January 20, 2012

நண்பன்

மூன்று வருடங்களுக்கு முன்பு 3 இடியட்ஸ் வெளியானபோது ஊரே கொண்டாடிக் கொண்டிருந்தது. ‘இன்னும் 3 இடியட்ஸ் பார்க்கலயா?’ என்று கேட்பவர்களிடம் ‘இல்லை’ என்றபோது ஏதோ புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு படம் பார்க்காதது அவ்வளவு பெரிய குற்றமா என்று நொந்துக் கொள்வேன். இந்தியாவே கொண்டாடிய 3 இடியட்ஸை பார்க்காமல் கவனமாக தவிர்த்து வந்ததற்கு ஒரே ஒரு காரணம் அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிக்க தமிழில் தயாராகப் போகிறது என்பதை கேள்விப்பட்டதால்தான். ஒரு படத்தை ரீமேக்கில் பார்க்கும்போது ஒப்பிடுதல்கள் ஏற்படுத்தும் அசவுகரியம் எரிச்சலானது. ‘நண்பன்’ எரிச்சலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலேயே இடியட்ஸைப் பார்க்கவில்லை. ஒருவழியாக WAIT IS OVER

நண்பன் – ஷங்கரின் படமுமல்ல, விஜய்யின் படமுமல்ல. அதனாலென்ன? ALL IS WELL

குஷி வந்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஆகிறது. குஷியில் தெரிந்த விஜய்யைவிட நான்கைந்து வயது குறைந்த விஜய்யோ இவர் எண்ணுமளவுக்கு இளமை கொப்பளிக்கிறது விஜய்யின் தோற்றத்தில். பாபா தோல்வியால் மனமுடைந்துப் போயிருந்த ரஜினிக்கு அவரது கேரியரில் சந்திரமுகி எவ்வளவு முக்கியமான படமோ, அதே அளவுக்கு விஜய்க்கு நண்பன் முக்கியமான படம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து பிளாக்பஸ்டர் ஹிட். பொங்கல் எப்போதும் இளையதளபதியை கைவிடுவதேயில்லை. தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு விஜய் நடிப்பார் என்பதை நம்பவே இயலவில்லை. விஜய்யின் டயலாக் டெலிவரி பல நேரங்களில் எரிச்சலூட்டும். வாயில் மாவா போட்டுக் குதப்பிக்கொண்டே உதட்டை மட்டும் அசைப்பது மாதிரி தெரியும். நண்பனில் இந்த ஸ்டைல் மிஸ்ஸிங் என்பது பெரிய ஆறுதல். பஞ்ச் டயலாக், ஓபனிங் சாங், எலும்புகளை நொறுக்கும் ஃபைட் சீனெல்லாம் இல்லாமல் விஜய் நடித்திருக்கிறார். இருந்தாலும் ஓபனிங்குக்கு மட்டுமாவது ஒரு அதிரடி ஃபைட் வைத்திருக்கலாமோவென்று தோணத்தான் செய்கிறது. அதனாலென்ன? ANIL IS WELL

கொழுக் மொழுக் அழகுப்புயலான அனுயாவை அக்கா ஆக்கிவிட்டு, ஈர்க்குச்சி இலியானாவை ஹீரோயின் ரோலுக்கு புக் செய்த ஷங்கரின் ரசனை என்ன ரசனையோ? அனுயா ரசிகர்கள் தியேட்டரில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். ரவிதேஜாவின் ‘கிக்’கில் கிக் ஏற்றிய இலியானா ஏனிப்படி இளைத்துப்போனார் என்றே தெரியவில்லை. எப்படியிருந்த இலியான இப்படி சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஆகிவிட்டிருக்கிறார். முகத்தைக் கண்டு அடையாளம் காண இயலாத அளவுக்கு தோற்றம் மாறிவிட்டிருக்கிறது. கடைசியாக இடுப்பைப் பார்த்துதான் இது இலியானா என்று தெரிந்துகொள்ள முடிந்தது. இடுப்பு சைஸ் இருபத்து நாலு இஞ்சாக இருக்கலாம். ILIYANA IS BAD

இந்தப் படத்தில் சத்யராஜை அனைவரும் பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கமான சத்யராஜின் பாடி லேங்குவேஜூம், டயலாக் டெலிவரியுமே அபாரமாக இருக்கும். சத்யராஜின் கேரியரிலேயே அவர் நடித்த படா மொக்கை கேரக்டரான வில்லாதி வில்லன் ‘பூ’வை மறுபடியும் ரீமேக் செய்து பிரின்சிபலாக நடித்திருக்கிறார். வாயை வேறு கவுரவம் சிவாஜி மாதிரி வைத்துக்கொண்டு குரல் மாற்றிப் பேசும்போது எரிச்சல் மண்டிக்கொண்டு வருகிறது. SORRY VIRUS

2002ல் ரோஜாக்கூட்டத்தில் பார்த்த ஸ்ரீகாந்த் பத்து வருடம் கழிந்தும் அப்படியேதான் இருக்கிறார். ஒரு இன்ச் கூட நடிப்பாற்றல் அவருக்கு வளரவேயில்லை என்பதுதான் சோகம். நல்லவேளையாக ஜீவாவும், சத்யனும் மாறி, மாறி அசத்துவதால், ஸ்ரீகாந்த் ரொம்ப உறுத்தவில்லை. குறிப்பாக கவுன்சலிங் காட்சியில் அடக்கி வாசித்து, சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் அசத்தும் ஜீவா.. க்ளாஸ்.. JEEVA IS TOO WELL

படம் பார்த்த சில நண்பர்கள் இப்படம் மிக மோசமான அரசியலை முன்வைப்பதாக சொல்கிறார்கள். ஏனோ எனக்கு அப்படி எதுவும் உறுத்தவில்லை. அல்லது அம்மாதிரி அரசியல் பார்வையோடு படம் பார்க்கத் தெரியவில்லை. மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது. ஜீவாவின் குடும்பப் பின்னணியை காட்டும் காட்சிகளில் ஏழ்மையை கேலி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. போதுமான இரக்கம் கோரவில்லை என்பதைத் தவிர்த்து இதில் வேறு பிரச்சினை இருப்பதாக தோன்றவில்லை. ஏழ்மையை யதார்த்தமாக காட்டுவதாக சொல்லிக் கொள்ளும் சில படைப்புகள் மோசமான கருத்தியல் வன்முறையை உருவாக்கவல்லவை. கல்விமுறை மாறவேண்டும் என்கிற படத்தின் அடிநாதத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இது சேத்தன் பகத் எழுதிய ஏதோ ஒரு நாவலின் ‘தீம்’. அவருக்கு கிரெடிட் கொடுக்கவில்லை என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு மாலன் எழுதிய ‘தப்புக்கணக்கு’ என்கிற சிறுகதை ஒன்றும்கூட இதே தீமில் எழுதப்பட்டிருக்கிறது. என்ன, அதில் எல்.கே.ஜி. மாணவி. இதில் என்ஜினியரிங் மாணவன். தேடிப் பார்த்தால் இதே தீமை நிறையப் பேர் எழுதியிருக்கலாம். அரசியல்ரீதியாக ஷங்கரை திட்ட அவரது பழைய படங்களே போதுமானது. ஒப்பீட்டளவில் அவரது முந்தையப் படங்களோடு ஒப்பிட்டால் நண்பன் இந்த அரசியல் விஷயத்தில் ஓரளவுக்கு பெட்டர் என்றே கருதுகிறேன். I MAY BE BLIND IN THIS CASE


இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை பாடல்கள் என்றே புரியவில்லை. எல்லா பாட்டும் ஸ்பீட் பிரேக்கர் தான். படத்தில் இருக்கும் ஒரே உருப்படியான பாடலான ‘ஃப்ரெண்டை போல யாரு மச்சான்’ டைட்டில் பாடலாக வீணடிக்கப்பட்டு விட்டது. மற்ற பாடல்கள் எதுவும் திரும்பக் கேட்கக்கூடிய ரகமாக கூட இல்லை. ஷங்கரின் படங்களிலும் சரி. விஜய்யின் படங்களிலும் சரி. இதுதான் படுமோசமான இசை ஆல்பம். MUSIC IS WORST

பிரசவத்தில் ஷங்கருக்கு என்னதான் ஆர்வமோ தெரியவில்லை. முந்தையப் படத்தில் ரோபோ பிரசவம் பார்த்தது. இந்தப் படத்தில் அணில் பிரசவம் பார்க்கிறது. இந்தக் காட்சிக்கு இன்னும் டாக்டர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று தெரியவில்லை. இம்முறையில் பிரசவம் சாத்தியமா என்றும் புரியவில்லை. ஷங்கருக்கு ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களில் க்ளைமேக்ஸ்கள் ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ‘நாம சாதிச்சிட்டோம்’ என்று கூறி கடைசியில் ஒருவரையொருவர் அமெரிக்கர்கள் கட்டிக் கொள்வார்கள். அதே பாணி காட்சிகள் இவரது படங்களில் தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருக்கிறது. முதல் பாதி முழுக்க இளையத் தலைமுறைக்கான அட்வைஸ் மழை கொட்டோ, கொட்டுவென்று கொட்டுகிறது. வசனம் எழுதியவர் அப்துல்கலாமா அல்லது இறையன்புவா என்று டவுட்டு வந்துத் தொலைக்கிறது. OVERDOSE


‘ஃபீல்குட் மூவிஸ்’ என்று சொல்லக்கூடிய வகை தமிழில் அருகிக்கொண்டு இருக்கிறது. முன்பெல்லாம் கடைசி காட்சியில் எல்லாப் பாத்திரங்களும் (வில்லன் உட்பட) வாய்நிறைய சிரித்துக்கொண்டு சுபம் போடுவார்கள். அரிதாகிவிட்ட இந்த க்ளைமேக்ஸ் கலாச்சாரம் நண்பனில் மீண்டும் மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு அடுத்த சில நாட்களில் மக்கள் படையெடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. ALL ARE FEELING VERY GOOD

46 comments:

 1. "முந்தையப் படத்தில் ரோபோ பிரசவம் பார்த்தது. இந்தப் படத்தில் அணில் பிரசவம் பார்க்கிறது." :)யுவா பஞ்ச் :) சிரிக்காமல் இருக்க முடியவில்லை !!! இருந்தாலும் சத்தியராஜ் நன்றாகச் செய்திருப்பதாகவே எனக்கு பட்டது !!மிக நேர்மையான நல்ல விமர்சனம் !!
  -Bloorockz Ravi

  ReplyDelete
 2. நிறைவான விமர்சனம்.

  ReplyDelete
 3. yuva விமர்சனம் வாந்தாச்சி all is well

  ReplyDelete
 4. ச‌த்ய‌ராஜ், ஸ்ரீகாந்த் விஷ‌ய‌த்திலும், ஜீவா,ச‌த்ய‌ன் விஷ‌ய‌த்திலும் 100% ரெண்டு பேரும் ஒத்துப் போகிறோம். இசை சுமார் என்றாலும் அஸ்க‌ ல‌ஸ்கா என‌க்கு மிக‌வும் பிடிக்குது..

  ஏன் திடீர்ன்னு சாரு போல‌ ந‌டுந‌டுவே ஆங்கில‌ம்?????

  க‌தைக்காக‌ எல்லோரிட‌த்திலும் அடி வாங்க‌ விஜ‌ய் ச‌ம்ம‌த்தித்திருக்கிரார். ஆனால் ஷ‌ங்க‌ர் த‌ன‌க்காக‌வோ, க‌லெக்ஷ‌னுக‌க‌வோ வைத்த‌ இலியானா பாட‌லை விஜ‌ய் ரசிக‌ர்க‌ளுக்கு என்று சொன்ன‌தைதான் ர‌சிக்க‌ முடிய‌வில்லை.


  விம‌ர்ச‌ன‌ம் என‌க்கு பிடித்திருந்த‌து

  ReplyDelete
 5. புத்தகக் கண்காட்சியினால் விமர்சனம் லேட்டா வந்துடுச்சுன்னு நெனக்கிறேன்... :) :) இருந்தாலும் எதிர்பாத்த மாதிரியே சொல்லிட்டீங்க படத்த பத்தி...
  நெகட்டிவான விஷயங்கள் (ஜீவாவின் அக்கா பாத்திரப்படைப்பு - கிண்டல், கற்பழித்தல் - கொங்கை வசனங்கள்) சிலது இருந்தாலும் ஒட்டுமொத்த படம் நல்லா இருக்குறதுனால பெருசா தெரியல... Anyhow ... :) :) தெளிவான விமர்சனம்...!

  ReplyDelete
 6. நண்பனுக்கு அனில் ஒட்டியது போல உங்கள் விமர்சனத்தில் ஆங்கிலம், லக்கி.

  ReplyDelete
 7. சார் யுவா சார் சூப்பர் சார்...! கலக்கிடீங்க சார்..! ஆனா இந்த விமர்சனத்துல நண்டுக்கு சிலது புரில சார்..! கொஞ்சம் வெவரமா பதில் சொன்னா நல்லா இருக்கும்!

  << இந்தியாவே கொண்டாடிய 3 இடியட்ஸை பார்க்காமல் கவனமாக தவிர்த்து வந்ததற்கு ஒரே ஒரு காரணம் அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிக்க தமிழில் தயாராகப் போகிறது என்பதை கேள்விப்பட்டதால்தான். >>
  அது எப்புடி சார் 3 இடியட்ஸ் வந்த உடனே உங்களுக்கு இவ்ளோ வெவரமும் தெரிஞ்சுது? படம் வந்து நல்லா ஓடி பேர் வாங்குனதுக்கு அப்புறம் தான் ரீ மேக் பன்ற திட்டம் ஷங்கருக்கே வந்திருக்கும். அப்போ அதுவரை நீங்க படம் பாக்காததற்கு வேறு பல காரணம் இருந்திருக்கும். அத சொல்லாம என்னவோ பெட்டர்மாஸ் லைட்டே வேணும்னு ரீ மேக்குகாக தான் காத்துட்டிருந்தேன்னு சொல்றது எப்படி சார் நியாயம்?

  <>
  பல நேரங்களில்...? அது எந்தந்த நேரங்களில் என்று கூற முடியுமா சார்? உங்களின் விமர்சன பார்வை எவ்வளவு குறுகிப்போய் உள்ளது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். உங்களுக்கு தெரிந்த நடுநிலையான நல்ல இயக்குனர் அல்லது தேர்ந்த விமர்சகரிடம் கேட்டுப்பாருங்கள். விஜய்க்கு நன்றாக வருவது நடனமும் வசன உச்சரிப்பும் என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். நிலைமை இப்படி இருக்க வசன உச்சரிப்பு பல இடங்களில் எரிச்சலூட்டும் என்பது மிக மட்டமான கருத்து. அப்படியெனில் நவரச நாயகன் கார்த்திக், அல்டிமேட் ஸ்டார் அஜித் இவர்களின் வசன உச்சரிப்பை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்?

  <>
  <>
  சார்.. இது ஒரு ரீமேக் படம் என்பதை கொஞ்சமும் மனதில் நிறுத்தாமல் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். இந்த படத்தில் சத்யராஜ் ஹிந்தி படத்தில் வரும் பிரின்சிபால் போல இமிடேட் செய்திருக்கிறார். அவ்வளவே!
  ஷங்கரின் முந்தய படத்தில் ரோபோ பிரசவம் பார்த்ததும் இந்தப்படத்தில் விஜய் பார்ப்பதும் 100 % தற்செயலாக அமைந்த ஒன்று. ஹிந்தி படத்தில் ஆமிர்கான் பார்கிறார் இங்கு விஜய் பார்கிறார். அவ்வளவே!
  ஷங்கர் ரீமேக் என்கிற பெயரில் பெரிதாக மாற்றம் ஏதும் செய்யாமல் காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்பது கூடவா உங்களுக்கு புரியவில்லை? மூலப்படத்தை பார்க்காமல் விமர்சனம் எழுதவந்தால் இப்படி முட்டாள்தனமாகவே எழுதவேண்டிவரும்.

  <>
  அட்வைஸ் மழையா? எல்லாம் நன்மைக்கே, உன் மனசுக்கு எது பிடிக்குதோ அத செய்; எஞ்சினியரின்ல வர டெக்னிகல் விஷயங்கள மனப்பாடம் செய்றது வேஸ்ட், புரிஞ்சு படிக்கணும்; பணம் தான் முக்கியம்னு நெனைக்கிறவன் கூட லைப் முழுக்க வாழ முடியாது! இந்த மூணு அட்வைஸ் தவிர வேற எந்த அட்வைசும் எனக்கு தெரியல... எதோ மழைன்னு சொன்னீக... இத தவிர எவ்ளோ அட்வைஸ் சார் மிச்சம் இருக்கு?

  << மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது.>>
  திரும்பவும் ஒரு சகிக்க முடியாத மிகக் கேவலமான விமர்சன வரிகள். தலித் மாணவரா? எதை வைத்து சார் அந்த மாணவர் தலித்னு சொல்றீங்க? கருப்பா இருக்குறார்! அதனாலயா? அவர் கொடுத்த காலக்கெடுவிற்குள் புராஜெக்ட் ஒர்க்கை முடிக்கவில்லை. அதனால் டிகிரி வாங்க முடியாது. என்று பிரின்சிபால்.சத்யராஜ் அந்த மாணவரின் தந்தையிடம் கூறுகிறார். மனமுடைந்த மாணவன் ப்ரொஜெக்டை குப்பையில் எறிந்துவிட்டு விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறான். 90% சதவீத ப்ரோஜக்ட் முடித்த நிலையில் பிரின்சிபலின் பிடிவாத குணமும் அவர் கொடுத்த மன அழுத்தமுமே தற்கொலைக்கு காரணம். இங்கே தலித் எங்க சார் வந்துச்சு. எவ்வளவு கேவலமான விமர்சன வரிகள்!

  சார் தயவு செஞ்சு சொல்றேன்... இது மாதிரி மேலோட்டமா படத்த பாத்துட்டு விமர்சனம் எழுதாதிங்க. சிறந்த வலைபதிவர்கான சுஜாதா விருதெல்லாம் வாங்கி இருக்கீங்க! புத்தகம்லாம் வெளியிட்டிருக்கீங்க! புதிய தலைமுறை பத்திரிக்கைல வேற வேல பாக்குறீங்க! இவ்ளோ தகுதி இருக்குற நீங்க இப்டி முட்டாள்தனமா விமர்சனம் பண்றது நல்லாவே இல்ல சார்! இதுல நல்ல விமர்சனம், தெளிவான விமர்சனும்னு பின்னூட்டம் வேறு!

  - நன்றி!
  'நியுட்' நண்டு

  ReplyDelete
 8. நிர்வான நண்டு சார்!

  பாயிண்ட் நெ. 1 : ரஜினி சாரோட எந்திரன் ஷூட்டிங் அப்போ மும்பையிலே ஷங்கர் சார் இருந்தார். அப்போ தியேட்டரில் படம் பார்த்ததுமே இதை தமிழில் பண்ணனும்னு சொன்னாராம். எனவே த்ரீ இடியட்ஸ் ரிலீஸ் ஆனப்பவே ஷங்கர் தமிழில் பண்ணப்போற விஷயம் பரவிடிச்சி...

  பாயிண்ட் நெ. 2 : இது ரீமேக் படம். டப்பிங் படமில்லை. எனவே வாயை ஒழுங்கா வெச்சிக்கிட்டு சத்தியராஜ் நடிச்சிருக்கலாம்னு எதிர்ப்பார்க்கிறதில் பெருசா தப்பொண்ணுமில்லை. அப்படியே ஈயடிச்சான் காப்பிதான் அடிக்கணும்னா இடியட்ஸில் நடிச்சவரே இங்கே நடிக்கலாமே, சத்யராஜி எதுக்கு?

  பாயிண்ட் நெ. 3 : நீங்கள் அண்டார்ட்டிகாவில் வசிக்கும் எஸ்கிமோவாக இருக்கக்கூடும். வட இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 15 தலித் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே காட்சிப்படுத்தப்பட்டதும் அதுதான். உங்களுக்கு அவன் தலித் என்று வசனத்தில் காட்சி வைத்தால்தான் புரியுமென்ற அளவுக்கு சிறுமூளை என்றால் நானோ, ஷங்கரோ செய்வதற்கு ஏதுமில்லை.

  பாயிண்ட் நெ. 4 : நீங்கள் 3 இடியட்ஸையும் பார்க்கவில்லை, நண்பனையும் பார்த்துத் தொலைக்கவில்லை என்று தெரிகிறது. விஜய் காலேஜூக்கு போகும் முதல் நாளில் தொடங்கி எல்லா காட்சியிலும் தலா ஒரு அட்வைஸாவது சொல்கிறார்.

  பாயிண்ட் நெ. 5 : அடுத்தவாட்டி இங்கே பின்னூட்டம் போடுறப்போ முட்டாள், கிட்டாள்னு தேவையில்லாம வாயை உட்டீங்கன்னா மூக்கை உடைச்சுடுவேன் :-)

  ReplyDelete
 9. ஒப்பீட்டளவில் ஹிந்தி வெர்ஷன் அருமை. ஒவ்வொரு நடிகர்களுமே அதில் அசத்தி இருப்பார்கள். பொதுவாகவே ஹிந்தி மொழிப் படங்களை பார்ப்பதில்லை. "தாரே சமேன் பார்" பார்த்ததிலிருந்து அமீர்கான் மட்டும் விதிவிலக்கு.

  அந்த பிரசவ காட்சி... ஹிந்தி வெர்ஷனில் இருப்பதுபோலவே தமிழிலும் இருக்கிறது. ஷங்கரை குற்றம் சொன்னால் எப்படி?

  :-)

  ReplyDelete
 10. ஏன் சார் இவ்ளோ கோவப்படுறீங்க? ஆளப்பிறந்தவன் ஆத்திரப்படமாட்டான்னு வேற சொல்றீங்க! கொஞ்சம் ஆத்திரப்படாம கமெண்ட்ட படிங்க சார்!
  மொத்தம் அஞ்சு பாய்ண்ட் சொல்லி இருக்கேன்! மூணுக்கு + அரைக்கு தான் பதில் சொல்லி இருக்கீங்க! (விஜய் பிரசவ விவகாரம்!) கொஞ்சம் பொறுமையா படிச்சு விட்டுப்போன கமண்ட்டுக்கு பதில் சொல்லுங்க..
  அப்புறமா இத பத்தி விலாவரியா பேசலாம்!
  (பி.கு) நண்டுக்கு ஒடைக்குற அளவு பெரிய மூக்கில்ல சார்! :-)

  ReplyDelete
 11. நிர்வாண நண்டு சார்!

  மீதி ஒண்ணரை எதுன்னே கண்டுபுடிக்க முடியலை. நீங்க அந்தக்கால பெருசு போல. எளிமையா எழுத வரலை உங்களுக்கு :-)

  பாயிண்ட் நெ.6 : நான் தான் மூலப்படத்தை பார்க்கலைன்னு சொல்றேனில்லை. அப்புறம் அங்கிட்டு அமீர்கான் பிரசவம் பார்த்தது எனக்கு எப்படி தெரியும்? நான் எதைப் பார்த்தேனோ அதைப் பத்திதானே சார் பேசமுடியும்?

  பாயிண்ட் நெ. 7 : ஷங்கர் எதையும் மாத்தாம எடுத்திருக்காருன்னு எனக்கு எப்படி சார் தெரியும்? நான் தான் த்ரீ முட்டாள்கள் பார்க்கலைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்னே?

  பாயிண்ட் நெ. 8 : மூலப்படத்தை பார்க்காம, ரீமேக்குக்கு விமர்சனம் எழுதக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் போட்டிருக்காங்களா சார்? அப்படியே மூலப்படத்தை பார்த்துட்டோம், இது அதோட ஈயடிச்சான் காப்பின்னா மூலப்படத்துக்கே விமர்சனம் எழுதிட்டுப் போயிடலாமே சார்? உங்ககூட பேசிப்பேசி எனக்கு மூலமே வந்துடும் போலிருக்கு... :-(

  பாயிண்ட் நெ. 9 : நண்டுக்கு மூக்கு இல்லைன்னாலும் கொடுக்கு இருக்குமில்லே? வெட்டித் தள்ளிடுவோம் :-)

  ReplyDelete
 12. //ரவிதேஜாவின் ‘கிக்’கில் கிக் ஏற்றிய இலியானா ஏனிப்படி இளைத்துப்போனார் என்றே தெரியவில்லை//...sir athu size zero nranga....mudiyala

  ReplyDelete
 13. சத்யராஜ், விஜய், பாடல்கள், இலியானா, ஜீவா இவர்களைப் பற்றிய உங்களின் எல்லாக் கருத்துக்களுக்கும் நான் உடன்படுகிறேன். சத்யன் கூட அரைத்த மாவையே அரைத்திருக்கிறார், கொஞ்சம் கூட மாற்றமில்லாத நடிப்பு, ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையே இல்லை. காசுக்குப் பிடித்த கேடு, P .வாசுவே செய்திருக்கலாம், ஜெயிக்க வைக்கிற கதை, அப்புறமென்ன கவலை ?

  ReplyDelete
 14. நீங்கள் பதில் சொல்லாத எனது சந்தேகங்கள்!

  # விஜய்யின் டயலாக் டெலிவரி பல இடங்களில் எரிச்சலூட்டும்?

  அது எந்தெந்த இடங்கள்?

  # அந்த மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் கீழ்வருமாறு!

  1. அவர் குறித்த நேரத்தில் ப்ராஜெக்ட் ஒர்க் முடிக்கவில்லை.

  2 . தமிழ் நாட்டிலேயே முதலிடத்திலும் இந்திய அளவில் ஏழாம் இடத்திலும் இருக்கும் ஒரு கல்லூரியின் கண்டிப்பான பிரின்சிபால், அந்த மாணவரின் தந்தையிடம் கொடுத்த காலக்கெடுவிற்குள் ப்ராஜெக்ட் ஒர்க் முடிக்காத ஒரே காரணத்தால் இந்த வருடம் டிகிரி வாங்க மாட்டான் என்கிறார்.

  3. மனஅழுத்தம் என்ற ஒரே காரணம் அவன் சாவிற்கு காரணமாகிறது. அடுத்த காட்சியில் இதை படத்தின் நாயகனே சொல்கிறார்.

  எப்படி இருக்க இதை வைத்து << மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது.>> என்று சொன்னீர்கள்! இந்தப்படத்தில் தற்கொலைக்கு காரணம் சாதீய வெறி அல்ல. மன அழுத்தமே!

  ஐயா உங்களுக்கு புரிய வைக்கவே இவ்வாறு விளக்க வேண்டி இருக்கிறது! தமிழில் வெண்பா எழுத தெரிந்த எனக்கு சுருங்க சொல்வதின் அம்சம் பற்றி விளக்க வேண்டாம்!

  இந்த இரண்டு கேள்விகளுக்காவது மழுப்பாமல் நேர் பதில் கூறுங்கள்!

  நன்றி!

  ReplyDelete
 15. நிர்வாண நண்டு சார்.

  பாயிண்ட் நெ. 10 : விஜய்யின் டயலாக் டெலிவரி பல இடங்களில் எரிச்சலூட்டும் என்று சொன்னது அவரது முந்தையப் படங்களில். நண்பனில் அவ்வாறு இல்லை என்று பாராட்டியிருக்கிறேன். உங்களுக்கு சந்தேகமிருந்தால் முகவரி கொடுங்கள். சுறா டிவிடி ஒன்று பார்சல் செய்கிறேன்.

  பாயிண்ட் நெ. 11 : தலித் மாணவர்களுக்கு நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மன அழுத்தம் பல்வேறு வகையிலாக - சாதிரீதியில் மட்டுமன்றி - அகாடமிக் ரீதியிலும் வழங்கப்படுகிறது என்கிற விவாதம் இரண்டு வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. சில காலம் முன்பு உயிர்மை இதழில் கூட அ.முத்துக்கிருஷ்ணன் இது தொடர்பான கட்டுரையை எழுதியிருந்தார். இதையடுத்து ஃபேஸ்புக்கில் உங்களை மாதிரியே மொக்கையாக சில பேர் தற்கொலைக்கு காரணம் அழுத்தம்தான். இந்த அழுத்தத்துக்கு தயாரில்லாதவனுக்கெல்லாம் உயர்கல்வி தகுதி கிடையாது என்று உளறிவைத்தார்கள். இதுதான் நம் நாட்டின் தற்போதைய கல்விச்சூழல். இப்படிப்பட்ட நிலையில், இப்படிப்பட்ட காட்சி வைக்கப்பட்டால் இதை கனெக்ட் செய்துதான் படம் பார்க்கணும். மாணவன் கருப்பாக இருக்கிறான் என்று மட்டுமல்ல, அவனுடைய தந்தை ஒரு பண்ணையில் வேலை செய்வதாகவும் க்ளூ கொடுத்திருக்கிறார்கள். ப்ராமின்ஸ் கோழிப்பண்ணையில் வேலை பார்க்கக்கூடாதா என்று அடுத்து கேள்வி கேட்டீர்களேயானால், உங்கள் புத்திசாலித்தனத்தை மதித்து பதிலே சொல்லமாட்டேன்.

  பாயிண்ட் நெ. 12 : உங்களுக்கு வெண்பா எழுத வருமா என்று எனக்கு தெரியாது. இங்கே போட்ட பின்னூட்டங்களை வைத்து உரைநடையில் நீங்கள் மொன்னை என்று மட்டும் புரிந்துகொண்டேன் சார்.

  ReplyDelete
 16. சார் செம காமெடி சார்!
  மன அழுத்தம் என்ன தலித்துக்கு மட்டுமே வருமா? படத்துல இருக்குறத பேசுங்க சார்!
  பாருங்க மகா ஜனங்களே!ஒருத்தர் கருப்பா இருந்தா, அவர் அப்பா கோழிப்பண்ணைல வேலை பார்த்தா அவர் தலித்!
  அருமையான விளக்கம் சார்!
  வளர்க உங்களின் எழுத்துப்பணி!
  மிக்க நன்றி! < முடியலடா சாமி! >

  ReplyDelete
 17. நிர்வாண நண்டு சார்!

  அப்போன்னா தற்கொலை பண்ணிக்கிட்ட மாணவன் அய்யிருன்னு சொல்ல வர்றீங்களா சார்?

  மன அழுத்தம் தாங்காம சமீபத்தில் ஐ.ஐ.டி.யிலோ / எய்மிஸிலோ / ஐ.ஐ.எம்.மிலோ எங்கிட்டாவது அய்யிரு மாணவன் தற்கொலை பண்ணிக்கிட்ட கேஸ் ஹிஸ்டரி வெச்சிருக்கீங்களா சார்?

  ஆனா 15க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் சூசைட் பண்ணிக்கிட்ட ஆதாரம் இருக்குங்களே சார்?

  படத்துலே இருக்குறதை மட்டுமே பேசணும்னு நீங்க புது ரூல் போடாதீங்க சார். அப்புறம் படத்தை பத்தி தியேட்டருலே மட்டும்தான் பேசணும் அடுத்த ரூலும் போடுவீங்க போல.

  எனக்கும்தான் முடியலை உங்க அறிவாற்றலை எண்ணி... :-(

  ReplyDelete
 18. நிர்வாண நண்டு சார்!

  இந்தாங்க சூசைட் பண்ணிக்கிட்ட தலித் ஸ்டூடன்ஸு லிஸ்ட்டு...

  http://thedeathofmeritinindia.wordpress.com/2011/04/25/list-of-dalit-students-committing-suicide-in-last-four-years-in-indias-premier-institutions/

  ReplyDelete
 19. என்ன சார் ஒண்ணு தலித்துனு சொல்றீங்க! இல்ல அய்யர்னு சொல்றீங்க! வேற ஜாதியே நாட்ல இல்லியா சார்! சரி விடுங்க சார்! உங்க விமர்சனம் அருமை! சூப்பரு!
  - மிக்க நன்றி!
  நண்டு!

  ReplyDelete
 20. கோழிப் பண்ணையில் வேலை செய்யும் ஒருவருடைய மகன் தலித் என்பது ஒரு குறியீடே. பொருளாதாரத்தால், சமூகத்தால், சாதிப்பிரிவால் ஒடுக்கப்படும் எல்லோருமே தலித்துகள் தானே. அப்படியெனில் முக்கியப் பாத்திரத்தில் வரும் "விஜய்" சமையல்காரனின் மகன். அவரும் தலித் தானே. அவருடைய திறமை பொருளாதாரத்தில் பலம் படைத்த ஒருவரால் சுரண்டப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டுமொத்த சமூகமே இப்படித் தானே சுரண்டப்படுகிறது. விஜையும் ஒருவகையில் ஒடுக்கப்படுபவர்களின் குறியீடு தானே .

  சினிமா என்று மட்டுமே விவாதிப்பதைக் காட்டிலும், ஒடுக்கப்படுபவர்களின் இரு வேறு குறியீட்டுத் தன்மையை ஆழ அகல விவாதிக்கலாமே.

  அதை சார்ந்தும் கருத்துக்களை முன்வைக்கும் படி நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 21. good review for a feel good movie

  ReplyDelete
 22. படித்து சிரித்த வரிகள்:
  அடுத்தவாட்டி இங்கே பின்னூட்டம் போடுறப்போ முட்டாள், கிட்டாள்னு தேவையில்லாம வாயை உட்டீங்கன்னா மூக்கை உடைச்சுடுவேன் :-)

  உங்களுக்கு வெண்பா எழுத வருமா என்று எனக்கு தெரியாது. இங்கே போட்ட பின்னூட்டங்களை வைத்து உரைநடையில் நீங்கள் மொன்னை என்று மட்டும் புரிந்துகொண்டேன் சார்.

  நண்டுக்கு மூக்கு இல்லைன்னாலும் கொடுக்கு இருக்குமில்லே? வெட்டித் தள்ளிடுவோம் :-)

  ReplyDelete
 23. Lucky --> Your review is good....Nandu --> Your comments are too good..:)

  ReplyDelete
 24. 3 idiotsயை விட நண்பன் சுவாரசியம் இல்லை என்றாலும், இந்த விமர்சனத்தை விட அதன் பின்னூட்டங்கள் சுவாரசியம் அளிக்கிறது! :)

  ReplyDelete
 25. Vidunga Nandu sir. Yuva is good writer ( comedy ) .he knows only 2 case in the world and avlothan knowledge.
  But, review is good and he has rights to write /speak.
  Sujatha award avarukku CHARU nala kidaichuthu.Athai poi periya vishayama pesikittu.
  I like yuva for his wrting style.

  Karvind79

  ReplyDelete
 26. எனக்கு சகிப்பு தன்மை குறைவு என்பதால் .................மேய்ப்பவன் நடித்த படங்களை பார்ப்பதில்லை.

  பாடல்களை கேட்டேன். படு குப்பை. சங்கர் தனது படைப்பூக்கத்தை இழந்து வெகு நாட்களாகிவிட்டது.
  ஹாரிஸ் ஜெயராஜும் அப்படியே.

  ReplyDelete
 27. சேத்தன் பகத் எழுதிய ஏதோ ஒரு நாவலின் ‘தீம்’ - யுவா, ‘ஒரிஜினல்’-னு சொல்லிகிட்டு திரியிற 3-இடியட்ஸ் சேத்தன் பகத்தோட ஃபைவ் பாயிண்ட் சம்ஒன் நாவலோட பக்கித்தனமான காப்பி. நாவலைப் பல தடவை படிச்சவன்ற முறைல தெளிவாச் சொல்றேன். நாவலோட கதை, கட்டமைப்பு, சீன்கள், இன்னபிற முக்கியமான விஷயங்களை எல்லாம் அப்படியே உருவி, சுஜாதாவோட ப்ரியா நாவலை நாசம் பண்ணின மாதிரி அங்கங்க சினிமா சரக்கு சேத்து நாசம் பண்ணது தான் 3-இடியட்ஸ். வேற எப்படியும் கற்பனை பண்ணிக்காதீங்க.

  தற்கொலை விஷயம் நாவல்ல வெகு தெளிவா படிப்பு சம்பந்தப்பட்டது. அதை அப்படியே உருவிப்போட்டு சினிமாத்தனமாக்கினதுதான் கிந்திப்படமும் தமிழ்ப்படமும். தலித் கண்ணோட்டமும் அது இதுன்னு இல்லாத விஷயத்தையெல்லாம் தற்குறிப்பேற்றாதீங்க :)

  ReplyDelete
 28. Lucky's review is good but Nandu's comments are Excellent..

  ReplyDelete
 29. Mr Yuva.. I think ur yoo much on Vijay related news. How dare u call him as ANIL? Did u saw ur face in mirror? Just b'coz received sujatha award , did u think ur a genius? U should react fair in reviewing movies. Always giving good points to telugu folms n condemning tamil movies wont make people's think u as a brilliant anthor. Pls control ur attitude.

  ReplyDelete
 30. Udanpirapukalakul modhal etharku....Vellai kodi etralamey nanbargale....

  ReplyDelete
 31. யுவா ....உங்கள் விமர்சனம் எப்போதும் போல நன்றாகவே இருக்கிறது ....அதை விட சுவாரசியமாக இருக்கிறது பின்னூட்ட களம் :) வாழ்க நண்டு :) வளர்க உமது அறச்சீற்றம் :)

  ReplyDelete
 32. காசுகட்டிட்டு (100 ரூவா) அட்வைஸையும் வாங்கிட்டு என்னால முடிலப்பா. இந்த படத்துல அதெப்பிடியா ஒரே நாள்ல சூர்யா அவுக அப்பா மணடயப் போடுறாராம்,அதே நாள்ல கதாநாயகிக்கு கண்ணாலம் ஃபிக்ஸ் ஆகுதாம்......

  கதை ஒரு மெல்லிய ஓட்டமா இருக்கனும். நமக்கு சௌரியமா வளைக்கக் கூடாது.

  இந்தப் படமெல்லாம் வசூல்ல சாதன புரிஞ்சா நானே சினிமா எடுக்கலாம்.

  இதவுட பெட்டரா தியேட்டர்ல போரடிக்காம உக்காரலாம்.

  ReplyDelete
 33. உங்கள் விமர்சனத்தை விட உங்கள் இருவரின் கருத்து மோதல் சுவாரஸ்யம்.கடைசியில் தோற்றுப்போனது ஆத்திரப்பட்ட ஆளப்பிறந்தவரே.

  அதற்க்காக இந்த கமெண்டுக்கு பதில் சொல்லிவிடாதீர்கள். பதில் எழுத எனக்கு நேரம் இல்லை.மன்னிக்கவும்!

  ReplyDelete
 34. யுவா எழுதியது ஒன்றும் சிறந்த விமர்சனம் இல்லை.
  உண்மையில் சிறந்த விமர்சனம் இது தான். http://pulavanpulikesi.blogspot.com/2012/01/blog-post_17.html

  ReplyDelete
 35. this is not fair Mr.Yuva krishnan.. i think the review would have been the same even if u had watched 3idiots.. Vijay's dialogue delivery is not as bad as you mentioned and stress is the only reason for suicide. I agree your insight but according to the film if the student had completed his project within deadline, he would have not died even if he were a dalit.

  ReplyDelete
 36. I think the review would have been the same even if u had watched 3idiots. Vijay's dialogue delivery is not as bad as you mentioned and stress is the only reason for suicide. I agree your insight but according to the film if the student had completed his project within deadline, he would have not died even if he was a dalit. I strongly agree with your views on Satyaraj's portrayal. It would have been much better if he was on his own style.

  ReplyDelete
 37. ஊரில் நடக்கிற அனைத்து விசயத்துக்கும் சாதிய முடிச்சு போடா ஒங்கள மாதிரி திராவிட இயக்கம் சார்ந்தவர்களால் தான் சார் முடியும்.. நண்டு சொன்ன அனைத்து கருத்துக்களும் சரி.. அந்த தற்கொலை விசயத்தை படத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கவும்..
  பி.கு : நான் இந்தியாவின் சிறந்த கல்லூரியில் தற்கொலை செய்து கொள்ளாமல் படித்து முடித்த தலித் மாணவன்.. மற்றும் நீங்கள் கொஞ்சம் ஓலக அறிவை வளர்த்து கொள்ள தாழ்மையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்..

  ReplyDelete
 38. யுவா கொடுத்த இணைப்பில் தற்கொலை செய்து கொண்டவர்களில் `தலித் மாணவர்கள் மட்டும்` அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறதே ஒழிய ”தலித் தவிர மற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை” என்று சொல்லவில்லை (ஐயய்யோ அதுக்காக மற்ற மாணவர்களெல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று நான் சந்தோஷமெல்லாம் பட்டுக் கொள்ளவில்லை - தகவல் தெளிவு மட்டுமே). இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் இல்லாத மாணவர்கள் எந்த ஒரு கல்விக்கூடத்தில் காணப்பட்டாலும், அவர்கள் முற்றிலும் தெளிந்து மோனத்துக்குச் சென்றவர்களாகவோ அல்லது அந்தக் கல்விக்கூடம் இந்தியக் கல்விகொள்கைக்கு முற்றிலும் விரோதமானதொன்றாகவோதான் இருக்கக்கூடும்.

  ஷங்கர் எதையும் மாத்தாம எடுத்திருக்காருன்னு எனக்கு எப்படி சார் தெரியும்?

  வட இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 15 தலித் மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே காட்சிப்படுத்தப்பட்டதும் அதுதான்.

  யுவா சார், உங்களுக்குச் சங்கடமான கருத்துக்கள் வரும்போது எனக்கு எப்படி சார் தெரியும்? என்று ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள், இங்கே காட்சிப்படுத்தப்பட்டதும் அதுதான். என்று பட `டிஸ்கஷன்`ல் பங்கு கொண்ட `ரேஞ்ச்`க்கு பிட்டு போடுறீங்களே? எப்பூடீ?

  ஆனாலும் பாருங்க மக்களே, யுவா சார் இந்தி 3 முட்டாள்கள் தான் பார்க்கவில்லையே தவிர, நண்பன் பாக்குறதுக்கு முன்னால வட இந்திய ஊடகங்களையெல்லாம் refer பண்ணி, வட இந்திய தலித் மாணவர்களுக்கு நேர்ந்த அவலத்தை உணர்ந்து கொண்டு அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்காக, ஷங்கர், வெளிச்சம் போட்டுக்காட்டியதை `கப்`பென்று பிடித்துக் கொண்டார். என்ன இருந்தாலும் இதழியல் புரிந்து கொண்டிருக்கிறாரல்லவா? ஆனா தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகளான, வட இந்திய தலித் மாணவர்களுக்கு நேர்ந்த அவலத்தை அறியாத நாம் தான் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் - இந்திப் பதிப்புப் பார்க்காமலிருந்தாலோ அல்லது இந்தி கற்றுத் தொலைக்காத இனமான தமிழனாயிருந்தாலோ.

  கோழிப் பண்ணையில் வேலை செய்யும் ஒருவருடைய மகன் தலித் என்பது ஒரு குறியீடே.
  விஜையும் ஒருவகையில் ஒடுக்கப்படுபவர்களின் குறியீடு தானே .

  ஆனாலும் ஷோபா சக்தியின் `கப்டன்`க்கு குறியீட்டுப் பொருள் விளக்கமளித்த எம்டிஎம்மை பொறுக்கி மொழியில் பொரித்தெடுத்த மாமல்லனின் தடாலடிக்குப் பின் இணையத்துப் பக்கம் ஒருபயலும் `குறியீடு கிறியீடு` என்று பேசத் துணியமாட்டான் என்று நினைத்தேன்; ஆனால் மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டானய்யா; தமிழன் தமிழன் தான்.

  ReplyDelete
 39. ஹலோ நண்பா லக்கி. அப்படியே காட்சிக்கு காட்ச்சி மற்றும் வசனத்துக்கு வசனம் காப்பியடிக்க சங்கர் தேவையா?.
  மூலப்படத்தை பார்க்கவில்லை என்று சொன்னதுக்கு காரனம் என்ன? அதை இங்கே சொல்ல வேன்டிய அவசியம் என்ன? விமர்சனம் எழுதினால் அதைமாட்டும் செய்யவேன்டியதுதானே? இது ஒரு அப்பட்டமான காப்பி என்று சொன்னல் உங்கள் சினிமா நன்பர்களின் பொல்லாப்புக்கு ஆளாகனும்ம்னு பயந்து அதிலிருந்து தப்பிக்க செய்த உத்திதானே அது?. தினத்தந்தி மாதிரியான விமர்சன பாணியை தவிர்ர்க முயலுங்கள். நியூட் நன்டு சரிதான்.

  ReplyDelete
 40. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள திராணி இல்லாதவன் தற்கொலைக்கு முயல்கிறான்.
  இதுல எங்க ஜாதி வந்துச்சு. கொஞ்சம் யோசிங்கப்பா.

  ReplyDelete
 41. நண்பன்11:00 PM, January 23, 2012

  //அரசியல்ரீதியாக ஷங்கரை திட்ட அவரது பழைய படங்களே போதுமானது. ஒப்பீட்டளவில் அவரது முந்தையப் படங்களோடு ஒப்பிட்டால் நண்பன் இந்த அரசியல் விஷயத்தில் ஓரளவுக்கு பெட்டர் என்றே கருதுகிறேன்//

  குமார்! மேலே உள்ள கருத்துக்களை நான் மறுதளிக்கிறேன். நீங்கள் 3 இடியட்ஸ் பார்க்கவில்லை என்பதால் இதை நீங்கள் கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன். 3 இடியட்ஸ் படத்தில் ஸ்ரீகாந்தின் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்திருப்பார். இது படத்தில் மிகவும் முக்கியமான பாத்திரம். ஹிந்தியில் அந்த பாத்திரத்தின் பெயர் ஃபர்ஹான் (அதாவது முஸ்லிம்). ஆனால் தமிழில் அது வெங்கட்ராமகிருஷ்ணனாக மாற்றப்பட்டிருக்கிறது.

  3 இடியட்ஸிலிருந்து காட்சிகள், உடைகள் உட்பட அத்தனையும் அப்படியே காப்பியடிக்கத் தெரிந்த ஷங்கருக்கு இந்த ஒரு பாத்திரத்தின் மதப் பிண்ணனியை மட்டும் முற்றிலும் மாற்றத் தெரிந்திருக்கிறது (வெங்கட்ராமகிருஷ்ணன் என்ற பெயரின் பின்னாலிருக்கும் அரசியலை பகுத்தறிவு பாசறையில் இருப்பதாக கருதும் உங்களுக்கு விளக்கத் தேவையில்லையென்றே கருதுகிறேன்). அதாவது சிவாஜியில் ஹவாலாவில் ஈடுப்பட்டிருப்பவர்களை முஸ்லிம்களாக (அதில் உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்) சித்தரிக்கத் தெரிந்த ஷங்கருக்கு, ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனாக ஒரு முஸ்லிமைக் (எனக்குத் தெரிந்து பல முஸ்லிம்கள் முன்னணி பொறியியல் கல்லூரியில் பயின்றிருக்கிறார்கள்/பயிலுகிறார்கள்) காட்டுவதில் அவரது ஆர்.எஸ்.எஸ் சார்பு தடுத்திருக்கிறது.

  இது அரசியல் இல்லையா?

  ReplyDelete
 42. திண்டுக்கலில் நண்பன் பார்த்து விட்டு வருபவர்ககளுக்கெல்லாம் நல்ல தொரு படத்தைப் பார்க்கவந்ததற்கு நன்றி !! என்று சொல்லி துண்டுப் பிரசுரம் தந்து வாழ்த்தி வருகிறதாம் அங்குள்ள பொறியியற்கல்லூரி ஒன்றின் மாணவர்கள் குழு... அறிவீர்களா ?

  ReplyDelete
 43. nanban mite be good for those who has not seen 3-idiots. @Nandu Yes, in 3 idiots they are speaking only about depression and not anything about discrimination. But i think here in NANBAN, they intruded the dalit suicides matter with the film, but for me the real question is shankar really care for these things?????????????

  ReplyDelete
 44. NANBAN mite be awesome for those who have not seen 3-Idiots, @Nandu, Yes, in 3-Idiots they are speakin ly about depression and not about discrimination. But here they intruded the issue, i think. But the question is OUR-GENTLEMAN really care for these things ????

  ReplyDelete
 45. tis movie shld b dub not remake bcs it cut n paste frm sceen to sceen except 4 songs...padam pathri sun tv interviewyin pothuluthu padam remake enbathai marathu viddu ppaesugirargalo endru thondirayathu.. appdi enna ulaippu ulathu endru teriyavillai..anaithum 3 idiots dubbing tat..reactions kudey..vj amir khan poley nadikey, cute expression kodukey muyandru tholvi thaluvi yullar..irupinum padam endiranai vasoolil minjividdathu endru petti koduthullar...ippadiyah oru humbleness illamal irupathu? ileyana vj videy mosam...i hate kareena but she impress me in 3 idiots..illeyana fails 2 do so..n she 2 try 2 imitate kareena..padathil varum anaivarum hindi nadigargalai imitate panne muyandru hodru ponargal..jeeva mathumtham tan stylelil nadithu ullar...

  ReplyDelete
 46. அருமையான படம்.....மிகவும் நன்றாக இருந்தது...


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  ReplyDelete