14 டிசம்பர், 2011

இதுதான் புரட்சி!

மக்கள் மந்தைகளல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். நாம் வாழும் சமகாலத்தில், என் தலைமுறைவுக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மக்கள் தன்னிச்சையாக திரள்வதைக் காணுவது இதுதான் முதன்முறை. தங்கள் வாழ்வாதாரத்துக்கான உரிமையை வேண்டி, நியாயமான முறையில் கேரள எல்லையில் திரண்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக கூட்டம் கூட்ட வேண்டுமானால் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியாலோ, சாதி சங்கத்தாலோ, மதத்தின் பெயராலோ, இன்னபிற கருமாந்திரங்களின் அடிப்படையிலோதான் முடியுமென்ற என்னுடைய மூடநம்பிக்கையை தகர்த்து எறிந்திருக்கிறார்கள் மேற்கு தமிழகத் தமிழர்கள். எந்தவொரு அமைப்பின் (பிரதிபலன் நாடும்) ஆதரவினையோ, வன்முறைத் தூண்டுதலையோ துச்சமாக தூக்கியெறிந்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கில் தினமும் நான்கு ஸ்டேட்டஸ்கள் போட்டாலே போராளி ஆகிவிடுவதற்கான தகுதி நமக்கு இப்போது கிடைத்துவிடுகிறது. இத்தகைய போராளிகளுக்கு ஊடகவெளிச்சம், பொருளாதார உதவிகள் என்று எட்டுத்திக்கிலும் ஆதரவும் கிடைக்கிறது. கடற்கரைக்கு மெழுகுவர்த்தி ஏந்திப்போவதுதான் போராட்டத்தின் உச்சக்கட்ட உபாயம் என்கிற அசட்டு மாயையை அனாயசமாக உடைத்தெறிந்திருக்கிறார்கள். கோடிகளை கொட்டி ஊழலுக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரதங்களின் அபத்தத்தை தங்கள் நேர்மையான போராட்ட முறையால் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை சட்டத்துக்கோ, மத்திய மாநில அரசுகளுக்கோ எந்த மரியாதையும் தராத கேரள அரசின் முதல்வர் இறங்கிவந்து அறிக்கை கொடுத்திருப்பதைக் காணும்போது, இப்பிரச்சினை மட்டுமின்றி நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு நமக்கு நீதிமன்றங்களிடமோ, அரசுகளிடமோ இல்லை. மக்களிடம்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது.

முல்லைப் பெரியாறுக்காக திரளுபவர்களுக்கு ஃபேஸ்புக் தெரியாது. மெழுகுவர்த்தியை மின்தடை நேரத்தில் வெளிச்சத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். ‘முற்றுகை’ எனும் மனிதக்குலத்தின் மரபார்ந்த போராட்டமுறையைதான் கையில் எடுத்திருக்கிறார்கள். இங்கே திரளுபவர்கள் விவசாயிகள் என்பதாக பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் தேனிக்காரர்கள் கூட விடுப்பு எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

மக்கள் திரளை கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. எத்தனை பேரை கைது செய்ய முடியும்? முதல் நாள் இருநூறு பேர் வந்தார்கள். அடுத்த நாள் ஆயிரம். அதற்கு அடுத்த நாள் பத்தாயிரம். பத்து நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்டோர். வேண்டுமென்றே அப்பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியும் கூட, வாகனங்களை கைவிட்டு கால்நடையாகவே செல்கிறார்கள். மாட்டு வண்டி கட்டி கூட்டமாக செல்கிறார்கள்.

காவல்துறையினரின் தடைகளை மாட்டு மந்தைகளை அனுப்பி கலைத்து, வழி ஏற்படுத்தி சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். “தயவுசெய்து திரும்பிப் போங்கள். எல்லையில் கேரள காவலர்கள் துப்பாக்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்” என்று காவல்துறை அச்சமூட்டியும் திரளும் மக்களை திரும்பப் போக வைக்க முடியவில்லை. ‘ஷூட்டிங் ஆர்டர்’ வைத்துக்கொண்டு கேரள போலிஸ் காத்திருக்கிறது என்கிற வதந்தியை யாரும் நம்பத் தயாரில்லை.

அரசுகளுக்கு, அதிகாரங்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு, ஊடக சாம்ராஜ்யங்களுக்கு சாமானிய மக்கள் தந்திருக்கும் எச்சரிக்கை மணிதான் முல்லைப்பெரியாறு முற்றுகை. ‘இனியும் நாங்கள் கிள்ளுக் கீரைகளல்ல’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். ‘தெலுங்கானா போராளிகளுக்கு எவ்விதத்திலும் நாங்கள் சளைத்தவர்களல்ல’ என்று தமிழர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். சாதாரண குடிமக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் இம்மாதிரி இனியும் மக்கள் அணிதிரள்வதாக இருந்தால் அமைப்புகளோ, கட்சிகளோ, ஏன் அரசுகளோ கூட தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மக்கள்தான் மகேசர்கள். மக்கள்தான் நம் இறுதி நம்பிக்கை. மக்கள்தான் எல்லாம். நேற்று கூடங்குளத்துக்காக திரண்டார்கள். இன்று முல்லைப்பெரியாறுக்காக திரள்கிறார்கள். நாளை ஒரு பொதுப்பிரச்சினை என்றால் மாநிலம் முழுக்க திரள்வார்கள். இந்தப் பொறி பரவும். நாடு முழுக்க வெடிக்கும். மக்களின் நிஜமான பிரச்சினைகளை முன்வைத்து அரசு நடத்த இந்தியப் பேரரசை கோரும். அடிபணிந்தால் அரசுகள் நீடிக்கும். இல்லையேல் மக்களே தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக் கொள்வார்கள்.

28 கருத்துகள்:

 1. சுனாமியின் போது இதுபோல தாமாக முன்வந்து பலர் உதவியிருக்கின்றனர். அது போல இந்த போராட்டமும்

  பதிலளிநீக்கு
 2. உண்மயில் சந்தோஷமாக இருக்கிறது! மக்கள் கேட்டாலொழிய அவர்களுக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. தானாகவே முன்வந்து மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவதை விட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது! வெளி மாநிலம் என்றில்லை, இனி நம்ம மாநிலத்திலேயே இப்படி போராடுவதற்கான விஷயங்கள் நிறய இருக்கின்றன. இப்போதுதானே ஒவ்வொரு விஷயத்திற்காய் தாங்களே கேட்க முன்வந்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல துவக்கம்தான்!

  பதிலளிநீக்கு
 3. தமிழனின் போராட்ட குணத்தை மற்றவர் உணரசெய்யும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 4. //கடற்கரைக்கு மெழுகுவர்த்தி ஏந்திப்போவதுதான் போராட்டத்தின் உச்சக்கட்ட உபாயம் என்கிற அசட்டு மாயையை அனாயசமாக உடைத்தெறிந்திருக்கிறார்கள்//

  உண்மை...

  முல்லை, நாட்டு பிரச்சனை அல்ல.
  ஒவ்வொரு தேனிகாரர்களின் வீட்டு பிரச்சனை.

  அங்கே ஒரு சதிகாரனின் ஆட்சிக்கு முடிவு கட்டியதும் புரட்சி தான்.
  இங்கேயும் அது நடக்கும்.

  அதன் ஆரம்பம் இதுதான். எல்லை இன்றி செல்லவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது...

  பயணியாக மட்டுமே அனைவரும் தொடர்ந்தால் நிச்சயம் இலக்கையும் தாண்டியும் பயணிக்கலாம்.
  நடத்துனரும் ஓட்டுனரும் தேவையே இல்லை.

  பதிலளிநீக்கு
 5. பூக்களின் பாதையில் செல்வதை விட பூக்களை பாதைகள் எங்கிலும் விதைக்கலாம்.

  இன்று தேனிகாரர்கலால் விதைக்கப்பட்டவை நாளை நாட்டின் மலர்களாக மலரட்டும். நாடெங்கிலும் பூத்து குலுங்கட்டும்.

  ...வெற்றி நமதே...

  பதிலளிநீக்கு
 6. இந்த உணர்வுதான் வேண்டும்.நினைக்கவே நெஞ்சு பூரிக்கிறது.
  கிரிக்கெட்டை தடை செய்தால் அல்லது சினிமா ரசிகர் மன்றங்களை
  தடை செய்தால் மட்டுமே புரட்சி சாத்தியம் என்று நம்பியிருந்தேன்.

  முல்லை பெரியாறு தமிழ்நாட்டின் சதுரகிரி மலையில் உற்பத்தி
  ஆகிறது,அதை கிழக்கு முகமாக தமிழ்நாட்டை நோக்கி திருப்பிவிட
  முடியாதா? என்று நேற்று வினவு தளத்தில் தோழர் ஒருவர்
  பின்னூட்டமிட்டிருந்தார்.இது சாத்தியம் தானா?
  இப்படி யோசிக்கும்போதே காவிரி உற்பத்தி ஆகும் இடம்
  மனதில் தோன்றி ஏதோ செய்கிறதே?

  பதிலளிநீக்கு
 7. //அரசுகளுக்கு, அதிகாரங்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு, ஊடக சாம்ராஜ்யங்களுக்கு சாமானிய மக்கள் தந்திருக்கும் எச்சரிக்கை மணிதான் முல்லைப்பெரியாறு முற்றுகை//

  அட்டகாசமான வரிகள்... நல்ல வீச்சுள்ள கட்டுரை.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. மக்களின் இந்த தன்னெழுச்சி உண்மையிலேயே வியக்கத்தக்கது... இன்னும் அதிகமாக இன்னும் அதிகமாக இவ்வெழுச்சி பரவ வேண்டும்... மக்களை கிள்ளுக்கீரைகளாக பார்க்கும் போக்கை உடைக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 9. At last Tamilians in Tamil Nadu proved that he knows how to fight back after so many years!!!!!!! Congratulation !!!!!!!

  பதிலளிநீக்கு
 10. அதுவும் ஒரே ஆண்டில்(ஏப்ரல் மற்றும் டிசெம்பர் 13 ஆம் நாள்) தமிழ் மக்கள் இப்படி புரட்சி செய்திருப்பது (தங்களை ஏமாற்ற நினைக்கும் எவரையும்(அவர் தமிழரோ,தெலுங்கரோ,மலயாளியோ) அடித்து விரட்டுவோம் என)மிக வியப்பிற்குரியது!!பாராட்டுதற்குரியது

  பதிலளிநீக்கு
 11. மக்கள் எழுச்சி வெல்லட்டும்...பாழாய்ப்போன சுயநல அரசியல்வாதிகளினால் இவர்களின் ஒற்றுமை உணர்வு சிதறடிக்கப்படாமல் இங்காவது தமிழனின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்..

  பதிலளிநீக்கு
 12. Hats off! I think we all can award this post of the year 2011 :-). Short, crisp and hard hitting post!

  பதிலளிநீக்கு
 13. பரம்பரை மலையாளி ஜெயமோகனும் பஞ்சத்துக்கு மலையாளி சாருவும் இப்ப என்ன செய்கிறார்கள்?

  அதிலும் காசர்கோடு, பிளாச்சிமடா போராட்ட வீரர் சாரு இப்ப மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை?

  பதிலளிநீக்கு
 14. புரட்சி என்றால் அனைத்தையும் புரட்டிப்போடுவதுதானே.ஆனால், இன்று நம்முடைய உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள போராடுவதே புரட்சியாகிவிட்டது? இந்த புரட்சியில் அந்த மக்களின் வாழ்நிலையில் என்ன மாற்றம் வந்துவிட்டது? அல்லது வாழ்நிலைக்காகப் போராடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட புரட்சியா? அதுசரி புரட்சி தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் என்று புரட்சி இருக்கும் போது, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான்.

  பதிலளிநீக்கு
 15. புரட்சி என்றால் அனைத்தையும் புரட்டிப்போடுவதுதானே.ஆனால், இன்று நம்முடைய உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள போராடுவதே புரட்சியாகிவிட்டது? இந்த புரட்சியில் அந்த மக்களின் வாழ்நிலையில் என்ன மாற்றம் வந்துவிட்டது? அல்லது வாழ்நிலைக்காகப் போராடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட புரட்சியா? அதுசரி புரட்சி தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் என்று புரட்சி இருக்கும் போது, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான்.

  பதிலளிநீக்கு
 16. கேபிள் சார்,

  பிஸ்மி ஹோட்டலுக்கு நாங்க போனா எங்களுக்கும் இதே ராஜ உபசாரம் கிடைக்குமா?!

  நன்றி!

  சினிமா விரும்பி

  பதிலளிநீக்கு
 17. நல்ல பதிவு...இது போன்ற விசயங்களை உடன்டியாக பதியும் பணியை செய்தற்க்கு பாராட்டக்கள்..மக்கள் ..மாக்கள் அல்ல

  பதிலளிநீக்கு
 18. லக்கி சார்,

  என் பின்னூட்டம் ஒன்று தவறாக உங்க அட்ரஸுக்கு வந்து விட்டது! ஸாரி!

  சினிமா விரும்பி

  பதிலளிநீக்கு
 19. யுவா, நீங்கள் சமீபத்தில் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது தான். முதல் முறையாக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டது கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்காக என்பதையும் சரியாகவே பதிந்து இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. இது போன்ற எழுச்சி தேனி மாவட்டத்தின் வலாற்றிலே இல்லை...என் மண்ணின் மக்களின் வீரம் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது...நல்ல பதிவு தம்பி

  பதிலளிநீக்கு
 21. ஹ்ம்ம்..இதுல என்ன உள்குத்து!!!

  கடற்கரைக்கு மெழுகுதிரி ஏற்றிச் செல்லவது என்பதை ஏளனமாய் சொல்லுவது....

  எல்லாம் ஒரு போராட்ட வடிவம் தான்...

  ஒரு நிருபராய் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... தாங்கள் பணி புரியும், பணி புரிந்த செய்தி நிறுவனங்கள் மூலம் செய்திடுக பரப்புரை...அதை விடுத்து இவ்வாறு ஏளனம் செய்வதால் என்ன பயன் விழைந்திடும்?.

  நன்றி

  மா.ஜே

  பதிலளிநீக்கு
 22. Really very proud of Tamilans Unity.
  We will close all the way to Kerala and stop all the things goint to Kerala from here. Till now all the people around Tamil Nadu have different thoughts. Now onwards it won't be like that.

  People like us, will put one day leave and join in that historical crowd. If anybody initiate this thing, pls inform everybody.

  We will show our strength to the world.

  பதிலளிநீக்கு
 23. Koodankulam - agitation created and run by the Christian missionaries, funded by foreign countries

  பதிலளிநீக்கு
 24. அதெல்லாம் சரி லக்கி, நம்மட 'தள்ளு தள்ளு' பார்டி எங்கே போனாரு? எதுக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டிருக்காரு?

  பதிலளிநீக்கு