29 ஆகஸ்ட், 2012

வேண்டாம் காட்டுமிராண்டித்தனம்


அஜ்மல் கசாப் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப் போல அவன் தீவிரவாதி, நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானவன் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு.

இணையத்தளத்தில் கட்டுரை எழுதி மரணதண்டனையை நிறுத்த முடியும் என்று நினைக்குமளவுக்கு நாம் மனநலம் குன்றிவிடவில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக மரணதண்டனைக்கு எதிரான நிலையில் இருப்பவர்கள், தூக்குத்தண்டனை என்கிற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை செயல்பாடுக்கு வரும் நிலையில் எல்லாம் அதை எதிர்க்கவேண்டிய கடமையில் இருக்கிறார்கள். இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் என்கிற பாகுபாடு எதுவும் தேவையில்லை. அவ்வாறு சிலருக்காக மட்டுமே தேர்ந்தெடுத்து ‘மரணதண்டனை எதிர்ப்பு’ பேசினால், அது எவ்வகையிலும் மனிதநேயத்துக்கு சார்பான ஒன்றில்லை. ஆபத்தான ஒருதலைபட்சமான செயல்பாடும் கூட.

ஒவ்வொருமுறை மரணதண்டனை குறித்த செய்திகள் வெளிப்படும் போதெல்லாம், அதை எதிர்த்து எழுதுவது எனக்கு சடங்காகி விட்டது. போதுமான அளவுக்கு எழுதிவிட்டபோதும், திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துவதின் மூலம் குறைந்தபட்சம் ஓரிருவரையாவது சிந்திக்க வைக்க முடிகிறது என்கிற திருப்தியைத் தாண்டி வேறெதுவும் கிடைப்பதில்லை. மாறாக இதற்காக நமக்குக் கிடைக்கும் எதிர்வினைகள் படுமோசமானவை. அடுத்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சல்களை தரவல்லவை.

இருப்பினும் மனிதன் என்கிற அடிப்படையில் இந்த காட்டுமிராண்டித்தனம் இந்தியாவில், உலகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதை ஆசையாக, கொள்கையாக வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அஜ்மல் கசாப், முகம்மது அப்சல், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் என்று எவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையும் இந்தியக் குற்றவியல் சட்டத்தை ’பல்லுக்குப் பல்’ காலத்திய கற்காலத்துக்கு கொண்டு செல்கிறது.
திரும்ப திரும்ப மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துதேசத்துரோகிபட்டம் வாங்க அயர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனை கூடாது என்பதை தாண்டி, எதை புதியதாக பேசமுடியும் என்றும் தெரியவில்லை.

இதுகுறித்து ஏற்கனவே எழுதிய சில பதிவுகளின் சுட்டியை இங்கே 
அளிக்கிறேன்:
24 கருத்துகள்:

 1. சரி காட்டுமிராண்டித்தனம் வேண்டாம். அப்படின்னா குற்றச்செயல்களை எப்படி தடுப்பது?

  பதிலளிநீக்கு
 2. அவன் வந்து கச கசன்னு அப்பாவிமக்கள சுட்டு சாவடிபானாம் , நாம தட்டிகுடுத்து அனுபிறுனுமாம்.. உங்க
  மனிதநேயம் கண்டு மயிர்கூச்செறிகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.!

  பதிலளிநீக்கு
 3. அவன் வந்து கச கசன்னு அப்பாவிமக்கள சுட்டு சாவடிபானாம் , நாம தட்டிகுடுத்து அனுபிறுனுமாம்.. உங்க
  மனிதநேயம் கண்டு மயிர்கூச்செறிகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.!

  பதிலளிநீக்கு
 4. தோழர்களே!

  என்ன எழுதியிருக்கிறோம் என்று படித்துவிட்டு பின்னூட்டம் போடலாமே? வாய் இருக்கிறதே என்பதற்காக பான்பராக் போடுவதைப் போல இருக்கிறது உங்கள் செயல்பாடு.

  பதிலளிநீக்கு
 5. ஒரு சில நாடுகளில் போதை மருந்து வைத்திருந்தாலே தூக்கு தண்டனை உண்டு
  விடுதலைக்கு முன் காஷ்மீரில் டோக்ரா ராஜாவின் ஆட்சியில் பசு மாட்டை வெட்டினால் தூக்கு தண்டனை இருந்தது
  உலகின் பெரும்பாலான நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டன
  எழுவதிர்க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை இனவெறியால் சுட்டு கொன்றவனுக்கு நோர்வே நீதிமன்றம் சில நாட்கள் முன் தான் 21 ஆண்டு தண்டனை
  வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது
  மரண தண்டனை தவறான ஒன்று என்ற சிந்தனை உலகெங்கும் அதிகரித்து வருகிறது
  இதில் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்பவர்களை பார்த்து வேண்டும் என்று குதிப்பவர்கள் வசை பாடுவது கண்டிப்பாக காட்டுமிராண்டித்தனம்
  கருணை மனு வேண்டாம்,உச்ச நீதிமன்றம் வேண்டாம் என்று கூட குதிப்பார்கள் போல
  பாராளுமன்றம் ஒரு நிமிடத்தில் மரணதண்டனையை ரத்து செய்து விடலாம்.அது ஒரு சட்டம்
  சட்டம் பொதுவான ஒன்று.
  மனைவியை துண்டு துண்டாக்கி வாணலியில் போட்டு வறுத்தவன் தண்டனை குறைக்கபடுகிறது
  சிறுமிகளை,குழந்தைகளை கொன்றவன்,பாலியல் வன்முறை செய்து கொன்றவன் தண்டனை குறைக்கபடுகிறது
  மகள்,தங்கை வேறு சாதியில் திருமணம் செய்து விட்டாள் என்று குடும்பத்தையே வெட்டி கொன்றவர்களின் தண்டனை குறைக்கபடுகிறது
  ஆனால் வெறி யூட்ட வசதியான கொலைகளை புரிந்தவர்களின் மரண தணடனையை வேண்டாம் என்று சொல்லும் போது அதை மக்களிடம் வெறியுட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்பவர்களை காட்டுமிராண்டிகள் என்று அழைப்பது கூட குறைவு தான்

  பதிலளிநீக்கு
 6. எனது கருத்தும் கூட இதுவே!

  பதிலளிநீக்கு
 7. ஏன் தூக்கு மூலம் மரண தண்டனை .ஒவ்வொரு உறுப்பையும் எடுத்து கிட்னி தேவைபடுபவர்களுக்கு கிட்னி ,லிவர் தேவைபடுபவர்களுக்கு லிவர் ,கண்கள் தேவைபடுபவர்களுக்கு கண்கள் ,ரத்தம் தேவைபடுபவர்களுக்கு ரத்தம் (இருவது லிட்டர் கிடைக்கும்)என வழங்கலாமே
  ...அது தவறு என்று மரண தண்டனை வேண்டும் என்று குதிப்பவர்களுக்கும் தோன்றுவது ஏன்
  இப்படி பாகம் பாகமாக பயன்படுத்துவதே தவறு என்று தோன்றும் போது ஒரு பயனும் இல்லாமல் கொல்ல வேண்டும் என்று எண்ணுவது சரியா

  பதிலளிநீக்கு
 8. I want to kill kasab (Every indian must join the page) என்ற பெயரில் ஒரு முக நூல் பக்கம் உருவாக்கியுள்ளதைப் பார்க்கும் போது தீவிரவாதிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் . நம்மையும் மனச் சலவை செய்யும் எண்ணம் தானே அந்தப் பக்கம். அதில் வரும் நல்ல செய்திகளைக் கூட பகிர மனம் வரவில்லை.

  பதிலளிநீக்கு
 9. வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவன் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு
  http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616


  ஒரு வருடத்திற்கு ஆயிரம் கொலைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது.
  அதில் பாதிக்கப்பட்டவர்கள் கசாபால் சுட்டு கொல்லப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை விட குறைந்தவர்களா .அவர்கள் குடும்பங்களை அழித்தவர்களின்,பாலியல் வன்முறை புரிந்து கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை மாற்றப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படும் போது பொங்காதவர்கள் கசாப் விஷயத்தில் வெறியோடு அலைவது சரியா
  துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்காக சுட்டவனை கொல்ல வேண்டும்,ஆனால் திட்டமிட்டு கீழ்சாதியில் திருமணம் செய்ததால் சாதி வெறியில் மொத்த குடும்பத்தையும் வெட்டி கொலை செய்தவனுக்கு மரண தண்டனை கிடையாது .இது சரியா
  அவன் மட்டும் திருந்துவான் ,இவன் திருந்த மாட்டானா
  என்னாபா ஞாயம்

  பதிலளிநீக்கு
 10. மரணதண்டனை வேண்டாம் என்பது பற்றி பதிவு சரிதான்.ஆனால் பாகிஸ்தானிலிருந்து வந்து காட்டுமிராண்டித்தனமாக சுட்டவனுக்கு இது பொருந்துமா என்று தெரியவில்லை. இதை விட காட்டுமிராண்டித்தனமாக(!) ஒரு கேள்வி...உங்களுக்கு குழந்தைகள் உண்டா.நீங்கள் மும்பையில் வசித்திருந்தால்...சம்பவம் நடந்த அன்று அவர்கள் தெருவில் நடந்துபோயிருந்தால்...?

  கசாப் ராணுவ நடவடிக்கையின் கீழ்தான் வருவான்.அது கோர்ட்டில் விசாரிக்கப்பட்டாலும்.நம் ஊர் சிறைகள் சிறைகளே அல்ல...சொகுசு வாழ்க்கையும் வாழலாம்.அப்படி வாழவிட்டால் பாகிஸ்தான் மாசம் ஒருத்தனை அனுப்பும்.வருசத்தில் பதினொரு பேரை தடுத்து ஒருவனை மிஸ் பண்ணிவிட்டாலும் யாருமறியாத அப்பாவிகள் கொல்லப்பட்டால் அதுக்கும் ஒரு பதிவு எழுதி கண்ணீர் சிந்திவிட்டு கடந்து போய்விடலாம் இல்லையா....

  பதிலளிநீக்கு
 11. 1. மனிதர்களுக்கு தூக்குத்தண்டனை கூடாது. ஆனால், சொந்த நலனுக்காகவும், அஞ்சு பத்து கூலிக்காகவும், கட்சி தலைமைக்கு விசுவாசத்தை காட்டவும் அப்பாவிகளை கொல்லும் காட்டுமிராண்டிகளுக்கு தரக்கூடிய அளவுக்கு தூக்கு தண்டனையைவிடவும் பெரிய தண்டனை எதுவும் இல்லாததால், இவர்களுக்கு இந்த மாதிரி தண்டனைக்கு எனது பேராதரவு.
  2. எந்த ஒரு வினைக்கும் எதிர்வினையுண்டு. இவர்களுக்கு வழங்கப்படும் இந்த உயர்ந்தபட்ச தண்டனை, குற்றம்புரிய நினைக்கும் ஒரே ஒரு கிரிமனைலையாவது மரணத்தைக்குறித்து யோசிக்க வைக்கும். அந்த பயத்தினால் அவன் கொல்ல இருக்கும் 'எத்தனையோ' உயிர்கள் காப்பாற்றப்படும். அந்த எத்தனையோ உயிர்களில் நானும் எனது குடும்பத்தினரும், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒருவராகக்கூட இருக்கலாம்.
  3. நாட்டில் குற்றங்கள் பலுகிப்பெருகுவதற்கு, பெஞ்ச் மேலே ஏறி நிற்பது மற்றும் ஐனூறு கோடி ரூவா ஊழலுக்கு ஐனூறு ரூவா அபராதம் விதிப்பது போன்ற சாதாரண தண்டனைகளும் ஒரு காரணம். கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இருக்கும் சில அரேபிய தேசங்களில்கூட குற்றங்கள் உள்ளனவே என்ற வாதம் தேவையற்றது என நினைக்கிறேன். தண்டனைகளின் வீரியத்தையும், வழக்குகள் நடக்கும் கால அளவையும் பொறுத்து குற்றங்கள் குறையும் என்பது நிதர்சனம்.
  4. இந்த மாதிரி காட்டுமிராண்டிகளை தண்டிப்பதால் ஒன்றும் குடி முழுகிப்போய்விடுவதில்லை.

  பதிலளிநீக்கு
 12. naanga kaattumirandikalaagavae irukka virumbigirom...pongayyyaaaaaa neengalum unga neeethiyumm...

  Naan enna solla varrrenna oru kutram nadanthu atha yaru senjangannu terinja udanae thandanai kuduthutta antha kutravali mela yarukkum entha irakkamum varaporathillai...
  atha vittutu atha nallaa kaya vachi aara potutu ippo thandanai kodutha evlo periya kutram seithalum irakkam vara than seyyuthu...Paarunga Kasab ku marunthu kuduthu biriyani potu valathutu ippo thandanai koduthu ungalukku kanla ratha kanneerae vruthae????

  பதிலளிநீக்கு
 13. நிசமா சொல்றேன். நானும் இதை நினைச்சேன்.. எங்க எதையாவது சொல்ல போக, இந்திய இறையாண்மைக்கு எதிர பேசுறான்னு என்னை நொண்டி நொங்கு எடுத்துடுவாங்களோன்னு யோசிச்சு விட்டுட்டேன்.
  அதே சமயம், கசாபை தண்டிக்காம விடனும்ன்னு சொல்லல. செமத்தியா கவனிக்கணும்... அவனோட நிலமைய பார்த்து வேற எவனும், இந்த மாதிரி வர பயப்படனும்.. அப்படி ஏதாவது வித்தியாசமா தண்டனை கொடுத்தா ஜம்முன்னு இருக்கும்..

  பதிலளிநீக்கு
 14. உங்களைப் போன்ற மனிதாபிமானிகளுக்கே சலிப்பு வரும் போது எங்களைப் போன்ற காட்டுமிராண்டிகளுக்கு வராதா? நாங்களும் பின்னூட்டத்துக்குப் பதில் லிங்க் தந்து விட்டோம். poornam: மனிதாபிமானம் தேவையா?http://poornam11.blogspot.in/2011/08/blog-post_30.html

  பதிலளிநீக்கு
 15. உயிரை பறிப்பதற்கு படைத்தவரை தவிர யாருக்கும் உரிமை கிடையாது. உண்மையில் படைத்தவருக்கு கூட உரிமை கிடையாது. பதவியிலுள்ள அரச அதிபர்கள் பலருக்கு போர்க்குற்றங்கள் புரிந்ததற்காகவும்...அதற்கு துணைநின்றதற்காகவும்..பல்லாயிரக் கணக்கான உயிர்களை காவு கொண்டதற்காகவும் என்ன செய்வது? அவர்கள் பதவி நாற்காலியை கொண்டும்..பண பலத்தை கொண்டும்.. குற்றங்களை இராசதந்திரத்துடன் சமாளித்துக் கொள்கிறார்களே..மரணதண்டனை என்பது வெறும் அப்பாவிகளுக்கானது மட்டும் தானா? மரணதண்டணை குற்றங்களை தீர்க்காது. குறைக்கவும் செய்யாது. பழிக்கு பழி தீர்க்கத் துடிக்கும் வன்மம் மட்டுமே அது.

  பதிலளிநீக்கு
 16. Dear Yuva,
  Agree with you, I use to say the same thing, but my friends are not accepting and they quarrel with me like anything. Thanks for the article.

  - Siva

  பதிலளிநீக்கு
 17. //சரி காட்டுமிராண்டித்தனம் வேண்டாம். அப்படின்னா குற்றச்செயல்களை எப்படி தடுப்பது?

  //

  கசாப்புக்கு தூக்கு என்ற செய்தியை கேட்டு அகில உலக தீவிரவாதிகள் எல்லாம் அன்டர் வேரில் ஒன்றுக்கு போகும் அளவுக்கு அலறி அன்டார்ட்டிக்கா பக்கம் சென்று அமைதி ஊர்வலம் போவதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே நாளை காலைக்குள் தமிழ்நாட்டில் கள்ளதொடர்பு வழக்கில் சிக்கும் முதல் நபரை(யாராச்சும் ஒருத்தேன் ஒருத்தி சிக்குவாய்ங்க) தூக்கில் போட்டு தமிழ்நாட்டை கள்ளத்தொடர்பு இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்று இங்கு பின்னூட்டமிடுபவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு ..

  வாய் இருக்குங்கறதுக்காக பான்பராக்//

  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 19. marana thandanai vendam endru solpavargalai..naan ondru kekalama ? thangaluku pidithavargal uyiurukum maelaka nesithavargal chinanj chiru kulanthaigal aanathaigalai saakadikapatu rathamum sathaiyumaga kidakirarkal endru oru seithi tholaipesiyin valiye vanthal evaru irukum ungaluku ? evano oruvan thanai ethilo oru amaipil inaithu kondu etharkavo kanmoodi thanamaga suttu vilthukiran enna karanam endru theriyamal suta paduvatharku manithan kadarkarai manalil vilayatuku kaga niruthapatirukum balloon alla..iruvarukum idaiye irukum pagaiyinal oruvan inoruvanai kolai panukiran endraal kuda avanai thooku maedaiku anupa venam endru vaathadalam..yen endral pala naal pagaiyinal ul irundha vanjathinal unarchivacha pattu kolai seithan..maniyungal endru vendalam...pala latcham per vanthu koodum railway nilayathilum, mukiya nagara veethigalilum naatil kalavarathaiyum pathatrathaiyum uruvakka vendum enkira orey muyarchiyil 'appavi' makkalai kuri vaithu nikalthapadum thakuthalkal ethuvaaga irundhalum avatrai nikalthiyavarkalku thookai thandanaiyaka alika koodathu..thookirku mel oru thandanai alika vendum..athu kandipaga manippu alla.

  பதிலளிநீக்கு
 20. Ungal thangayo, udan piranthavargalo kasab suttu kondru irundhal - ungal manasatchi intha pathivai ezhuthuma?

  Blog vechi irukuravar avar pathivai ezhuthinal, vaai irukuravan pan parag podathan seivan.

  பதிலளிநீக்கு
 21. Dear Mr.Yuva....
  Before blogging think about what to be said...
  Please go through the comments...
  Reply to the questions raised.
  Don't be think ur self (fake) God...All indians r my bro & sis.. padichathoda maranthu pocha?
  That Kasab without showing any reaction & emotions(no kolaveri in his eyes..) shot dead the peoples.Don't u think it is due to the brainwash given to him...those are absolute cold blooded murders???

  Take an ex..Nalini ya mannichittu Ilangai yil irukum lakhs people azhikka porul,war udhavi seithatharku antha 1 pennai kondrirukalaamae?

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் அன்பரே :),
  உங்களை அக்கப்போர் பிறந்த நாள் விருந்தில் சந்தித்தது..உங்களுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன்.
  உங்கள் பதிவுகள் பலவற்றை ரசித்து படித்தேன்
  இப்பதிவு தொடர்பாக எனது பதிவு..உங்கள் பார்வைக்கு
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/08/blog-post_31.html
  உங்களின் மாற்று கருத்து வரவேற்க்கப்படுகிறது
  நன்றி :)

  பதிலளிநீக்கு
 23. ஒரு தனி மனிதன் இன்னொருவனைக்கொன்றால் அது குற்றம்.ஆனால் அதே மனிதன் இன்னொருவனை போரில் கொன்றால் அது வீரச் செயல்.
  பயங்கரவாததிற்கும்,ஊழலிற்கும் எதிராக நாம் நடத்துவது போர்.

  ஒரு பயங்கரவாதியை தூக்கில் ஏற்றி கொல்வது மிகவும் தவறு.
  அவனை முச்சந்தியில் நிறுத்தி சுட்டுக்கொல்ல வேண்டும்.

  மேலும் பொருளாதார குற்றங்கள் செய்யும் மக்கள் பிரதிநிதிகளையும் (அமைச்சர்கள்,மன்ற உறுப்பினர்கள்)சட்டத்தை மீறும் சட்டகாவலர்களையும் (போலீசார்,நீதிபதிகள்)தொழில்தர்மத்தை மீறும் தொழிற் விற்பன்னர்களையும் (PROFESSIONALS LIKE DOCTORS,CAs,LAWYERS)தூக்கிலிடுவதில் தவறே இல்லை.
  என்ன! இவர்களில் கி.பி.1930 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு வேண்டுமென்றால் விதி விலக்கு அளிக்கலாம். ;-)
  (என்ன யுவா மகிழ்ச்சிதானே?)

  பதிலளிநீக்கு