3 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவனின் கதை!

போன வருடம் புத்தகக் காட்சியின் போது கிழக்கு முட்டுச் சந்தில் பாரா சொன்னார். “இந்த வருஷம் ஒரு கதை எழுதுடா! கதைப் புஸ்தகம் இப்போ நல்லா சேல்ஸ் ஆவுது”. நான் ஒரு மோசமான கதை சொல்லி என்று எனக்கே தெரியும். எனவே நழுவப் பார்த்தேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் கூப்பிட்டார். “கதை எழுத சொன்னேனே? என்ன டாபிக்குன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்லை சார். எனக்கு கதையெல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும். ஒன்லைனர் சொல்றேன். அப்படியே நூல் புடிச்சி போய், ஒரு இருவத்தி ரெண்டாயிரம் வார்த்தைலே எழுதிடு”

அவர் சொன்ன ஒன்லைன் தான் அழிக்கப் பிறந்தவன். “2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா டிசம்பர் 31-ஆம் தேதியே திருட்டு டிவிடி பர்மா பஜாருக்கு வந்துடுது”

இதை எழுதி முடிக்க பாரா கொடுத்த டெட்லைன் சரியாக ஒரு மாதம். ஆனால் இரண்டு மாதத்துக்குப் பிறகுதான் அவரிடம் கதையை முடித்து கொடுக்க முடிந்தது.

முதல் மூன்று, நான்கு அத்தியாயங்களை எழுதுவதில் பெரியதாக சிரமம் இருக்கவில்லை. க்ரைம், செக்ஸ் என்று பிடித்த ஏரியாவை பிடித்துக்கொண்டு கும்மியடிக்க முடிந்தது. அதற்குப் பிறகு நான் உருவாக்கிய பாத்திரங்கள் என்னையே அலைக்கழிக்கத் தொடங்கின. இஷ்டத்துக்கும் முடிச்சு போட்டுவிட்டு, எந்த முடிச்சை எங்கே போட்டோம் என்பது மறந்துவிட்டது. ஒவ்வொன்றாக பாதி கதைக்கு மேல் லாஜிக் இடிக்காமல் அவிழ்த்தாக வேண்டும். இது மாதிரி மசாலா நாவல் எழுதுவது ஆகக்கடினமான வேலை என்பது புரிந்தது. தேவையில்லாமல் சேர்த்துவிட்ட சில கேரக்டர்களை, சம்பவங்களை தணிக்கை செய்துக்கொண்டே வந்தேன். இறுதியாக மூன்று, நான்கு பாத்திரங்களை வைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் அழித்துவிட்டேன். ‘சிக்’கென்று நறுக்காக பிறந்தான் அழிக்கப் பிறந்தவன்.

ஜெயமோகனின் ‘உலோகம்’ இரண்டாம் முறையாக கிழக்கு த்ரில்லரில் அச்சிடப்பட்டபோது பின்னட்டையில் ‘அழிக்கப் பிறந்தவன்’ குறித்த விளம்பரம் வந்திருந்தது. ‘கிழக்கு த்ரில்லர்’ உடனடியாக அழிக்கப் பிறந்தவனை வெளியிடமுடியாததால், வலைப்பூவில் தொடராக பதிவிட்டு வந்தேன். ஏனெனில் 2012ன் தொடக்கத்தில் நண்பன் வெளியாகிறது. மேலும் திருட்டு டிவிடி என்கிற சந்தையே இவ்வாண்டின் இறுதியில் இருக்குமா என்கிற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. ‘டாபிக்கல்’ ஸ்டோரி என்பதால் ஆறப்போடுவதில் விருப்பமில்லை.

இதை பதிவாக வாசித்த கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் போன்ற நண்பர்கள் புத்தகமாக கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார்கள். புதியதாக “உ” பதிப்பகம் துவங்கும் நண்பர் உலகநாதனிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். கடைசியாக “புத்தகமாகப் போட முடிவெடுத்திருக்கிறோம். ஃபைலை அனுப்பி வைங்க” என்று கேபிள் கேட்டார். எனக்கே அப்போதுதான் இது புத்தகமாகப் போகிறது என்கிற தகவல் தெரியும். இதனால் நண்பர் உலகநாதனுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிற ஒரே கண்டிஷனின் பெயரில் ஃபைலை அனுப்பி வைத்தேன். மார்க்கெட்டிங், விற்பனை பற்றியெல்லாம் ஏற்கனவே ‘பக்கா’வாக பிளான் போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எழுதியதைத் தவிர்த்து, அழிக்கப் பிறந்தவன் புத்தகத்தில் வேறு எந்தப் பெருமையுமே எனக்கில்லை. எல்லாவற்றையுமே நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். உலகநாதன் நாவலை வாசித்ததோடு மட்டுமில்லாமல், வெளிவருவதற்கு முன்பே விமர்சனமும் எழுதிவிட்டார்.

’உ’ பதிப்பக நூல்களின் விற்பனை உரிமையை டிஸ்கவரி புக் பேலஸ் எடுத்திருக்கிறது. எனவே ‘அழிக்கப் பிறந்தவன்’ டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும். சென்னை புத்தகக் காட்சியிலும் டிஸ்கவரி ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். விலை, பக்கங்கள் உள்ளிட்ட எந்த விவரமும் இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. இணையத்திலும் விற்பனைக்கு கிடைக்குமென நினைக்கிறேன். நாளை ‘புத்தக வெளியீடு’ அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியமென்று யாரும் ஈஸியாக அவதூறு செய்துவிட முடியாத மொழிநடையிலேயே எழுதியிருக்கிறேன். ஒரு கதையை எழுத என்னென்ன மலினமான யுக்திகளை கடைப்பிடிக்க முடியுமோ அத்தனையையும் கடைப்பிடித்திருக்கிறேன். இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அழிக்கப் பிறந்தவனுக்கு என்னால் தர முடிந்த உத்தரவாதம் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை நூறு சதவிகித சுவாரஸ்யம் மட்டுமே.

பாரா, பைத்தியக்காரன், தோழர் அதிஷா (நாவலின் ஒரு அத்தியாயத்தை இவர் எழுதியிருக்கிறார்) ஆகியோருக்கும், நூலை வெளியிடும் உலகநாதன் மற்றும் கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் ஆகிய நண்பர்களுக்கும் நன்றி!

39 கருத்துகள்:

 1. லக்கியிடம் இருந்து நீண்ட நாள் காத்திருப்புக்கு கிடைத்த பதில்.. படித்தது போக மீதிக்கு காத்திருந்தேன்.. நன்றி லக்கி..

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் லக்கி... எனக்கென்னவோ இது ‘அர்ஜுன் அம்மா யாரு’ ஸ்டைலில் ஒரு ஆறு அத்தியாயங்களை மட்டும் இணையத்தில் வெளியிட்டு எங்களை உசுப்பேத்திவிட்டுவிட்டு மீதி கதை தெரியவேண்டுமெனில் புத்தகம் வாங்குங்கள் என்பதுபோல் உள்ளது... ஆனாலும் கதை நிஜமாகவே நன்றாக இருப்பதால்... ’ஒரு புக் பார்சல்’..

  பதிலளிநீக்கு
 3. உனது படைப்புகள் மீதுஎபல்வேறு கருத்து மாறுபாடுகள் உண்டு. இருப்பினும், சுவாராசியமாக இருக்கின்றன. புத்தகத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நண்பா

  பதிலளிநீக்கு
 4. Osila padikka vidaamal seidha cable ozhiga...! Kandippa naalakke onlinela order pottudaren...tamilnadu fulla Free delivery irukku apdithaane

  பதிலளிநீக்கு
 5. திருட்டு சிடி போல் திருட்டு பதிப்பும் வருமா? பாண்டி பஜார் ரோட்டில் கிடைக்குமா? ஆனால் உங்கள் கருத்துகளில் பலவற்றில் நான் மாறுபட்டாலும் உங்கள் உண்மையான உள்நோக்கமும் சுவாரசியானமான நடைக்கும் நான் ரசிகனே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. சில பக்கங்களை இணையத்தில் படித்தபின் மீதியை படிக்கணும் என்ற தவிப்பை உண்டாக்கி விட்டது...புத்தகம் வாங்கி படிச்சிர வேண்டியதுதான்..வருடம் ஒரு முறை இது போன்ற நாவலை யுவா விடமிருந்து எதிர்பார்க்கும் வாசகர்களில் ஒருவனாக ..

  பதிலளிநீக்கு
 7. சென்னையின் கறுப்பு பக்கங்களை வெளிப்படுத்தும் நூல்கள் மிக குறைவு..அந்த வகையிலும் இந்த நாவல் பிரபலமாகும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. //அசோகபுத்திரன் said...
  வாழ்த்துக்கள் லக்கி... எனக்கென்னவோ இது ‘அர்ஜுன் அம்மா யாரு’ ஸ்டைலில் ஒரு ஆறு அத்தியாயங்களை மட்டும் இணையத்தில் வெளியிட்டு எங்களை உசுப்பேத்திவிட்டுவிட்டு மீதி கதை தெரியவேண்டுமெனில் புத்தகம் வாங்குங்கள் என்பதுபோல் உள்ளது... ஆனாலும் கதை நிஜமாகவே நன்றாக இருப்பதால்... ’ஒரு புக் பார்சல்’..//

  நண்பர் அசோகபுத்திரனுக்கு,

  நண்பர் யுவா சொல்வது 100 சதவிகிதம் உண்மை. நாங்கள் சொல்லித்தான் அவர் வலைப்பூவில் இந்த தொடரை நிறுத்தினார்.

  யுவா அப்படிப் பட்டவர் அல்ல, அவர் புத்தகத்தை அவர் உசுப்பேத்தித்தான் விற்க வேண்டும் என்று இல்லை.

  புத்தகத்தை வாங்கி படித்து பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்.

  அவர் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று சொன்னது அவரின் தன்னடக்கத்தை குறிக்கிறது.

  மற்றபடி அவரின் பரம ரசிகன் நான். என் புத்தகங்கள் விற்கிறதோ இல்லையோ அவர் புத்தகம் நிச்சயம் நல்ல முறையில் விற்கும்.

  அவர் புத்தகத்தை வெளியிடுவதில் நான்தான் பெருமை படுகிறேன்.

  யுவா நாளை பெரிய எழுத்தாளராக வரலாம்.

  அவரின் முதல் நாவலை நான் வெளியிட்டேன் என்ற பெருமை சரித்திரத்தில் இருக்கும்.

  மனதில் பட்டதை சொன்னேன். தவறாக நினைக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 9. அழிக்கப்பிறந்தவன் - டைட்டிலே கலக்குதுபா.வாழ்த்துக்கள் உங்களுக்கும்,உங்கள் குழுவினருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. முதல் நாவலுக்கு வாழ்த்துகள் லக்கி. நிஜ மனிதர்கள் பற்றிய கற்பனை கதை. சுவாரஸ்ய எழுத்துக்கு உங்களுக்கு சொல்லியா தரணும்?

  இந்த நாட் சொல்லிய பா. ரா அவர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்

  பதிலளிநீக்கு
 11. sir,konjam naal munndi naanum en virupathai solli irunthen... oru fiction eluthung nu...ippadi suda suda varumnu expect pannala... book fair la vangaren...

  பதிலளிநீக்கு
 12. யுவா, நான் ப‌டிச்ச‌ வ‌ரைக்கும் அட்ட‌காச‌மா வ‌ந்திருக்கு. ரெண்டு வார‌ம் முன்னால‌யே ந‌ண்ப‌ர்க‌ள்கிட்ட‌ பேசுன‌ப்ப‌ சொன்னேன், ஆச்ச‌ர்ய‌மா அவ‌ங்க‌ எல்லாருமே என் க‌ருத்தையே சொன்னாங்க‌. நாலு அத்தியாய‌ம்தான் ப‌டிச்சிருக்கேன், நிச்ச‌ய‌மா புக் வாங்கி முழுசா ப‌டிக்குறேன். உங்க‌கிட்ட‌ இருந்து இது மாதிரி வ‌கையில‌ முத‌ல் புத்த‌க‌ம், ஆனா அது சொன்னாத்தான் தெரியும்ன்ற‌ அள‌வுக்கு ரொம்ப‌ இய‌ல்பா இருக்கு. பாராட்டுக‌ள்.

  பதிலளிநீக்கு
 13. ரிலீஸ்க்கு முன்னாடியே உங்கபுக் ஜெராக்ஸ் வெளிய கிடைக்குதாமே

  பதிலளிநீக்கு
 14. கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..
  தங்கள் தன்னடக்கம்- மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது ..

  பதிலளிநீக்கு
 15. நாந்தான் அப்பவே சொன்னேன்ல..

  ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, என் ஒரு நண்பனின் கதையை இன்னொரு நண்பர் (உலக்ஸ்) வெளியிடுவது குறித்து சந்தோஷமா இருக்கு, உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

  கதையின் ஐந்தாம் பாகத்தை உங்க தளத்தில் வெளியிட்ட போது (http://www.luckylookonline.com/2011/12/5.html) என்னோட பின்னூட்ட ஆருடம்

  //குமுதத்தில் தொடராகவோ, க்ரைம் நாவல் போன்ற பத்திரிக்கைகளில் குறு நாவலாகவோ வந்திருக்க வேண்டியது - எங்க அதிர்ஷ்டம், உங்க நஷ்டம் - ஓசில படிக்கறோம்//

  பலித்ததில் எனக்கு மகிழ்ச்சியே. இது கண்டிப்பா ப்ளாக்ல ஓசில படிச்சிட்டுப் போக வேண்டிய கதையல்ல.

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள் யுவா....

  முதல் அத்தியாயம் செம விறு விறுப்பு.....

  ஆன்லைன்னில் புத்தக சேல் ஸ்டார்ட் ஆனதும் சொல்லுங்கள்... ஆர்டர் பண்ணிரலாம்

  பதிலளிநீக்கு
 17. கிருஷ் ... நாவல் பிளாக்கில் வரும்போது நினைத்தது நிறைவேறியிருக்கிறது..வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 18. நாவல் ஒரு மிகப்பெரிய வெற்றியை ஈட்ட உளமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா!

  பதிலளிநீக்கு
 19. நண்பர் உலகநாதன் அவர்களே... என்னுடைய கமெண்ட்டை ஒரு வஞ்சப்புகழ்ச்சியின் அளவில் பார்க்க வேண்டிகிறேன்... அவ்வளவே... சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கும் முதல் புத்தகம் இதுதான் என ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்..
  யுவாவின் பல கருத்துக்களோடு நான் முரண்பட்டாலும் அவரது எழுத்து நடையின் அதிதீவிர ரசிகபெருமக்களில் நானும் ஒருவன்..
  அப்புறம்.. ஹிஹி.. அந்த புத்தகத்தில் லக்கியோட ஆட்டோகிராப் வேணும்... எங்க புக் வாங்கினா அது கிடைக்கும்... ஹிஹி..

  பதிலளிநீக்கு
 20. nalla puthagam . kandipaga vangi pattipen

  பதிலளிநீக்கு
 21. I WAS READ IN YOUR BLOG. VERY NICE

  I WILL BOUGHT IN BOOK FARE

  A. ABDUL RAHIM

  பதிலளிநீக்கு