February 28, 2012

திராவிடர்களுக்கு

ஏன் திராவிட இயக்கம் மலர்ந்தது?

1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பார்ப்பனர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர்  பார்ப்பனர்கள் . 1496 பொறியாளர்களில் 1096 பேர்  பார்ப்பனர்கள் . 3 சதவீதம் இருந்த  பார்ப்பனர்களில் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்தினருக்கு கல்வி மனுதர்மத்தை காட்டி மறுக்கப்பட்டதின் விளைவாக இந்த அடாத நிலை இருந்தது. மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது.


யாரெல்லாம் திராவிடர்கள்?
”திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் "நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாடால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்'' என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்” என்று கலைஞர் சொல்கிறார். தனிப்பட்ட முறையில் ‘நாடால் இந்தியர்கள்’ என்கிற பதத்தை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அய்யா சுபவீ அவர்கள் சொல்வதைப் போன்று சமூகநீதித் தளத்தில் ‘திராவிடன்’ என்றும், மற்ற களங்களில் ‘தமிழன்’ என்கிற அடையாளத்தையும் சுமக்க விரும்புகிறேன். எவனெல்லாம் மனிதநேயத்துக்கு எதிரான சனாதன மூட வழக்கங்களை எதிர்க்கிறானோ, எவனெல்லாம் எல்லோரும் சமம் என்று நம்புகிறானோ அவனெல்லாம் திராவிடன் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. திராவிடம் என்கிற சொல் வெறுமனே நிலவியல் பரப்பினையும், மொழியையும் வைத்து மட்டுமே வரையறுக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல. பாட்டாளிகளுக்காக உருவான சித்தாந்தமான மார்க்ஸின் பொதுவுடைமையைப் போன்றே ஏழை எளியவர்களுக்காகவும், மதம்-சாதியால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்காகவும், கடந்த நூறாண்டுகளாக தென்னிந்திய அறிவுஜீவிகளால் Collective thoughts ஆக உருவான உயரிய கோட்பாடு இது.’திராவிடம்’ என்கிற சொல்லை திகவினரும், திமுகவினரும்தான் உருவாக்கினார்களா?


1847ஆம் ஆண்டிலேயே ‘திராவிட தீபிகை’ என்கிற இதழ் தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கியதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே. வங்காள மகாகவியானவரும், இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவருமான ரவிந்திரநாத் தாகூர் ‘திராவிட’ என்கிற சொல்லினை தேசிய கீதத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். இச்சொல்லை பயன்படுத்துங்கள் என்று அவரை பெரியாரோ, அண்ணாவோ வற்புறுத்தவில்லை. இந்திய தேசிய கீதத்திலேயே ‘திராவிடம்’ என்கிற சொல் இடம்பெற்றிருப்பதால், இந்திய தேசியம் திராவிட இனத்தை அங்கீகரிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

பிறப்பால் பார்ப்பனர்களும் திராவிடர்களாக முடியுமா?

மாநிலக் கல்லூரி வாசலில் இருக்கும் தமிழ்த்தாத்தா சிலையின் கீழ் ’திராவிட வித்யாபூஷணம்’ என்கிற அடைமொழியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களும் உணர்வு அடிப்படையில் திராவிடர்களாக முடியும் என்கிற பரந்த மனப்பான்மை இவ்வினத்துக்கு உண்டு என்பதற்கு இது மிக நல்ல சான்று. பிறப்பின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமே ஒருவன் திராவிடனாக வரையறுக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

திராவிடத்தால் விளைந்த நன்மை என்ன?

சாமானியர்களும் சிந்தித்து, இன்று இக்கேள்வியை கேட்கும் சுதந்திரத்தை திராவிடம் ஏற்படுத்தி தந்திருக்கிறது. திராவிடம் நமக்கு தந்த பரிசு கட்டற்ற கருத்து சுதந்திரம். இவனெல்லாம்தான் கல்வி கற்கலாம், இவனெல்லாம்தான் சிந்திக்கலாம் மாதிரியான பிற்போக்கு சமூகக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்தது திராவிடம். பிறப்பின் அடிப்படையில் யாரையும் வரையறுத்து, அவனுடைய வாழ்வியலை கட்டுப்படுத்தும் போக்கினை திராவிடம் அகற்றியிருக்கிறது. இந்தியாவின் மகத்தான மாற்றமான இடஒதுக்கீடுக்கு 1920களிலேயே திராவிடம் அச்சாரம் இட்டது. சாதி, மத மறுப்பினை திராவிடம் சாத்தியமாக்கியது. முற்போக்கு சிந்தனைகளுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கியது.

நான் திராவிடன் என்று உணர்வதில் பெருமை கொள்கிறேன். இதே பெருமித உணர்வு உங்களுக்கும் இருப்பின், தமிழ் மண் உலகுக்கு தந்த மாபெரும் சித்தாந்த கோட்பாடான திராவிடத்தின் நூற்றாண்டினை கொண்டாடுங்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஃபேஸ்புக் திராவிடத் தோழர்கள் தயாரித்துத் தந்திருக்கும் கீழ்க்கண்ட இலச்சினையை உங்கள் வலைப்பூவிலோ, ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சமூகவலைப்பின்னல்களிலேயோ பயன்படுத்துங்கள்.
54 comments:

 1. ஈவே ராமசாமி நாய்க்கர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தலைவர் என தலித்கள் சொல்வது மிகச்சரி .

  //912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பார்ப்பனர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர்  பார்ப்பனர்கள் . 1496 பொறியாளர்களில் 1096 பேர்  பார்ப்பனர்கள் . 3 சதவீதம் இருந்த  பார்ப்பனர்களில் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்தினருக்கு கல்வி மனுதர்மத்தை காட்டி மறுக்கப்பட்டதின் விளைவாக இந்த அடாத நிலை இருந்தது. மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது//

  திராவிட இயக்கம் வேறூன்றிய இந்த 40 ஆண்டுகளில் அதிகாரம் முழுக்க பிராமணர்களின் கையில் இருந்து பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கைகளுக்கு சென்றது , தலித்களை "அவர்கள்" என்றே ராமசாமியும் அவரது வழிவந்தவர்களும் கருதினர் ,

  இன்றைய அரசு பணி முதல் டாக்டர், அரசு வழக்கறிஞர் ,பொறியாளர்களில் எத்தனை சதவீதம் தலித்கள் எனப்பார்த்தாலே மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே -தலித்கள் தவிர - என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது என தெரியும் ,

  புள்ளிவிவர புலிகள் முடிந்தால் மறுக்கலாம் .

  ReplyDelete
 2. அரங்கசாமி! ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதையாக இருக்கிறது. கொஞ்சம் விட்டால் தலித்துகளுக்காக பார்ப்பனர்கள்தான் பாடுபடுகிறார்கள் என்றும் கதை எழுதுவீர்கள் :-)

  இன்றைய சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று உங்களைப்போன்ற தலித்திய ஆதரவாளர்கள் (என்ன கொடுமை சார் இது) புள்ளிவிவரம் கொடுங்களேன் பார்ப்போம் :-)

  ReplyDelete
 3. Arangasamy K.V @ நீங்கள் பிற மாநிலங்களில் தலித்துகளின் தற்போதைய நிலைமையையும், தமிழகத்தில் உள்ள நிலையையும் ஒப்பிடலாமே...

  ReplyDelete
 4. //இன்றைய அரசு பணி முதல் டாக்டர், அரசு வழக்கறிஞர் ,பொறியாளர்களில் எத்தனை சதவீதம் தலித்கள் எனப்பார்த்தாலே மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே -தலித்கள் தவிர - என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது என தெரியும் ,

  புள்ளிவிவர புலிகள் முடிந்தால் மறுக்கலாம் .//

  தமிழகத்தில் SC 18 சதவிதம்

  இன்று அரசு மருத்துவர்களில் 18 சதவிதத்திற்கு மேல் SC பிரிவினர் உள்ளனர்

  --

  எந்த அரசு பணி என்று எடுத்துப்பார்த்தாலும் (கிராம நிர்வாக அதிகா ரி, செவிலியர், ஆசிரியர், இள நிலை பொறியாளர், வருவாய் அலுவலர், வட்டாச்சியர் முதல் அரசு மருத்துவக்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளின் பேராசிரியர் பதவி வரை

  எந்த பதவியை எடுத்தாலும் தலித் மக்கள் 18 சதவிதத்திற்கு மேல் உள்ளனர்

  இதை சாதித்தது திராவிடம்

  ReplyDelete
 5. //திராவிட இயக்கம் வேறூன்றிய இந்த 40 ஆண்டுகளில் அதிகாரம் முழுக்க பிராமணர்களின் கையில் இருந்து பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கைகளுக்கு சென்றது , தலித்களை "அவர்கள்" என்றே ராமசாமியும் அவரது வழிவந்தவர்களும் கருதினர் ,

  இன்றைய அரசு பணி முதல் டாக்டர், அரசு வழக்கறிஞர் ,பொறியாளர்களில் எத்தனை சதவீதம் தலித்கள் எனப்பார்த்தாலே மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே -தலித்கள் தவிர - என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது என தெரியும் ,

  புள்ளிவிவர புலிகள் முடிந்தால் மறுக்கலாம் .//

  இன்றைய அரசு பணி முதல் டாக்டர், அரசு வழக்கறிஞர் ,பொறியாளர்களில் எத்தனை சதவீதம் தலித்கள்

  தமிழகத்தில் 20 சதத்திற்கு மேல் தான்

  பிற மாநிலங்களிலும், நடுவண் அரசிலும் நிலை வேறு

  தமிழகத்தில் இதை சாதித்தது திராவிடமே

  உங்களுக்கு சந்தேகம் இருந்தால்

  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வாங்கி அளிக்கிறேன். சரி பா ர்த்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 6. //Arangasamy K.V said...//

  ஐ.ஐ.டி போன்ற நிலையங்களில் தலித்களுக்கு கிடைக்க வேண்டிய இடப்பங்கீட்டை மோசடி செய்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்று கூறுங்களேன்

  ReplyDelete
 7. நல்ல தகவல்............


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  ReplyDelete
 8. //ஈவே ராமசாமி நாய்க்கர்// என்று பெரியாருக்குச் சாதிப் பின்னொட்டுப் போடுபவர்கள் இன்னார் என்று புரிய முயல்வதில் ஒரு வேதனை உண்டாகிறது. திராவிடர்கள் என்பது ஓர் இனத்தவர் என்று புரிகிறது. திராவிடப் பார்ப்பனர்கள் - அவ்வினத்தில் வேதியர்கள் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. சூத்திரப்பார்ப்பனர்கள் என்றால்? நானும் படித்து நாலு காசு பார்த்துவிட்டேன். இதைப் புரிந்துகொள்ளும் அறிவுதான் இல்லை

  ReplyDelete
 9. நேரத்திற்கு தகுந்த நல்ல பதிவு. நன்றி!..
  -----
  இன்று தலித்துகள் இந்த அளவுக்காவது முன்னேறி இருப்பதற்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் திராவிடமும் அதன் இயக்கங்களுமே காரணம் என்று நான் நினைக்கிறேன்.

  மேலும் இதை முன்னெடுத்து செல்ல ''ஞான தகப்பன்'' கலைஞரால் மட்டுமே முடியும்.

  ReplyDelete
 10. ஷகிலா பற்றி போஸ்ட் எழுதுகையில் 40 பாராக்கள் எழுத நேரம் இருக்கும். இது போன்ற உருப்படியான கருத்துகளை மட்டும் 4 பாராக்கள் எழுதினால் போதும்னு தோணிடுமே. மந்தையை நேர்வழியில் கொண்டு செல்லணும்னா சிந்திக்கும் ஆடுகள், பலன் எதிர்பாராம தொண்டை வறள கத்தணும்யா. இப்பவும் அதுக்கான தேவை அதிகரிச்சுகிட்டேதான் போகுது.

  எனி வே, நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
 11. Dravida kolgaigalukku neegal vakkalathu vaangum adhe alavu Ramanujarin sithaanthathirku parpanargalal vanga mudiyum .....

  Sithaanthangalai than valarchikaaga ubayogapaduthiyavargal Irandin uruppinargalum enbathai oppukolveergalaa ?

  Oppukkondaal ; Yetho oru kolgaiyai pinpatri adhil nanmaiyai unmaiyaaga yaar vendumaanaalum adainthuvittu pogattum.

  Neengal sollum dravida kolgaigal ondrum nam arasiyalvaathigalai oru kudimagan yethirthu pesum alavirku suthanthiram vaangi thandhuvidavillai.

  It happened the vice versa - So the followers used it for their benefits, It has lost its authenticity within few decades.

  ReplyDelete
 12. Wipro chairman Mr. Azim prem ji's comment on reservation: Good one..read on....


  I think we should have job reservations in all the fields. I completely support the PM and all the politicians for promoting this. Let's start the reservation with our cricket team. We should have 10 percent reservation for Muslims. 30 percent for OBC, SC /ST like that. Cricket rules should be modified accordingly. The boundary circle should be reduced for an SC/ST player. The four hit by an OBC player should be considered as a six and a six hit by a OBC player should be counted as 8 runs. An OBC player scoring 60 runs should be declared as a century. We should influence ICC and make rules so that the pace bowlers like Shoaib Akhtar should not bowl fast balls to our OBC player. Bowlers should bowl maximum speed of 80 kilometer per hour to an OBC player. Any delivery above this speed should be made illegal.

  Also we should have reservation in Olympics. In the 100 meters race, an OBC player should be given a gold medal if he runs 80 meters.

  There can be reservation in Government jobs also. Let's recruit SC/ST and OBC pilots for aircrafts which are carrying the ministers and politicians (that can really help the country.. )

  Ensure that only SC/ST and OBC doctors do the operations for the ministers and other politicians. (Another way of saving the country..)

  Let's be creative and think of ways and means to guide INDIA forward...

  Let's show the world that INDIA is a GREAT country. Let's be proud of being an INDIAN..

  May the good breed of politicans like ARJUN SINGH long live...

  ReplyDelete
 13. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 53 நீதிபதிகளில் 10 எஸ் டி எஸ் சி பிரிவை சேர்ந்தவர்கள். வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு வாய்ப்பில்லை!

  ReplyDelete
 14. Hi,
  In the national anthem the word Dravida denotes the geographical area... not the persons....

  G Hariprasad

  ReplyDelete
 15. லக்கி,
  லக்கி,


  இணையத்தில் திராவிடக்கொள்கைய பரப்பவேண்டும் என்று தி.மு.க பொதுக்குழுவில் பேசியதன் விளைவா இது :-))

  சிலக்கேள்விகள்,

  #இந்த இலட்சினையில் இருப்பவர்கள் பெயர்களை சொல்ல முடியுமா?

  #மேலும் அண்ணாவிற்கு பிறகு திராவிட தலைவர்கள் தோன்றாமல் திராவிட இயக்கங்கள் நசிந்து போய்விட்டது போலும் வேறு முகங்களே காணோம் :-))
  (இப்போ இருப்பவர் திராவிடர் இல்லையோ,அவர் முகம் போட்டால் வரும் கொஞ்சம் பேரும் ஓடிருவாங்களோ)
  #எம்ஜீஆர் திராவிட இன வகைப்படுத்துதலில் உள்ளாரா?

  #திராவிட உணர்வு தட்டி எழுப்பப்பட்டால் அதனை அரசியல் ,சமூக களத்தில் முறையாகப்பயன்ப்படுத்த ஏதேனும் திராவிட இயக்கம் இருக்கிறதா? அல்லது இனி நீங்களே ஒரு இயக்கம் கண்டு செயல்ப்படுத்தப்போகிறீர்களா?

  //1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பார்ப்பனர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர் பார்ப்பனர்கள் . 1496 பொறியாளர்களில் 1096 பேர் பார்ப்பனர்கள் . 3 சதவீதம் இருந்த பார்ப்பனர்களில் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்தினருக்கு கல்வி மனுதர்மத்தை காட்டி மறுக்கப்பட்டதின் விளைவாக இந்த அடாத நிலை இருந்தது. மனிதராய் பிறந்தவர் அனைவரும் சமமே என்கிற கோட்பாட்டினை வலியுறுத்தவே திராவிட இயக்கம் பிறந்தது.//

  என்ன ஒரு திராவிட கண் உங்களுக்கு, 1912 இல் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கவில்லை, அம்பேத்கர் அரசியல் சட்டம் இயற்றி இருக்கவில்லை. அம்பேத்கர் மட்டும் 18% இட ஒதுக்கீடு என்று சட்டம் போட்டிருக்கவில்லை எனில் கல்வி நிலையில் எந்த மாற்றமும் வந்திருக்காது.

  இட ஒதுக்கீடு சட்டத்தாலேயே மட்டுமே தலித்துகளுக்கு கல்வி கிடைத்தது. மேலும் கல்வியை இலவசமாக ஆக்கியது, மதிய உணவு திட்டம் எனக்கொண்டு வந்தது எல்லாம் காமராஜர் காலத்தில்.

  வறுமையில் உழலும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் பயன்ப்படாத சூழலை மாற்றியது காமராஜர், நடுவே வந்த தி.மு.க ஏன் மீண்டும் மதிய உணவை தொடரவில்லை, எம்ஜிஆர் வந்த பின்னரே சத்துணவாக மீண்டும் தொடரப்பட்டது.

  எல்லாம் படிக்கணும் னு சொல்லிக்கிட்டே இருந்தா போதுமா அவர்கள் படிப்புக்கு தடைக்கல்லாக இருப்பது வறுமை, பசி தானே அதை கவனத்தில் கொண்டது காமராஜரும், எம்ஜிஆர்ருமே.

  அப்படி எனில் திராவிடர்களின் கல்விக்கு பேருதவி செய்து இன்றைய நிலைக்கு காரணம் ஆனவர்கள் ஏன் திராவிட இலட்சினையில் இல்லை.

  பார்ப்பனர்களிடம் இருந்து உரிமை வாங்க திராவிடம் ஆனால் பெற்றதை தலித்துகளுடன் பகிர்ந்துக்கொள்ள அல்ல :-)) கூட்டம் சேர்க்க , ஓட்டுப்போட மட்டுமே தலித்துகள் போலும்.

  18 சதவீத இட ஒதுக்கீடு என்பது மட்டும் இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படி கிடைத்த சலுகை இல்லை எனில் திராவிட இயங்களூம் அதே ஆரிய அல்வாவைத்தான் தலித்துகளுக்கு கொடுத்திருக்கும் :-))

  எனவே அரங்கசாமி போன்றோர் அவ்வாறு சொல்வதில் பிழையில்லை.

  1967 இல் இருந்து திராவிட ஆட்சி தான் ஏன் தனியார் நிறுவனங்கள்,கல்வி நிலையங்களில் அந்த 18% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சொல்ல இயலவில்லை.

  இன்னும் சொல்லப்போனால் ஐ.ஐ.டி சென்னையில் நடைப்பெறும் முறைக்கேடுகளை ஒரு மாநில அரசு நினைத்தாலும் சரி செய்ய முடியும், அதுவும் மத்தியில் எப்போதும் கூட்டணி வைப்பவர்கள் உரிய முறையில் சொல்லி சரி செய்ய முடியாதா? அந்த அளவுக்கு பல் இல்லாத பாம்பாக அடங்கி போய் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு சுயலாபம் அடைபவர் தான் திராவிட தலைவரா?

  ஐ.ஐடி ஒரு உதாரணம் தான் ,இது போன்ற பல தமிழர் நலனுக்கு குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளின் போதெல்லாம் எதுவும் செய்யவில்லை தமிழக திராவிட தலைவர்கள்.

  ReplyDelete
 16. //ஐ.ஐ.டி போன்ற நிலையங்களில் தலித்களுக்கு கிடைக்க வேண்டிய இடப்பங்கீட்டை மோசடி செய்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்று கூறுங்களேன்//

  நன்றாக படித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்கி, பொறியியல் நுழைவுத்தேர்விலும் அதிக மதிப்பு வாங்கி ஐஐடியில் படிக்க இடம் கிடைக்கும் என்று ஆசையோடு கலந்தாய்வு செல்லும்போது "இடஒதுக்கீடு முறைப்படி குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐஐடியில் படிக்க இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று கேள்விப்பட்டு வருந்தி நிற்கும் அவனிடம் போய் கேளுங்க..என்ன தண்டனை கொடுக்கலாம்னு..நல்லா விளக்கமா சொல்லுவான்..

  ReplyDelete
 17. ராசு அண்ணே , புரியுது என்ன சொல்றீங்கண்ணு :)

  ஆனா அவர் அதை தாண்டிவந்ததற்கு எதுவும் (உண்மையாகவே) ஆதாரம் இருப்பதாக எனக்கு தெரியலை.

  திராவிட இயக்கம் தலித்களை என்றும் பிறராகவே பார்த்தது.

  ReplyDelete
 18. கார்த்தி,

  //நன்றாக படித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்கி, பொறியியல் நுழைவுத்தேர்விலும் அதிக மதிப்பு வாங்கி ஐஐடியில் படிக்க இடம் கிடைக்கும் என்று ஆசையோடு கலந்தாய்வு செல்லும்போது "இடஒதுக்கீடு முறைப்படி குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐஐடியில் படிக்க இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று கேள்விப்பட்டு வருந்தி நிற்கும் அவனிடம் போய் கேளுங்க..என்ன தண்டனை கொடுக்கலாம்னு..நல்லா விளக்கமா சொல்லுவான்..//

  இது ஒரு நல்லக்கேள்வி,

  அந்த மாணவன் மட்டும் நல்லாப்படிக்க என்னக்காரணம்,

  அவங்கப்பா நல்லாப்படிச்சார் எனவே ஜீன் வழியா படிப்பு ஏறி நல்லாப்படிச்சான் சரியா :-))

  இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவன் குறைவான மதிப்பெண் வாங்கினான், நல்லாப்படிக்கவில்லை ஏன் எனில் அவங்கப்பாவுக்கு கல்வி இல்லை ,எனவே ஜீனில் கல்வி அறிவு இல்லை சரியா :-))

  அப்போ அவங்க அப்பாக்கள் இடையே ஏன் கல்வியில் வித்தியாசம்ம் ஆச்சு, அப்பா -தாத்தா ..கொள்ளு தாத்தா எல்லாம் ஒரு சாரருக்கு படிப்பாளிகளாக இருக்காங்க,

  இன்னொரு சாரருக்கு அப்பா -தாத்தா - கொள்ளு தாத்தா எல்லாம் கை நாட்டு அது எப்படி?

  காரணம் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது, இந்த தலை முறையில் கல்விக்கூடத்தில் காலடி வைக்கும் ஒருவன் எப்படி எடுத்ததும் நன்றாகப்படிப்பான்? எனவே பல தலைமுறைகளாக கல்வி,வேலை என வஞ்சிக்கப்பட்டதற்கான இழப்பீடு தான் இப்போது அளிக்கப்படும் இட ஒதுக்கீடு.

  சரி அதே ஐ.ஐ.டி இல் கழிவரை சுத்தம் செய்தல்,குப்பை அள்ளுதல், பராமரிப்பு பணி என நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கு, அதில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீங்கள் கேட்டுப்பெறலாம். அதிலும் சம வாய்ப்பு வேண்டாமா உங்களுக்கு :-))

  சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியில் மட்டும் ஆயிரக்கணக்கில் பணிபுரிகிறார்கள் நல்ல சம்பளம் கிடைக்கும் , ஆனால் பாருங்க ஒரு ஶ்ரீராம், சடகோபன் , என்ற நாமக்கரணம் உள்ளவா யாரும் வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லை எல்லாம் கருப்பனும், கண்ணாயிரன்ங்களும் ,அய்யாசாமிகளுமாவே இருக்காங்க, என்ன அநியாயம் சார், விடாதிங்கோ ,நீங்களாவது எல்லாருக்கும் சொல்லி வேலைக்கு அனுப்பி வையுங்கோ :-))

  மிக அதிக இட ஒதுக்கீடு பெருபவர்கள் எல்லாம் முன்னேறிய வகுப்பினரே , பின்ன 50% அவங்களுக்கு தானே , ஆனால் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் படி அவர்கள் எவ்வளவு பேர்.

  ஒரு நாட்டின் வளங்கள் எல்லாக்குடிமக்களுக்கும் பொதுவானது எனில் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பகிர தயாரா?

  ReplyDelete
 19. மேற்கு வங்கத்து மருத்துவரோடு ஒரு தடவை பணி செய்தேன். அவரோ பிராமணர், அவர் மணந்தது ஒரு தலித் இனத்து பெண்ணை.அவருடையது காதல் மணம் என பலகாலம் எண்ணியிருந்தேன். பின்னர் அதிர்ச்சியுற வைக்கும் வகையில் சொன்னார் 'என்னுடையது அரேஞ்சுடு மேரேஜ்". மேற்கு வங்கத்தில் சாதி பார்ப்பவர் மிகவும் குறைவு என்றார் அவர். (அங்கும் சாதி முற்றிலுமாக ஒழியவில்லை எனவும் சொன்னார்)

  இப்படி மக்களை மனமாற்றம் பெற வைப்பதில் திராவிட இயக்கம் தோல்வி அடைந்து விட்டது. சாதியின் பிடி மேலும் இறுகியுள்ளது. கலைஞரே தனக்கும் ஸ்டாலினுக்கும் தரப்பட்ட எம் எல் ஏ சீட்டு இசை வேளாளர் இனத்துக்கு தரப்பட்டது என சொல்லும் விதத்தில்தான் இருக்கிறது திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பு இலட்சணம். பிற்படுத்தபட்ட உயர்சாதிக்கு இட ஒதுக்கீடு கொடுத்து பிராமணர்கள் விட்ட இடத்தை இவர்களை கொண்டு நிரப்பியதுதான் திராவிடத்தின் சாதனை. இதை அறிந்துதான் திராவிட இயக்கம் சொன்ன 'பிராமண எதிர்ப்பு மட்டும்' கொள்கைக்கு அம்பேத்கார் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் எல்லா உயர்சாதி கும்பலையும் எதிர்த்தார்.

  ReplyDelete
 20. கார்த்தி ,

  ஜஜடியில் போட்டியில் இட ஒதுக்கீடில்லாமலேயே ஒரு தலித் வெல்லும் சூழல் வந்தபின் இடஒதுக்கீடை நிறுத்திக்கொள்வோம், 

  அதுவரை 3000 வருடங்களாக உங்கள் எங்கள் முன்னோர் செய்த  அநியாயங்களுக்கான பிராய்சித்தம் செய்தாகத்தான் வேண்டும் , முற்,பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கை சூழலை தலித்கள் அடைந்துவிட்டார்கள் என்ற நிலை வரட்டும் .

  ReplyDelete
 21. வழக்கம் போல் வவ்வால் உளறிக்கொட்டுகிறார்

  //என்ன ஒரு திராவிட கண் உங்களுக்கு, 1912 இல் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கவில்லை, அம்பேத்கர் அரசியல் சட்டம் இயற்றி இருக்கவில்லை. அம்பேத்கர் மட்டும் 18% இட ஒதுக்கீடு என்று சட்டம் போட்டிருக்கவில்லை எனில் கல்வி நிலையில் எந்த மாற்றமும் வந்திருக்காது.//

  18 சதம் என்பது தமிழக சட்டம்

  இது தெரியாத மோசடி பேர்வழி வவ்வால் அவர்களே

  ReplyDelete
 22. //இட ஒதுக்கீடு சட்டத்தாலேயே மட்டுமே தலித்துகளுக்கு கல்வி கிடைத்தது.//

  இடப்பங்கீடு சட்டம் அனைத்து மாநிலங்களிலும் உள்ளதே

  ஆனால் அது தமிழகத்தில் மட்டும் தான் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது

  ஐ.ஐ.டி, ஏய்ம்ஸ் போன்றவற்றில் நடக்கும் மோசடிகள் மூலம் இடப்பங்கீட்டை செயல்படுத்த விடாமல் செய்கிறார்கள்

  ReplyDelete
 23. //

  மேலும் கல்வியை இலவசமாக ஆக்கியது, மதிய உணவு திட்டம் எனக்கொண்டு வந்தது எல்லாம் காமராஜர் காலத்தில்.

  //

  ஆமாம்

  காங்கிரஸ் கட்சியில் இருந்த திராவிட காமராஜர்

  ReplyDelete
 24. //வறுமையில் உழலும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் பயன்ப்படாத சூழலை மாற்றியது காமராஜர், நடுவே வந்த தி.மு.க ஏன் மீண்டும் மதிய உணவை தொடரவில்லை,//

  அப்படியா

  ஆதாரம் தர முடியுமா

  ReplyDelete
 25. //
  எல்லாம் படிக்கணும் னு சொல்லிக்கிட்டே இருந்தா போதுமா அவர்கள் படிப்புக்கு தடைக்கல்லாக இருப்பது வறுமை, பசி தானே அதை கவனத்தில் கொண்டது காமராஜரும், எம்ஜிஆர்ருமே.
  //

  ஆமாம்

  கிருமி லேயர் என்று கொண்டு வந்து சூடுபட்ட
  பின்னர் எம்.ஜி.ஆர் அதை செய்தார்

  காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்த திராவிடர்

  சத்துணவில் மூட்டை சேர்க்கப்பட்டது எந்த ஆட்சியில் என்று வவ்வால் கூறுவாரா

  ReplyDelete
 26. //
  18 சதவீத இட ஒதுக்கீடு என்பது மட்டும் இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படி கிடைத்த சலுகை இல்லை எனில் திராவிட இயங்களூம் அதே ஆரிய அல்வாவைத்தான் தலித்துகளுக்கு கொடுத்திருக்கும் :-))
  //

  பிற மாநிலங்களில் இருக்கும் நிலையையும் நடுவண் அரசில் இருக்கும் நிலையையும் தமிழகத்தில் இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் வவ்வால் கூறுவது எவ்வளவு அபத்தம் என்று புரியும்

  ReplyDelete
 27. //
  1967 இல் இருந்து திராவிட ஆட்சி தான் ஏன் தனியார் நிறுவனங்கள்,கல்வி நிலையங்களில் அந்த 18% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சொல்ல இயலவில்லை.
  //

  முதலில் அரசில் முழுமையாக நடைமுறைப்படுத்தி விட்டு அதன் பிறகு தனியாருக்கு வரலாம் என்று தான்

  ReplyDelete
 28. //


  இன்னும் சொல்லப்போனால் ஐ.ஐ.டி சென்னையில் நடைப்பெறும் முறைக்கேடுகளை ஒரு மாநில அரசு நினைத்தாலும் சரி செய்ய முடியும்,
  //

  முற்றிலும் தவறான, பொய் வாதம்

  வழக்கம் போல் புரட்டு ஆசாமி வவ்வால் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்

  ReplyDelete
 29. //நன்றாக படித்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நிறைய மதிப்பெண் வாங்கி, பொறியியல் நுழைவுத்தேர்விலும் அதிக மதிப்பு வாங்கி ஐஐடியில் படிக்க இடம் கிடைக்கும் என்று ஆசையோடு கலந்தாய்வு செல்லும்போது "இடஒதுக்கீடு முறைப்படி குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஐஐடியில் படிக்க இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று கேள்விப்பட்டு வருந்தி நிற்கும் அவனிடம் போய் கேளுங்க..என்ன தண்டனை கொடுக்கலாம்னு..நல்லா விளக்கமா சொல்லுவான்..//

  கேட்டு சொல்லுங்களேன்

  ஐ.ஐ.டி போன்ற நிலையங்களில் தலித்களுக்கு கிடைக்க வேண்டிய இடப்பங்கீட்டை மோசடி செய்பவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்று கேட்டுக் கூறுங்களேன்

  ReplyDelete
 30. தம்பி அரங்கசாமி,

  1. இங்கே லக்கி எழுதிய இப் பதிவு அவர் சார்ந்திருக்கிற கட்சியின் கொள்கைப் பிரச்சாரம் என்பது எனக்குத் தெளிவாகவே புரிகிறது.

  2. வவ்வால் கூறியிருப்பதுபோல் அம்பேத்காரின் கொள்கை/ செயல்வெற்றிகளே தலித்துகளுக்கு இந் நன்மைகள் கிட்டக் காரணம் என்பதும் சரி.

  3. அம்பேத்காரின் வழிவகை எந்த மாநிலத்தில் அதிகப் பயன் விளைவித்திருக்கிறது என்று பார்த்தால், தமிழ்நாட்டில், அதற்கு திராவிட உணர்வுதான் காரணம் என்று எண்ணுகிறேன். (இங்கே காமராஜர், எம்.ஜி.ஆர் இருவரையும் பெரியார் மீது மரியாதை உள்ளவர்கள் என்னும் அடிப்படையில் கணக்குக் கூட்டுகிறேன்.)

  3. இன்றும் தமிழக அரசு அலுவலகங்களில் ஒரு தலித்துக்குப் பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளில் தானே வருமாறு ஏற்பாடு செய்தது (அதை யாராலும் மாற்றமுடியாமற் செய்ததும்) கருணாநிதி என்று சொல்லப் படுகிறது.

  4. இதெல்லாம் போகட்டும், திராவிடக் கட்சிகளின பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் தங்கள்தங்கள் ஜாதிகளை உயர்த்திக் கொண்டால் அதற்கு ஏன் பெரியாரை, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் கொள்கையைப் பின்பற்றி, 'நாயக்கர்' என்று விளிக்க வேண்டும்? முல்லைப் பெரியாறு கேரளாவுக்குப் போனதில், காமராஜர், எம்.ஜி.ஆர் பங்கு இன்னின்ன என்று பார்த்தால், அப்படி 'நாயக்கர்' சாதிக்காகப் பெரியார் செய்தது என்ன?

  இங்கே, திராவிடம் என்னும் universal-கு உள் தமிழ்நாடு என்னும் particular பற்றியே பேசுகிறோம்.

  //திராவிட இயக்கம் தலித்களை என்றும் பிறராகவே பார்த்தது.//

  என்றால் எந்த இயக்கம் தலித்களை என்றும் தமராகவே பார்த்தது? அல்லது இனிமேலாவது பார்க்கும்? இல்லாத சர்க்கரைக்கு இலுப்பைப் பூ தாழ்வில்லை அல்லவா?

  என் புரிதல்களில் தவறுகள் இருந்தால், அருள்கூர்ந்து, தெளிவாக்கும்படி வேண்டுகிறேன்.

  ReplyDelete
 31. அரங்கசாமி, திராவிட இயக்கம் தலித்துகளை வேறாகவே கருதுகிறதா என்பது விவாதத்திற்கு உரியது. அது உண்மைதான் என்று கருத ஆதாரங்களையும் சிலர் எளிதில் கொடுக்க முடியும். மறுப்பவர்களும் தம் விவாதத் திறமையால் மறுக்க முடியும். ஆனால் தலித்துகள் நிலை முன்னேறி இருப்பதற்கு திராவிட இயக்கமே பெரும்பகுதி சொந்தம் கொண்டாட முடியும். இதை பார்ப்பனர்களும் இட ஒதுக்கீட்டால் தம் அநியாயமான சமூக பிரதிநிதித்துவம் குறைந்தவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதில் நீங்கள் பார்பனரா அல்லது இரண்டாவது வகையா?

  ReplyDelete
 32. ஏன் எல்லோரும் இப்படி புரியாமல் பேசுகிறீர்கள் திராவிட இயக்கங்கள் அதாவது திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் ஆதி திராவிட நலத்துறை என்ற ஒரு இலாகாவிற்கு தலித் ஒருவரை அமைச்சராக நியமிப்பார்களே அதை விட தலித்களுக்கு என்ன செய்து விட முடியும்.அதுக்கும் ஒரு அடிமை தலித்தை தேடி புடிப்பீங்களேடா அங்கதாண்டா நிக்குது திராவிடம்.இருபது சதம் மக்கள் தொகையில் உள்ளவர்க்கு ஒரே ஒரு துறையை அளிப்பது தான் திராவிடம். தெலுங்கன் கன்னடன் எல்லாம் இங்கே அரசியல் பண்ண தோதாக கண்டுபிடித்த வார்த்தை தான் திராவிடம்.

  ReplyDelete
 33. //3. இன்றும் தமிழக அரசு அலுவலகங்களில் ஒரு தலித்துக்குப் பதவி உயர்வு ஐந்து ஆண்டுகளில் தானே வருமாறு ஏற்பாடு செய்தது (அதை யாராலும் மாற்றமுடியாமற் செய்ததும்) கருணாநிதி என்று சொல்லப் படுகிறது.
  //

  உண்மை தான் சார்

  ஐந்து ஆண்டு மட்டுமல்ல

  ஐந்தில் ஒன்று

  எந்த பதவி என்று எடுத்துக்கொண்டாலும், பதவி உயர்வு மூலம் பெறும் பதவி உட்பட, அதில் ஐந்தில் ஒருவர் தலித்தாக இருப்பார்கள், இதற்கு காரணம் கலைஞரே

  ReplyDelete
 34. மானிட மருத்துவர் புருனோ அவர்களே,

  எங்கடா இன்னும், ஆம்/இல்லைனு பதில் சொல்லி அசத்தும் புருனோ வரக்காணோமேனு பார்த்தேன் :-))

  //வழக்கம் போல் வவ்வால் உளறிக்கொட்டுகிறார்

  //என்ன ஒரு திராவிட கண் உங்களுக்கு, 1912 இல் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கவில்லை, அம்பேத்கர் அரசியல் சட்டம் இயற்றி இருக்கவில்லை. அம்பேத்கர் மட்டும் 18% இட ஒதுக்கீடு என்று சட்டம் போட்டிருக்கவில்லை எனில் கல்வி நிலையில் எந்த மாற்றமும் வந்திருக்காது.//

  18 சதம் என்பது தமிழக சட்டம்

  இது தெரியாத மோசடி பேர்வழி வவ்வால் அவர்களே//

  சரிங்க, அம்பேத்கர் இட ஒதுக்கீடு சட்டமே போடவில்லை சரியா :-))

  18% சதவீதம்னு நான் சொன்னது தப்பு சரியா,

  18% இடஒதுக்கீடு தமிழ் நாட்டில் இருப்பதுனு நீங்க சொன்னது மிகசரியேனு ஏற்றுக்கொள்கிறேன்,

  ஆனால் மத்திய அரசு இட ஒதுக்கீடு 15% தாழ்த்தப்பட்டோருக்கும், 7.5% பழங்குடியினருக்கும் என மொத்தமாக 22.5% தலித் இட ஒதுக்கீடாக வைத்துள்ள போது தமிழ்நாட்டில் 18% கொடுப்பது அதிகமா ,குறைவா நீங்களே முடிவுக்கு வாங்க.
  central govt reservation
  உங்களுக்கு உண்மையில் விவரம் தெரிந்து இருந்தால் சரியான விவரம்ம் கொடுத்து இருக்கலாமே? என்னமோ தமிழ்நாட்டில் மிக அதிகம் இருப்பது போல கூச்சல் ஏன்?

  அப்புறம் உங்க ஆமாம் இல்லை போன்ற பதிலுக்கு எல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது.

  முட்டை போட்டார் தான் ஆனால் அதுக்கு சத்துணவு திட்டம் என்ற ஒன்று செயல்பாட்டில் இருந்தா தானே முடியும், அதை ஆரம்பித்தது யாரு? கலைஞர் என்ன முட்டை போட்ட ஆண்டு தான் முதன் முதலாக முதல்வர் ஆனாரா?

  உங்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை என ஒன்று இருப்பதும் தெரியவில்லை, அவர்கள் மாநில உயர்கல்வி துறையுடன் அடிக்கடி கலந்தாலோசிப்பார்கள் என்பதும் தெரியவில்லை.

  மண்டல வாரியாக அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் உயர்கல்வி அமைச்ச்சர், மத்திய அமைச்சர் என கலந்துக்கொண்டு உயர்கல்வி மேம்பாடு குறித்து பேச வேண்டும்,அப்போது பிரச்சினைகளை எழுப்பலாம்.நம் முன்னால் உயர்க்கல்வி அமைச்சர் அவரது பொறியியல் கல்லூரிக்கு மட்டுமே அமைச்சராக இருந்தார், அவர் டெல்லியில் மீட்டிங்க என்றால் அதிகாரிகளை மட்டுமே அனுப்புவார், ஆனால் அவருக்கு வேலை இருந்தால் ஓடுவார்.இப்போது அவர் கல்லூரியும் சிக்கலில்.

  அதுவும் திமுக போன்ற கூட்டணி அமைச்சர் எனும் போது ஏன் வலியுறுத்தி பேசி இருக்கக்கூடாது,இலங்கை தமிழர் பிரச்சினைக்கே அக்கரைக்காட்டாதவர்கள் இதற்கா காட்டப்போகிறார்கள்.

  ReplyDelete
 35. //முல்லைப் பெரியாறு கேரளாவுக்குப் போனதில், காமராஜர், எம்.ஜி.ஆர் பங்கு இன்னின்ன//ராஜ சுந்தரராஜன் முழுமையாக விளக்கினால் நன்று.அதற்குள் என்ன பொடி இருக்கிறது.

  ReplyDelete
 36. //சரி அதே ஐ.ஐ.டி இல் கழிவரை சுத்தம் செய்தல்,குப்பை அள்ளுதல், பராமரிப்பு பணி என நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கு, அதில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீங்கள் கேட்டுப்பெறலாம். அதிலும் சம வாய்ப்பு வேண்டாமா உங்களுக்கு :-))//


  அப்படியா!!.அவர்கள் படிக்க வேண்டாம் என்று கடந்த 50 ஆண்டுகளாக எந்த அரசாவது தடை செய்ததா? அவர்கள் கல்வி பயிலவில்லை என்றால், அவர்கள் துப்புரவு பணியாளர் வேலைக்கு செல்வதென்றால் அதற்கும் பார்பனர்கள் தான் காரணமா?? நல்ல காமெடி!!


  கழிவறை சுத்தம் செய்வது ஒன்றும் கேவலமான தொழில் இல்லை.உங்கள் பார்வை வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.  ஒரு நாட்டின் வளங்கள் எல்லாக்குடிமக்களுக்கும் பொதுவானது எனில் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பகிர தயாரா?


  இட ஒதுக்கீடு மூலம் பொருளாதார, சமூக அந்தஸ்தில் உயர்ந்துவிட்டவர்கள் "இனி என் மகன்/மகள் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க மாட்டார்கள்" என்று சொல்ல தயாரா?

  ReplyDelete
 37. மாறுபட்ட கருத்துடையோரையே இப்படி ஏசும் மருத்தவரைய்யா தன்னிடம் அரசு மருத்துவமனையில் இலவச மருத்தவம் பார்க்க வரும் நோயாளிகளையெல்லாம் எப்படி நடத்துவார் என நினைத்து பார்க்கவே கலக்கமாயுள்ளது.

  ReplyDelete
 38. சிந்திப்பவன்8:40 AM, March 01, 2012

  கி.பி.2012 ஆம் ஆண்டிலும்,

  கருணா திராவிடர்களின் தலைவர்,
  திராவிட இனத்திற்கும்,
  தமிழ் மொழிக்கும் அவர்
  தொண்டு புரிந்தார்/புரிகிறார்/புரிவார் என்றும்,

  பார்பனர்கள், தமிழர் அல்லர்; மாறாக திராவிடர்களின் விரோதிகள் என்றும்,

  நம்புவர்கள்,

  வடிகட்டிய முட்டாளாக இருக்கவேண்டும்

  சொல்லிதிரிபவர்கள்,

  கடைந்தெடுத்த அயோக்கியனாக இருக்கவேண்டும்.

  இதில் நீங்கள் எந்த பிரிவு YK?

  ReplyDelete
 39. இந்த விளக்கமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அப்படியே இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க..
  திராவிடனாய் இருப்பவன் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கலாமா ?
  அப்படியே இருந்தாலும் அவன் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா ?
  அப்படியே திருடர்கள் மதத்தில் இருந்துவிட்டாலும் பண்டிகை தினங்களை விடுமுறை நாளாக கொண்டாட வேண்டுமா ?
  இந்த கோட்பாடுகள் எல்லாம் நம் தலை முறைக்கு மட்டுமா ?
  நம் பேரபிள்ளைகளுக்காக ஆங்கிலத்தையும் திராவிட மொழிகளுள் ஒன்றாக இணைத்து கொள்ளலாமா ?

  ReplyDelete
 40. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யபடுகிறது.தமிழகத்தில் பழங்குடியின மக்கள் குறைவு.அதனால் அவர்களுக்கும் சேர்த்து 18 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது.தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெரும் மாணவர்கள் உள்ளதால் பழங்குடியினர் இடம் பெரும் வாய்ப்புகள் குறைவு என்று பழங்குடியினர் முறை இட்டதால் அவர்களுக்கு தனியாக ஒரு சதவீதத்தை வழங்கியவர் கலைஞர்.அதன் மூலம் பல பழங்குடியினர் வாய்ப்பு பெற்றனர்.
  அருந்ததியினர் தாழ்த்தப்பட்ட ஒதுக்கீட்டில் அதிக இடங்கள் பிடிக்க முடியவில்லை என்று வந்த கோரிக்கைக்காக அவரகளுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடும் கலைஞர் ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
  பிறபடுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு இடம் குறைவாக தான் கிடைக்கிறது.முதலியார்,கொங்கு வெள்ளாளர் போன்றோருடன் அவர்களை இணைத்து வழங்கியதால் அவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைக்கிறது என்ற கோரிக்கைக்கையை ஏற்று MBC க்கு 20 சதவீதம் வழங்கியவரும் கலைஞர் தான்.
  கலைஞர் அவர்கள் தலைவராக வரக்கூடிய சூழ்நிலையை(அவர் சாதியினர் மிக குறைந்த அளவு)உருவாக்கியதே திராவிட இயக்கத்தின் பெரிய வெற்றி.பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிறபடுத்தப்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர் எனபது எல்லாம் அரசு ஏற்படுத்தும் குழுக்கள்.அவைகளில் பல ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு மாறுவதும் சகஜம்.ஒரு சில சாதிகள் சில மாவட்டங்களில் MBC சிலவற்றில் SC /ST எனபது கூட உண்டு.குறவர்,வண்ணார் ,கேப்மாரி எல்லாம் mbc தான்.
  பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை சார்ந்த(கலைஞரின் சாதியில் நன்றாக பாடும்,அழாக இருக்கும் பெண்களை பிராமணர்கள் பல நூற்றாண்டுகளாக தேவதாசியாக ஆக்கி அவர்களுக்கு வேலைக்காரியாக வைத்து கொள்வார்கள்.கலைஞரின் அத்தையை ஜெமினி கணேசனின் தாத்தா அவர் மனைவி இறந்ததால் குழந்தைகளை பார்த்து கொள்ள அப்படி வைத்து கொண்டார்.அவருக்கு பிறந்தவர் தான் தேவதாசி ஒழிப்பு சட்டத்திற்கு போராடிய முத்துலட்சுமி ரெட்டி.எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் தந்தை கூட யாரோ ஒரு அய்யர் தான்.ஆனால் அவர்கள் சாதி வராது.பால சரஸ்வதியை வைத்து இருந்தவர் முதல் நிதி மந்திரி ஆர் கே சண்முகம் செட்டியார் )ஒருவர் தலைவராக வருவது,பல முறை முதல்வராக ,பல கோடி மக்களின் தலைவராக இருப்பது மாயாவதியின் வெற்றியை விட எவ்விதத்தில் குறைந்தது.அவருக்காவது இருவது சதவீதம் உள்ள சாதி இருக்கிறது.
  கலைஞரை ஆதிக்க சாதி போல் காட்டுவதில் திராவிட எதிர்ப்பாளர்கள் வெற்றியடைந்திருப்பது வேதனை அளிக்கிறது.

  ReplyDelete
 41. அண்ணா துறையை எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார் ஆதரவாளர்கள் . அண்ணா துரை குடும்பத்தினர் பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று சுவற்றில் எழுதி,பிரச்சாரம் செய்தது அனைவருக்கும் தெரியும்.பெரிய மோளமும் சின்ன மோளமும் சேர்ந்து ஆட்டம் போடுகிறார்களா என்று பாரதிதாசன் அவர்களை திட்டியதும் வரலாற்றில் உண்டு.அவர்களை இன்று ஆதிக்க சாதி தலித்களை அழிக்க,வன்கொடுமை செய்த சாதி என்று எழுதுவது அறியாமை.சாதியின் பலத்தில் தான் திராவிட இயக்கம் வளராத மாநிலங்களில் எல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள்.எண்ணிகையில் சிறிய சாதியில் பிறந்தாலும் ,வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் சாதிகளை கடந்தவர்கள் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் ஆனார்கள்.அவர்களை பல கோடி மக்கள் சாதிகளை கடந்து வெறியோடு ஆதரிக்கிறார்கள்,முரட்டு பக்தர்களாய் இருக்கிறார்கள்.அதற்க்கு காரணம் திராவிட இயக்கம்
  இங்கு ஒரு நண்பர் மேற்கு வங்காளம் பற்றி எழுதி இருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.தலித் மக்களையும் இஸ்லாமியர்களையும் சேர்த்தால் அங்கு ஐம்பது சதவீதத்தை தாண்டும்.பிற்படுத்தப்பட்ட மக்கள் என்றே பிரிவே வெகு காலம் அங்கு உருவாக்காமல் (பல இடைநிலை சாதிகள் இருந்தாலும்) அனைத்து இடங்களையும் பிராமண கயஸ்த் சாதிகள் பிடித்து வைத்து கொண்டிருக்கிறார்கள்.
  மொத்தம் உள்ள எம் எல் ஏ க்களில் மூன்றில் ஒரு பங்கு பிராமணர்.மந்திரிசபையில் பாதி மற்றும் முக்கிய துறைகள் அனைத்தும் அவர்களிடம் தான்.பிராமணர்,கயஸ்த் தவிர்த்த பெரும்பான்மை மக்களில் இருந்து கலை,கல்வி,அரசியல்,தொழிற்சங்க தலைவர்கள்,மாநில மத்திய வேலை வாய்ப்பு என்று எந்த துறையை எடுத்தாலும் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

  சாதி கடந்த திருமணங்கள்,துணை வேந்தர்களில் இருந்து கடைநிலை ஊழியர் வரை எந்த எந்த சாதிகளிடம் எவ்வளவு பதவிகள், தனியார் துறை,கலை,விளையாட்டு,எழுத்தாளர்கள் என்று பலவிதமான தொழில்களில் எல்லா சாதிகளில் இருந்தும் உருவாகும் நிலை போன்றவற்றை ஆராய்ந்தால் திராவிட இயக்கத்தின் தாக்கம் புரியும்.

  ReplyDelete
 42. சில ஆண்டுகளுக்கு முன் தந்தையின் சாதி தான் குழந்தைகளுக்கு என்று கூறிய உச்ச நீதிமன்றம் இப்போது பெற்றோரில் யார் சாதியை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.இதை 1975 ஆண்டிலேயே அரசாணையாக கலைஞர் அரசு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  சாதிமறுப்பு திருமணங்களுக்கு தங்க காசும் காசோலையும் பரிசாக வழங்கும் வழக்கம் துவங்கியதும் தமிழகத்தில் தான்.சாதி மறுப்பு திருமணம் புரிந்து கொண்ட இருவரில் ஒருவர் SC /ST ஆக இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உண்டு.
  இவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடும் இருந்தது.சம்பத் என்ற பிராமண சமூகத்தை சார்ந்த நீதிபதி இந்த சாதிமறுப்பு திருமண சிறப்பு ஒதுக்கீட்டில் oc -sc bc -sc mbc -sc விட உயர்ந்தது .அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறிய கூத்தும் நடந்தது.இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இந்த ஒதுக்கீட்டையே நீதிமன்றம் 2003 இல் ரத்து செய்தது.ஜெயலலிதாவின் ஆலோசகர்களுக்கு இது பிடித்தமான விஷயமாக இருந்ததால் அவர்கள் மேல்முறையீடு செய்யாமல் ஆனந்தமாக ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார்கள்
  http://indiankanoon.org/doc/425605/
  1st Petitioner S.C. F.C. (a) 2nd Petitioner S.C. B.C. (b) 3rd Petitioner S.C. M.B.C. (c) 4th Respondent F.C. S.C. (a) 5th Respondent S.C. F.C. (a) 6th Respondent F.C. S.C. (a) 7th Respondent S.C. F.C. (a) 8th Respondent S.C. F.C. (a) 9th Respondent F.C. S.C. (a) 10th Respondent S.C. F.C. (a)

  10. Mr. V. Prakash, learned counsel appearing for the second petitioner, led the arguments. He submits that 12 seats in Medical Course were carved out as a special category for the children born of inter-caste marriages and once the students come withi that category, there cannot be further categorisation and that all the children of inter-caste marriages opted under the special category are entitled to be selected in accordance with the marks and not on the basis of any preference. He further submit s that there is no intelligible differentia for giving preference to one category over the other and such categorisation infracts equality and equal protection clauses enshrined in Article 14 of Indian Constitution.

  ReplyDelete
 43. http://www.tn.gov.in/gosdb/deptorders.php?depid=29


  பெரியாரும் இட ஒதுக்கீட்டுக்காக /சாதி ஒழிப்பிற்காக பாடுபட்டார்.போராடினார்.அவர் பொதுவாக சாதிவேறுபாடுகள்,ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தாலும் குறிப்பாக சூத்திரர்களுக்காக போராடினார்.
  அம்பேத்காரும் இட ஒதுக்கீட்டுக்காக.சாதி ஒழிப்பிற்காக பாடுபட்டார்.போராடினார்.இவரும்பொதுவாக சாதிவேறுபாடுகள்,ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தாலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடினார்.
  அவரும் இந்து மதத்தை எதிர்த்தார்.இவரும் எதிர்த்தார்.அம்பேத்கரும் கிருஷ்ணனும் ராமனும் ஒரு புதிர் புத்தகத்தை எழுதினார்

  ஒரு பேச்சுக்கு இந்து மதத்தை விட்டு விலகுகிறேன் என்று சொல்லாமல் பேசுங்கள்,என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் என்பதை கூட ஒத்து கொள்ள மறுத்தவர் அவர்.

  9:] I think these remarks apply equally to the Brahmins of India, and one can say with equal truth that if a man who becomes a Pope has no wish to become a revolutionary, a man who is born a Brahmin has much less desire to become a revolutionary. Indeed, to expect a Brahmin to be a revolutionary in matters of social reform is as idle as to expect the British Parliament, as was said by Leslie Stephen, to pass an Act requiring all blue-eyed babies to be murdered.
  If [the] Hindu Raj does become a fact, it will, no doubt, be the greatest calamity for this country. No matter what the Hindus say, Hinduism is a menace to liberty, equality and fraternity. On that account it is incompatible with democracy. Hindu Raj must be prevented at any cost. But is Pakistan the true remedy against it? What makes communal Raj possible is a marked disproportion in the relative strength of the various communities living in a country.

  http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/ambedkar_partition/513.html#part_6

  But it is right to ask if the Musalmans are the only sufferers from the evils that admittedly result from the undemocratic character of Hindu society. Are not the millions of Shudras and non-Brahmins, or millions of the Untouchables, suffering the worst consequences of the undemocratic character of Hindu society? Who benefits from education, from public service and from political reforms, except the Hindu governing class—composed of the higher castes of the Hindus—which form[s] not even 10 per cent. of the total Hindu population? Has not the governing class of the Hindus, which controls Hindu politics, shown more regard for safeguarding the rights and interests of the Musalmans than they have for safeguarding the rights and interests of the Shudras and the Untouchables? Is not Mr. Gandhi, who is determined to oppose any political concession to the Untouchables, ready to sign a blank cheque in favour of the Muslims? Indeed, the Hindu governing class seems to be far more ready to share power with the Muslims than it is to share power with the Shudras and the Untouchables. Surely, the Muslims have the least ground to complain of the undemocratic character of Hindu society.
  பெரியார் இதை விட பெரிதாக ஒன்றும் திட்டவில்லை.அதிகம் படித்தவர் என்பதால் அம்பேத்கார் ஆணித்தரமாக செய்ததை ,எழுதியதை பெரியார் பாமரர்களுக்கு கடவுள் மேல் இருந்த பயம்,அதை பயன்படுத்தி அவர்கள் அடிமைகளாக வாழ்வதை மாற்றுவதற்காக ஜனரஞ்சகமாக கடவுள் நிந்தனை,பிரசாரங்கள் செய்தார்.
  அம்பேத்கர் வேறு என்ன சாதிகளை எதிர்த்தார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  ReplyDelete
 44. //ஆனால் மத்திய அரசு இட ஒதுக்கீடு 15% தாழ்த்தப்பட்டோருக்கும், 7.5% பழங்குடியினருக்கும் என மொத்தமாக 22.5% தலித் இட ஒதுக்கீடாக வைத்துள்ள போது தமிழ்நாட்டில் 18% கொடுப்பது அதிகமா ,குறைவா நீங்களே முடிவுக்கு வாங்க.//

  மோசடி பேர்வழி வவ்வால் அவர்களே

  தமிழகத்தில் பழந்குடியினருக்கு 1 சதம் இடப்பங்கீடு உண்டு
  அது மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது

  இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் பழங்குடியினரின் மக்கள் தொகை 7.5 சதம் என்பதால் மத்திய அரசு 7.5 சதம் வழங்குகிறது

  தமிழகத்தில் 1 சதம் என்பதால் 1 சதம் வழங்கப்படுகிறது

  அது தவிர

  அட்டவனை பிரிவினருக்கு (தலித் / scheduled castes) தமிழகத்தில் வழங்கப்படுவது 18 சதம்

  15 பெரிதா, 18 பெரிதா

  ReplyDelete
 45. //உங்களுக்கு உண்மையில் விவரம் தெரிந்து இருந்தால் சரியான விவரம்ம் கொடுத்து இருக்கலாமே? என்னமோ தமிழ்நாட்டில் மிக அதிகம் இருப்பது போல கூச்சல் ஏன்?
  //

  கொடுத்து விட்டேன்

  ReplyDelete
 46. //முட்டை போட்டார் தான் //

  அதைத்தான் கூறினேன்

  //ஆனால் அதுக்கு சத்துணவு திட்டம் என்ற ஒன்று செயல்பாட்டில் இருந்தா தானே முடியும், அதை ஆரம்பித்தது யாரு?//

  காமராஜர் என்று கூறினேனே


  //கலைஞர் என்ன முட்டை போட்ட ஆண்டு தான் முதன் முதலாக முதல்வர் ஆனாரா?//

  சத்துணவை அதி சத்துணவாக ஆக்கியது கலைஞர் என்ற உண்மையை கூறியதற்கு நன்றி

  ReplyDelete
 47. //உங்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை என ஒன்று இருப்பதும் தெரியவில்லை//
  எனக்கு தெரியும்

  //அவர்கள் மாநில உயர்கல்வி துறையுடன் அடிக்கடி கலந்தாலோசிப்பார்கள் என்பதும் தெரியவில்லை.//
  எனக்கு தெரியும்

  //மண்டல வாரியாக அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் உயர்கல்வி அமைச்ச்சர், மத்திய அமைச்சர் என கலந்துக்கொண்டு உயர்கல்வி மேம்பாடு குறித்து பேச வேண்டும்,அப்போது பிரச்சினைகளை எழுப்பலாம்.//
  ஆமாம்

  //நம் முன்னால் உயர்க்கல்வி அமைச்சர் அவரது பொறியியல் கல்லூரிக்கு மட்டுமே அமைச்சராக இருந்தார், அவர் டெல்லியில் மீட்டிங்க என்றால் அதிகாரிகளை மட்டுமே அனுப்புவார், ஆனால் அவருக்கு வேலை இருந்தால் ஓடுவார்.இப்போது அவர் கல்லூரியும் சிக்கலில்.

  அதுவும் திமுக போன்ற கூட்டணி அமைச்சர் எனும் போது ஏன் வலியுறுத்தி பேசி இருக்கக்கூடாது,இலங்கை தமிழர் பிரச்சினைக்கே அக்கரைக்காட்டாதவர்கள் இதற்கா காட்டப்போகிறார்கள்.//

  வழக்கம் போல் உங்கள் உளறுகிறீர்கள்
  விவாதத்திற்கு தொடர்பில்லாத கருத்துக்கள்

  ReplyDelete
 48. //மாறுபட்ட கருத்துடையோரையே இப்படி ஏசும் மருத்தவரைய்யாகருத்த்//

  பொய் குற்றச்சாட்டு

  மாற்று கருத்து என்ற பெயரில் பொய்யும் புரட்டும் வராமல் உண்மை வந்தால் மாறுபட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்

  ஆனால்

  மாற்று கருத்து என்ற பெயரில் பொய்யும் புரட்டும் வந்தால் அதை எதிர்ப்பது என் கடமை


  //தன்னிடம் அரசு மருத்துவமனையில் இலவச மருத்தவம் பார்க்க வரும் நோயாளிகளையெல்லாம் எப்படி நடத்துவார் என நினைத்து பார்க்கவே கலக்கமாயுள்ளது.//

  பொய் குற்றச்சாட்டின் அடிப்படை அமைந்த கற்பனை பயம்

  ReplyDelete
 49. மானிட மருத்துவர் புருனோ அவர்களே,

  புருனோ கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே கண்ணை மூடியக்கொண்டாகி விடுமா :-))
  அது எப்படி உங்களால் மட்டும் கூசாமல் புழுக முடியுது , பொதுவாக தலித் என்றால் sc/st பிரிவினரையே குறிக்கும் , இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.எனவே நான் தலித்துகள் இட ஒதுக்கீடு என்று மொத்தமாக குறிப்பிட்டே மத்திய ,மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தை ஒப்பீடு செய்ய்கிறேன்.

  ஒரு சொல்லுக்கே இத்தனை புரட்டுகள் செய்பவரை இன்று தான் பார்க்கிறேன்.
  தலித்கள் யார்?
  தலித் என்ற சொல் மொத்தமாக தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினத்தவரையே குறிக்கும், அதன் அடிப்படையில் மொத்த ஒதுக்கீட்டின் விகிதம் எனப்பார்த்தால் குறைவாக தானே இருக்கு. அது மத்திய அரசு ஒதுக்கீடு , என சொல்வதாக இருந்தால் மத்திய அரசின் கொள்கைப்படி எல்லா ஒதுக்கீடும் 50% குள் இருக்க வேண்டும் என்றப்போது 65% ஆக ஆக்கி தனிச்சட்டம் போட்டதே தமிழக அரசு அது யாருக்காக?

  ஆனால் மத்திய அரசே மொத்த தலித் ஒதுக்கீடாக 22.5% வைத்திருக்கும் நிலையில் அதை மாநிலத்தில் கொடுக்க சட்ட ரீதியாக மாநில அரசுக்கு தடையே இல்லை, ஆனால் மெனக்கெட்டு ஒரு கணக்கு காட்டி 18 +1 =19 சதவீதம் என கொடுக்கும் ஒரு அரசு தலித்களின் முன்னேற்றத்திற்கு பாடுப்படுவதாக எப்படி பெருமை பட்டுக்கொள்ள முடியும்.

  ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பே இப்போது தான் எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க பயன்ப்படும் புள்ளிவிவரங்கள் கூட 50 ஆண்டுகளுக்கு முந்தைய அடிப்படையில் என்றே நினைக்கிறேன்.

  உண்மையில் மாநில அரசு தலித்துகள் மீது அக்கரையுள்ள அரசாக இருந்திருப்பின் மத்திய அரசு கொடுக்கும் மொத்த 22.5 விகிதத்தினை அமல்ப்படுத்தி இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை. அதன் பின் உள் ஒதுக்கீடுகளை செய்திருக்கலாம்.

  அப்புறம் நான் போட்ட செய்திகளையே காபி & பேஸ்ட் செய்து போட்டுவிட்டு நீங்கள் ஆம் என்று சொல்லிக்கொண்டால் நீங்கள் சொன்னதாக ஆகி விடாது :-))

  ஐ ஐ டி இட ஒதுக்கீட்டினை மாநில அரசின் சார்பாகவும் சரி செய்யலாம் என்று சொன்ன போது இல்லை என்று சொல்லிவிட்டு ஆலோசனைக்கூட்டத்தில் பேசலாமே என்றால் அதற்கும் ஆமாம் போடுகிறீர்கள் , முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே.

  அதுவும் சென்னையில் ஐ ஐ.டி இருப்பதால் அங்கு செய்ய வேண்டிய சீர்சிருத்தங்கள் குறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் செய்யவில்லை என்பதே நான் சொல்ல வந்தது.

  அடுத்தவர்களை திட்டினால் பயந்துவிடுவார்கள் அல்லது அவர்களும் சண்டைக்கு வருவார்கள் விவாதத்தை திசை திருப்பிவிடலாம் என மலிவான எண்ணம் கொண்டவர் நீங்கள் என்பதை நான் அறிவேன்.

  நான் எல்லாம் ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்பதாலேயே மென்மையாக உங்களை கையால்கிறேன் :-))

  ReplyDelete
 50. periya(v)arin sinthanai annaa=vaal semmaipaduththappattu kalaignaraal nadaimuraippaduththappattu, pala laksham per payanadainthu varuvathe unmai.
  itharku samskrutham padiththirunthaalthaan doctorukku vinnappikka mudiyum enra nilai irunthathu(thiruchchy siva MABL,MP)doctor!!!ithai thelivu(uruthi or maruppu)paduththungalen!

  ReplyDelete
 51. //* ஈவே ராமசாமி நாய்க்கர் *//

  1926இல் நாயக்கரை தூக்கி எறிந்த பெரியாரை நாயக்கர் என சொல்பவர்கள் பார்ப்பனர்களின் வாந்தியையும், மலத்தையும் உணவாக உட்கொள்பவர்கள்... தாகத்திற்கு பார்ப்பனர்களின் மூத்திரத்தை குடிப்பவர்களே...

  ReplyDelete
 52. திராவிட இயக்கம் நூற்றாண்டு கொண்டாடும் போது... சமூக நீதிக்கான இட பங்கீட்டிற்கு பாடுபட்ட திராவிட இயக்கங்களை பாராட்ட வேண்டும்... அதே நேரம்... அந்த இடபங்கீட்டை பயன்படுத்தியவர்களும், அதிகார வர்க்கமானவர்களும்... ஒடுக்கப்பட்ட, சமூகத்தில் பிற்படுத்தபட்ட மக்களை மறந்து நவீன பார்ப்பனர்கள் ஆகி கோயில் குளம் என பொறுக்கி கொண்டு... சுயநல முண்டங்களாக திரிவதை காணும் போது திராவிட இயக்க சீர்திருத்தங்கள்... பெரிய சமூக மாற்றத்திற்கு வழி செய்யவில்லை... பார்ப்பனீயத்திடம் மக்களை விடுதலை செய்ய வேண்டி தொடங்கபட்ட திராவிட இயக்கம்... அதிகார போதை கொண்டு... பார்ப்பன இந்தியத்திற்கு அடிமையானதும் சிந்திக்க வேண்டியது... இப்போதும் நாம் அறிய வேண்டிய செய்தி... திராவிட இயக்கம்... அதன் இலக்கை நோக்கி பயணிக்காமல்... திசை மாறி போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது...

  ReplyDelete
 53. கி.பி 1888 இல் எழுதப்பட்ட திராவிடன் என்ற பொத்தகத்தில் பக்கம் 14 இல் ஒப்பர்ட் கூறுவது: இந்தியாவில் மள்ளர் அல்லது பள்ளர் இவர்களின் ஒருமூலத்திலிருந்து வந்தவர்கள் மட்டுமே தான திராவிடர் ஆவர்

  ReplyDelete