February 2, 2012

இந்த பொழைப்புக்கு…?

இன்று காலை செய்தித்தாளைப் பிரித்ததுமே கடுமையான அதிர்ச்சி. முப்பதாவது நாளிலேயே காற்று வாங்கிக் கொண்டிருந்த ‘வேலாயுதம்’ நூறு நாட்கள் ஓடியதாக ஒரு விளம்பரம்.

சரி, விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள தியேட்டர்களில் நிஜமாகவே இப்படம் ஓடுகிறதாவென்று ஆராய்ந்துப் பார்த்ததில், இது அப்பட்டமான புளுகு என்று தெரியவருகிறது. வேண்டுமானால் இந்த தியேட்டர்களின் இணையத்தளத்துக்கு சென்று நீங்களே வேலாயுதம் ஓடுகிறதா என்று பார்வையிட்டுக் கொள்ளுங்கள். ஒரு தியேட்டரில் கூட ஓடாத ஒரு படத்துக்கு ஏன் நூறாவது நாள் போஸ்டர்.. அதுவும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில்? விஜய்யின் சொந்த தியேட்டர் என்று சொல்லப்படும் ஃபேம் நேஷனலில் கூட வேலாயுதத்தை தூக்கி ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.

ஊத்தி மூடப்பட்டுவிட்ட ஒரு படம் நூறு நாள் ஓடுகிறது என்கிற பில்டப்பை மக்களுக்கு பொய்யாக ஏற்படுத்தி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? கடந்த ஐந்து வருடங்களாக தயாரிப்பாளர்களுக்கு பல நூறு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்திவரும் விஜய்யின் சம்பளத்தை மட்டும் ஒவ்வொரு தோல்விப்படத்துக்குப் பிறகும் சில கோடிகள் ஏற்றுவதைத் தவிர்த்து வேறென்ன சாதனையை இம்மாதிரி விளம்பரங்கள் கொடுத்து செய்யப் போகிறார்கள்?

இம்மாதிரி பொய் விளம்பரம் கொடுத்தவர்களை, மக்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாக கூறி உள்ளே தள்ளுவதுதான் சட்டப்படி சரியான செயலாக இருக்க முடியும். இந்த விளம்பரத்தைப் பார்த்த கோயிந்தசாமி யாராவது சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு வேலாயுதம் பார்க்கச் சென்று, அதைவிட மொக்கையான ஏழாம் அறிவையோ, தேனி மாவட்டத்தையோ பார்த்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், இந்த பேரிழப்பு யார் ஈடு செய்வது? ஏற்கனவே காவலன் என்கிற படா மொக்கைப் படத்தையும் இப்படித்தான் நூறு நாள் ஓடவைத்தார்கள்.

போதாக்குறைக்கு இப்போது இந்த தோல்விப்பட ஹீரோவின் அப்பாதான் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் கூட. நியாயமாக நன்றாக வசூலிக்க வேண்டிய ‘நண்பன்’, தனது மகனது அநியாய சம்பளத்தால் பெரிய பட்ஜெட்டாக எகிறி, மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தும் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தையாவது திருப்பி எடுக்க தாவூ தீர வைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான், “ஏப்ரல் வரை எந்த பெரிய படமும் வெளியிடப்பட்டு விடக்கூடாது” என்று தன்னுடைய பதவியை தவறாக உபயோகித்து அடாவடியாக ஒரு விதியைப் போடுகிறார். அப்படியாவது ‘நண்பன்’ நூறு நாள் ஓடுமா என்கிற ஆதங்கம்தான் அவருக்கு. அப்படியும் கூட ‘நண்பன்’ ஓடும் தியேட்டர்கள் வாரயிறுதி தவிர்த்து மற்ற நாட்களில் ஈயடித்துக்கொண்டு இருக்கிறது. இதே மாதிரி மோசடிப் போஸ்டர் ஒட்டியாவது நண்பனையும் வெள்ளிவிழா காண வைப்பார்கள் என்பது உறுதி.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நூறு, நூற்றியைம்பது சம்பளம் ஏற்ற வேண்டுமென்றால் ரோஷம் பொத்துக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் இதுமாதிரி லெக் தாதா ஸ்டார்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பதினைந்து கோடி, இருபது கோடியென்று கொட்டியழுவதால்தான் சினிமாத்துறை நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நான்கு கோடி செலவழித்தாலேயே உருப்படியாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும். ஏழு எட்டு கோடிகள் வரை வியாபாரம் செய்யமுடியும் என்பதுதான் யதார்த்தம். மாறாக விஜய் மாதிரி தொடர் தோல்விப்பட ஹீரோக்களுக்கு மட்டுமே இருபது கோடி ரூபாய் கட்டியழுதால், அப்படத்தை இயக்கும் இயக்குனர் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்குக்கும் சில கோடிகளை சாப்பிட, இடி மொத்தமாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகள் மீது விழுகிறது. தம் மேல் விழுந்த பாரத்தை ரசிகர்கள் மீது அவர்கள் சுமத்த... தொடர்ச்சியாக ஸ்டார்களின் மொக்கைப் படங்களை நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிப் பார்த்து ஆப்பு வாங்கிக் கொண்ட ரசிகனோ திருட்டு டிவிடியை ஆதரிக்கத் தொடங்கிவிடுகிறான்.

இளைய தளபதியை ஒப்பிடுகையில் நம் பவர் ஸ்டார் ஆயிரம் மடங்கு தேவலாம். மகாலட்சுமி திரையரங்கில் நேர்மையாக காசு கொடுத்தாவது தன் படத்தை இருநூற்றி ஐம்பது நாள் வரை ஓட்டினார். ஓடாத படம் ஓடுவதாக விஜயை மாதிரி டுபாக்கூர் விளம்பரம் கொடுத்து தனக்கு ‘பில்டப்’ ஏற்றிக்கொள்ளவில்லை.

28 comments:

 1. இப்படி விளம்பரம் செஞ்சாலும் படம் ஓடுனதா சரித்திரம் இல்லையே...

  ReplyDelete
 2. ஆம்மாம்யா..ஆமாம்!

  ReplyDelete
 3. //இளைய தளபதியை ஒப்பிடுகையில் நம் பவர் ஸ்டார் ஆயிரம் மடங்கு தேவலாம். மகாலட்சுமி திரையரங்கில் நேர்மையாக காசு கொடுத்தாவது தன் படத்தை இருநூற்றி ஐம்பது நாள் வரை ஓட்டினார்.  அதாங்க உண்மையான டாக்குடருக்கும் , போலி டாக்குடருக்கும் இருக்குற வித்தியாசம் ...

  ReplyDelete
 4. இந்த மாதிரியான ஆளுங்க எல்லாம் இருக்க போயிதான் கஷ்டப்பட்டு ஓட வச்ச லத்திகாவையும் மக்கள் அப்படி நெனச்சிடுவாங்கலோன்னு பவர் ஸ்டார் வெவரமா "உண்மையான வெற்றி"ன்னு போஸ்டர் அடிச்சிருக்கார்... விஜயும் அவர் அப்பாவும் இதை பார்த்தாவது திருந்த வேண்டும்...

  ReplyDelete
 5. அதிகாரம் மட்டும் இருந்தால் சினிமாக்காரர்கள் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடையில் கண்டிப்பாக சினிமா டிக்கெட் வாங்கியாகணும் என்று சட்டம் போடச் சொன்னாலும் சொல்வார்கள்.

  வெற்றிப்படம் என்கிற நண்பனே நஷ்டத்தில் என்றால் அப்ப தோல்விப்படம் என்று அழைக்கப்படுவதெல்லாம்??????

  நஷ்டம் நஷ்டம் என்றால் பணம் எங்கேய்யா போகிறது?ராம் கோபால் வர்மா சொன்னது மாதிரி 'எங்கேயும் போகலை...அது சினிமாக்குள்ளதான் சுத்திக்கிட்டு இருக்கு'

  எப்படி இருந்த அரவிந்தசாமி...

  தியானம் - தியான் - ச்சான் - ஸென் - போதிதர்மா

  ReplyDelete
 6. பவர் ஸ்டார் வெளிப்படையாக அறிவித்தவர்...ஆமா நான் காசு கொடுத்துதான் படத்தை ஓட்டறேன் என்று.கண்டிப்பாக எவ்வளவோ மேல்!

  ReplyDelete
 7. புடிங்க சார் ... இவனுங்கள புடிச்சு உள்ளப் போடுங்க சார்.

  ReplyDelete
 8. கடைசி பாரா அற்புதம்.

  ReplyDelete
 9. now i am thinking, use of blogs. what ever we thought updated here.

  how is going life, how is ur family

  ReplyDelete
 10. poster la padam ootum vijay & his crew

  ReplyDelete
 11. பொன்.முத்துக்குமார்11:12 PM, February 02, 2012

  "போதாக்குறைக்கு இப்போது இந்த தோல்விப்பட ஹீரோவின் அப்பாதான் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் கூட. நியாயமாக நன்றாக வசூலிக்க வேண்டிய ‘நண்பன்’, தனது மகனது அநியாய சம்பளத்தால் பெரிய பட்ஜெட்டாக எகிறி, மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தும் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தையாவது திருப்பி எடுக்க தாவூ தீர வைத்துக் கொண்டிருக்கிறது."

  உங்களது கட்டுரையின் தொனியை வரவேற்றாலும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 'நண்பன் படத்தில் என்னை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்து எடு' என்று ஷங்கரை விஜய் துப்பாக்கி முனையில் மிரட்டவில்லை. விஜய் இல்லாமல் வேறொரு குறைந்த சம்பளம் வாங்கும் ஹீரோவை வைத்து நண்பனை எடுத்திருக்க எல்லா வாய்ப்புகளும் சுதந்தரமும் ஷங்கருக்கு இருந்தன. இருப்பினும் ஏன் விஜய் ? எப்போதும் சொல்லும் வாதம்தான். இது பந்தயம். எந்த குதிரை எப்போது ஜெயிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

  என் நண்பர் ஒருவரின் உறவினர் எடுத்த குள்ளநரி கூட்டம் என்ற குடும்பக்கதை கொண்ட திரைப்படம் 3 கோடியில் எடுக்கப்பட்டு 5 கோடி சம்பாதித்தது. இயக்குநர் தான் சொன்னபடியே லாபம் சம்பாதித்துக்கொடுத்ததால் தயாரிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சி. இதே திரைப்படம் நல்லபடியாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் இன்னும் அதிகமாகவே வசூல் செய்திருக்கும்.

  வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியிலே கட்டிக்கொண்டு குத்துதே குடையுதே என்றால் ?

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார்

  ReplyDelete
 12. நீங்கள் சொன்ன எல்லாமே சரி.. எனக்கு என்ன ஒரு விஷயம் புரியலனா.. இதுக்கு ஹீரோவ மட்டும் கரணம் சொல்றது.. அதுவம்.. ரொம்ப தெளிவா.. ஒங்களுக்கு பிடிக்காத ஒரு விஜய் படத்த எடுத்து வெள்ளக்கி சொல்றது.. இதே விஜய் படம்.. குருவி.. சன் டிவி தயாரிச்ச படம்.. சத்யம் ல 100 நாள் போஸ்டர் தேயட்டர் ஐ விட பெருசா ஒட்டிணப்ப எங்க போனேங்க.. நா ஒரு விஜய் ரசிகன் இல்ல.. ஆனா ஒங்க Anti விஜய் பதிப்புகள் நடுநிலை இல்லாம கொஞ்சம் எரிச்சலை தருது.. அவளோ தான்.. But.. நீங்க சொல்ல வந்த கருத்து உண்மை.. I agree with you.

  ReplyDelete
 13. பவர் ஸ்டார் கிட்ட இருக்கிற நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு.?

  ReplyDelete
 14. ippolaam 1 naal oodunaalae 100 naal oodinathukku samam. 1 naalaikku mayajaal cinemas mattumae nearly 100 show ootraan. appuram chennai la ella theatre serthaa one day ku nearly 1000 show oodidum. appo athu right thaan... enakku therinju 1990 la oru film oru theatre la mattum thaan oodum. ippo... :-)

  ReplyDelete
 15. வாயால் வடை சுடும் விஜய் அண்ட் விஜய் பேன்ஸ் இங்கையும் வந்தாச்சா?

  ReplyDelete
 16. see this link 7am arivu also finished 99 days but i have checked in that theatres nothing is there.

  http://www.forumkeralam.com/other-language-movies/34229-7am-arivu-excellent-100-days-315.html

  ReplyDelete
 17. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை !

  ReplyDelete
 18. சிங்கை ஜெயராமன்1:02 AM, February 04, 2012

  அருமையான பதிவு யுவா. உங்க தைரியத்தை பாராட்டுகிறேன். திருபாச்சி தோசைய திருப்பி போட்டு படம் எடுத்து இர்ருகிறார் அந்த ரீமேக் ராஜா. அவரு பேசும்போது என்ன உதார் விட்டார். ரொம்ப பேரு இந்த வெட்டி தளபதியோட உண்மையான முகத்தை பத்தி எழுதுவது இல்லை இன்குலுடிங் விகடன் குமுதம். ஓவர் ஜால்ரா. இந்த பொழைப்பு போளைகிரதுக்கு ...... நண்பன் படம் நல்லா இருந்தும் சரியாய் போகாததற்கு காரணம் என்னான்னு யாருக்கும் தெரியலை. ஏதோ படம் மக்களோட ஓட்ட மாட்டேங்குது. இந்த வட இந்திய கதை களம் நம்ம மக்களுக்கு புடிகலையோ என்னமோ? என்னமோ அமீர்கானை பார்த்து ரசித்தது விசையை ரசிக்க முடியவில்லை. (இவ்வவளவு களோபரம் ஆயிடுச்சே நீங்க அந்த நண்டுவிர்க்காகவவது 3 இடியட்ஸ் படம் கண்டிப்பா பார்க்கணும் :-) ). ஆச்சி அடுத்து துப்பாக்கி படத்துக்கு பில்டப் இப்பவே ஸ்டார்ட் ஆகிடும். இவங்க அப்பா சரியாய் படம் வருவதுக்கு முன்னே ஏழைகளுக்கு உதவி, தையல் மெசின் குடுக்கிரோம்னு அடுத்த சடங்கு விளம்பரத்திற்காக ரெடியா இருக்கும். பட்டய கிளப்புங்கள் மக்களே..!

  ReplyDelete
 19. நண்பன்7:41 AM, February 04, 2012

  நண்பன் படத்தில் விஜய் நன்றாகவா நடித்திருக்கிறார்? 3- இடியட்ஸ் பார்த்துவிட்டு இதைச் சொல்லட்டும்.

  அந்த நடிகர் ஒரு குருவிங்க... ஊர்க்குருவி... அது பருந்தாக முடியாது. அப்பாவும் அம்மாவும் அவரை நடிகர் தொழில் கற்றுக் கொடுத்து பணம் சம்பாரிக்க வழி செய்திருக்கிறார்கள். உண்மையில் விஜய்க்கு நடிக்க விருப்பமிருக்கிறதா யாராவது கேட்டுப் பாருங்கள்....

  ReplyDelete
 20. Go to hell with your anti Vijay comments. Just dont understand y ur so aggressive with Vijay..... Atleast vijay is trying even giving few. Not like Ajith.. Watch your commments MR...!!

  ReplyDelete
 21. http://faceofchennai.blogspot.in/2012/02/chennai-traffic-police-spot-fine-system.html

  ReplyDelete
 22. துணிச்சலான சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் யுவா.

  ReplyDelete
 23. நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
  படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதாக உள்ள விளம்பரம் அது.
  அப்படம் 100 நாட்கள் ஓடியதாக அர்த்தமில்லை.

  ReplyDelete
 24. ஞான தகப்பன் கலைஞரை மட்டும் நம் மக்கள் மீண்டும் முதல்வராக்கி இருந்திருந்தால் இந்த கண்றாவியெல்லாம் நாம் பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

  ReplyDelete
 25. //தொடர்ச்சியாக ஸ்டார்களின் மொக்கைப் படங்களை நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிப் பார்த்து ஆப்பு வாங்கிக் கொண்ட ரசிகனோ திருட்டு டிவிடியை ஆதரிக்கத் தொடங்கிவிடுகிறான்.
  //
  இது போன்ற மொக்கையான படங்களை விற்பனை ஆகும் என்ற நம்பிக்கையில் திருட்டு விசிடி எடுத்த திருட்டு விசிடி தொழிலதிபர்கள் கடும் நட்டத்தில் தங்கள் தொழிலை விட்டே சென்று விட்டார்கள். காவல் துறையால் ஒழிக்க முடியாத திருட்டு விசிடி தொழிலை தனி ஆளாக நின்று மொக்கை படங்களில் ந்டித்தே ஒழித்து இருக்கிறார் விஜய்

  ReplyDelete
 26. சினிமா என்பதே கற்பனை என்கிற பொய்தான். இதில் விளம்பரம் வேறு உண்மையாக எப்படி இருக்க முடியும்???

  ReplyDelete
 27. தல நீங்க ஏன் டென்சனா ஆகுறீங்க

  100 நாள் ஓடும்னு நெனைச்சுருப்பாங்க
  ஆனா பேக்ரௌன்ட்ல இருக்க
  நாயனம் முந்திகிருச்சு
  ooooooooo..............oooooooooooooo

  ReplyDelete