March 5, 2012

அமலாபால்

ஒன்று.

எனக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை.

இரண்டு.

இப்போது தமிழர்களுக்கு ரசனைக்குறைவு.

இந்த இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கிறது.

ஏன் தமிழர்கள் போயும், போயும் இந்த அமலாபாலை போய் ரசியோ, ரசியென்று இப்படி ரசித்துத் தொலைக்கிறார்கள் என்றே புரியவில்லை. தயாரிப்பாளர்களோ ஒருபடி மேலே போய் அவர் வீட்டு முன்பாக, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் நீள்வது மாதிரியான க்யூவில் அட்வான்ஸ் பணத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயினுக்கு தங்கையாக வருவதற்கோ அல்லது க்ரூப் டேன்ஸர்களில் முன்வரிசையில் ஆடுமளவுக்கோதான் அவருக்கு அழகு இருப்பதாக கருத வேண்டியிருக்கிறது. ரிச் கேர்ள்ஸ் ஆக கூட அமலாபால் செலக்ட் ஆயிருந்தாலே அது அதிசயம். கத்தி மாதிரி கண்களைத் தவிர்த்து வேறெதுவும் அவருக்கு ப்ளஸ்ஸாக இருப்பதாக தோன்றவேயில்லை. பொதுவாக ஆண்கள் விரும்பும் ‘ப்ளஸ்’ அமலாவைப் பொறுத்தவரை பெரிய ‘ப்ளஸ்’ இல்லை என்பதை அவருடைய எல்லாப் படங்களையும், உறுத்து உறுத்துப் பார்த்ததில் உணர்ந்துக் கொண்டேன். அமலாபால் அளவுக்கு சுமாரான அழகிருக்கும் பெண்ணை காதலிப்பதிலோ, கல்யாணம் செய்துக் கொள்வதிலோ எனக்குப் பிரச்சினையில்லை. யதார்த்தத்தில் இவரை விட சுமாராகதான் டிபிக்கல் ஹவுஸ் ஒய்ஃப்கள் இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, அமலாபால் ஏன் நதியாவைப் போல, கவுதமியைப் போல, சிம்ரனைப் போல இப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார்?

நிஜமாகவே விடை தெரியாத கேள்விதான் இது.

ஸ்ரீதேவி கோலோச்சியதற்குப் பிறகு சுமார் ஃபிகர்களான அம்பிகா-ராதா சகோதரிகள் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பினார்கள். அதற்குப் பிறகு கவுதமி. தமிழர்களுக்கு ‘ஒல்லியான’ பெண்களைப் பிடிக்கும் என்றொரு கருத்துருவாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், புசுபுசுவென புயலாக உள்ளே நுழைந்தார் குஷ்பு. பின்னர் சுகன்யா மாதிரி ஆண்ட்டி லுக் ஃபிகர்களையும் ஆராதித்தார்கள் தமிழர்கள். ஒல்லி சிம்ரன், குண்டு ஜோதிகா என்று ஒரே சமயத்தில் டபுள் சைட் எக்ஸ்ட்ரீம் ரசனையையும் வெளிப்படுத்தி தாவூ தீர வைத்தார்கள். கிரணையும் ரசித்தார்கள். இலியானாவுக்கும் விசில் அடித்தார்கள். இப்போது அமலா பாலை ஆராதிக்கிறார்கள்.

கொஞ்சம் தீவிரமாக சிந்தித்து நம்முடைய கனவுக்கன்னிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் சீரான ஒழுங்குவரிசையற்ற ஒருமாதிரியான நான்-லீனியர் தன்மை கொண்ட ரசனையை தமிழன் வெளிப்படுத்தி வருகிறான் என்பது புரியும். இவனுக்கு பிடிப்பது குண்டா, ஒல்லியா.. குள்ளமா, உயரமா.. கருப்பா, சிவப்பா என்று அறுதியிட்டு யாராலும் சுலபமாக வரையறுத்துவிட முடியாது. “சுலக்‌ஷணா கூட எங்க காலத்தில் கனவுக்கன்னி“ என்று சாட்டிங்கில் வந்து அதிரவைக்கிறார் ஒரு ஃபிப்டி ப்ளஸ் நண்பர். ஸ்ரீதேவியை கனவுக்கன்னி என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. சுலக்‌ஷணா எப்படி கனவுக்கன்னி என்று மண்டையை பிய்த்துக்கொள்ளத்தான் இயலுகிறது.

‘மைனா’ தவிர்த்து வேறெந்த உருப்படியான படத்தில் அமலா பால் நடித்திருக்கிறாரென்று தெரியவில்லை. சிந்து சமவெளி என்கிற விவகாரமான பிட்டே இல்லாத பிட்டு படத்தில் நடித்தது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாக இருக்கலாம். இப்படத்தில் நடித்து பரவலானதால்தான் மீண்டும் மீண்டும் விசில் அடிக்கும் ரசிகர்கள் அமலா பால் என்றாலே குஷியாகி தியேட்டர்களுக்கு வருகிறார்களோ என்று யூகிக்கிறேன். அமலாபால் நடித்த சுமார் படங்களை விட, ‘விகடகவி’ மாதிரி மொக்கைப்படங்களே அதிகமென்று அவருடைய கேரியர் கிராப் கூறுகிறது. அப்படியிருந்தும் இன்று தமிழின் நெ.1 மாதிரி அமலாதான் இருக்கிறார்.

கடந்த வருடத்தைவிட அமலா ஃபீவர் இவ்வருடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இரண்டே மாதத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. வேட்டையின் ’பப்பரப்பா’ பாட்டில் அவருடைய மேக்கப்பை கண்டதுமே பேஜாராகிவிட்டது. இந்த மேக்கப்மேன் முன்னதாக கிரணுக்கு மேக்கப் போட்டவராக இருக்கக்கூடும். ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என்று பாடமெடுத்த ‘காதலில் சொதப்புவது எப்படி?’யில் அமலா பாலின் மேக்கப் அத்தனை மோசமில்லையென்றாலும், நடிப்பென்றால் கிலோ என்ன விலையென்று தெரியாத அப்பாவியாக சிறப்பாகவே அவர் நடித்திருந்தார். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ கொடுமை. போதாக்குறைக்கு கிட்டத்தட்ட இரட்டை வேடம். குள்ளமான அமலாபாலுக்கு, படம் முழுக்க மாடர்ன் ட்ரெஸ் வேறு. வசனகர்த்தாவோ மனச்சாட்சியே இல்லாமல் “அவளைப் பார்த்தேன்னா, நீ பொண்ணுங்கிறதையே மறந்துட்டு யூ வில் ஃபால் இன் லவ்” என்றெல்லாம் கவுதமேனத்தனமாக டயலாக் எழுதியிருக்கிறார்.

எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

42 comments:

 1. நன்னா சொன்னேள் போங்க...

  ReplyDelete
 2. கொஞ்சம் தீவிரமாக சிந்தித்து நம்முடைய கனவுக்கன்னிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் சீரான ஒழுங்குவரிசையற்ற ஒருமாதிரியான நான்-லீனியர் தன்மை கொண்ட ரசனையை தமிழன் வெளிப்படுத்தி வருகிறான் என்பது புரியும். இவனுக்கு பிடிப்பது குண்டா, ஒல்லியா.. குள்ளமா, உயரமா.. கருப்பா, சிவப்பா என்று அறுதியிட்டு யாராலும் சுலபமாக வரையறுத்துவிட முடியாது. //  வாவ் என்ன ஒரு ஆராய்ச்சி. எனக்கு கூட பப்பரப்ப பப்பபம் வேட்டை பாட்டு பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகின்றன..

  ReplyDelete
  Replies
  1. Guys when u look for logic,reason or like what u say carrier graph etc in case of entertainment its not worth a shot.See if this is right why you guys not writing anything about the same tamilians who is celeberating political leaders as thalapathi,etc funny quotes and even worse.This is better when compared with those
   Events.But I accept your comment Tamilians never thought anything before celeberating some one..

   Delete
 3. அனுஷ்கா எங்கே ?

  ReplyDelete
 4. //இப்போது தமிழர்களுக்கு ரசனைக்குறைவு.//

  இதுதான் கரெக்ட்!

  அமலாபால்கிட்ட ஒன்றும் இல்ல ஆனா!!! ஏதோ இருக்கு...

  ReplyDelete
 5. என்ன ஒரு ஆய்வு..அழகு,,அருமையான கட்டுரை.
  இதில இரு கவலைக்கிடமான ஒன்று,
  நான் அமலா பால் இல்ல யாரையும் அவ்வளவா ரசிக்கிறவன் கிடையாது..என்னா மனுஷன் நான்..:)

  Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

  ReplyDelete
 6. இப்படி ஒரு விஷயம் நடக்கும் னு தெரிஞ்சு தான் போன வருஷமே இதை எழுதினேன். http://sriarjunan.blogspot.in/2011/09/blog-post_22.html

  ReplyDelete
 7. அமலாபால் சில சமயங்களில் சூப்பரா தோணுது! மாயத்தோற்றமாகக் கூட இருக்கலாம். ஆனா இந்த சமீரா இருக்கே பாஸ்...அத எதுக்கு நடிக்க வைக்கிறாங்கன்னுதான் புரியவே மாட்டேங்குது! :-(

  ReplyDelete
 8. கலர் கம்மின்னாலே தமிழ்நாட்டுக்காரங்களுக்கு எளக்காரம்தான் போங்கோ

  ReplyDelete
 9. கரெக்டா சொன்னீங்கண்ணே, அமலா பால்கிட்ட அப்படி என்ன அழகு இருக்குன்னே தெரியல. அமலா பாலோட கம்பேர் பண்ணா அனுஷ்காவெல்லாம் தேவதை...

  ReplyDelete
 10. நம்ம ஹன்சிகா....அப்புறம் நமிதா....விட்டு விட்டீர்களே

  ReplyDelete
 11. இவ்வளவு ஆராய்ச்சி செய்த பிறகு விடை கண்டுபிடிக்காம விட்டுட்டிங்களே பாஸு! பசங்களுக்கு உலக அழகியை விட பக்கத்து வீட்டிலயோ, பக்கத்து பெஞ்சிலோ இருக்கும் சுமாரான ஃபிகர் தான் பேரழகியா தெரியும்(உங்க ஆளு பல்பு கண்ணு பானு மாதிரி). சுருக்கமா சொன்னா ‘Girl next door' லுக்கு தான் அமலா ஸ்பெஷல்!
  ஆண்களில் தனுஷ் மாதிரி, பெண்களில் அமலாபால்.

  ReplyDelete
 12. //எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.//

  மிகச் சரி!

  ReplyDelete
 13. தலைவரே ! அமலா பால் விசயத்துல உங்க கருத்த ஏத்துக்கறேன்.

  ஆனா அம்பிகாவ சொன்னீங்க பாருங்க அத என்னால ஏத்துக்கவே முடியாது.
  நான் அம்பிகா தாசன். உடனே என்னை வயதானவன்னு நெனச்சுக்காதீங்க. நான் இள வயது அம்பிகாவை சொல்கிறேன்.

  அப்புறம் ராதா , கவுதமி விஷயங்களிலெல்லாம் உங்களுடைய கருத்துக்கு எதிர் கருத்து தான் என்னுடையது.

  என்னை பொறுத்தவரை இதுவரை தமிழ் சினிமாவில் வந்த கட்டளகிகளில் ஆவாரம் பூ படத்தில் நடித்த நந்தினியும், சிலுக்கும் தான்.

  ReplyDelete
 14. கேரளாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நர்ச்களைபோலதான் இவரும் உள்ளார். மற்றபடி சிறப்பு அம்சம் வேறு ஒன்றும் இல்லை..

  ReplyDelete
 15. sambanthamea illatha Andhra Topper Illena lam listla seathurukinga But Nayathara,Trisha lam enga!!??

  ReplyDelete
 16. yuvakrishna!!!ungalukku vayathu athikariththathu oru kaaranamo!

  ReplyDelete
 17. எதாவது ஒரு பிகர் வேணும் நெனெச்சு ரெண்டு மூணு தரம் திரும்பிப் பார்க்க ( வேற எந்த ஒரு இரட்டை அர்த்தம் விளங்கிக் கொள்ள வேணாம் )

  ReplyDelete
 18. தோழரே உமக்கு இரெண்டும் பிரச்னை போல தோன்றுகிறது.அழகு என்பதற்கு
  ஏதேனும் விளக்கவுரை இருக்கிறதா? மூக்கு இத்தனை மில்லிமீட்டர்,புருவம்
  இத்தனை மில்லிமீட்டர் என்று? உமக்கு அழகாக தெரிவது எனக்கு சப்பையாக
  தெரியலாம்.உலகே கொண்டாடும் ஐஸ்வர்யா என் கண்ணுக்கு ஜீவணில்லாத
  மொக்கை பிகர்.என்ன செய்வது ரசனை அப்படி.

  ReplyDelete
 19. 100% correct and i agree the same

  ReplyDelete
 20. ஒரு கதையின் பாத்திரமாக நடிப்பதற்கு ஒரு பெண்ணிற்கு நிறம் உயரம் மற்றும் எடுப்பான பகுதிகள் தேவையா?அவளிடம் அதை மட்டும் பார்க்க வருபவனுக்கு தான் அவை தேவை.அதுக்கு ரெகார்ட் டான்ஸ் பாக்க போகவேண்டும். நம்ம ஊரில் நடக்கும் கதைக்கு நம்ம ஊர் சாயலில் உள்ள பெண்ணை இப்போது தான் காட்டுரானுங்கன்னு நெனச்சா,அது பொறுக்கலையா?அழகழகா ரெண்டு பேர் காதலிப்பதாக காட்டினால் தான் பார்ப்பேன் என்பவர்கள் தங்கள் வீட்டு காதலை ஆதரிக்க மாட்டார்கள் தாங்கள் அழகாய் இருக்கமாட்டர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் மீது அன்புள்ளவராய் இருக்க மாட்டார்கள்.

  ReplyDelete
 21. உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு தோணுது...

  இருந்தாலும் வேட்டை பட விமர்சனத்தில் அமலா பால் தொப்புளை பற்றி அப்படி எழுதியிருக்கக்கூடாது...

  ReplyDelete
 22. //நான்-லீனியர்//

  Do you mean not lean?. Non Linear means not straight and it is a mathematical term.

  ReplyDelete
 23. எனக்கும் ஆரம்பத்திலிருந்தே அமலா பாலை பிடிக்கவில்லை. உண்மையில் அவளை பார்க்கையில் எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஆனால் எனது நண்பர்கள் பலர் அவளை பார்த்து ஜொள்ளு விடும்போதும், வரிசையா அவளுக்கு படங்கள் புக் ஆகும்போதும், எனக்குத்தான் ஒருவேளை ரசனை குறைவோ என்று எண்ணினேன். நல்லவேளை இதைப் பற்றி ஒரு கட்டுரையே போட்டு என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். அதிலும் இந்த கடைசி வரி
  //எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.// நூத்துக்கு நூறு சரி என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 24. எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

  மிக மிக சரி... என்னுடைய கண்தான் தவறோ என்று இருந்தேன் இதுநாள் வரையில்...

  ReplyDelete
 25. அமலா பாலை விட அஞ்சலி பெட்டர்.

  ReplyDelete
 26. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  கரெக்டா சொன்னீங்கண்ணே, அமலா பால்கிட்ட அப்படி என்ன அழகு இருக்குன்னே தெரியல. அமலா பாலோட கம்பேர் பண்ணா அனுஷ்காவெல்லாம் தேவதை...//


  யோவ் பன்னி... நீ ஏன்யா உன் கனவு பன்னி..ச்சே..கன்னி சுனைனாவ விட்டுட்டு இப்ப அனுஷ்காவ ரசிக்கிற? :-)

  ReplyDelete
 27. பாஸ்.. அமலா பாலுக்கு ரெண்டாம்.. அதான் எல்லோரும் கியூல நிக்கிறாங்களாம்... நான் சொல்லல பாஸ்.. அனாதி ப்ளாக்ல படிச்சேன் :-)

  ReplyDelete
 28. 100000% agree with u.. KADALIL SODAPUVATHU EPPADI Short film herione is very nice compare to this sothai paul..

  ReplyDelete
 29. நல்ல தகவல் சார் ! நல்ல ஆராய்ச்சி -ரொம்ப முக்கியம் !

  ReplyDelete
 30. இந்தப் பதிவை நியூ ஜெர்சி அமலா பால் ரசிகர் மாமன்றத்தின் சார்பில்
  வன்மையாகக் கண்டிக்கின்றோம் :)

  ReplyDelete
 31. romba naalaa enakkum ithey santhegam thaan

  ReplyDelete
 32. appo amala paul kidacha vendaamnu solluviyanu kevalamaana kelvi ellam yuvavai paarthu yaarum ketka koodathu!!!

  ReplyDelete
 33. எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. எனக்கும் அப்படித்தான் யுவா தோன்றுகிறது.

  ReplyDelete
 34. >நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

  ஹா ஹா :-)

  ReplyDelete
 35. நம்முடைய கலாசாரத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத நிறமும் உடலமைப்பும் கொண்ட பெண்களே கனவுகன்னிகளாக வளம் வந்திருக்கிறார்கள்.
  இப்போ தமிழன் மாறிட்டான் தன் ஊர் பொண்ணை மாதிரியே கனவுகன்னியை எதிர்பார்ப்பதால்
  அமலா பாலை கொண்டாடுகிறான்
  எந்த நடிகையும் மேக் அப் இல்லாம பார்க்க முடியாது நம்ம செல்லம் மேக் அப் இல்லாம என்னை வழிந்த முகத்தோட பருவோட இருந்தாலும் cute ஆ இருக்கும்
  நீங்க என்ன சொன்னாலும் அமலா கொள்ளை அழகு தான் சார்
  உங்களுக்கு அமலாவை பிடிக்கலை என்பதற்காக குறை சொல்லக்கூடாது

  ReplyDelete
 36. உண்மை... பெயர் மட்டும்தான் வசிகரிகறது. வீட்டு வேலைக்காரி போன்ற தோற்றும்!

  நம் மக்களுக்கு எப்பொழுதும்
  வேலைக்காரி என்றால ஒரு கிளுகிளுபுதான்...

  ReplyDelete
 37. பிரியங்கா சோப்ராவின் மட்டமான மலிவுப்பதிப்பு (சில கோணங்களில் மட்டும்).

  இப்படி ஏத்திவிடும் பேச்சுதான் அமலாவை சினிமாவுக்குக் கொண்டு வந்ததோ?

  ReplyDelete
 38. From மகேஷ்

  தென்னகத்திற்கு ஒரு அமலா பால் என்றால் இந்திக்கு ஒரு பிபாஷா பாசு.

  http://1.bp.blogspot.com/-8H03k_6eUA0/T1UhBSwYf2I/AAAAAAAAB1U/xtzy6soPJMo/s400/images.jpeg

  http://thinathee.blogspot.in/2012/03/blog-post_4481.html

  பிபாஷாவின் இந்தப்படத்தைப்பார்த்துவிட்டு உங்களால் பதிவு போடமுடியுமா? படத்தைவிட்டு வெளிவருவதே கஷ்டம். இந்தப்பெண்ணோடு 'மேடி'மாதவன் ஜோடி பிரேக்கர்ஸ் (http://en.wikipedia.org/wiki/Jodi_Breakers) என ஒரு படத்தில் (சென்றவார வெளியீடு) நடித்துள்ளார்

  ReplyDelete
 39. நீர் சாணி தட்டும் பெண்களையே பாரும். தயவுசெய்து என் காதல் விசயத்தில் தலையிடவேண்டாம்

  ReplyDelete
 40. ஏப்பா, யாருப்பா அது?. இந்த பெருச கையப்பிடுச்சு ஒரு ஓரமா உக்கார வைங்கப்பா. வயசான காலத்துல.. தடுமாறிக்கிட்டு.......

  ReplyDelete
 41. yaro eppodo sonnadhu!!!!<<<<<>>>>>‘பப்பரப்பா’ பாட்டு தொடங்கும்போது ரைட் ஸ்க்ரீன் முழுக்க க்ளோசப்பில் காட்டப்படும் அமலாபாலின் பேரழகு தொப்புளை காண்பதற்காகவே இன்னொரு முறை சூரியன் தியேட்டரில் ஐம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும், இருபது ரூபாய் பைக் டோக்கனுக்கும், இருபத்தைந்து ரூபாய் வாயில் வைக்க கிக்காத கண்ணறாவி காஃபிக்கும் அழலாம் போலிருக்கிறது<<<>>>>>

  ReplyDelete