23 ஜனவரி, 2012

கயல்விழி

அவளிடம் இதை எப்படி கேட்பது என்பதில் நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான வேறு ஒரு பெயர் இல்லவேயில்லை. கயலின் விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழப்பான்.

அவள் வேலை பார்த்த கடையில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி டைட்டானிக் கேட் வின்ஸ்லட் மாதிரியே நல்ல கலர், செம்ம கட்டை. அவள் இவளை 'கைல்' என்று அழைப்பதே ஸ்டைலாக இருக்கும். அவளிடம்தான் முதலில் 'இதை' கேட்க நினைத்தான். ஆனாலும் கயலைப் பார்த்த பின் வேறு எந்தப் பெண்ணிடமும் 'இதை' கேட்க அவனுக்கு தோன்றவில்லை.

யதேச்சையாக ஒரு நாள் கர்ச்சிப்பை மறந்துவைத்து விட்ட தினத்தில் தான் அந்த கடைக்கு கர்ச்சிப் வாங்க வந்தான் அவன். அப்போது தான் அவளைப் பார்த்தான். தினமும் அவள் வேலை செய்யும் துணிக்கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் அவளிடம் வெட்கத்தை விட்டு இதை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாகரிகமான பணியில் இருக்கும் கணவானான அவன் இதை நாலு பேர் எதிரில் கேட்டு அவள் ஏதாவது சொல்லி.. பொது இடத்தில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று அச்சப்பட்டான். கடைமுதலாளி வேறு பயில்வான் ரங்கநாதன் மாதிரி க்ரிப்பாக இருந்தார்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்தால் 'இதை' தள்ளிப் போட்டுக் கொண்டே போகவேண்டும். எப்படியிருந்தாலும் இதை வேறு யாரிடமாவது கேட்கத்தான் போகிறோம், இவளிடமே கேட்டு விட்டாலென்ன? ‘அதை' அவளிடம் கேட்க ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்துக் கொண்டான். காலண்டரில் நல்ல நேரம் பார்த்தான். மனதுக்குள் ‘தில்'லை லிட்டர் லிட்டராக ரொப்பிக் கொண்டான். அவனுக்கு பிடித்த கருப்பு - சிவப்பு டீஷர்ட்டை அணிந்துகொண்டான். பெண்கள் மையல் கொள்வார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட நறுமண வஸ்துவை தாராளமாக உடலுக்கு உபயோகித்தான்.

நேராக கயல் வேலை பார்த்த அந்த துணிக்கடைக்கு போனான். அன்று கடையிலும் கூட்டம் குறைவு. கயலுக்கு பின்னால் கண்ணாடி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த ‘அந்த' துணிவகைகளை வெறித்துப் பார்த்தான். கயலின் அந்த கேட்வின்ஸ்லட் தோழி குறும்பாக பார்த்தாள். கயலிடம் மெதுவாக ”ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தொலைவுக்கு நகர்ந்தாள்.

கயலின் முகமும் லேசாக நாணத்தால் சிவந்திருந்தது போல தெரிந்தது.

“என்ன சார் வேணும்?” கோல்டன்பிஷ் வாய் திறந்து பேசினால் கயலைப் போலத்தான் பேசும்.

“ம்ம்... வந்து.. வந்து”

“சொல்லுங்க சார்!”

“கயல்.. நான் ஒரு எல்.ஐ.சி. ஏஜெண்ட். அன்னிக்கு ஏதோ பாலிசி போடணும்னு உங்க ஃப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்டிருந்ததை கேட்டேன்… என்கிட்டேயே பாலிசி எடுக்கலாமே?” கண்களைப் பார்த்து நேருக்கு நேராக, கடைசியாக ‘அதை’ கேட்டே விட்டான்.

(நன்றி : தினகரன் வசந்தம் 22-01-2012)

16 கருத்துகள்:

 1. கொடுத்த ஹைப்புக்கு, அட்லீஸ்ட் ஒரு ஜட்டியவாவது கேட்க வச்சிருக்கலாம்.
  சப்புன்னு ஆகிடுச்சு!
  :-((

  பதிலளிநீக்கு
 2. மறுபடியும் பு(ஜ)ட்டிக் கதைகளா..ஆ..வென அதிர்ந்தேன். :)
  //அடுக்கப்பட்டிருந்த ‘அந்த' துணிவகைகளை// இதுக்கும்
  எலஐசி பாலிசிக்கும் என்னய்யா சம்பந்தம் ?

  பதிலளிநீக்கு
 3. எழுந்திர்டா, எவ்வளவு நேரம் தூங்குவ என்று அம்மாள் எழுப்ப கனவு கலைந்தது.

  யுவா, இதுவே போதுமே

  பதிலளிநீக்கு
 4. நீங்க எல்.ஐ.சி. ஏஐண்டுகளைப் பார்த்த தேயில்லை போல! எல்...என்று ஆரம்பித்தாலே உங்களிடம் ஒரு ஜீவன் சுரபி இல்ல ஜீவன் அக்ஷயா என்று ஏதாவது ஃபார்மை நீட்டி ஜீவனை வாங்கி விடுவார்கள்...இப்படித் தயங்குபவர் பிஸினஸே பண்ண முடியாதே பாஸ்?!

  இந்த மாதிரி எழுதுற கத்துக்குட்டி ஸ்டேஜல்லாம் நீங்க தாண்டியாச்சுன்னு புரியலையா?!

  சரவணன்

  பதிலளிநீக்கு
 5. கிங்ங்ங்க்குண்ணு ஏத்தி குப்புன்னு இறக்கிட்டீங்களே ...

  பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. Mr.Yuva,

  Do you know that the original name for luckylook is actually spelled "luckyluke"?

  -Spider.

  பதிலளிநீக்கு
 7. "கருப்பு சிவப்பு" டி-ஷர்ட்.. இங்கேயுமா.. :)

  பதிலளிநீக்கு
 8. LIC Agents do not hestitate for these things. You probably didn't meet any of them, it looks like :-)

  பதிலளிநீக்கு
 9. பாத்து சார்!
  இந்த கதைய யாரு திருடிடப்போறாங்க.
  காலகிரகம்டா...!

  பதிலளிநீக்கு
 10. இந்த மாதிரி எழுதுற கத்துக்குட்டி ஸ்டேஜல்லாம் நீங்க தாண்டியாச்சுன்னு புரியலையா?!//நிச்சயம் இதை நான் வழிமொழிகிறேன். இந்த மாதிரியான சின்ன கதைகள் உங்கள் அடுத்த நாவலை பின்னடைவு அடையச் செய்யும்...

  என் வலையில்;
  ஜெஃப்ரி ஆர்ச்சரின் த்ரில்லர் சிறுகதை-தமிழில்

  பதிலளிநீக்கு
 11. உங்களின் கதை மிகவும் அருமை சார்......  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  பதிலளிநீக்கு
 12. sorry, நீங்கள் இந்த range இல் எழுதுவது கவலையாய் உள்ளது.

  பதிலளிநீக்கு
 13. கயல்விழி: தூ...!!

  பதிலளிநீக்கு
 14. அனானி கமண்ட்டை சீக்கிரம் டெலிட் பண்ணிடுங்க..இல்லைன்னா நாளைக்கு நீங்க வீட்டைவிட்டு வெளிய வரமுடியாது. காதில வச்ச போனை கீழ வைக்க முடியாது..ஆஃபீஸ்ல ஒழுங்கா பொழைப்ப பாக்கமுடியாது. இந்தியாவில இருக்கிற அத்தனை இன்ஸுரன்ஸ் கம்பெனிகளோட, அத்தனை பாலிஸிகளும் உங்களுக்கு அத்துப்படியாகிடும்.
  அப்புறம், கயல்விழி பின்னூட்டத்தில பின்னீட்டாங்க!

  பதிலளிநீக்கு