளில், இப்போதைய நிலைமை நீடித்தால், தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் குறைந்து பொய் விட வாய்ப்புகள் அதிகம்.

  ReplyDelete
 9. Dear Yuva,
  I read the last paragraph twice(துக்கடா) and that is really true. I wondering if Tamil peeple agree with this.

  ReplyDelete
 10. //இந்தி தெரியாமலேயே நீ எங்கள் நாட்டுக்கு வரலாம்// Like you managing in our country without knowing Hindi - This is the actual dialogue.

  Sudharsan

  ReplyDelete
 11. Why we learning English now..... Why north Indians learning Tamil... All for food. We don't have to learn Hindi for food

  ReplyDelete
 12. ஹிந்தி தெரியாமல் தமிழ் நாட்டை விட்டு பிற மாநிலங்களுக்கு செல்லும் தமிழர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. வட இந்தியாவில் வேலை பார்க்க ஹிந்தி அவசியம் தேவை. மொழி மீது வெறுப்பு வேண்டாம். இன்று தமிழ் நாட்டில் பல இடங்களில் வேலை பார்க்கும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் பிழைப்புக்காக இங்கு வந்தவர்கள்தான். ஆனால், நமது மொழியை பேச கற்றுக் கொள்கிறார்கள். மொழியின் காரணாமாக வெறுப்பு வளர்க்க வேண்டாம்.

  Anonymous கூறுகிறார் ஹிந்தி வேண்டாம் என்று. ஆனால், தேவைப்பட்டால், கண்டிப்பாக அவரும் ஹிந்தி கற்றே தீருவார்.

  ReplyDelete
 13. Hindi is must to live in outside of Tamilnadu. its our national language. there is no shame in learning it.

  ReplyDelete
 14. U said Sridevi returns to film after 16 years.But I want to remind u Sridevi acted in one Tamil film in the mean time alongside Arvind Samy namely "devaraagam" Is it not?

  ReplyDelete