March 2, 2012

கோழி மோசடி

புளி போட்டு பளபளப்பாக துலக்கி வைக்கப்பட்டிருந்த வெங்கலச் சொம்பில் ‘புளிச்’சென்று துப்பினார் நாட்டாமை. அதே ஆலமரம். அதே ஜமுக்காளம். அதே பொதுமக்கள்.

“ஆளாளுக்கு மசமசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்பூடி? யாராவது பேச்சைத் தொடங்கியாகணுமில்லே?” நாட்டாமைக்கு சரிசமமாக அமர்ந்திருந்த பச்சைத்துண்டு பெருசு ஆரம்பித்து வைத்தது. தனக்கு வாகாக அவ்வப்போது ‘பீப்பி’ ஊதும் இம்மாதிரி ஆட்களுக்குதான் சரியாசனம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம்.

“நம்ம மாடசாமிதான் பிராது கொடுத்திருக்காப்புலே” மேடையில் அமர்ந்திருந்த இன்னொரு பீப்பி, முந்தைய பீப்பியை வழிமொழிந்தது.

“அது ஒண்ணுமில்லேங்கய்யா... நம்ம ராசாவாலே எனக்கு ஒரு ஒண்ணே முக்கா லட்சம் நஷ்டமா போயிடிச்சிய்யா... அவனாண்ட பேசி வாங்கித் தருவியளோ, இல்லேன்னா கட்டிவெச்சி அடிச்சி வாங்கித் தருவியளோ தெரியாது. என் காசு ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் எனக்கு வோணும்”

“என்னப்பா ராசா. மாடசாமி சொல்றது உண்மையா?”

“இல்லீங்க. என்னாலே அவனுக்கு லாபம்தானுங்க”

“ஏம்பா. அவன் லாபம்னு சொல்றான். நீ நஷ்டமுன்னு சொல்றே. என்னதான்யா உங்க கொடுக்க வாங்க”

“அய்யா. என் கோழிப்பண்ணையையே அழிச்சிப் புட்டான்யா இந்த ராசா”

“இல்லீங்கய்யா. அவன் பொய் சொல்லுதான். என்னாலே மாடசாமிக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்கய்யா”

“யோவ். ரெண்டு பேருலே ஒருத்தனாவது புரியறாமாதிரி சொல்லித் தொலைங்கடா. வெயில் ஏறிக்கிட்டே போவுது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி கசகசக்குது பார்த்துக்க”

மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.

“அய்யாவுக்கு தெரியாதது ஒண்ணுமில்லீங்க. நான் ஆசையா ஒரு பெட்டைக்கோழியை வளர்த்து வந்தேன். எனக்கு வயித்துக்கு இருக்குதோ இல்லையோ. அதுக்கு நல்லா சத்தா தீவனம் போட்டு வளர்த்தேனுங்க. இப்போ கொஞ்சம் பணமுடை. அதனாலே அதை விலைக்கு வித்துடலாமுன்னு முடிவு பண்ணேனுங்க. நம்ம ராசா வாராவாரம் சந்தைக்குப் போவாப்புலேன்னு சொல்லிட்டு, அவனாண்ட இதை வித்துக் கொடுக்குற பொறுப்பை ஒப்படைச்சேனுங்க. அதுலேதானுங்க என்னை இவன் ஏமாத்திப்புட்டான்”

“அந்த கோழியோட விலை நூத்தி பத்து ரூவாய்ங்க. நான் நூத்தி ஐம்பது ரூவாய்க்கு வித்துக் கொடுத்தேனுங்க. அவனுக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்களே?”

“அது எப்படிங்க அய்யா? இந்த கோழி நாலு முட்டை வெச்சுருக்கும். நாலு குஞ்சு பொறிச்சிருக்கும். நாலு பதினாறாயி, பதினாறு அறுவத்தி நாலு ஆயி, அறுவத்தி நாலு இருநூத்தி ஐம்பத்தாறாயி... இப்படியே ஒரு ரெண்டு வருஷத்துலே பண்ணை ஆகியிருக்குமுங்க.. ஊர்லே பண்ணை வெச்சிருக்கிறானே முனுசாமி. அவங்கிட்டே வெசாரிச்சி கேட்டுட்டுதானுங்க சொல்றேன். ஒரு பண்ணையோட மதிப்பு ஒண்ணே முக்கா லட்சமுங்க. அப்போ என் கோழியோட மதிப்பும் அதுதானுங்களே? இவன் பாட்டுக்கு நூத்தி ஐம்பது ரூவாயை கையில் கொடுத்துட்டு போனா என்னாங்க அர்த்தம்?”

“என் அறிவுக்கண்ணை தெறந்துட்டேய்யா..” நாட்டாமை புளங்காங்கிதப்பட்டதோடு ராசாவை நோக்கி, “ராசா நீ கோழியை யாராண்ட வித்தியோ, அந்த விற்பனையை கேன்சல் பண்ணி உடனே தீர்ப்பு கொடுக்கறேன். மரியாதையா கோழியை வாங்கி மாடசாமி கிட்டே கொடுத்துடு. அதுவுமில்லாமே ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் ஏமாத்தியிருக்கே. இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது. மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”

“அருமையான தீர்ப்புங்கய்யா...” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.

ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார். மாடசாமி தன் கோழியை ஒண்ணே முக்கா லட்ச ரூபாய்க்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.

65 comments:

 1. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பொழைப்பை ஓட்டுவீர்! எனக்கு என்னமோ ராஜாவோட....வேண்டாம் விடுங்க...நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்னு நினைக்கின்றேன்!

  ReplyDelete
 2. அருமை நண்பா !!!

  ReplyDelete
 3. ஏன் இப்படி? ஒரு வருசத்துக்கு முன்னாடி முன் பக்க செய்தி, இப்போ 7ம் பக்க செய்தி. அப்புறம் காணாமலே போயிரும். இவரும் வீட்டுக்கு வந்துருவாரு.

  ReplyDelete
 4. கண்டிப்பா இந்த பதிவின் நகல் ராசா அண்ணனிடம் சேர்ப்ப்பிப்பேன் !

  ;0


  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 5. நூறு ரூபாய் கோழியை நூத்தம்பதுக்கு வித்தது சரிதான். அதுக்கு ராசா எதுக்கு இருநூறு ரூவாய் லஞ்சம் வாங்கணும்? நாட்டாமை தீர்ப்ப மாத்திடாதே.

  ReplyDelete
 6. ஆகா டாப்போ டாப்பு. இதைத்தான் சொல்றோம். மழைபெய்யுது மழைபெய்யுதுன்னு. சொன்னா பைத்தியக்காரன்னு சொல்றானுங்க:-(

  ReplyDelete
 7. அடடா இந்த கதையை கேட்டு புளங்காகிதம் அடஞ்சிட்டேன் ........

  ReplyDelete
 8. லக்கி,

  ஒரு நவீன பரமாத்மா வேதம் ஓதுகிறா :=))

  ReplyDelete
 9. சாதியிலன்6:49 PM, March 02, 2012

  அத்தனை லட்சத்திற்கு கோழியை வாங்கியவன் முட்டையை எத்தனை ஆயிரத்திற்கு விப்பான்?இன்று தான் ராசா இது வரை நடந்த முறையில் தான் இந்த முறையும் கொடுக்கப்பட்டது ஆகவே உச்ச நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனு செய்திருக்கிறார்.அவர் சொல் அம்பலம் ஏறும் வாய்ப்பு மாயாவதி பிரதமர் ஆனால் தான் உண்டு.ஆனால் அதற்குள் இந்த மீடியாக்கள் அந்த 1 .76 லட்சம் கோடியை கதையை வைத்து அதுவானியை அங்கே உட்காத்தி விடுவார்கள்.அந்த மேட்டரை எல்லோரும் புரிந்து கொள்ள இதை விட்டால் சிறந்த கதை இல்லை பழசாய் இருந்தாலும்.

  ReplyDelete
 10. மிகச்சிறப்பான எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளீர்கள்.....அறிவீஜீவிகளுக்கும் இது எட்டட்டும்....ஊடகங்களும் தவறான போக்கையே கடைபிடித்துள்ளன...1.75 லச்சம் கோடி யார் கொடுத்துள்ளார்கள் என சாமி போன்றவர்கள் சொல்ல வேண்டும்..தொலை தொடர்பு நிறுவனங்களின் நிலைமை கட்ந்த 3 ஆண்டுக்கு மேல் மோசமாகவே உள்ளது...வலையில் தேடினால் உண்மை புரியும்...jokin jey

  ReplyDelete
 11. ithu koli kathai mathiri thiriyala....vera ennamo solla vara mathiri irukku...

  ReplyDelete
 12. மிகச்சிறந்த உதாரணத்துடன் விளக்கிய்ள்ளீர்கள்...வாழ்த்துக்கள்..சாமிபோன்ற அதிபுத்திசாலிகலும் ஊடகங்களும் தவறான கோணத்திலேயே இதுவரை சித்தரித்து கருத்து வெளியிட்டு வருகின்றன..தொலை தொடர்பு நிறுவனங்களின் நிதிநிலைய பார்த்தாலே அவர்களால் இந்த அளவு பணம் கொட்டி கொடுக்க முடியுமா என்ற உண்மை புரிய்ம்..தொலை தொடர்பு நிறுவணங்களின் நிதி நிலை அறிக்கையை வலையில் பார்த்த்லே உண்மை என்ன என்று புரிந்து கொள்ளலாம்....jokin jey

  ReplyDelete
 13. என்ன சார்!
  திருவாளர் பத்ரியோட ஸ்பெக்ட்ரம் சர்ச்சை பாதிப்பா? அதெல்லாம் இருக்கட்டும் கோழி குஞ்சு எப்டி இருக்கும்?
  நட்புடன்,
  'நியுட்' நண்டு!

  ReplyDelete
 14. nalla solli irukkeenga Lucky. Maramandaigalukku purinja sari

  ReplyDelete
 15. எங்கேயோ துவங்கி எங்கேயோ போய் குத்தின மாதிரி தெரியுதே.

  ReplyDelete
 16. ராசாவோட பணத்துல உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கவலைப்பட வேண்டாம்...உங்க ஜால்ரா கருணாநிதிக்கு மட்டுமல்ல கனிமொழிக்கும் நல்லாவே வேலை செய்யும்.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. It took more than one year to make this good story ....

  very good.... for your imagination....

  ReplyDelete
 18. rasa kitte vaanginavan rende maasathula 2000 rskku vithathu pathi sollave illai.

  ReplyDelete
 19. SOOOPPER RASAAA............ CHEAY SOOPER MADASAMY.............

  ReplyDelete
 20. black comedy அல்லது black humour னு சொல்றாங்களே அது இதுதானா?
  இதுபோன்ற விஷயங்கள் கிராமங்களில் சாதாரணம்.என்ன ராசா ஒன்று
  செய்வார்.வேறொன்றுமில்லை அதே நிலையில் இருக்கும் இன்னொரு
  கோழியை பிடித்து வந்து தீர்ந்தது நம் பிரச்னை என்பார்.இதை நம்
  ராசா செய்ய முடியுமா என்பதுதான் million dollar கேள்வி?

  ReplyDelete
 21. ஏதோ உள்குத்தோட எழுதியிருக்குற மாதிரி இருக்கே..!!??

  ReplyDelete
 22. We need to change the story little. Instead of kozhi, it is diamond. No one asked Rasa to sell for Rs.110. Rasa was asked to sell as per market need. Rasa sold for Rs.150. Immediately the person who bought the diamond sold for 15000. Now tell me whether Rasa should be in jail.
  ----
  Mohan

  ReplyDelete
 23. சரியான தி.மு.க. சொம்பு என்பதை நிரூபித்திருக்கிரீர்கள்.. ப்ளாக் இருந்தா எத வேணாலும் எழுதறதா? இந்தா நான் கேக்கறேன்..

  அ. ஒரு மாடசாமி முட்டை விக்கலேன்னா ஒரு குப்பன் விப்பான். ஸ்பெக்ட்ரம் அப்படியா? அது கிடைப்பதற்கரியதொன்றாயிற்றே!! மாடசாமி கிட்ட மட்டுமே முட்டை இருந்திச்சின்னா நீங்க சொல்றது வாஸ்தவம்.

  ஆ. கோழியாவது பராமரித்து சில காலங்களுக்கு பின்தான் குட்டி முட்டை எல்லாம் போடும். இந்த ஸ்பெக்ட்ரம் ஒன்னும் போடாட்டி கூட பரவாயில்ல.. கோழி லேக் பீஸ் மாதிரி ஒரு துண்ட பத்து மடங்கு வேலைக்குன்னா வித்திருக்காணுவ..

  படிக்கிறவன் கேன்னா... முட்ட பண்ண போடுமாம்ல..

  ReplyDelete
 24. புருச்சவன்தான் பிஸ்தா , கலக்கல் கதை யுவா சார் ....

  ReplyDelete
 25. Superb, Excellent

  ReplyDelete
 26. ஹா ஹா ஹா, முதலில் எனக்கு ஒன்றுமே புரியலை, பிறகுதான் புரிந்தது. அருமையான மற்றும் யதார்த்தமான விளக்கம். fine.

  ReplyDelete
 27. //இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது//

  அதென்ன பாஸ் நாட்டமையோட லெவல்? வெளியூரிலருந்து பட்டாசு ஏதாவது வாங்கியிருப்பாரோ?

  ReplyDelete
 28. அடடா உங்க அறிவின் வீச்சைப் பார்த்து அப்படியே ஷா.....க் ஆயிட்டேன்.

  ReplyDelete
 29. 2g யோட மதிப்பு 1.76 லட்சம் கோடி என்பது டெலிபோன் சர்வீஸ்காரர்களின் சாதனை கிடையாது. அவர்கள் effortபோட்டு இந்த தொகையை எட்டவில்லை. 1.76 லட்சம் கோடிக்கு மேல் பணம் கொடுத்து ஸ்வான், யுனிடெக் போன்ற நிறுவனங்களிடம் இந்த உரிமையை வாங்கினார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!!

  ReplyDelete
 30. nethu kanavula raja vanthaaraa

  ReplyDelete
 31. நாட்டு நடப்பே கதையாக.அருமை.வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. yarupa animal form tamilla translate pannathu, inga koncham vanga. (kolapannaporen)

  ReplyDelete
 33. கதை எல்லாம் சரிதான். ஒரு சின்ன திருத்தம். கோழியை வாங்கியவர் அந்த கோழியை மட்டும் ஒன்னே முக்கால் லட்சத்துக்கு விற்றிருக்கிறார்.

  ReplyDelete
 34. You are just degrading yourself.

  All your good name will be spoiled by this. So, you are saying you have heard all the arguments on both the sides and you have arrived at a conclusion far better than the chief justice of supreme court. Wow, then you can make a killing in supreme court cases.

  People who protect and defend the criminals are far more worse than criminals itself.

  ReplyDelete
 35. நல்ல கதை இதன் மூலம் ஊழலை மறைத்துவிட முடியாது.

  ReplyDelete
 36. அட்டகாசம், அருமை , சூப்பர்....

  இதுதான் நிஜம்.

  ReplyDelete
 37. அது எப்படி யுவா.. எதை பத்தி எழுதினா எதிர்ப்பு பலமா இருக்குமோ, கமெண்டு நெறைய வருமோ அந்த மாதிரி டாபிக்கா அப்பப்ப எழுதி... கலக்குறீங்க போங்க.. இந்த விஷயத்தில வாசகர்களோட நாடிபார்த்து கரெக்டா மாங்கா அடிக்கிறீங்க.. என்சாய்....

  ReplyDelete
 38. உங்களைப் போன்ற பிரபல எழுத்தாளர்கள் ( அல்லது பிரபலமாகப்போகும் எழுத்தாளர்கள் ) தங்களின் எழுத்துநடையில் நடுநிலைமையை பின்பற்றுவது நல்லது

  ReplyDelete
 39. அப்பு, கோழிய வாங்கினவன் எத்தனை ரூவாய்க்கு வித்தான்-ங்கறது தான் மேட்டர். உங்க தலைவர் பாணி-ல சொல்லணும்-னா வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ-ன்னு பேசப் படாது..

  ReplyDelete
 40. மறுபடியுமா . . . .

  உங்கள் தளபதி பிறந்த நாள் பதிவை எதிர்பார்த்தேன் . . .

  இப்படி கிளம்பிட்டிங்க . .

  சுவையான பதிவு . . .

  ஆ்னாலும் . . .

  விழலுக்கு இறைத்த நீர் . . .

  நன்றி

  ReplyDelete
 41. ரொம்ப முக்கியம் ! ரொம்ப நல்ல கருத்து !

  Pl. contact me !

  ReplyDelete
 42. Where is madasamy's best friend maadaththi?

  ReplyDelete
 43. yellam sarithan. neenga supreme
  court judge solleteenga. vazakuu
  innum mudiyila sami. ethuva
  irundhalum innum nalarai varusam
  ammavoda gummanguthuthan kannu

  ReplyDelete
 44. arutperunchithan7:28 PM, March 04, 2012

  இப்படி ஒரு குற்றச்சாட்டை ஒரு பாப்பான் மீது சுமத்தி ஒரு நாள் ஜெயிலில் வைத்து பாருங்கள் ஊடகங்கள் நீதி துறையை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்.தனியார் மயமாக்க ஒரு துறையே(ministry for disinvestment) அமைத்து அரசுபங்குகளை தனியாருக்கு விற்று அதாவது அவர்களுக்கே விற்றுக்கொண்டு பா ஜ க ஒரு ஆட்சிக்காலம் முழுக்க அடித்த கொள்ளை கணக்கில் வருமா? ஸ்விஸ் வங்கிகள் வளம் கொழித்ததே அப்போதுதான்.ஜெட் எர்வேஸ் பிரமோத் மகாஜனுடையது தானே?முதன்முதலில் இவர்கள் தான் ஏல முறையின்றி ச்பெக்றம் விற்றவர்கள் தொடர்ச்சியாக எல்லோரும் பின்பற்றினார்கள் அதில் தலித் மட்டும் குற்றவாளி என்பதா? இப்படி செய்ததால் இவ்வளவு வருவாய் இழப்பு என்ற ஒரு தொகையை ஊழல் என்று சொல்வதும் பலர் புரியாதது போல் நடிப்பதும் சாதி வெறியன்றி வேறில்லை.

  ReplyDelete
 45. அருமை நண்பரே.....
  ஊழல்., ஊழல் என்று கூவும் கோழிகள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இன்று ஒரு பைசாவுக்கு அலைபேசியில் அளவளாவி அனுபவித்துக் கொண்டிருப்பது ராசாவால் என்பதை! விரைவில் விடியும்! விடிந்த பிறகு கூவுங்கள்!!!

  ReplyDelete
 46. இன்னமும் 1.76 லட்சம் கோடி லஞ்சம் வாங்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் 'அப்பாவி' படித்தவர்களை நினைத்தால், பாவம், வருங்காலத்தில் வடிவேல் கூட முதல்வராவார் போலிருக்கிறது. படிச்சு என்ன பிரயோசனம். மூளை என்று ஒன்று இல்லாமல் போன பிறகு இவர்களையெல்லாம் படித்தவர்கள் என்று சொல்வது அநாகரிகம்.

  மோகன் என்பவர் சொன்ன மாதிரி வைரத்தைத் தான் இதனுடன் ஒப்பிட்டிருக்க வேண்டும். கண்டெடுக்கும் விவசாயிக்கு, அது ஒரு கூழாங்கல் மட்டுமே.. கை மாற மாற, ஒவ்வொரு கையும் பல லட்சம் சம்பாரிக்குமே, அது தான் வைர வியாபாரம். விவசாயியைப் போய், நீ பல லட்சத்தை ஏமாற்றி விட்டாய் என்று சொல்வது மாதிரி தான்....

  ஹூம்.. இதெல்லாம் இந்த படித்த முட்டாள்களுக்கு எங்கே புரியப் போகிறது.

  2 லட்சம் கோடி என்று ஆண்ட்ரிக்ஸ் ஊழலைப் பற்றி அதே ஆடிட்டர் சொல்லியிருக்கிறாரே.. ஏன் பரபரப்பு இல்லை என்று பார்த்தீர்களா?

  ReplyDelete
 47. Appo antha 214 crore to Kalignar TV ethunaala vanthathu? Aen Saadik Baatcha suicide pannikkanum? WiMax appadingara kozhiyai pathi Aen CBI visaarikkanum? engaeyo idikkura maathiri illai?

  ReplyDelete
 48. சிந்திப்பவன்8:58 AM, March 05, 2012

  >>மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”

  “அருமையான தீர்ப்புங்கய்யா...” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.

  ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார்.<<

  இது நடந்து சில வாரங்களில் நாட்டாமை தன் தடியை கூப்பிட்டு சொல்கிறார்:"டே,அந்த ராசா பய விடுதல ஆப்போரான்னு ஒரு செய்தி வருது.அது நெசம்ன்னா ,அவன் வெளியில் வரத்திற்கு முன் அவன போட்டுதள்ளீடு!"
  "ஐயா... ராசா நம்ம ஆளாச்சே?"
  "அது அப்போடா! கோழிக்கு முன்னூரும் நானூறும் கொடுக்க ஆள் இருக்கறச்ச அத ரகசியமா நம்ம ஆளு ஒத்தனுக்கே இருநூருக்குபேசி நூத்தம்பதிற்கு வித்ததா சொல்லி மீதி ஐம்பதை அவனும் ஏன் பொண்ணும் பங்கு போட்டிருக்காங்க!இப்போ அவன் வெளியில் வந்து இத அம்பல படுதறதா பயமுருத்தறான்!!"

  ReplyDelete
 49. பகுத்தறிவு கதை. இந்த கதையை பிரிண்ட் அவுட் எடுத்து என்னோட இடத்துல ஒட்டி வச்சுக்கலாம் என்று இருக்கேன்.

  கதையில் என்ன ஒரு (முட்டை) கரு!!!

  அந்த கருவை எடுத்து வறுத்து பொடிமாஸ் செய்து சரக்கடித்துக் கொண்டே சாப்பிட்டால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று "தெளிவாய்" விளங்கும்.

  ReplyDelete
 50. Why are you still blindly supporting the corrupt?

  ReplyDelete
 51. எனக்கு இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் ஒன்றுமே புரியவில்லை. இது வெறும் கோழி கதை. இதற்கு ஏன் இவ்வளவு டென்ஷன்? :-)

  ReplyDelete
 52. அய்யா... இது ஒலகமகா நடிப்புடா சாமி...

  ReplyDelete
 53. கோழிய ஏலம் விட்டிருந்தா ஒன்னேமுக்கா லட்சம் கண்டிப்பா கெடச்சிருக்கும் நீ ஏன் அதை விலைக்கும் கூட கொடுக்காமல் வாடகைக்கு விட்டாய் அட்வான்ஸ் வாங்கி அரசுக்கு கொடுத்தாய்? அதனாலதானே பெரிய நிறுவனங்களுக்கு கோபம்?அப்புறம் இப்ப கேன்சல் பண்ணவும் முடியுது?.ஆனா முட்டை சீப்பா கிடைக்குறதுக்கு நீ தான் காரணம்...எவனுக்குமா தெரியாது அந்த தொகை நீ வாங்குன தொகை இல்லை என்பது?அப்படி பல சைபர் போட்டு ஒன்ன சைபர் ஆக்க அவ்வளவு ஆற்றாமை அதுதான் தமிழன் குணம்.சாரி சாதி தமிழன் குணம்.உன்னை நீ தான் பாத்துக்கணும் ராசா.அதிகம் படிப்பறிவு இல்லாத சாதிக் பாட்சா பயப்படாமல் இருந்திருக்க வேண்டும் பாவம்.

  ReplyDelete
 54. இந்த விஷயத்தில் வெறுமே வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிலைமை ஒரு உறுத்தலாகவே இருந்தது இப்படி ஒரு பின்னூட்ட களம் அமைந்தது ஒரு வடிகால் என்றே நினைக்கிறேன் படித்தவர் புரிந்தவர் கூட இதை பற்றி கவலைபடாமல் கருத்து சொல்லாமல் இருக்க அவர் மீது அசிங்கமான வதந்திகளையும் பரப்பினர்.எல்லாம் சட்டப்படியே நடந்தது என்று நிருபிக்கவே அவர் ஜாமீன் கேட்காமல் இருக்கிறார்.அனால் எல்லாவற்றையும் விசாரித்து தவறை கண்டுபிடித்தது போல் அனைத்து ஒதுக்கீட்டையும் ரத்து செய்தது பின்னடைவே மறு பரிசீலனைக்கு மனு செய்திருந்தாலும் ...இவருக்கு எதிரானவர்கள் மிகப்பெரும் பண முதலைகள்......கஷ்டம் தான்.

  ReplyDelete
 55. ராசா கோழிய சந்தையில பாத்த மொதோ ஆள்கிட்ட வித்தானா., இல்ல பேரம் பேசி வித்தானான்னு சொல்லவே இல்லையே யுவா?

  ReplyDelete
 56. பெட்ரொமாஸ் லைட்டேதான் வேணுமா?

  ReplyDelete
 57. நூறு ரூபாய் கோழியை நூத்தம்பதுக்கு வித்தது சரிதான். அதுக்கு ராசா எதுக்கு இருநூறு ரூவாய் லஞ்சம் வாங்கணும்?????????????????????????????????????????????????????????????

  ReplyDelete
 58. அலைகற்றை பற்றி 09.08.2012 தினமணி தலையங்கத்தை முழுதுமாக படித்த பிறகுதான் இழப்பிடு பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு உள்ள கேள்விகள் கீழே, தயவு செய்து அறிந்தவர்கள் விளக்கவும்.
  1. 2008 ல் விற்கப்பட்ட 2g அலைகற்றை விலை 1.02 லட்சம் கோடி. 2012 ல் விற்கப்பட இருக்கும் அலைகற்றை விலை 2.52 லட்சம் கோடி. (உத்தேசமாக) 2016 ல் விற்கப்பட இருக்கும் அலைகற்றை விலை (தோரயமாக) 5 லட்சம் கோடி என்றால் 2016 ல் அரசுக்கு 2.48 லட்சம் கோடி இழப்பிடு ஆக இருக்குமா?
  2. 2.52 லட்சம் கோடிக்கு அலைகற்றை விற்க இருப்பதால் டெலிபோன் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வருகிறதே, உண்மையா?
  உண்மை என்றால் 1.02 லட்சம் கோடிக்கு குறைந்த கட்டணம். 2.52 லட்சம் கோடிக்கு அதிக கட்டணம், லாஜிக் படி சரி தானோ?
  3. அரசு அலைகற்றை யை வியாபார நோக்கத்தோடு அணுகுகிறதா? அல்லது சேவை நோக்கதொடா? வியாபார நோக்கம் என்றால் 10 லட்சம் கோடிக்கு விலை நிர்ணயம் செய்யலாமே?
  4. 2008 ல் அலைகற்றை யில் அரசுக்கு 1.78 லட்சம் கோடி இழப்பிடு + விற்றது 1.02 லட்சம் கோடி=2.80 லட்சம் கோடி. 2008 லேயே 2.80 லட்சம் கோடிக்கு விற்று இருக்க கூடிய அலைகற்றை யை ஏன் இப்பொழுது 2.52 லட்சம் கோடிக்கு விலை குறைவாக விற்க வேண்டும்?

  ReplyDelete