20 ஏப்ரல், 2012

தனித் தமிழீழம்

‘தனித் தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று கலைஞர் போனவாரம் எழுதியிருக்கிறார். ‘தமிழீழம் தன்னுடைய நிறைவேறாத கனவு’ என்று ஏற்கனவே சொன்னவர் என்பதால், இதுகுறித்த அவரது அக்கறையை புரிந்துகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர்கள் ‘ஒற்றுமையாக’ தமிழீழம் காணவேண்டும் என்பதே திமுகவின் நெடுங்கால ஆசையாக இருந்துவருகிறது. இன்றையத் தேதியில் இதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றவையாக தெரிகின்ற போதிலும் இந்த ஆசையை, கனவை எதிர்காலத்தில் மாறக்கூடிய சூழல்களை மனதில் வைத்து தக்கவைத்துக் கொள்வது அவசியமே.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிலரும், பிழைப்புக்காக தமிழ் தேசியவாதிகளாகி விட்ட நம்மூர் ஆட்கள் சிலரும் கலைஞரின் கனவை நாடகமென்றோ, ஏமாற்றுப்பேச்சு என்றோ சொல்லலாம். ஆனால், 83 இனப்படுகொலை நடந்த காலத்தில், அதை யாரும் தட்டிக்கேட்க நாதியில்லாத நிலையில் முதன்முதலாக தனி ஈழத்துக்காக இந்தியாவில் போர்க்குரல் எழுப்பிய தலைவர் கலைஞரே. தமிழகமெங்கும் ஈழக்கனவை விதைத்தவர்கள் திமுகவினரே என்பது வரலாறு. ஈழத்துக்காக முதன்முதலாக தமிழகத்தில் தீக்குளித்தவரும் திமுகவைச் சேர்ந்த ‘இஸ்லாமிய’ தோழர் ஒருவரே என்பதை யார் மறைக்க நினைத்தாலும் மறுக்க இயலாது. இன்றுவரை தனித் தமிழீழத்தை, ஜெ தலைமையிலான அதிமுக நேரடியாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கலைஞரின் அறிக்கையில் ‘வாக்கெடுப்பு’ என்பது நியாயமான கோரிக்கையாக இருந்தாலும், அடுத்த வரியிலேயே ஒட்டுமொத்தமாக இந்த கோரிக்கையை காமெடி ஆக்கிவிட்டார் என்பதே நம் ஆதங்கம். “இந்த வாக்கெடுப்புக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்”.

கிட்டத்தட்ட கலைஞர் சொல்லவருவதை எளிமையாக இப்படிப் புரிந்துக் கொள்கிறேன். “கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கந்துவட்டிக்காரர்கள் முன்வரவேண்டும்”.

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது என்பதைத் தவிர்த்து ஜனநாயகத்துக்கும், இந்தியாவுக்கும் வேறு என்ன சம்பந்தம் என்பதையே நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை. தாங்கள் தனிநாடாக இருக்கவேண்டுமா என்கிற சுயநிர்ணய உரிமைக்காக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கும் ஜனநாயகப் பண்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்று கலைஞர் எப்படி நம்புகிறாரோ தெரியவில்லை.

சீக்கியர்களின் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு கண்மூடித்தனமாக அடக்கியதில் தொடங்கி, வடகிழக்கு மாநிலங்களில் கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி நடத்துவதில் தொடர்ந்து, காஷ்மீரை கடும் அடக்குமுறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வைத்திருப்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இது இந்தியாவா, அமெரிக்காவா என்கிற நியாயமான சந்தேகம் அதன் குடிமக்களுக்கே இருக்கிறது.

ஒருவேளை இந்தியா எம்.ஜி.ஆர் பட க்ளைமேக்ஸில் நம்பியாரின் முகத்தில் இருந்த சிகப்பு விளக்கு ஒளி நீங்கி, பச்சை விளக்காக மாறுவதைப்போல திடீரென நல்லவனாக மாறி வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டால் என்ன ஆகும்? உடனடியாக காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் டவுசரை பாகிஸ்தான் கயட்டும்தானே? அங்கும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெறும்தானே? இப்படிப்பட்ட நெருக்கடியான அரசியல் கட்டாயத்தை எதிர்கொள்ளக்கூடிய வலுவான நிலையில் இந்தியா இருக்கிறதா என்ன?

‘ஈழப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. அது இலங்கைக்குள்ளேயே பேசி தீர்வு காணப்பட வேண்டும்’ என்பதுதான் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலைப்பாடுதான் இந்தியாவுக்கு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளை அணுகவும் வாகானது.

தார்மீக ரீதியில் தனித்தமிழீழத்துக்கு ஆதரவாக இருப்பது தமிழகத் தமிழர்களின் கடமை. இது உறவுப்பூர்வமான உணர்வு. ஆதரவினைத் தவிர்த்து வேறெதையும் ஈழத்தமிழர்களுக்கு தமிழகத் தமிழர்களால் செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். தமிழகத் தமிழர்களையே தன் குடிமக்களாக முழுமையாக மதிக்காத இந்தியாவிடம் தமிழீழத்துக்காக இனியும் கோரிக்கைகள் வைத்துக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. ஈழ விவகாரத்தில் இதுவரை இந்தியா பிடுங்கிய ஆணிகளே போதும். இனி ஏதும் பிடுங்க நினைத்தாலும் கூட அது இந்திய வல்லாதிக்கத்துக்கு ஆதரவான செயல்களாக இருக்குமே தவிர, தமிழர் நலனோ (ஏன் சிங்களவர் நலனோ கூட) கிஞ்சித்தும் இருக்கப் போவதில்லை.

ஒரு சில அமைச்சுப் பதவிகளுக்காக டெல்லியிடம் தமிழகம் அளவுக்கதிகமாக குனிந்தாயிற்று. சென்னையிலிருந்து டெல்லிக்குப் போகும் கடிதங்களும், கோரிக்கைகளும்.. அதற்கு டெல்லியிலிருந்து வரும் பதில்களும், சமாளிப்புகளும் ஏதோ லொள்ளுசபா காட்சிகளைப் போல தமிழக மக்களின் மனங்களில் படிமமாகிறது என்கிற உண்மையை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

23 கருத்துகள்:

 1. I remember a quote in "Prabhakaran vaazhvum maranamum" book. It says, MGR organised a meeting for all eelam leaders when he was the CM. But Kalaignar, suddenly called for a meeting a day before they meet MGR. All except LTTE went to Kalaignar meeting but prabhakaran refrained...

  Based on this, i feel Kalaignar's paasam towards eelam is an after effect of what MGR has done...
  Correct me if i have missed some history. Correct Pa..Raghavan if this content is wrong.....

  பதிலளிநீக்கு
 2. Not தமிழகம் . It was your KOLAIGNAR (no spelling mistake) who sacrificed.

  பதிலளிநீக்கு
 3. சகோ யுவாவுக்கு, உங்களது கட்டுரையை படித்தேன். கலைஞர் இந்தியா ஒத்தொழைக்க வேண்டும் என கேட்டுயிருக்கிறார். அது உண்மை தான். சர்வதேச அரசியலில் ஆசியாவில் வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார, இராணுவ முக்கியத்துவத்தை குறைக்க முயல்கிறது. அதற்காக சீனாவின் முத்துமாலை என்கிற திட்டத்தை அமெரிக்கா உடைக்க முயல்கிறது. அதிற்கு இந்தியாவும் இசைவு தந்துள்ளன. சீனாவின் முத்துமாலை திட்டத்தில் உள்ள பல நாடுகளை வழிக்கொண்டு வந்த அமெரிக்கா இலங்கையை மட்டும் தன் வழிக்கு கொண்டு வரமுடியாமல் தவிக்கிறது. அதற்காக தான் அந்நாட்டு வெளியுறவுத்துறை ஈழம் அமைக்க போகிறோம் என்ற கருத்தை பரப்புகிறது. அதனை பார்த்து தான் கலைஞர் அறிக்கை விட்டுயிருக்க வேண்டும். அதோடு இந்தியாவின் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் இந்தியா ஒத்தொழைக்க வேண்டும் என கேட்கிறார். இந்தியாவிற்கு நீங்கள் குறிப்பிடுவது போல் காஷ்மீர் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அதை விட இலங்கை பிரச்சனை பெரும் பிரச்சனை. அதனால் இந்தியாவின் வெளியுறவு கொள்கை மாறவாய்ப்பு உண்டு. அதை மாற்றும் சக்தி அமெரிக்க அரசாங்கத்துக்கு இப்போது இந்தியர்வில் உண்டு.

  பதிலளிநீக்கு
 4. // MGR organised a meeting for all eelam leaders when he was the CM. //

  இந்த செய்தி எந்தளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை.

  1983 செப்டம்பர் மாதம் கலைஞர் சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை பேசும் வரை ‘ஈழம்’ என்கிற சொல்லையே எம்.ஜி.ஆர் கேட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

  எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை புலிகளுக்கு மட்டுமே ஆதரவளித்தார். தமிழ் குழுக்களின் ஒற்றுமை அவருக்கு பொருட்டாக பட்டதில்லை. மாறாக கலைஞர்தான் ‘டெசோ’ அமைப்பின் மூலமாக எல்லா குழுக்களையும் ஒற்றுமையாக செயல்படவைக்க வலியுறுத்தினார். அப்போது டெசோவின் செயலராக இருந்த பழ.நெடுமாறனே இப்போது கதையை மாற்றி பேசுவதால், நீங்கள் சொல்லும் தகவல் ஒன்றும் அவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையல்ல.

  பதிலளிநீக்கு
 5. //தமிழக மக்களின் மனங்களில் படிமமாகிறது என்கிற உண்மையை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்//

  "தமிழக மக்களின் மனங்களில் படிமமாகிறது என்கிற உண்மையை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் கலைஞர் உள்பட" என முடித்திடுந்தால் இன்னும் நன்றாக இருந்திதுக்கும்.......

  பதிலளிநீக்கு
 6. ஒட்டுமொத்தமாக இந்த கோரிக்கையை காமெடி ஆக்கிவிட்டார் என்பதே நம் ஆதங்கம். “இந்த வாக்கெடுப்புக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்”.“கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கந்துவட்டிக்காரர்கள் முன்வரவேண்டும்”nadakaratha pesunga thola

  பதிலளிநீக்கு
 7. ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என அவர் சொன்னதில் தவறில்லை என்பது என் கருத்து. இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் , ஈழம் அமைவதே தனக்கு பாதுகாப்பு என இந்தியா நினைக்கும் நிலை வரக் கூடும்.இதெல்லாம் நடக்காது என சொல்ல முடியாது..

  பதிலளிநீக்கு
 8. நல்லா சொன்னேள் போங்கோ....கலக்கல் யுவா...

  பதிலளிநீக்கு
 9. டெல்லியைப் பார்த்தால் எல்லா மாநிலத்தலைவர்களுக்கும் வரும் பயம்தான் கலைஞருக்கும் வருகிறது. ஏனெனில் டெல்லியின் தயவின்றி நமது அண்டை நாடுகளில் ஒரு தீப்பட்டியைக் கூடப் பற்ற வைக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். கலைஞர் அந்த ராஜதந்திரத்தோடுதான் டெல்லி வேண்டும் என்கிறார்.

  பதிலளிநீக்கு
 10. //சீக்கியர்களின் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு கண்மூடித்தனமாக அடக்கியதில் தொடங்கி, வடகிழக்கு மாநிலங்களில் கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி நடத்துவதில் தொடர்ந்து, காஷ்மீரை கடும் அடக்குமுறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வைத்திருப்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இது இந்தியாவா, அமெரிக்காவா என்கிற நியாயமான சந்தேகம் அதன் குடிமக்களுக்கே இருக்கிறது.//

  நச். பிறர் உரிமைப் போராட்டத்தை தீவிரவாதம் என்று அழைத்துவிட்டு ஈழத்தில் மட்டும் உரிமைக்கான போராட்டம் நடப்பதாகப் பிதற்றிக் கொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன்:-(

  //கலைஞரின் கனவை நாடகமென்றோ, ஏமாற்றுப்பேச்சு என்றோ சொல்லலாம்//
  தோழர், அதற்கான காரணங்களை நீங்களே கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  // MGR organised a meeting for all eelam leaders when he was the CM. //
  கருணாநிதி குறுக்குசால் ஓட்டி ஒருநாள் முன்னதாக தனியாக ஒரு கூட்டம் கூட்டியதாகத் தான் நானும் படித்திருக்கிறேன். கன்னிமரா சென்று அன்றைய நாளிதழ்களைப் பார்த்தால் தான் தெளிவுக்கு வர முடியும்:-(

  பதிலளிநீக்கு
 11. //இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது என்பதைத் தவிர்த்து ஜனநாயகத்துக்கும், இந்தியாவுக்கும் வேறு என்ன சம்பந்தம் என்பதையே நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை.//

  பலே பாண்டியா!
  Very well said!
  இதை விட சுருக்கமாக,அழகாக,பொருத்தமாக இந்தியாவில் நடக்கும் கொடுமைகளை விவரிக்க முடியாது
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 12. ****தமிழகத் தமிழர்களால் செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். தமிழகத் தமிழர்களையே தன் குடிமக்களாக முழுமையாக மதிக்காத இந்தியாவிடம் தமிழீழத்துக்காக இனியும் கோரிக்கைகள் வைத்துக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. ****

  it's true

  பதிலளிநீக்கு
 13. நல்ல கட்டுரை. நன்றி !


  //இதுவரை இந்தியா பிடுங்கிய ஆணிகளே போதும். இனி ஏதும் பிடுங்க நினைத்தாலும் கூட ///

  ''பிடுங்கிய'' மற்றும் ''பிடுங்க ''என்பதற்கு பதிலாக ''புடுங்கிய'', ''புடுங்க'' என்று பிரயோகித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

  பதிலளிநீக்கு
 14. இங்கு பின்னூட்டம் போட்டுள்ள Suresh Ramasamy க்கு எனது கண்டனங்கள்

  பதிலளிநீக்கு
 15. Oru nijamana unarvu poorvanamana thalaivargalai irunthirunthal. En neram lanka vitku alikapadum anaithu vasathikalayum niruthiruka vendum.. ana enga nadapathu makkalai yematra nan tamilan endru paraaisatrikollum oru arpathanamana naadagam mattume.. entha thalaivar manathilum thamil elam amayavendumena nijama unmaiyana sinthanai ellai..

  பதிலளிநீக்கு
 16. // தமிழக மக்களின் மனங்களில் படிமமாகிறது என்கிற உண்மையை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.//

  நல்ல கட்டுரை யுவா. கடைசி வரியில் மட்டும் ஒரு திருத்தம். "தமிழக அரசியல்வாதிகள்" என்பதற்கு பதிலாள கலைஞர் என்று இருந்திருக்க வேண்டும். - Jagan

  பதிலளிநீக்கு
 17. நல்ல கட்டுரை. நன்றி !

  பதிலளிநீக்கு
 18. நல்ல பதிவு ..இது உண்மை .. இது வரைக்கும் தமிழிழ விடுதலைக்கு கலைஞர் தவிர தமிழகத்தில் யார்யார் எத்தனை ஆணி புடிகினாகனு நமக்குதான் தெரியுமே ....

  பதிலளிநீக்கு
 19. இதையும் கொஞ்சம் படிங்க பாஸ் http://shanthibabu.blogspot.in/2012/04/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 20. யுவகிருஷ்ணா, வொய் திஸ் கொலவெறி? ..அத்தனை பேரை முள்ளிவாய்காலில் கொன்ற பிறகும் ஈழத்தை வைத்து அரசியல் செய்து கொண்டு தான் இருக்கீங்க. ஈழத்துக்காக முதல்ல தீக்குளித்தது தி மு க னு சொல்றிங்க. ஜெயலலிதா இன்னும் தனி தமிழீழத்தை ஒப்பு கொள்ளவில்லை னு சொல்றிங்க. இல்ல தெரியாம தான் கேட்கிறேன் தமிழ்நாட்டில வேற பிரச்சினையே இல்லையா..ஈழத்துல என்ன புடுங்க இருக்கு?? இந்தியாகாரனுக்கு வெட்கம் என்பது பேருக்கு கூட இல்லை.

  பதிலளிநீக்கு
 21. எந்த கருத்துநிலைக்கும், எந்த அமைப்புக்கும், எந்த கொள்கைக்கும், விசுவாசமாக இருப்பதும் தவறுதான். அதற்காக தற்காப்பு நிலைபாடு எடுப்பதும் சிந்தனைத் தேக்கத்துக்கே வழிவகுக்கும்.

  மந்தையிலிருந்து பிரிந்த இந்த ஆட்டிற்கு மேலை கூறப்பட்டுள்ளது ஏதாகினும் புரிகின்றதா !!

  பதிலளிநீக்கு
 22. ‘ஒற்றுமையாக’ தமிழீழம்உலகின் எந்தப்போராட்டத்திலும் இருந்தது இல்லை,இருக்கப்போவதும் இல்லை.
  கலைஞ்ரை பொRuத்தவரையில் ஆட்சியில் இருந்தால் ஒன்று!இல்லாவிட்டால் மற்றொன்று!!''உள்லோன்றுவைத்து புறமொன்று''-வள்ளலார் பாடல் நிநைவுக்கு வருகிறது!
  இருப்பினும்,munpu முதல்வராக இருந்தபோது ஒரூமுறை இலங்கையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று சட்டசபையில் (ஒருபாதுகாப்புதான்)பேசினார்.பல வடஇந்திய ஆங்கில ஊடகங்கள் கடுமையாக அவரை விமர்சித்தன என்பதும் நிகழ்ந்ததுதான்!மறுப்பதற்கில்லை!லு

  பதிலளிநீக்கு
 23. ஜெயச்சந்திர ஹாஷ்மி4:49 பிற்பகல், மே 19, 2012

  எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இது பாமரத்தனமாகவோ அல்லது முட்டாள்தனமாகவே கூட இருக்கலாம். இருந்தாலும் மனதில் இருப்பதை கேட்டுவிடுகிறேன். கலைஞரின் அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் முதல்வராய் இருந்த 5 வருடங்களில் அந்த அக்கறை எங்கே போயிற்று? மேலும் டெசோ அமைப்பை, அவர் முதல்வராய் இருந்த போது ஏன் அமைக்கவில்லை ? ஏதேனும் சட்ட காரணங்கள் இருக்கிறதா, முதல்வர்கள் இப்படி செய்யக்கூடாது என்று ? மேலும், 80 களில் கலைஞர் செய்தார் என்ற பழங்கதையை தாண்டி, சமீப காலங்களில் அவர் பேச்சை தாண்டி என்னென்ன செய்தார் என்று கூறினால் நன்று...

  பதிலளிநீக்கு