January 5, 2012

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!

கம்மி பட்ஜெட்டில் மொக்கைப்படம் எடுத்துவிட்டு ரிலீஸ் செய்யமுடியாத இயக்குனரின் அவஸ்தையான மனநிலையில் இருந்து ஒருவழியாக நேற்று கேபிள்சங்கர், உலகநாதன் போன்ற சன்பிக்சர்ஸ், ரெட்ஜயண்ட் மாதிரி ஆட்களால் விடுதலை பெற்றிருக்கிறேன்.

“ரொம்ப மொக்கை-ன்னு காறித்துப்பி விடுவார்களோ?” என்கிற அடுத்த அவஸ்தை நேற்று இரவிலிருந்து... நல்லவேளையாக வாசித்த நண்பர்கள் பலரும் காலையில் இருந்து தொலைபேசி, கூகிள் ப்ளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்குகளையெல்லாம் பயன்படுத்தி ஆறுதல் அளித்து வருகிறார்கள். மங்காத்தா லெவலுக்கு இல்லையென்றாலும், ‘அழிக்கப் பிறந்தவன்’ குறைந்தபட்சம் ‘காஞ்சனா’ அளவுக்கு ஹிட்டு என்பது நண்பர்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது. நானே வாசித்தபோது கூட ‘ஓக்கே’ என்று தோன்றிவிட்டதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ‘ஆபாச நாவல்’ என்பதால், மதிப்பிற்குரியவர்களிடம் இதை பெருமையாக “என் முதல் நாவல்” என்று தெகிரியமாக சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமும் ஒருபுறம் இருக்கிறது.

எது எப்படியோ, ‘கமர்சியல் ஹிட்’ கொடுத்த புதுமுக இயக்குனர் மாதிரி மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறேன். விலை, பக்கம் உள்ளிட்ட விவரங்கள் நேற்று மாலை புத்தகத்தை வெளியிடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் தெரிந்தது.

‘அழிக்கப் பிறந்தவன்’ - இன்று முதல் சென்னை புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டால் எண் : 334.  தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே (தள்ளுபடி 10% போக ரூ.45/-). பக்கங்கள் : 96.

இது மட்டுமல்ல. ‘உ’ பதிப்பகத்தின் மற்ற இரண்டு புதுவெளியீடுகளான கேபிள்சங்கரின் ‘தெர்மக்கோல் தேவதைகள்’ (தெர்ம-வா தெர்மா-வா?), உலகநாதனின் ‘நான் கெட்டவன்’ (எப்படித்தான் டைட்டில் புடிக்கிறாங்களோ?) ஆகியவற்றின் விற்பனை உரிமையையும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நிறுவனமே எடுத்திருக்கிறது. ‘அழிக்கப் பிறந்தவன்’ விரைவில் இணையம் மூலமாகவும் விற்பனைக்கு கிடைக்குமென நம்புகிறேன்.

நான் எழுதிய நூல் என்பதால் வாங்கியே ஆகவேண்டுமென யாரையும் வற்புறுத்த மாட்டேன். முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு, பிடித்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம், மொக்கையென்று நினைப்பவர்கள் காறித்துப்பிவிட்டு கிளம்பிக்கொண்டே இருக்கலாம். ஆனால் கேபிள்சங்கர் மற்றும் உலகநாதனின் புத்தகங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக பொருள் முதலீட்டையும், கடுமையான உடலுழைப்பையும் செலுத்திய நண்பர்கள் அவர்கள்.

ஹேப்பி ரீடிங் ஃபோல்க்ஸ்!

19 comments:

 1. Lucky, All the very best. I am fan of your excellent writing style and I visit your blog only for that though I disagree with most of your views.

  Writing a book is an expected natural progression for you and you have greater heights. You and friend Athisha would be on top of tamil writing world one day.

  All the best again,
  Rajmohan, Hyderabad.

  ReplyDelete
 2. நீங்க சொன்னதுக்காக ஜெ மொ புத்தகத்தையே வாங்கிப் படிச்சேன்.உங்க புத்தகத்த படிக்காம இருப்பனா... :)

  வேண்டுகோள்
  யுவகிருஷ்ணா வாசகர் வட்டம் ஆரம்பிக்க அனுமதி வேண்டும்....

  ReplyDelete
 3. வாங்க வேண்டியவைகளில் உங்களுடையதும் ஒன்று. கண்டிப்பாய் வாங்கிவிடுகிறேன் குருஜி...

  பிரபாகர்...

  ReplyDelete
 4. //எது எப்படியோ, ‘கமர்சியல் ஹிட்’ கொடுத்த புதுமுக இயக்குனர் மாதிரி மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறேன்.//

  வாழ்த்துகள் யுவா. நிச்சயம் இன்னும் ஆறே மாத்தில் அடுத்த பதிப்பு போடலாம்.

  சந்தோசமாக உணர்கிறேன்.

  ReplyDelete
 5. Lucky all the best and will definitely will buy and read.
  keep it up.
  Surya

  ReplyDelete
 6. முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு, பிடித்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம், ////
  புத்தக கண்காட்சிக்கு போய் ஒரு அத்தியாயாத்தை வாசித்துகொண்டிருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. நேரமும் இருக்காது. அப்படியே அங்கு போய் வாசித்தாலும் பலருக்கு அது இடைஞ்சலாக இருக்கும். ஆகவே, முதல் அத்தியாயத்தை மட்டும் இங்கேயே அதாவது உங்களின் வலைப்பதிவிலேயே வாசிக்க கொடுக்கலாமே?

  வாசித்துப்பார்த்துவிட்டு, பிடித்தவர்கள் அங்கே கண்காட்சியில் போய் வாங்கிக்கொள்ளட்டும். இது ஒரு முன்னோட்டமாகவும் இருக்கும்.
  இது என் கருத்து மட்டுமே...

  ReplyDelete
 7. அழிக்கப் பிறந்தவன் எங்களை ஆளப்ப்பிறந்தவனாக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. முதலில் வாழ்த்துகள்

  நிச்சயம் ஊருக்கு வரும்போது வாங்குகிறேன்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் லக்கி!

  நாவலுக்கான கடுமையான விமர்சனம் இதோ!

  http://www.surekaa.com/2012/01/blog-post.html

  :))

  ReplyDelete
 10. நண்பா, அடுத்து ஒரு காத்திரமான ஒரு இலக்கியம் ஒன்றை படைத்து விடு. உனக்கு அந்த தகுதி உள்ளது. உன்னால் முடியும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஆமா அழிக்க பிறந்தவன் எப்ப PDF கோப்பா onlineல பிரீயா கிடைக்கும்...

  ReplyDelete
 12. வாழ்துக்கள் யுவா ... நான் உங்களின் நீண்டநாள் வாசகன். இதுவரை கமெண்ட் எதுவும் எழுதியதில்லை , இதுதான் முதல் முறை... உங்கள் எழுத்து நடை மிக அபாரம், எழுத்துலகில் நீங்கள் மிக பெரிய சாதனைகள் படைக்க வாழ்துக்கள்...

  மேலே இருக்கும் கமெண்ட் நான் போட்டதுதான் .. சும்மா ஒரு ஜாலிக்காக ...

  Dr. Sambath,
  surandai...

  ReplyDelete
 13. //// இருந்தாலும் ‘ஆபாச நாவல்’ என்பதால், மதிப்பிற்குரியவர்களிடம் இதை பெருமையாக “என் முதல் நாவல்” என்று தெகிரியமாக சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமும் ஒருபுறம் இருக்கிறது//// - Charuvoda vaarisu ipdiyellam pesalaamaaa ???.

  May be ipdi oru muran iruppadhum thaan adharku atthaatchiyo ?? !!

  ReplyDelete
 14. Yuva, This is hari t-shirt vendor of Cable. I read the novel on my return journey from chennai to Bangalore. Completed in one short. Though the twists in the final chapters were little confusing ( or you plan to confuse us there), the novel was awesome. The flow didn't even allow me to take a leak. Congratulations. Fantastic.

  ReplyDelete
 15. Lucky, I thought of buying ur novel.But you put a same side goal as "Aabasa Novel". So sad.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. புத்தகம் மிக அருமை..!!

  http://www.yaavarumnalam.com/2012/01/blog-post.html

  ReplyDelete
 18. Hi Yuva,
  When you free check my blog and give review / improvements on அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா BOOK MAPIA
  http://ivaikavidhaialla.blogspot.com/2012/01/book-mapia.html

  Regards,
  S.Muthuvel

  ReplyDelete
 19. lucky your novel is quite interesting, un expected climax!!!

  kindly change your photo in the book.

  ReplyDelete