29 நவம்பர், 2011

மயக்கம் என்ன?

தனுஷ் தலைசிறந்த நடிகராக பரிணமித்து வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைப்பார் என்பதில் சந்தேகமில்லை. சிறு சிறு காட்சிகளிலும் தன் முத்திரையை மிக அழுத்தமாகவே பதிக்கிறார். அவரது கண்கள் பெரிய ப்ளஸ் பாயிண்ட். தனுஷின் கண்களில் காதல், காமம், கோபம், வீரம், போதை, கருணை என்று எல்லா ரசங்களுமே காட்சியின் தன்மைக்கேற்ப சொட்டோ சொட்டுவென சொட்டிக் கொண்டேயிருக்கிறது. ‘மயக்கம் என்ன?’ திரைப்படம் மூலமாக, தனது நடிப்புலக வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லை நிச்சயமாக தாண்டிச் சென்றிருக்கிறார்.

தனுஷுக்காக மட்டுமே ‘மயக்கம் என்ன?’வை ஒரு முறை பார்க்கலாம். தனுஷைத் தவிர வேறு கேமிராமேன் ராம்ஜியை மட்டுமே பாராட்டலாம். சினிமாவில் ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம். இரண்டு மணி நேரத்துக்கு எத்தனை ஃப்ரேம் என்று கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். அத்தனை ஃப்ரேமையும் உலகத் தரத்தோடு படமாக்கியிருக்கிறார் ராம்ஜி. அவ்வளவுதான். மற்றபடி ‘மயக்கம் என்ன?’ வெறும் மட்டை.

பாலாவிடம் ’சரக்கு’ தீர்ந்துவிட்டதைப் போல, செல்வராகவனிடமும் ஸ்டாக் இல்லையென்பது புரிகிறது. இப்படத்தின் கார்த்திக்கை, 7ஜியிலேயே பார்த்தாயிற்று. இறுதிக்காட்சியை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த சூப்பர் மொக்கைப்படமான ‘புன்னகை தேசத்தில்’ பார்த்தாயிற்று. கொஞ்சம் புதியபாதை. கொஞ்சம் துள்ளுவதோ இளமை. கொஞ்சம் முகவரி. இவ்வாறாக 80 வருட தமிழ் சினிமாவின் அத்தனைப் படங்களிலிருந்து ஒவ்வொரு காட்சியாக சுட்டுத் தள்ளியிருக்கிறார். ஏற்கனவே நைசாக அரைத்த மாவை மற்றுமொருமுறை கிரைண்டரில் போட்டு ஆட்ட செல்வராகவன் எதற்கு?

‘யூ ஆர் லைக் மை சிஸ்டர்’ என்று கூறிய பெண்ணை, பிற்பாடு காதலித்து மணக்கிறார் கார்த்திக் (எ) தனுஷ். அதுவும் உயிர் நண்பனோடு ‘டேட்டிங்’ செய்துக் கொண்டிருந்த பெண். இப்படியெல்லாம் சமூகத்தில் நடப்பதே இல்லையா என்று கேட்கலாம். சமூகத்தில் நடந்ததை தினத்தந்தியில் படிக்கும்போதே பொறுமிக் கொள்ளும் ரசிகன், சினிமாவில் காட்சியாகப் பார்க்கும்போது காறி உமிழத்தான் செய்வான். திரையில் தெரியும் நாயகன் ராமனாகவும், நாயகி கண்ணகியாகவும் இருந்தாகவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகனுக்கு எழுதப்படாத விதி. அபூர்வமாக சில படங்களில் வேண்டுமானால் கதையின் முக்கியத்துவம் கருதி பொறுத்துக் கொள்வான்.

இவ்வாறு மணம் செய்துக் கொள்ளும் பெண்ணோடு நாயகன் முதலில் அன்னியோன்னியமாக இருப்பதையும், பிற்பாடு உளவியல்ரீதியாக தாம்பத்திய சிக்கல்களில் அல்லாடும் போதும் சாமானிய ரசிகனுக்கு எந்தவிதமான கிளுகிளுப்போ, பச்சாதாபமோ ஏற்படாது.

தொடர்ச்சியாகவே செல்வராகவனின் படங்களில் பெண் பாத்திரங்களை நோக்கி நாயகன், பெண்மையை கொச்சைப்படுத்தும் மோசமான வசைகளை உதிர்க்கும் போக்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதுவும் சமூகத்தில் நடக்கவேயில்லையா என்றால் நடந்துதான் தொலைக்கிறது. ஆனால் திரையில் அவ்வாறு தனுஷ் ஒரு பெண்ணைப் பார்த்து ‘பழைய கோழியா இருக்கும் போலிருக்கே?’ எனும்போது தியேட்டரில் எழும் ஏகோபித்த ஆதரவுடனான இளைஞர்களின் விசில் சப்தம் ஆபத்தான போக்கு.

நாயகன் என்றால் மெண்டலாக இருந்துத் தொலைக்க வேண்டுமென்று செல்வராகவனுக்கு என்னதான் வேண்டுதலோ? 1999ல் பாலா ஆரம்பித்து வைத்த இந்த சைக்கோ பேய், தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டு, ஆட்டுவென்று ஆட்டித் தொலைக்கிறது. கருக்கலைந்து நாராய் விழுந்து கிடக்கும் நாயகியை நாலு நிமிஷத்துக்கு வெறித்துக் கொண்டே இருக்கிறான் நாயகன்.

இடைவேளை வரையாவது சீட்டில் நெளிந்துக் கொண்டே படம் பார்த்துவிடலாம். இடைவேளைக்குப் பிறகு க்ளைமேக்ஸ் வந்தால் போதும், தெறித்துவிடலாம் என்கிற ‘கொலைவெறி’யை ஏற்படுத்தியிருக்கிறார் செல்வராகவன். ஜி.பி.பிரகாஷின் பின்னணி இசை வேறு பெரிய ரோதனை. காதில் பஞ்சு அடைத்துக்கொண்டு வந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறது.

மயக்கம் என்ன? – சைக்கோக்களுக்கு மட்டும்!

20 கருத்துகள்:

 1. மயக்கம் என்ன - படம் பார்த்தவர்களுக்கு

  பதிலளிநீக்கு
 2. //பாலாவிடம் ’சரக்கு’ தீர்ந்துவிட்டதைப் போல, செல்வராகவனிடமும் ஸ்டாக் இல்லையென்பது புரிகிறது.//

  தொடர்ந்து சரக்கு,சைக்கோ,லிட்டில் பிட் ஆபாச படங்களை எடுத்து சரக்கை தீர்த்து விட்டார் செல்வா. மாற்று சினிமா எடுக்கிறோம் என்று பாலாவும், செல்வாவும் தொடர்ந்து ஒரே மாதிரி கதாபாத்திரங்களை கொஞ்சம் நிறம் மாற்றி திரையில் உலவவிடுகின்றனர். தயாரிப்பாளர் நிலைதான் திண்டாட்டம்.

  பதிலளிநீக்கு
 3. /மயக்கம் என்ன? – சைக்கோக்களுக்கு மட்டும்!
  //


  நெத்தியடி


  அன்புடன் :
  ராஜா
  .. இன்று

  பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

  பதிலளிநீக்கு
 4. அவசரமான பதிவு...
  செல்வா,பாலாவிடம் சரக்கு தீர்ந்துவிடாது என்பதை விட தற்போது சரக்கு இல்லை என்று எடுத்துக்கொள்வோம்.அதுதான் நமக்கும் நல்லது. ஏனெனில் எமக்கிருக்கும் ஒரு சில நல்ல படைப்பாளிகளையும் ஓரங்கட்டினால்....நாளை பேரசு,ஷக்தி சிதம்பரத்தின் உலக சினிமாதான் விஞ்சும்.விமர்சிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் விமர்சிக்கவேண்டும்.கொண்டாடவேண்டிய தருணத்தில் கொண்டாடவேண்டும். படத்தில் வரும் கருக்கலையும் காட்சி,அதை தொடர்ந்து வரும் காட்சிகளில் நாயகியின் நடிப்பு பற்றி ஒரு வரிகூட எழுதவில்லையே?! அந்தக் காட்ச்சிக்காக மட்டுமாவது செல்வராகவனை பாராட்டவேண்டாமா? அந்த காட்சிகள் உணர்வுகளின் உச்சமில்லையா?! ஒட்டு மொத்தமாக ஒரே வரியில் ஒரு படைப்பாளியின் உழைப்புக்கு கருப்புக் சாயம் பூசுவது எப்படி நியாயம்?! செல்வாவை பாரட்டுவதட்க்கு படத்தில் எத்தனையோ காட்சிகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட காட்சிகவே படம் பார்க்கவேண்டிய வகையறா.ஆனால் செல்வாவின் மற்ற படைப்புக்களோடு ஒப்பிடும்போது மயக்கம் என்ன ''?"

  பதிலளிநீக்கு
 5. இந்தக் குப்பை படத்துக்கு எத்தனையோ இடங்களில் விமர்சனம் படிச்சிட்டேன்.அல்லாரும் சப்பைன்னு தான் சொல்றானுவ.

  ஆனா உன் விமர்சனம் சூப்பர் தல.... உன் கருத்து பிடிக்கல.... உன் மஞ்ச துனி பாசம் பிடிக்கல....இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா அந்த எழுத்து ....அந்த கருமந்தரம் தான் என்ன பிடிக்கலைன்னாலும் ஒரு தபா இந்த பையன் இன்னா எழுதிருக்கான் பார்த்துத் தொலைக்க வைக்குது....

  இன்னாமா எழுதற நைனா....

  வாழ்க!

  பதிலளிநீக்கு
 6. தூக்கம் வரலையா? இந்த படத்திற்கு போகலாம். பகிர்விற்கு நன்றி.
  நம்ம தளத்தில்:
  "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

  பதிலளிநீக்கு
 7. நான் கேள்வி பட்டவரை / படித்தவரை அனைவரும் இசை மிக அருமையாக உள்ளது என்று சொல்கிறார்களே?!

  படம் சுமாராக இருந்தாலும் “செல்வராகவன் டச்” உள்ளாதாகவும் நான் படித்தேன்!!!

  மயிலாடுதுறை சிவா...

  பதிலளிநீக்கு
 8. காவியம்....படத்தை மீண்டும் பார்க்கவும்....மனித பலம் பலவீனம்... இதை காட்சிக்கு காட்சி பிரமிக்க வைக்கிறார் செல்வா ....

  பதிலளிநீக்கு
 9. // திரையில் தெரியும் நாயகன் ராமனாகவும், நாயகி கண்ணகியாகவும் இருந்தாகவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகனுக்கு எழுதப்படாத விதி. //

  இதை நானும் உணர்ந்து இருக்கிறேன். அப்படி இல்லாத படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்துதான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. I Think Selva is taking full credit in spoiling Dhanush's Image by this Picture

  பதிலளிநீக்கு
 11. செல்வராகவன் தனக்குள்ளேயே சிக்கிக் கொண்டு விட்டார். தோல்விகள் அவர் வெளியே வர உதவும் என்று நம்புவோம். இதுதான் அவர் படத்து ஆண்கள் எல்லாம் சைக்கோவாக சித்தரிக்க தோன்றுகிறதோ என்னமோ? இவர் படம், பாலா படம் எல்லாம் பார்க்கும் போது 'அப்ப...நாம எல்லாம் நார்மல் இல்லையா?' என்று 'லைட்'டா சந்தேகம் வர ஆரம்பிக்குது சார்!

  என் வலையில் ;

  கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு! (வீடியோ)

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் யுவா, உங்கள் பதிவுகளை விரும்பி வாசிப்பதுண்டு.. இத்திரைப்படத்தை நீங்கள் இன்னும் ஒருமுறை பார்க்க வேண்டும் அல்லது பார்க்கும் வேறு யாரையாவது கவனித்து வரச் சொல்ல வேண்டும்.. தனுஷின் நடிப்பு பற்றி நான் எதுவும் சொல்வதாக இல்லை ஆனால் ஒளிப்பதிவு குறித்த பாராட்டு கண்டிப்பாய் திருத்தப் பட வேண்டும்... படத்தின் 60 விழுக்காடு காட்சிகளில் Focus missing புதிதாக கேமரா வாங்கியவர்கள் focus ரிங்கை செட் செய்ய முடியாமல் நேர் கோடு ஒன்றை பிடித்துக் கொண்டு போகஸ் செய்வார்கள்.. portrait என்றால் அதுவும் ஆண் என்றால் காலர் தான் போகஸ் பாயிண்ட்.. இந்தப் படத்தில் 60 விழுக்காடு காட்சிகளில் இப்படி காலர் தான் போகஸ் ஆகி இருக்கிறது.. இதை எப்படி நல்ல ஒளிப்பதிவு என்று பாராட்டுவது..

  பதிலளிநீக்கு
 13. மதியழகன் அண்ணா!

  ‘என்ன செய்துவிட்டார் பெரியார்?’ கவிதை எழுதியவர் அல்லவா நீங்கள்?

  நீங்கள் இங்கே பின்னூட்டியது எனக்குத் தரும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!

  பதிலளிநீக்கு
 14. //இந்தக் குப்பை படத்துக்கு எத்தனையோ இடங்களில் விமர்சனம் படிச்சிட்டேன்.அல்லாரும் சப்பைன்னு தான் சொல்றானுவ.

  ஆனா உன் விமர்சனம் சூப்பர் தல.... உன் கருத்து பிடிக்கல.... உன் மஞ்ச துனி பாசம் பிடிக்கல....இன்னும் நிறைய சொல்லலாம் ஆனா அந்த எழுத்து ....அந்த கருமந்தரம் தான் என்ன பிடிக்கலைன்னாலும் ஒரு தபா இந்த பையன் இன்னா எழுதிருக்கான் பார்த்துத் தொலைக்க வைக்குது....

  இன்னாமா எழுதற நைனா....

  வாழ்க!//

  vazhi mozhikiren

  பதிலளிநீக்கு
 15. http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5084

  ஆர்.அபிலாஷ் எழுதியதை படி. அதுதான் சினிமா விமர்சனம். உன்ன மாதிரி எழுத குமுதம் மாதிரி மஞ்சை பத்திரிகையில் உள்ளார்கள்.

  பதிலளிநீக்கு