14 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவன் - சில விமர்சனங்கள்

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்' என்ற நாவலை, புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர்.


- விகடன்.காம்


--------------------------------------------------


புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம் பர்மாபஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலிஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை


- நல்லவன்--------------------------------------------------


கதையின் நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா. மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.


- சுரேகா


--------------------------------------------------

சுஜாதா நாவலின் போதுதான் இந்த அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறேன். அதன் பிறகு யுவகிருஷ்ணாவின் நாவலைப் படித்த பிறகுதான் அந்த அவஸ்தையை மீண்டும் அனுபவித்தேன். இந்த நாவலை திரைக்கதையாக அமைத்தால், "மங்காத்தா" போல் நல்ல வெற்றி படமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.


--------------------------------------------------

விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று.


--------------------------------------------------

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.


--------------------------------------------------

பர்மா பஜாரின் திருட்டு VCD தொழிலுக்கு பின்னால் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் இந்த கதை சிறந்த திரைக்கதையாகவும் இருப்பது தனி சிறப்பு. இயக்குனர் ஷங்கரையும் அவரது நண்பன் படத்தையும் மையமாக வைத்து கதை சொன்ன விதம் அருமை. ஷங்கரே கூட இதை படமாக எடுக்க களம் உள்ள நாவல்.


--------------------------------------------------

ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும் ஒரு நல்ல இயக்குநரும் (கே.வி.ஆனந்த் போல), ஒரு நல்ல குழுவும் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டையைக் கிளப்பக்கூடும். 


--------------------------------------------------

சென்னை பர்மா பஜார் தான் கதைக்களம். அங்கே நடக்கும் தொழில், அங்கே நிகழும் சம்பவங்கள், தாதாக்கள், ஒருவரை ஒருவர் முந்தும் தன்மை, திருட்டு வி.சி.டி இவற்றை மையமாக கொண்டு கதை செல்கின்றது. விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லை. தொடர் கொலைகள் அதை யார் செய்தார்கள் என்ற கேள்வியுடன் பயணிக்கின்றது. படு வேகம். விவரணைகள் கதைக்குள் ஒன்ற செய்கின்றது. டீடெய்லிங் தான் ஆச்சரியப்பட வைக்கின்றது, எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்துள்ளார். 


--------------------------------------------------

 Get the book ,you can not keep it down without completing. As reader I want to enhance the experience of the book. AZHIKKAP PIRANDHAVAN MAPIA : CLICK HERE!


- முத்துவேல் சிவராமன்
--------------------------------------------------

கொஞ்சமும் ஏமாற்றாத த்ரில்லர். நடை அமர்க்களம். விறுவிறுப்பான அக்மார்க் லோக்கல் மசாலா.

- நரேன்

--------------------------------------------------

செம விறுவிறுப்பான திரில்லர் நாவல்..! ஏக் தம்மில் இரவோடு இரவாகப் படித்து முடித்தேன். அவசியம் படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும்.

- உண்மைத் தமிழன்

--------------------------------------------------

 கதை விறுவிறுப்பாக இருக்கிறது.. ஃபில்டர் & டுபாக்கோ பர்ஃபெக்ட்லி மேட்சுடு சிகரெட்டைப்போல...

- மணிஜி

--------------------------------------------------

சினிமா பின்னணியில் அமைந்த தடதடக்கும் கிரைம் த்ரில்லர். காரம் கொஞ்சம் தூக்கலான அருமையான மசாலாப் படம் பார்த்த உணர்வு.


--------------------------------------------------

செம்ம சேஸிங் த்ரில்லர்.. கே.வி ஆனந்த் தோத்தாரு போங்க. சேஸிங் கண்ணுக்குள்ள விரியுது


--------------------------------------------------

ஜெட் வேகம். ஒரிரு லாஜிக் ஓட்டைகளும் படிக்கும் போது தெரியவில்லை, படித்து முடித்த பின்னர்தான் தோன்றுகிறது. அத்தனை வேகம்.


--------------------------------------------------

‘அழிக்கப் பிறந்தவன்’ - சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே. பக்கங்கள் : 96.
ஆன்லைனில் வாங்க...

10 கருத்துகள்:

 1. லக்கி,
  இலங்கையில் இது கிடைக்கிறதா?

  மதுவதனன் மௌ.

  பதிலளிநீக்கு
 2. அடேங்கப்பா ! இத்தனை பேர் இவ்வளவு நல்ல விமர்சனம் போட்டாச்சுன்னா சூப்பர் ஹிட் போல தெரியுதே ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் யுவா அண்ணே..மேலும் இது போன்று நிறைய படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. muthal athiyaayam vijay sankar pera padicha vudane enakku sirippai adakka mudiyala.close panniten. pira athiyaayangal padithaal theriyalaam,

  பதிலளிநீக்கு
 5. நேற்று வாங்கி நேற்றே படித்து விட்டேன். Discovery புக் ஹவுஸ் இல் பில் போடுபவரிடம் அழிக்க பிறந்தவன் எப்படி போகிறது என்று கேட்டேன். நல்லா போகிறது என்ற பதிலை எதிர்பார்த்தேன். ஆனால் ரொம்ப நல்லா போகிறது என்று சொன்னார். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. லக்கி,
  அது என்ன BOOK MAPIA புது வகை விளம்பரமா இருக்கே ,ஏன் ?
  நிங்களும் சாரு மாதிரி ஏதும் வாசகர் வட்டம் ஸ்டார்டிங் ?

  -- ராகவன்

  பதிலளிநீக்கு
 8. கிருஷ்ணா
  நல்ல விறுவிறுப்பான முடிவு, ஆறு அத்தியாயம் பதிவில் ஏற்கனவே படித்தால் என்னவோ, முடிவை இன்னும் ஒரு நாற்பது பக்கம் சேர்த்து இன்னும் விறுவிறுப்பு ஆக்கி இருக்கலாம். இன்னும் நாற்பது பக்கங்கள் படிக்கச் என்னக்கு ஆசை.

  நன்றி

  பதிலளிநீக்கு
 9. நண்பரே! வணக்கம். என் பெயர் ராம் குமார் சுந்தரம். நான் தற்போது "அனல் அலைஞன்" என்ற கதையை இணையத்தில் எழுதி வெளியிட்டு வருகிறேன். www.facebook.com/TamilWriters என்ற பக்கத்தில் எனது கவிதைகளும், அந்தக் கதையும் வெளி வருகின்றன. நான் ஏற்கனவே ஓர் ஆங்கிலக் கவிதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். தமிழில் என் கதையை வெளியிட நல்ல பதிப்பாளராகத் தேடி வருகிறேன். "இளைஞர்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் வாய்ப்புத் தருவோம் என்று விளம்பரப்படுத்தும் சில பிரபல பதிப்பக நிறுவனங்கள் என் கதையைப் படிக்கக் கூடத் தயாராக இல்லை. எனவே, சில நல்ல பதிப்பாளர்களை தாங்கள் எனக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், தாங்கள் அந்தக் கதையைப் படித்து தங்கள் கருத்துக்களைக் கூட என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். என் மின்னஞ்சல் முகவரி stellar.ram@gmail.com. உங்களுக்கு விருப்பமும், நேரமும் இருந்தால் இந்த சிறிய உதவியினைச் செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு