April 14, 2012

ஓக்கே ஓக்கே

ரட்சகன் வெளியான நேரத்தில் அப்படத்தின் இயக்குனர் பிரவீண்காந்த் ஒரு பேட்டியில் அறச்சீற்றத்தோடு முழங்கினார். “எம்படத்துலே கதை இல்லை, கதை இல்லைன்னு சொல்றாங்க. ஒண்ணு மட்டும் சொல்றேங்க.. கதை இல்லாம படமே எடுக்க முடியாது”. பிரவீண்காந்தின் கூற்று மகிழ்ச்சிகரமாக பொய்யாகி இருக்கிறது இயக்குனர் ராஜேஷின் கேரியரில். கதையே இல்லாமல் ஒன்றில்லை, ரெண்டில்லை.. மூன்றாவது படத்தையும் எடுத்து, மூன்றும் சூப்பர்ஹிட்!

ஒரு சக்சஸ்ஃபுல் டெம்ப்ளேட்டை உருவாக்கிவிட்டு ஹீரோ, ஹீரோயின் மற்றும் கேரக்டர்களில் மட்டும் ஆள் மாத்திப் போட்டு ஒரு குலுக்கு குலுக்கி விளையாடுவது ராஜேஷின் பாணி. காமெடியன் மட்டும் அதே சந்தானம். சந்தேகமில்லாமல் ராஜேஷின் ஹாட்ரிக் சிக்ஸராக வந்திருக்கிறது ‘ஒரு கல், ஒரு கண்ணாடி’. படத்தின் கதை என்ன? அதைதான் முதல் பாராவிலேயே சொல்லிவிட்டோமே... பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காது கதை. அதுதான் ராஜேஷின் ஸ்பெஷாலிட்டியும் கூட. சலிக்கவே சலிக்காத திரைக்கதை. நரசிம்மராவை கூட வாய்விட்டு சிரிக்கவைக்கும் வசனங்கள். கன்வின்ஸிங்கான காட்சியமைப்புகள். சினிமாவை கலையாக ஆதரிப்பவர்களும், கோயிலில் சிலை வைத்து பூஜிக்க விரும்புபவர்களும் இப்படம் ஓடும் தியேட்டர் பக்கமே வரவேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை சினிமா மாஸ் எண்டெர்டெயினர். இங்கிருந்துதான் நம்மை ஆளுபவர்கள் வரப்போகிறார்கள், வந்திருக்கிறார்கள். தமிழர்களின் மெண்டாலிட்டி மீட்டரை கரெக்ட்டாக நாடி பிடித்துப் பார்த்து வைத்தியம் செய்யும் டாக்டர்தான் இயக்குனர் ராஜேஷ்.

தங்கத் தளபதியின் மைந்தன்தான் ஹீரோ என்பது படத்தின் டபுள், த்ரிபுள் எக்ஸ்பெக்டேஷனுக்கு முக்கியமான காரணம். முதல் படத்தின் சாயல் ஆரம்பக் காட்சிகளில் மட்டும்தான் தெரிகிறது. போக போக ஓக்கே ஓக்கே. உதயநிதியின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸ் அபாரம். எந்த உடை அணிந்தாலும் பாந்தமாகவே இருக்கிறது. ஆண்மையான குரல். அசத்தலான ஹேர்ஸ்டைல். உயரம், உடல்வாகு எல்லாமே ஓக்கே. சீரியஸ் படமென்றால் நடித்துத் தொலைக்க வேண்டும், முகபாவங்களில் பர்ஃபெக்ட்னெஸ் கொண்டுவரவேண்டும். அந்த பஞ்சாயத்தெல்லாம் எதற்கு என்று லாஜிக்கேயில்லாத காமெடி படத்தை செலக்ட் செய்திருப்பதில் உதயநிதியின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது. டேன்ஸ்தான் கொஞ்சம் பேஜாரு. போக போக சரியாகிவிடும். சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களாகியும் ‘தல’யே இன்னும் இந்த விஷயத்தில் தடுமாறிக் கொண்டுதானிருக்கிறது. கலைஞரின் பேரன், தளபதியின் மகன் என்கிற ஹோதாவில் பத்து பேரை பறக்க வைக்கிற ஃபைட் சீன் எதுவும் இல்லாததற்கே உதயநிதிக்கு தமிழ்நாடெங்கும் கட்டவுட் வைக்கலாம்.

புஸுபுஸுவென்று அழகாக இருக்கும் பெண்கள் மத்த விஷயங்களில் கொஞ்சம் மந்தமாகவே இருப்பார்கள் என்கிற சைக்காலஜியை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இயக்குனர் ராஜேஷும் உணர்ந்திருப்பார் போல. ஹன்சிகா மோத்வானியின் கேரக்டர் அப்படித்தான் இருக்கிறது. பார்ப்பதற்கே மெத்து மெத்து என்று இருப்பதால், தன் பெயரை ஹன்சிகா மெத்துவானி என்று அவர் மாற்றி வைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆப்கானிஸ்தான், துருக்கி நாடுகளின் சூப்பர் ஃபிகர்கள் மாதிரியான சாடையில் இருக்கிறார். படத்தில் ஒரு கேரக்டர் சொல்வதைப் போல கொஞ்சம் ‘ஆண்ட்டி’ லுக்தான். பொதுவாக சேட்டு ஃபிகர்கள் பதிமூன்று, பதினான்கு வயதில் செம ஃபிகர்களாக இருந்து, பத்தொன்பது இருபது வயதுகளில் ஆண்ட்டிகளாக மாறிவிடுவார்கள் என்பது நாமறிந்ததே. ஹன்சிகாவும் நியூட்டனின் இந்த விதிக்கு விலக்கல்ல. காட்சிகளில் சிக்கனத்தைக் காட்டி வெறுப்பேற்றுபவர், பாடல்களில் தாராளத்தைக் காட்டி எண்டெர்டெயின் செய்கிறார். ஒரு பாடல் காட்சியில் டைட்டான மாம்பழ நிற உடையை ஹன்சிகாவுக்கு செலக்ட் செய்த காஸ்ட்யூமருக்கு தயாரிப்பாளர் சம்பளத்தை டபுளாக கொடுக்கலாம். 70 எம்.எம்.மின் விரிந்த ஸ்க்ரீனில் கண்களை 120 டிகிரிக்கு அகலவிரித்துப் பார்த்ததில் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடல் நினைவுக்கு வந்து விசிலடிக்கத் தோன்றுகிறது.

சந்தானம் பற்றி எதையும் குறிப்பாக சொல்ல விரும்பவில்லை. எல்லா பாலையுமே சிக்ஸருக்கு விரட்டும் பேட்ஸ்மேனை போய் ‘நல்ல பேட்ஸ்மேன்’ என்று சொல்லிதான் தெரியவேண்டுமா? இப்படம் பார்த்தவர்களும், பத்திரிகை மற்றும் இணைய விமர்சகர்கள் பலரும் பக்கம், பக்கமாய் சொல்லப் போகிறார்கள். “இங்க பீர் தட்டுப்பாடு ஏற்பட்டப்போ, பாண்டிச்சேரிக்கு மொதல்லே பஸ்ஸூ ஏறுதுனது யாரு.. நம்ம பயலுகதான்!” – இதே டைப் காமெடிதான் படம் முழுக்க. நடிகர் திலகத்தின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் தங்கள் தந்தையை காமெடியனாக்கிவிட்டதாக சந்தானத்தின் மீது கேஸ், கீஸ் போட்டுவிடக் கூடாது என்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வேண்டிக் கொள்வோம்.

படத்தில் ரொம்ப க்யூட்டான விஷயம் அழகம்பெருமாள் – சரண்யாவுக்கு இடையேயான ஈகோயிஸ்ட் லவ். ஒரிஜினல் ட்ராக்கைவிட இந்த சைட் ட்ராக் சூப்பர். தனி படமாகவே எடுக்கக்கூடிய ஸ்ட்ராங்கான கண்டெண்ட் இது.

பாடல்கள் வழக்கம்போல தேறிவிட்டாலும் ‘மின்னலே’வுக்கு பிறகு ஒரு இஞ்ச் கூட இன்னும் ஹாரிஸ் வளரவேயில்லை என்கிற யதார்த்தத்தை பறைசாற்றுகிறது. இவ்வளவு இளமையான படத்துக்கு எவ்வளவு முதுமையான ரீரெக்கார்டிங். அதிலும் முதல் காட்சியில் எல்லாம் மேட்டர்பட குவாலிட்டிக்கு பின்னணி இசை.

படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கும் தோழர் மாடசாமி ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ரஜினி அறிமுகத்துக்குப் பிறகு மிக முக்கியமான அறிமுகமாக இதை கருத வேண்டியிருக்கிறது. ஜாங்கிரியின் மாப்பிள்ளையாக அவர் தோன்றும் காட்சியில், “யாரு இவரு? இவ்ளோ அபாரமா அசத்துறாரே?” என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் விழிபிளந்து, ஆவென்று வாயைத் திறந்து கணநேரத்துக்கு பிணமாகிறார்கள். அபூர்வ ராகங்களில் ரஜினியின் என்ட்ரியை பார்த்து இதே மாதிரிதான் முப்பத்தேழு வருடங்களுக்கு முன்பும் ரசிகர்கள் செத்து செத்து விளையாடினார்களாம்.

இரண்டேகால் மணி நேரத்துக்கு போரடிக்காமல் படத்தை எடுத்துவிட்டு, எப்படி முடிப்பது என்று தெரியாத தொடர்சோகம் இந்த மூன்றாவது படத்திலும் ராஜேஷுக்கு தொடர்கிறது. ஜவ்வு மாதிரி இழுக்கப்படும் க்ளைமேக்ஸ்களால் “எப்போதான் மணி அடிக்கிறது, நாமள்லாம் எப்போதான் வீட்டுக்கு போகிறது?” என்கிற பள்ளிக்குழந்தைகளின் மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார்.

பராசக்தி தந்த கலைஞரின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படமென்பதால் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட அடையாளங்கள் படம் நெடுக விரவியிருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. டைடல் பார்க் அருகே எடுக்கப்பட்ட காட்சி ஒன்றிலும், அகிலா அகிலா பாடலிலும் ஹன்சிகா ‘கருப்பு-சிவப்பு’ உடையணிந்து வருகிறார்.

20 comments:

 1. ''படத்தை வெற்றிப்படமாக அமைக்க வேண்டும்'' என்று சபதம் எடுத்துக்கொண்டல்லவா படம் எடுத்துள்ளார்கள்!

  ReplyDelete
 2. கலக்கலா எழுதி இருக்கே லக்கி.,.

  ReplyDelete
 3. ரெண்டு நாட்களாக படத்தின் ப்ரொமோ காட்சிகளில் ”நீ எக்கேடும் கெட்டு நாசமாப் போ” என்று திரும்பத்திரும்ப கேட்ட கவித்துவமிக்க
  வரிகளால் இந்தப் படத்துக்கே போகக்கூடாது என்று தோன்றிவி்ட்டது.
  சுந்தர்வேல்

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம்

  ReplyDelete
 5. உங்க விமர்சனமே தனி ஸ்டைல்தான் போங்க..உங்க ஸ்டைல எப்படியாவது காப்பி அடிச்சி நானும் விமர்சனம் எழுதலானு இருக்கேன்.எஎல்லாருடைய விமர்சனத்திலும் திராவிட டச் இல்லன்னுதான் சொன்னாங்க.உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி பாஸ்?

  ReplyDelete
 6. //சினிமாவை கலையாக ஆதரிப்பவர்களும், கோயிலில் சிலை வைத்து பூஜிக்க விரும்புபவர்களும் இப்படம் ஓடும் தியேட்டர் பக்கமே வரவேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். //

  இதே ரஜினி படம் என்றால் இந்த லாஜிக் உங்களுக்கு எடுபடாது. என்னா நியாயம் சார் இது!

  ReplyDelete
 7. நீங்க கலைஞருக்கு தான் ஜால்ரா அடிப்பீங்கனு பார்த்தா அவர் பேரனுக்கும் சேர்த்து அடிக்கறீங்க... வளர்க உங்கள் தி மு க விசுவாசம் ...

  ReplyDelete
 8. sir, stop your film review. I have seen your previous films review also not good. your tamil language is very worst. please stop....

  ReplyDelete
 9. congress atchiyil iruntha kaalaththileye padam thodangumun 3 nimidam thi.mu.ka.kodiyai parakka vittavar MGR.ithil sila nodikale varum antha dress dravidamaa!!!

  ReplyDelete
 10. நல்லா இருந்தது விமர்சன நடை, பல இடங்களில் சிரிக்க வைக்கின்றீர்கள், சிறந்த சினிமா விமர்சகர். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. \\கொஞ்சம் ‘ஆண்ட்டி’ லுக்தான். பொதுவாக சேட்டு ஃபிகர்கள் பதிமூன்று, பதினான்கு வயதில் செம ஃபிகர்களாக இருந்து, பத்தொன்பது இருபது வயதுகளில் ஆண்ட்டிகளாக மாறிவிடுவார்கள் என்பது நாமறிந்ததே. ஹன்சிகாவும் நியூட்டனின் இந்த விதிக்கு விலக்கல்ல//...சூப்பர்.....கிருஷ்!!

  ReplyDelete
 12. //Blogger ssr sukumar said...

  congress atchiyil iruntha kaalaththileye padam thodangumun 3 nimidam thi.mu.ka.kodiyai parakka vittavar MGR.ithil sila nodikale varum antha dress dravidamaa!!!//


  Aiyoooo.. Yuva.. Super aa.. kindal panni irukar... Adhu puriyamaa.. Periya...Vilakkam koduthu kittu irukinga ???!!!!

  ReplyDelete
 13. Excellent witting style in review and about Madasamy post..

  Best wishes to ur friend Madasamy...

  ReplyDelete
 14. இந்த மானங்கெட்டவனை ஒழுங்காக மரித்துப் போகச் சொல்லுங்கள் லக்கி... தமிழைக் கொலை செய்ய வெளி ஆட்களெல்லாம் தேவையில்லை, இவர்களே போதும்...

  ReplyDelete
 15. லக்கி...

  சரியான ஜொள்ளன்யா நீ...

  அந்தப் புள்ளதான் அடுத்த குஷ்புன்னாலே குப்புன்னு வெக்கப் படுதேயா... பின்ன மாம்பழம், மாதுளம்பழம்னுட்டு....

  பார்த்தமோ, ரசிச்சமான்னு போய்ட்டேயிருப்பா...

  ஆனாலும் சேட்டுப் பொண்ணுகளைப் பத்தி ஒன்னு சொன்ன பாரு... நூத்துல ஒரு வார்த்தைய்யா அது... என்னாமா இருக்காளுகங்கிறே...

  ReplyDelete
 16. //பராசக்தி தந்த கலைஞரின் பேரன் நாயகனாக அறிமுகமாகும் படமென்பதால் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட அடையாளங்கள் படம் நெடுக விரவியிருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. டைடல் பார்க் அருகே எடுக்கப்பட்ட காட்சி ஒன்றிலும், அகிலா அகிலா பாடலிலும் ஹன்சிகா ‘கருப்பு-சிவப்பு’ உடையணிந்து வருகிறார்.//

  இப்பிடி ஏதாவது ஒரு பஞ்ச் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் .. கலக்கல்!

  ReplyDelete
 17. FUCK என்ற ஆங்கில வார்த்தையை ஸ்பெல்லிங் மாற்றி டி சர்ட்டில் எழுதி இளைங்கர்களை தட்டி எழுப்பும் தொண்டும் ஆற்றிவுள்ளார் உதய நிதி

  ReplyDelete
 18. சரியான மொக்க படம் பாஸ்...

  ReplyDelete