18 மே, 2012

கலகலப்பு


தொண்ணூறுகளின் மத்தியில் சுந்தர்.சி-க்கு சினிமாவில் இருந்த மவுசு இன்றைக்கும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே ஒரு ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை இட்டுச்சென்ற உயரம் அப்படியானது. அடுத்தடுத்து வந்த மேட்டுக்குடி, ஜானகிராமன் படங்களெல்லாம் ‘சுந்தர்.சி’ என்கிற பிராண்டுக்காகவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. என் சமவயதுள்ள தோழர்களுக்கு சுந்தர்.சி நடிக்க வருவதற்கு முன்பே ஹீரோ. அவர் இயக்கிய இருபத்தைந்து படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். ‘அருணாச்சலம்’ மட்டுமே சுந்தர்.சி-க்கு திருஷ்டிப்படிகாரம் என்பது என் எண்ணம்.

இத்தனை ஆண்டுகளில் சுந்தர்.சி கொஞ்சமும் மாறவேயில்லை என்பது கலகலப்பு பார்க்கும்போது தெரிகிறது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கொஞ்சம்கூட வளரவில்லை என்றும் சொல்லலாம். அதே உருட்டுக்கட்டை, அதே சேஸிங், அதே லாஜிக்லெஸ் சீன்கள், அதே வசன-வார்த்தைக் குழப்பங்கள்... உள்ளத்தை அள்ளித்தா பார்முலாவில் இத்தனைப் படம் எடுத்தும் இன்னும் அலுக்காமல், அதையே தொடர்ச்சியாக, ஆர்வமாக அவர் எடுத்துக் கொண்டிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.

‘கலகலப்பு’ 1996ல் வெளியான படத்தை பார்ப்பதைப் போன்ற உணர்வினைக் கொடுக்கிறது. இடைபட்ட ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதையுமே இயக்குனர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விமர்சனமாக சொல்லவேண்டும் என்றால் சுந்தர்.சி அப்டேட்டாக இல்லை. ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில்குமாரும் அதேகாலத்து தொழில்நுட்பத்தில் முடங்கிவிட்டார் போல. படத்தின் எடிட்டர் கழுவப்பட்ட நெகட்டிவ்களை கத்திரிக்கோலால் வெட்டி, செலபன் டேப் ஒட்டி எடிட்டியிருப்பார் போலிருக்கிறது. இசையும் தொண்ணூறுகளின் இசைதான். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்ததும் காலயந்திரத்தில் பயணித்து பதினைந்து ஆண்டுகள் முன்பாக போய்விட்டது மாதிரி ஃபீலிங்.

ஆனால், இந்தப் பிரச்சினை எதுவுமே ‘கலகலப்பின்’ கலகலப்பை குறைக்கவில்லை. சுந்தர்.சி-யின் படங்கள் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆவதைப் போல ரொம்ப ஸ்லோவாகவே ஆரம்பிக்கும். நான்கைந்து காட்சிகளுக்குப் பிறகு பிடிக்கும் சூடு, அப்படியே பிக்கப்பாகி க்ளைமேக்ஸில் பிரமாதமாக வெடிக்கும். கலகலப்பும் அந்த ஃபார்முலாவுக்கு விதிவிலக்கல்ல. படம் முழுக்க காரணமேயில்லாமல் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்துவிட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ‘ஏன் சிரித்தோம், அப்படி என்ன பிரமாதமான காமெடி?’ என்று தோன்றுகிறது. அதனாலென்ன? ரெண்டு மணிநேரம் வாய்விட்டு சிரித்திருக்கிறோமில்லையா? டிக்கெட்டுக்கு கொடுத்த காசு கண்டிப்பாக செரிக்கும்.

படத்தில் எல்லா சமாச்சாரங்களுமே எல்லாமே அவுட் ஆஃப் பேஷன் என்றாலும், ‘நங்’கென்று புதுசாக ஒரு ‘மேட்டரை’ இறக்கியிருப்பதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. சுடிதாரிலும், தாவணியிலும் டீசண்ட் ஃபிகராகவே செட்டில் ஆகிவிட்ட அஞ்சலியை பிரமாதமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் காட்டன் புடவையில் வந்தாலும் கூட செம்ம நாட்டுக் கட்டையாகவே தெரிகிறார். இதுவரை எந்த இயக்குனரும் படம்பிடித்திராத லொக்கேஷனான அஞ்சலியின் பேரெழில் தொப்புளை, வாஸ்கோடகாமா கணக்காக கண்டுபிடித்து படமாக்கியிருப்பதில் சபாஷ் வாங்குகிறார் சுந்தர்.சி. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலுமே முக்கால் சாண் இறக்கியே கொசுவம் வைத்திருக்கிறார் அஞ்சலி. இவரது தொப்புள் இயற்கையான தொப்புள்தானா அல்லது கூடுதல் கவர்ச்சிக்காக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்களா என்கிற குழப்பம் இந்த நொடி வரை எனக்கு நீடிக்கிறது.

அஞ்சலியின் கவர்ச்சி பாராட்டப்பட வேண்டியது என்றால் ஓவியாவின் கவர்ச்சி கண்டிக்கப்பட வேண்டியது. சில காட்சிகளில் அவரது முகம் அழகாக இருக்கிறது. பல காட்சிகளில் ரொம்பவே சுமாராக இருக்கிறார். சாமுத்ரிகா லட்சணம், காமசூத்ரா லட்சணம் என்று எந்த லட்சணத்தின்படி பார்த்தாலும் இப்படியொரு உடல்வாகு ஒரு பெண்ணுக்கு அமைய வாய்ப்பேயில்லை. அவ்வளவு பூஞ்சையான உடம்புக்கும், உடைந்துவிடும் மாதிரி ஒல்லியான இடைக்கும் எப்படி அவ்வளவு பெரிய...? so confusing.

சந்தானம் அலுக்கிறார். விரைவில் அடுத்த விவேக் ஆகிவிடக்கூடிய எல்லா சாத்தியக்கூறுகளும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதுபோலவே விமலும் கூட முன்பு எல்லா பாரதிராஜா படங்களிலும் இடம்பெறும் ராஜா என்கிற நடிகர் போல் ஆகிவிடுவார் எனத்தெரிகிறது. இன்னொரு ஹீரோவான சிவா அநியாயம். கம்மி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டதைப் போல ஏனோ, தானோவென்று நடித்திருக்கிறார்.


யோசித்துப் பார்த்தால் இது மொக்கைப்படம். ஆனாலும் இன்னொரு முறை தியேட்டருக்குப் போய் பார்க்கத் தோன்றுகிறது. 


13 கருத்துகள்:

 1. சிந்திப்பவன்9:27 பிற்பகல், மே 18, 2012

  யுவா,

  நீங்கள் திரைவிமரிசனத்தில் ஒரு அலாதி ஸ்டைல் உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
  இது பல ஆண்டுகளுக்கு முன்னர் சுப்புடு என்ற விமரிசகர் கர்நாடக சங்கீதத்தில் செய்த சாதனைக்கு இணையானது.மிகவும் சக்திவாய்ந்த விமரிசனங்கள்!படிப்போரை உடனே திரையரங்கிற்கு சென்று பார்க்கவைக்கும்
  (அல்லது எதிர்மறை விமரிசனங்கள் இலவச பாஸ் கிடைத்தாலும் போக விடாமல் செய்யும்)விரைவில் உங்கள் விமரிசனத்தை ஒரு குறியீடாக அனைவரும் ஏற்கப்போகிறார்கள்
  You rock man!
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. //யோசித்துப் பார்த்தால் இது மொக்கைப்படம்.// இது உள்ளத்தில் இருந்து வந்தது.

  //ஆனாலும் இன்னொரு முறை தியேட்டருக்குப் போய் பார்க்கத் தோன்றுகிறது.// இது படத்தில் கூலி வாங்கிய நண்பர்களுக்காகச் சொன்னது.

  பதிலளிநீக்கு
 3. கலகலப்பு...நல்ல நகைச்சுவை படம்..கிளைமாக்ஸ் பைட்டு ரொம்ப சூப்பர்..கண்டிப்பாக கொடுத்த காசுக்கு வொர்த்

  பதிலளிநீக்கு
 4. " இத்தனை ஆண்டுகளில் சுந்தர்.சி கொஞ்சமும் மாறவேயில்லை என்பது கலகலப்பு பார்க்கும்போது தெரிகிறது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கொஞ்சம்கூட வளரவில்லை என்றும் சொல்லலாம "


  " நங்’கென்று புதுசாக ஒரு ‘மேட்டரை’ "

  " இயற்கையான தொப்புள்தானா அல்லது கூடுதல் கவர்ச்சிக்காக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்களா '

  "அஞ்சலியின் கவர்ச்சி பாராட்டப்பட வேண்டியது என்றால் ஓவியாவின் கவர்ச்சி கண்டிக்கப்பட வேண்டியது "  பட விமர்சனத்தை இவ்ளோ ஆர்வமா எழுதுற

  உமது அக்கறை கூட

  எடுத்த அவங்களுக்கு இல்லையே . .

  செம மொண்ணை படம் . .

  பதிலளிநீக்கு
 5. சிந்திப்பவன் என்பவர் போட்ட கமெண்ட்டை நான் வழிமொழிகிறேன்

  பதிலளிநீக்கு
 6. அமலா பாலுக்குக் குறைவாக இருந்தாலும் குற்றம்... ஓவியாவுக்கு அதிகமாக இருந்தாலும் குற்றம் என்றால் என்னதான் செய்வது?!

  பதிலளிநீக்கு
 7. "சாமுத்ரிகா லட்சணம், காமசூத்ரா லட்சணம் என்று எந்த லட்சணத்தின்படி பார்த்தாலும் "

  ஹா.. ஹா .. வாய் விட்டு சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. உள்ளத்தை அள்ளித்தா, படம் முழுக்க ரீமிக்ஸ். பாடல்கள் முழுவதும் காப்பி!

  பதிலளிநீக்கு
 9. திருச்சிக்காரன்5:18 பிற்பகல், மே 20, 2012

  லக்கி... அதென்ன உடல் ஒல்லியாக இருந்து மேற்படி சமாச்சாரம்... எப்ப்ப்பூடிங்க... என்கிறீர்கள்...

  அதற்கெல்லாம் சாமுத்ரிகா லட்சணம் படிக்க வேண்டும். அப்போது தான் தெரியும் அது என்னவென்று...

  அதெல்லாம் அப்படித்தான்... ஆனால் இந்த ஃபிகர்கள் சீக்கிரம் குண்டாகி விடும் என்பது அனுபவம்.

  பதிலளிநீக்கு
 10. @சிந்திப்பவன்: உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல. நல்லவேளை சுப்புடு போயிட்டாரு.

  கட்டாயமாக மொக்கை படம் என்றாலும் மனசுவிட்டு ரொம்ப நாளைக்கப்புறம் காரணமே இல்லாமல் சிரிக்கவச்ச படம். அப்பப்ப இப்படியும் படம் வந்தா நல்லாதான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. Arunachalam is 200 days movie for running only Super Star. NOT Sundar. C

  பதிலளிநீக்கு
 12. Hi,

  I saw the movie and its good entertainment without logic.

  But this movie story/plot/scene/settings/characters are based on a very emotional/funny German Movie called
  Soul Kitchen Released in Dec 2009 .
  [www@imdb.com/title/tt1244668/]

  May be this is how the future tamil comedy movies are going to be...

  பதிலளிநீக்கு