23 பிப்ரவரி, 2012

என்கவுண்டரை எதிர்ப்போம்!

தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.

தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சென்னையில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஐவர் கொலையை எடுத்துக் கொள்வோம். வங்கிக் கொள்ளைகளுக்குப் பிறகு ‘துப்பு’ கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ‘வீடியோ க்ளிப்’ கிடைக்கிறது. அதில் இருப்பவன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அப்படம் வினியோகிக்கப்படுகிறது. துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடு இரவில் யாரோ ஒரு முக்கிய அதிகாரிக்கு அனாமதேயமாக ஒரு அழைப்பு வருகிறதாம். அந்த அழைப்பு மூலமாக அடையாளம் காட்டப்பட்டவன் மறைந்திருக்கும் இடம் தெரியவருகிறதாம். துப்பாக்கிகளோடு சுற்றி வளைத்தார்களாம். எச்சரிக்கை விடுத்தார்களாம். அங்கிருந்து பொதுமக்களை சுடுவோம் என்று பதில் வந்ததாம். யோசிக்காமல் இவர்கள் சுட்டுத் தள்ளினார்களாம். உள்ளேப் போய் பார்த்தால் ஐவர் மரணமடைந்திருக்கிறார்களாம். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமாம்.

அய்யா, அடையாளம் காட்டப்பட்டவன் ஒருவன் தான். மீதியிருக்கும் நான்கு பேரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை எப்படி காவல்துறை ’ஸ்பாட்’டிலேயே முடிவுகட்டி, துப்பாக்கிச்சூடு வரை போனது? கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா? சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும்? ஒருவேளை ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப்பகல் வேளையில் பொதுமக்களின் தலையில் இவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருந்தால் இந்தக் கதை வலுவாக இருந்திருக்கும்.

தமிழகக் காவல்துறை, லாஜிக் மீறாமல் என்கவுண்டர் கதைகள் எழுதக்கூடிய நல்ல புனைவெழுத்தாளர் ஒருவரை உடனடியாக பணிக்கு அமர்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையர்களை உயிரோடு பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். காவல்துறை தீர்ப்பில் மரணத்தண்டனை ஐவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அச்சு அசலான சட்டமீறல். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவாக இருப்பின் இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைவழக்கு தொடரப்பட வேண்டும்.

தமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம். அதை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்பது அநியாய கொடூரம். சகிப்புத்தன்மை மிகுந்தவர்களாக அறியப்பட்ட தமிழர்கள், சவுதி அரேபியர்களாக பரிணாமம் அடைந்து வருகிறார்கள்.

தொடர்புடைய பதிவு : கொலை செய்ய விரும்பு!

47 கருத்துகள்:

 1. கொலை செய்த போலிசை விட இதை கொலை என்று பார்க்க கூடாது என்று சொல்பவர்களை பார்த்தால் தான் கவலையாக,பயமாக உள்ளது.ஒவ்வொரு வேலைக்கும் விதிமுறைகள்,சட்டங்கள் உண்டு.தவறுகளை தண்டிக்கும் உரிமை தனிப்பட்ட மனிதனிடம் இல்லை.அந்த உரிமையை தனி மனிதர்களிடம் இருநது எடுத்து விட்டு,விசாரித்து ,இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு அதற்காக தேர்ந்தேடுக்கப்பட்டவர்களிடம் தீர்ப்பு வழங்கும் உரிமையை தந்த முறை தான் நாகரீகத்தின் முக்கியமான முதல் படி.
  அது மீறபடுவதை ஆதரிப்பவர்கள் மனித பண்புகளின் வளர்ச்சியில் நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறார்கள்
  இந்த குழுவில் இருந்த பல போலீஸ் காரர்களில் யாரேனும் ஒருவர் நாளையோ,நாலு வருடம் கழித்தோ அவர்களை பிடித்து விட்டு மேலிட உத்தரவு வந்ததால் சுட்டு விட்டோம் என்று கூறினால் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டியது தான்.அந்த பயம் இல்லாமல் இருக்கும் சூழல் மிகுந்த கவலைக்குரிய விஷயம்.திமிராக பேசிய மாணவனை போட்டு தள்ளிய போலீஸ் நிகழ்வுகள் பல உண்டு.அதை மறைத்து காப்பாற்றும் மனநிலை தான் இன்னும் நீடிக்கிறது எனபது வருத்தத்தை தருகிறது
  சமீபத்தில் வந்த மௌனகுரு படத்தில் வரும் போலீஸ்காரர்களுக்கும் இந்த செயலை புரிந்தவர்களுக்கும் ஒரு துளி கூட வித்தியாசம் கிடையாது

  பதிலளிநீக்கு
 2. இன்னும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.கண்டிப்பாய் தவிர்த்திருக்க முடியும் எனில் அதுவே நடந்திருக்கவேண்டும். ஆனால் துப்பாக்கியால் சுட முயன்றிருக்கிறார்கள்.காவலர்கள் இடுப்பில் குண்டு பாய்ந்திருக்கிறது.

  போலீஸ்காரன் செத்திருந்தால் இந்தபதிவு எழுதியிருக்க மாட்டீர்கள் இல்லையா? மனித உரிமைக்குள் போலீஸ்காரன் உயிர் அடங்காது.

  கொள்ளையன் சுட முயற்சிக்கும்போது, போலீஸ் பறந்துபறந்து போய் அவனை கைது மட்டும் பண்ணனும் என்று எதிர்பார்ப்பது அசல் சினிமாத்தனம்.

  வேறு வழியில்லை. விசாரணைமுடியும்வரை காத்திருக்கவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 3. சுவரேறி குதித்து மரத்தில் கனிகளை பறிக்கும் பதிமூன்று வயது சிறுவனை சுட்ட மனநிலை இப்படி பிடித்து வைத்து சுடும் காவலருக்கும் வரும்.வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.ஓய்வு பெற்றாலும் தவறு செய்பவனை தண்டிக்க ராணுவ அதிகாரி செய்ததற்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை இறந்தவர்களின் வயதை தவிர

  பதிலளிநீக்கு
 4. http://revolutionaryfrontlines.wordpress.com/2010/10/31/india-cop-convicted-of-murdering-maoist-40%C2%A0years%C2%A0ago/
  கொலை நடந்து நாற்பது ஆண்டுகள் கழித்து போலீஸ் கான்ஸ்டேபிள் மனசாட்சியின் குத்தலால் உண்மையை கூறி விட IG சிறை சென்ற சம்பவமோ,இல்லை குஜராத்தில் பல அதிகாரிகள் போலி என்குண்டேர்களுக்காக பல வருடங்களாக சிறையில் இருப்பது இவர்களை அச்சுறுத்தவில்லை எனபது தான் ஆச்சரியமாக உள்ளது

  பதிலளிநீக்கு
 5. /*தமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம்*/

  14L ku Encounder na , 2G,3G ku Yaru vedu pannam? I Hate encounder,.

  பதிலளிநீக்கு
 6. தாஜ் ஹோடேலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற என்குண்டேரில் இரு வீரர்களை இழந்து பல நூறு ராணுவ வீரர்கள் சண்டையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.உள்ளே கொல்லப்பட்ட தீவிராவதிகள் எத்தனை பேர் தெரியுமா
  ஆயுதங்கள் உள்ள கொள்ளையருடன் சில போலீஸ்காரர்கள் சண்டை போட்டு அவர்களை விரைவாக கொள்ள அவர்கள் என்ன சூப்பர் மேனா.பதுங்கி உள்ள ஐந்து பேரை சுட்டு பிடிக்க பல விதமான ஆயுதங்கள்,உடைகள்,பயிற்சி பெற்ற ராணுவதினருக்கே நாள்கணக்கில் ஆகும்

  பதிலளிநீக்கு
 7. இவர்களும் கொலைகாரர்கள்தான். இந்தக் கொலைகள் கண்டுபிடிக்க முடியாத பல கொள்ளைகள் வழக்கை மூட வைக்கும்.

  பதிலளிநீக்கு
 8. No details have emerged yet on why police had to kill rather than capture alive.
  Do you mean the police have to wait till the alleged thieves run out of bullets/weapons or get killed or do satyagraha in front of the house?
  I also don't agree that killing will result in loss of information about the gang. There are various means to trace others i.e. mobile call records.

  பதிலளிநீக்கு
 9. தவறுகளை தண்டிக்கும் உரிமை தனிப்பட்ட மனிதனிடம் இல்லை.......


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  பதிலளிநீக்கு
 10. வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் அவர்கள் ஊரை சேர்ந்தவர்களுடன் தங்குவது வழக்கம்.அங்கு இருந்தவர்களில் ஒருவர் மட்டும் கொள்ளைகளில் சம்பந்தப்பட்டவராக இருக்கவும் மற்றவர் அதை பற்றி தெரியாமல் இருக்கவும் கூட வாய்ப்புகள் அதிகம்.
  அவர்கள் தப்பித்து போக முடியாதபடி சுற்றி வளைத்து விட்டு அவர்களை பிடிப்பது அவ்வளவு ஒன்றும் கடினமான ஒன்று அல்ல.
  கேரளா வழக்கை போல இதில் ஈடுபட்ட போலீஸ் காரர்கள் யாருக்காவது மனசாட்சி உறுத்தி உண்மைகளை சொன்னால் தான் இது போன்ற நிகழ்வுகள் குறைய வைப்பு உண்டு
  வீடு வாடகைக்கு விட்டவரை கூட போலீஸ் சுட்டு கொன்றிருக்கலாம் கூட்டாளி என்று கூறி.அதையும் வீடு வாடகைக்கு விடுமுன் பார்க்காமல் விடுபவர்களுக்கு ஒரு எச்சேரிக்கையாக இது தேவை தான் என்று பேசுபவர்களும்/ஆதரிப்பவர்களும் இருப்பார்கள் http://revolutionaryfrontlines.wordpress.com/2010/10/31/india-cop-convicted-of-murdering-maoist-40%C2%A0years%C2%A0ago/

  பதிலளிநீக்கு
 11. ///‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி.//
  பல கருத்துக்களில் யுவக்ரிஷ்ணாவுடன் வேறுபடும் நான், இந்த கருத்தில் உடன்படுகிறேன்!!என்கவுன்டரை எதிர்ப்பதில் ஒன்றுபடுவோம்!!

  பதிலளிநீக்கு
 12. என்கவுண்டர் தேவைதான். இது மட்டும் இல்லாதிருந்தால் வீரப்பனை அழித்திருக்க முடியாது.
  என்கவுண்டர் இல்லையேல், சட்டம் ஒழுங்கை முற்றிலுமாகக் காக்க இயலாது.

  பதிலளிநீக்கு
 13. வேளச்சேரி என்க்கவுன்டர் - சிந்தனையும், சில கேள்விகளும்.

  http://nellainanban.blogspot.com/2012/02/blog-post.html

  பதிலளிநீக்கு
 14. In the case of recent child kidnap at Coimbatore, there was an encounter. That was discussed as usual, and there were for and against comments.

  One of the blogger who was supporting that encounter - I remember that was pichaikkaran - in one of his posts, was yelling at the public particularly at middle class people who pitied the dead, ie., the driver who was encountered.

  Now, yuvakrishna has come up with a post pointing at the same middle class public accusing them they support the encounter.

  I dont understand why these bloggers have discrimination with middle class people. I doubt if they dont fall into that category? If they dont how do they judge "middle class mentality" - enna kodumai sir ithu...?

  I feel this discrimination is no way different from any other discrimination like, religion, caste, political parties, colour, race or whatever....

  பதிலளிநீக்கு
 15. அட முட்டாளே அரசியலே தெரியாமலிருக்கும் பதரே பக்கியே ...இப்படி பின்னூட்டம் போட்டு உயிரை எடுக்கும் நடுநிலை நாட்டாமைகளே.....

  ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்......இதே ஐந்து பேரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று
  தெரிந்திருந்தால் இப்படி ஒரு கவுண்டரை நடத்த தில் இருந்திருக்குமா அரசாங்கத்திற்கு?

  அதே நேரம் கேரளாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேர் இதே போல் வங்கியில் கொள்ளை
  அடித்தார்கள் என்பதற்காக கேரளா போலீஸ் என்கவுண்டர் செய்திருந்தால் சீமான் போன்ற
  சிங்கங்கள் துள்ளி குதிக்காமல் இருந்திருக்குமா அல்லது தமிழர்கள் தான் ஒன்று கூடி
  மலயாளிகளின் வீட்டை அடித்து நொறுக்காமல் விட்டிருப்போமா

  பதறுகளே பதறுகளே...

  பதிலளிநீக்கு
 16. Mr. Suresh, I will tell you what is "middle class mentality" mentality..

  Once there lived a guy called Kuppuswamy. He was travelling in a suburban train to office. He bought groundnuts for 5 ruppees and opened morning newspaper.

  Headlines - "Youth held for eve teasing remanded to 15 days custody." Kuppuswamy gets excited. Wow what a police. But its not enough. They should cut his sunni immediately. Then and there we should punish. Then he started his conversation with a passanger..."look at this sir these criminal dogs.... See in 15 days he will come out of jail and look for another girl. There should be strict rules only then there will be less crimes.....What do you say sir?"
  Meanwhile he reaches his office.

  Afternoon he gets a call from local police station. They ask Kuppuswamy to come for an enquiry. He got shivering. scared. He took one of his friend and went to police station. He went inside and asked "For what you called me for enquiry" The SI slapped on his face and said "You fucking dog you misbehaved with a girl and you are trying to escape...first you remove your pant shirt and go inside that room"
  "sir sir I didnt do anything sir...."
  "poda ulla....dei antha lattiya edu....."

  Then Kuppuswamy came to know that he is fabricated in a false case by a influential political women in his same street for vengence. He was remanded to judicial custody. And after 5 years of struggle and enquiry the case was proved in favour of him and he got released. So all these 5 years he was cursing cursing the police.

  So Kuppuswamy is a middle class smarty.

  I am not a middle class guy. Because whenever I read a news about a crime I first feel pity for the convict and then for the victim. But I never appreciate or feel glad about the police. Because they dont contribute anything good to the society by just arresting him because there are far more bad contributed to the society by them.

  பதிலளிநீக்கு
 17. So Mr. Suresh. Indian Penal Code is not about Crime and Punishment its all about Crime and Influence.

  பதிலளிநீக்கு
 18. what do you expect from police..

  go and sit in front of the house

  and do satyagraha till he comes

  out.

  Take thorn out of thorn is the old proverb that no one should never forget

  பதிலளிநீக்கு
 19. துணிச்சலாக கருத்துகளை பதிவு செய்யும் யுவாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வங்கி கொள்ளை தமிழ்நாட்டில் சர்வசாதரணாமாகி விட்டது, எதிர்கட்சிகள் வேறு சட்டம் ஒழுங்கு சரி இல்லை என முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஒரு என்கவுண்டர் நடத்தினால் பிறகு இது போன்ற கொள்ளைகளை செய்ய கொள்ளையர்கள் பயப்படுவார்கள் என்பதற்காக நடத்தப் பட்ட என்கவுண்டராக தோண்றுகிறது.

  பதிலளிநீக்கு
 21. குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தியிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் நீதி எப்போதும் சரியாக சரியான சமயத்தில் தீர்ப்பு வழங்க முடிவதில்லை. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு அமைந்திருக்கும் பல விதிமுறைகள் குற்றம் செய்து விட்டு தப்பித்தலை மிக சுலபமக்குவதை பார்க்கும் எதுவும் செய்ய இயலாத மனிதன் 'அவனை போட்டு தள்ளனும்' என்று குமுறுவது பெரும் தவறல்ல. சரி. அதற்காக என்கௌன்ட்டர் என்ற பெயரில் எல்லா உரிமைகளையும் காவல் துறையிடம் வழங்குவது தீர்வாகாது. என்னதான் வழி? சட்டத்தில் ஓட்டைகள் இருக்கும் வரை சமுதாய நாசங்கள் நடக்கும். அதே ஓட்டைகள் அவர்களில் சிலரை அழிக்கவும் பயன் படும். இரு பக்கமும் வலுவான சக்திகள். இரண்டின் கையிலும் சிக்கி தவறாகவோ, வேண்டுமென்றோ துன்புறுவது சாதாரண மக்கள்.

  பதிலளிநீக்கு
 22. சகோ VISA & யுவ கிருஷ்ணா இந்த கொலையை யாரும் நியாய படுத்த முடியாது... இறந்த அந்த நபர்களுக்காக வருத்தபடுவதை தவிர நாம என்ன பன்ன முடியும்...

  பதிலளிநீக்கு
 23. வந்துட்டாங்க ரூம்ல உக்காந்துக்குட்டு வெட்டி நியாயம் பெசதிங்கட கேணப்பசங்களா. நீ போய் போலீஸ் ல சேந்து பிடுச்சு பாரு

  பதிலளிநீக்கு
 24. I SUPPORT YOUR VIEWS AGAINST ENCOUNTER.. IT IS NOTHING BUT COLD BLOOD MURDER. BUT THIS TIME PEOPLE DOES NOT SUPPORT POLICE.. THEY DISCUSS WHY DINT POLICE ENCOUNTER THE PERSONS WHO INVOLVED IN VARIOUS SCAM

  பதிலளிநீக்கு
 25. இதுவே "வள்ளுவர்" ஆட்சியா இருந்தா இந்த ஐந்து பேர்களின் உயிருக்கோ "உடமை"க்கோ எந்த தீங்கும் வராம,அவங்க மேன்மேலும் கொள்ளை அடித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்..

  வேளச்சேரியில் ஒரு அரசு வீடு கூட allot செய்திருப்பார்..

  எல்லாம் ஒரு "சகாய" விலைக்கு!

  ம்ம்ம் "அது" ஒரு பொற்காலம்..
  எல்லாம் பார்ப்பன கூட்டத்தின் சதி..

  பதிலளிநீக்கு
 26. மட்டமான திரைக்கதை, மட்டமான கலை இயக்கம், மகா மட்டமான ஒப்பனை.

  பதிலளிநீக்கு
 27. boss...we agreed, encounter is not agreeable in any means...but the what you said "நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு..." this is too much...read VISA's comments!

  பதிலளிநீக்கு
 28. நன்றி யுவா! இரண்டு நாட்களாக, என்னை மிக வருத்தப்பட வைத்த விசயமிது, இதை கண்டித்து, தினமலரில் நான் எழுதிய பின்னோடதிற்கு 345 ம மேற்பட்டோர் ஆதரித்தார்கள், மேலும் அழுவலகத்தில் மிக பெரும்போன்மையோர், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என கண்டித்தார்கள், மொத்தத்தில் மிக பெரும்பான்மையோர் எதிர்க்கவே செய்கிறார்கள், அரசியல் வாதிகள் மட்டுமே வயைமூடிகொண்டிருக்கிரர்கள், இதற்க்கு காரணமானவர்கள் மற்றும் இதை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவேண்டும். திட்டச்சேரி ச முருகவேல் - ஆழ்வார்பேட்டை , சென்னை 18

  பதிலளிநீக்கு
 29. தினமலரில் பதிவு செய்யப்பட்ட என்னுடைய பதிவு Dt 23 -02 -2012 - " காவல்துறைக்கு ஒரு சபாஷ் ஆனால் எங்கோ உதைக்குது, தமிழ்நாட்டில் நடக்கும் பல குற்ற சம்பவங்களை திசை திருப்ப நடந்த திட்டமிட்ட ஆவேச நடவடிக்கையாக தெரிகிறது ( இவர்கள் ஐவரும் குற்றவாளிகளாகவே இருப்பினும்) . ஏனெனில் சம்பவம் நடந்த இடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, இங்கே அதிகபட்சம் 600 அடிக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை, இந்த இடத்தில வெளியிலிருந்து போலீஸ் சுட்டு ஒருவரை கூட உயிரோடு பிடிக்கமுடியவில்லை என்பது ஒரு முழ பூ இல்லை பூந்தோட்டத்தையே காதில் வைக்க முயற்சிப்பதாகவே தோன்றுகிறது அதே சமயம் குஜராத் போலி என்கௌன்ட்டர் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை... முழுமையான செய்தி வெளிவந்தாலே உண்மை தெரியவரும், இதனால் குற்றம் குறையும் என்று போலீஸ் எதிர்பார்க்குமானால், நாமும் நாளைமுதல் பவர் கட் இருக்காது என்று நம்புவோம், திட்டச்சேரி ச முருகவேல்

  Pannadai Pandian - wuxi,சீனா
  2012-02-23 11:00:11 IST Report Abuse
  இவனுங்கள உயிரோட புடிச்சு இட்லி-பிரியாணின்னு போடா சொல்றியா ??? இவனுங்கள என்கவுன்ட்டர் செஞ்சு நீதியை சீக்கிரம் போலிஸ் நிலை நாட்டி இருக்கு....

  Rate it:

  32

  19

  இவனுங்க தான் குற்றவாளிங்க முடிவு பண்ணி, கேசை close பண்ணுங்க வேற வழி இல்ல, ஆனா ஒன்னு சொல்லுங்க, இவங்கள சுட்டு தள்ளுறதுக்கு முன்ன, அந்த ஒரு footage , நேத்து வந்ததே அதை தவிர மற்ற நாலு பேரோட பேரு, ஊரு, அவங்க மேல எத்தனை கேசு இருக்குன்னு இந்த போலிசுக்கு தெரியுமா, தண்டனை கொடுப்பதுங்கறது திருந்துறதுக்கு தானே, அரை மணி நேரத்துல எல்லாமே முடிஞ்சு போயிடுச்சின்னு தினமலரே சொல்லுது, அப்புறம் எப்படி அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க, ஐந்தில் ஒரு நிரபராதி இருந்தால் என்ன பதில், அவர்கள் குடும்பம் என்னவாகும். கிரிமினல்களை குறைக்கணும், வளர்க்க கூடாது. ரௌடிகளை போட்டு தள்ளுவதை எதிர்பவனல்ல, இது வேறு கதை. நீதிக்கு பேர்போன பாண்டியன் பேர் வச்சிக்கிட்டுருக்கீங்க, உங்க அம்மாவுக்காக தடம் மாறாதீங்க, அரசியல் வேற, வாழ்க்கையும் உயிரும் வேற, பிரிச்சி பாருங்க. திட்டச்சேரி ச முருகவேல்..."

  பதிலளிநீக்கு
 30. அன்பார்ந்த வாடிக்கையாளர்களே...என்கவுண்டரை ஆதரிக்கும் நடுத்தரவர்க்க மொக்கைகளே....

  ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...குப்பன் சுப்பனை செவிட்டில் பளாரென அறை விட நினைக்கிறான் என்று
  வைத்துக்கொள்வோம்.

  முதலில் குப்பன் சட்டம் நம்மை தண்டிக்குமே என்று பயப்படவேண்டும்...

  அதற்கு மேலே சுப்பன் நம்மை ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயம் வரும்

  அதற்கும் மேலே சுப்பனுடைய ஆட்கள் சொந்தங்கள் பந்தங்கள் நட்புகள் யாராவ்து தம்மை
  திருப்பி தாக்கி காயப்படுத்திவிடுவார்களோ என்ற பயம் வரும்.

  ஆனால் போலீஸ் என்பவன் சுப்பனை செவிட்டில் பளாறென அடிக்க யாருக்கும் அஞ்சத்தேவையில்லை.

  இப்படி ஒரு அசாத்திய அதிகாரம் படைத்த ஒரு வர்க்கத்தின் வன்முறையை ஆதரிப்பவர்கள்
  எப்படிப்பட்ட சைக்கோக்கள் என்பது எனக்கு விளங்கவே மாட்டேங்குது.

  இங்கே பேசும் நடுத்தரவர்க்க மொக்கைகள் என்றைக்காவது ஒரு நாள் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு சென்று ஒரு புகாரை பதிவு செய்திருக்கிறார்களா? அப்போது அவர்கள் மரியாதையோடு நடத்தப்பட்டார்களா என்ற பேருண்மையை புட்டு தட்டில் வைத்தால் டக்கென உள்வாங்கிக்கொள்வேன்

  பதிலளிநீக்கு
 31. அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் ... அந்த கொள்ளையர்கள் உங்க பக்கத்து வீட்டுல தங்கியிருந்து போலீஸ் சுத்தி வளைத்ததும் நாங்க பக்கத்து வீட்டுல இருக்கிற பொதுமக்களை கொல்லுவோம்னு துப்பாக்கிய தூக்கியிருந்தா ... நீங்க என்ன பண்ணுவீங்க அப்பவும் போலீஸ் அவனுங்களை சுற்றி வளைத்து கைது பண்ணத்தான் வேணும்னு வீராப்பா பேசுவீங்களா? சென்னையில் ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இருக்கும் இடைவெளி யாவரும் அறிந்ததே... அவர்கள் எளிதாக மாடியில் தாவி அடுத்த வீட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு அதிகம்... போலீஸ் அவர்களை சுட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே ...

  பதிலளிநீக்கு
 32. ஆளாளுக்கு என்கவுண்டருக்கு ஆதராவும் எதிராவும் பேசிகிட்டு இருக்கீங்க .. ஆனால் என்னோட கவலை எல்லாம் இன்னொருத்தர் மேலதான் , அது அந்த வீட்டோட ஓனர்.. பாவம் அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி வாயை கட்டி வயித்தை கட்டி பல லட்சம் முதலீடு போட்டு வீட்டை கட்டி கடைசியில இப்படி ஆகிபோச்சி , இனி அவரால அந்த வீட்டை விக்கவும் முடியாது , யாரும் வாடகைக்கும் வரமாட்டானுக ... அதுமட்டும் இல்லாம விசாரணைகர பேர்ல இன்னும் அஞ்சி வருசத்துக்காவது வாரத்துக்கு ஒருவாட்டி போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டி வரும் ... குற்றவாளிகள் மேல பரிதாபம் காட்டுரவங்க கூட அந்த அப்பாவி மேல காட்ட மாட்டேங்கிறீங்களே...

  பதிலளிநீக்கு
 33. TO RAJA


  அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் ... அந்த கொள்ளையர்கள் உங்க பக்கத்து வீட்டுல தங்கியிருந்து போலீஸ் சுத்தி வளைத்ததும் நாங்க பக்கத்து வீட்டுல இருக்கிற பொதுமக்களை கொல்லுவோம்னு துப்பாக்கிய தூக்கியிருந்தா ..//

  ஏனுங் ராஜா அண்ணோவ் , இங்க அப்படித்தான் நடந்துச்சுங்க்களா?. துப்பாக்கி சண்டை நடந்த மாதிரியே தெரீலீங் . பச்ச மண்ணா இருக்கீங்.

  பதிலளிநீக்கு
 34. ராஜா உங்க ரெண்டாவது கமென்ட் ஹவுஸ் ஓனர் பத்தி அது எனக்கு புடிச்சிருக்கு.
  இதனால தான் நான் எப்பவுமே போலீஸ் செய்யுற எந்த ஒரு காரியத்த பத்தியும் பெருமை படுறதில்ல.
  ஏன்னா அவங்க பூட்ஸ் கால் பட்டு போனதுக்கு அப்புறம் பாதிக்கப்படுற ஆட்கள் எத்தனையோ பேர்.
  உயிர் போகல அப்படிங்குற ஒண்ண தவிர அவங்க பல சித்தரவதைகள அனுபவிக்க நேரும்.
  போலீஸ் சமூகத்துக்கு ச்ய்யுற நன்மைய விட தீமைகள் அதிகம்.
  போலீஸ் எல்லாம் நம்மள டச் பண்ண முடியாது அப்படிங்கிற அதிகார எல்லை கோட்டுக்கு உள்ளே
  இருக்கும் யார் வேண்டுமானாலும் போலீஸின் எந்த ஒரு செய்கையையும் பாராட்டி வாழ்த்து
  சொல்லலாம். ஆனால் என்னை போன்ற சாமானியன் அப்படி செய்ய முடியாது.

  பதிலளிநீக்கு
 35. //போலீஸ் செய்யுற எந்த ஒரு காரியத்த பத்தியும் பெருமை படுறதில்ல.
  ஏன்னா அவங்க பூட்ஸ் கால் பட்டு போனதுக்கு அப்புறம் பாதிக்கப்படுற ஆட்கள் எத்தனையோ பேர்.//

  இதை விட பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது. நடுத்தரவர்க்க மொக்கை மாதிரி இது அறிவுஜீவி மொக்கை. எப்படி நடுத்தரவர்க்கம் பொத்தாம்பொதுவாக, " அவர்கள் குற்றவாளிகள் தான், அவர்களை கொன்றதில் தப்பில்லை" என்று நீதி வழங்குவது போல். நமது மனித உரிமை, அறிவுஜீவி, முற்போக்கு,பகுத்தறிவு மொக்கைகள் தரும் தீர்ப்பு. 100% காவல்துறையினரும் குற்றவாளிகள். அப்படி இருந்தால் நாட்டில் எவனும் நிம்மதியாக இருக்க முடியாது. அங்கங்கு நடக்கும் சில தவறுகள் வெளிவருகின்றன.ஆனால் அவர்கள் செய்யும் அவர்களின் கடமையால்தான் மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாக் உள்ளனர். சும்மா நானும் முற்போக்குவாதிதான் என்று பேனர் கட்ட வேண்டுமானால் இது உதவும். நாளை உங்கள் வீட்டில் கொள்ளை போனால் அங்குதான் போக வேண்டும். அவர்கள் காலடிபடும் போனால் போகட்டும் என விடுவீர்களா?

  Paanjasanyan

  பதிலளிநீக்கு
 36. unfortunetly lucky , this time atleast 99% of the bloggers opposed encounter and showcased themselves as intellectuals..senior intellectuals have to find someother gimmick to prove their existence..

  பதிலளிநீக்கு
 37. In short this time 'Parupu Veegala'..everyone came with their own DAL..

  பதிலளிநீக்கு
 38. RAVI said...
  இவர்களும் கொலைகாரர்கள்தான். இந்தக் கொலைகள் கண்டுபிடிக்க முடியாத பல கொள்ளைகள் வழக்கை மூட வைக்கும்.//

  இதைத்தான் நானும் சொல்ல வேண்டியுள்ளது.

  கொலைக்கு கொலையே நியாயமாகாது என்பது என் கருத்து!

  பதிலளிநீக்கு
 39. @visa,

  Thanks for enlightening me with the "middle class mentality"

  Same way i would expect you to enlighten me with the "low class mentality" and "upper class mentality"

  I think u completely missed out my point here.

  I just compared one particular post by one particular blogger (I said I REMEMBER that was pichaikaran), yelling at the middle class for NOT SUPPORTING the encouter and this post by yuva again yelling at the middle class for SUPPORTING the encounter.

  I didnt mention anything for or against encounter here.

  I was not talking for the encounterer or the encountered. I was talking about the discrimination being shown by the bloggers at the middle class people.

  Hope I made myself clear.

  பதிலளிநீக்கு
 40. அந்தக் காவலர்கள் வருடத்துக்கு அடிக்கும் லஞ்சக் கொள்ளை மட்டும் 15 அலட்சத்துக்கு மேல் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 41. Visa is the only guy who really understands the issue here in a very right manner. That's what liberty is meant for.

  I live in USA and I don't want to say that police never abuses innocents here. But if an encounter like this happened here, it would be a great political disaster for the ruling authority. Only a court can give punishment for a criminal.

  What police did here is a bad example. This is the same like what they did in "thoothukudi" a few months ago. Why in the hell when this "Jeya" is in Power the bloody assholes act like they have all the deadly power? Who the $%$#@% is giving them so much deadly power? If this idiotic Jeya thinks this is how police under her rule will act, she can very well kiss her CM post goodbye and become the leader of an organized crime group like Mafia!

  -Bala.

  பதிலளிநீக்கு
 42. hey....u r one hundred percent correct.police are giving a lollipop story...public has to accept it.....namma thalaiezuthu

  பதிலளிநீக்கு
 43. மகா மொக்கை கேள்வி ஒன்றுக்கு ”பேப்பரும் பேணாவும் கிடைச்சிட்டா சும்மா இருக்கவே தோனாதா உங்களுக்கு” என்றூ ஒரு முறை சுஜாதா பதில் சொல்லியிருந்தார்.

  இப்ப அதையே தான் யுவ நவ விசா போன்ற ஆட்களுக்கு சொல்ல வேண்டியிருக்கு “ங்கொ.......ல கணினியும் நெட் கனெக்‌ஷனும் கிடைச்சா கைய்ய கால வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களே.


  மனித உரிமை பேசுகிற பண்ணாடைகள் பைக்-ஐ எவனாவது தூக்கிட்டு போகும் போது, பாவம் வயித்துக்கு இல்லாம தான் திருடினான் என்று சொல்லிட்டு பானைத் தண்ணிய குடிச்சுட்டு படுத்து தூங்கட்டும் !!! யாரு கேட்க போறா ?

  பதிலளிநீக்கு
 44. உயிர் பிடுங்கும்
  இந்த என்கவுண்ட்டர்களை ஒருபோதும் ஏற்பதற்கில்லை
  அதிகாரமிக்க குற்றவாளி எனில்
  அவை
  ஒரு மயிரையும் பிடுங்குவதில்லை

  பதிலளிநீக்கு
 45. Coimbatore Encounter kondadiyavargal ipothu ithai ethirkiraargal?...Hindi fellows... poor patriotism...sucks...

  பதிலளிநீக்கு
 46. மம்மிக்கு ஹேப்பி பர்த்டே பரிசு கொடுப்பதற்காக போடப்பட்டதே இந்த ‘என்கவுண்டர்’ நாடகம். அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பிற்கு நான் பல தடவை போயிருக்கிறேன். அந்த சந்துகளில் இருந்து ஒருவர் தப்பிக்காமல் இருக்க barricades அமைத்தே பிடிக்க முடியும். அவர்கள் ஒளிந்து சண்டை போடுவதற்கு அது ஒன்றும் தாஜ் ஓட்டல் கிடையாது, வெறும் 400 சதுர அடி வீடு மட்டுமே! கதவை உடைத்தே அவர்களை பிடித்திருக்க முடியும். வெற்றுக்கூச்சல் போடுபவர்களைப்பார்த்து கேட்கிறேன். இதில் சுடப்பட்டவன் உங்கள் கூடப்பிறந்தவனாகவோ, நண்பனாகவோ இருந்திருந்தால் கூட இப்படித்தான் பேசியிருப்பீர்களா?

  நிரபராதி ஒருவன் தண்டிக்கப்பட்டான் என்பதற்காக உயிரை விட்ட மன்னர்கள் இன்று இல்லை! பீகாரின் ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஏழைப் பெண்ணின் சாபமும் சென்னையை எரிக்கப்போவது இல்லை!
  பார்ப்பன ஏடுகளைப் படித்து, பார்ப்பன அடிமை சிந்தையில் ஊறி இருப்பவர்களுக்கு இந்த நியாயம் கண்டிப்பாக புரியப்போவதும் இல்லை!

  பதிலளிநீக்கு