7 நவம்பர், 2011

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

43 கருத்துகள்:

 1. நன்றி யுவக்ரிஷ்ணா . நல்ல தகவல்கள் .சிலது இப்போது தான் தெரிந்துகொண்டேன் :)

  பதிலளிநீக்கு
 2. இவருக்கு சாதனைநாயகன் என்கிற பட்டதையும் சேர்த்து கொடுக்கலாம்!

  பதிலளிநீக்கு
 3. நானும் கமல் ரசிகன் என்று சொல்லிகொள்வதில் பெருமை அடைகிறேன் ..

  பதிலளிநீக்கு
 4. ரசிக்க வைக்கும்
  ஒரு ரசிகனின்
  பார்வை ...
  ரசித்து
  படித்து
  மகிழத்தான்
  இந்த பதிவு .
  கமலை ரசிக்காமல் ஒரு தமிழன் இருக்க மாட்டன்.
  கமலை ரசிகக்கதாவன் தமிழனாக இருக்க மாட்டன்.
  ரசிப்புடன் .
  யானைக்குட்டி

  பதிலளிநீக்கு
 5. ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

  லக்கி.. இது சரியல்ல. சனம் தேரி கசம் முதல் ஜராஸி ஜிந்தகி, ஏக் நஹே பகலில் என பல இந்திப் படங்கள் கமலுக்கு ஓடவில்லை என்பதுதான் உண்மை.

  பதிலளிநீக்கு
 6. excelant.hats of you.greatest
  informations.very kind of you

  kumar.

  பதிலளிநீக்கு
 7. //• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.
  //
  பட்ஜெடானால் மூடப்பட்டது

  பதிலளிநீக்கு
 8. ஆனால் கமலின் தற்போதைய படங்கள் மற்றும் அவரது கவர்சியான தோற்றத்தில் ஒரு தொய்வு காணப்படுகிறது.
  அவர் மிகவும் சலிப்படைந்ததைப்போல காணப்படுகிறார்.

  பதிலளிநீக்கு
 9. கமலஹாசன் குறித்து எதாவது புத்தகம் எழுத போகிறீர்களா யுவா? இவ்வளவு தகவல்களை சேகரித்து இருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 10. தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன..

  பதிலளிநீக்கு
 11. //கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்//

  எல்லாம் நல்லாயிருக்கு ஆனால் பத்மஸ்ரீக்கு இவ்வளவு பில்டப் தேவையா? விவேக் கூடத்தான் பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ளார்....

  கலைமாமணி பற்றிய தகவல் உங்கள் நகைச்சுவையின் உச்சக்கட்டம். என்னையும் உங்களையும் தவிர தமிழ்நாட்டில் எல்லோருமே கலைமாமணிதான்..... நீங்களும் விரைவில் எடுத்துவிடுவீர்கள் என நினக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 12. thaanam seithar endru soolathirgal, thannathuku opputhal alithuullar endru mattume kura vendum. It is like issuing a cheque but not sure about honouring it. Ithuellam cinema stunt, don't be series.

  பதிலளிநீக்கு
 13. யாருமே பின் தொடரமுடியாத நடிகன்.

  பதிலளிநீக்கு
 14. யாருமே பின் தொடரமுடியாத நடிகன்.

  பதிலளிநீக்கு
 15. பத்மநாதபுரம் அரண்மனைக்கு போனா, இங்கதான் குஷ்பு குளிச்சதா ஒரு இடம் காமிப்பாங்க. மதுரை திருமலை நாயக்கர் மஹால் போனா, இங்கதான் த்ரிஷா கல்லு கட்டி குளிச்சதா சொல்வாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு. குணா குகையாம்ல, போய் புள்ள குட்டிய படிக்க வக்கிர வழிய பாருங்கப்பா.

  பதிலளிநீக்கு
 16. உங்களது அருமையான நேரத்தை இப்படியும் வீணாக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு... அப்படி வீணான நேரத்தின் உன் நேரத்தையும் எப்படி சேர்த்து வீணாக்குகிறாயா? என கேட்டால் உங்களது நேரம் 2 மணி நேரம் வீணாகி இருக்கிறதே என சொல்ல எனது 2 வினாடிகளை வீணாக்க வேண்டி இருக்கிறது... பெரியார் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்... வைதீக பார்ப்பனர்களை விட ஆபத்தானவர்கள்... லௌதீக பார்ப்பனர்கள்... கமல் ஒரு லௌதீக பார்ப்பனர் என்பது உங்களுக்கும் தெரியாதது அல்லவே?

  பதிலளிநீக்கு
 17. அரிய தகவல்கள்..கமல் ஒரு சகாப்தம்...

  பதிலளிநீக்கு
 18. What are the movies Kamal acted with MGR, Sivaji and Gemini?

  பதிலளிநீக்கு
 19. பல உலக சினிமாக்களை அதை எடுத்த இயக்குனர்களுக்கு தெரியாமல் சட்டம் என் கையில் என்ற எண்ணத்தில் சுட்ட உலக தோசைகள் பல என்று பல சாதனைகள். அப்ப்பப்பா

  பதிலளிநீக்கு
 20. avar copy panni nadicha vaetru mozhi padangal,heroes pathi add pannirundha katurai mulumai petrirukum saamieov......

  பதிலளிநீக்கு
 21. அருமையான பதிவு..
  அவரு பொறந்த நாள கொண்டாடுவதில் ஒரு சங்கடமிருக்கு !
  அவங்க அப்பா இறந்த நாள்...
  'பிரபஞ்ச நாயகன்'னு ஒரு பட்டம் கொடுத்தது ஆகாயமனிதன்..ன்னு சேர்த்துக்குங்க !
  I received email thru Feedblidz today only..

  பதிலளிநீக்கு
 22. //கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்//


  பாராட்டுக்கள்..
  கமலுக்கும்.. பகிர்ந்த உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 23. NICE DETAILS YUVAKRISHNA ........

  we should appreciate & honor Our Kamal Hasan . .

  பதிலளிநீக்கு
 24. Nice one. Plenty of information.

  I beleive Vikram is the first movie with Computer graphics for the first time in India.... Bala

  பதிலளிநீக்கு
 25. his car # 7.And only in Vasoolraja -pathulle number onnu sollu he acted with th t-shirt having #7.

  பதிலளிநீக்கு
 26. ஜாதி பார்த்து கலையை ரசிக்கும் ’தமிழ் குரல்‘ மாதிரி ஆசாமிகள் தாம் ஜாதி ஒழிக்க முயற்ச்சி செய்தார்களாம்?!.

  பதிலளிநீக்கு
 27. some time your give meaning full artical really special for all fans

  பதிலளிநீக்கு
 28. மிக அருமையான ஒரு பதிவு.உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றியும்.

  பதிலளிநீக்கு
 29. yov lucky,

  Most of these factual details have been circulating in forward mails for quite some years now..why are you claiming as the author to this "collation" of facts?

  பதிலளிநீக்கு
 30. oru tamilanaga perumai pada vendiyavar thiru.kamal hasan...indiyanuku saave illai.

  பதிலளிநீக்கு
 31. யாருக்கும் ரசிகனாக மட்டும் இருக்ககூடாது.எப்போதும் மனிதனாக மட்டுமே இருக்கவேண்டும்.நடுநிலையோடு சிந்திக்கவேண்டும்.

  கமல்ஹாசன் பற்றிய செய்திகளையும்,அவரை புகழ்ந்து எழுதிய விமர்சனங்களையும் படித்தேன்.

  கமல்ஹாசனை புகழ்ந்தவர்களை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

  தெரியாமல்தான் கேட்கிறேன் தமிழனாக இருந்து பெருமைப்பட இதில் என்ன இருக்கிறது.அவர் ஒரு நடிகர்,சினிமா என்பது ஒரு தொழில்,தயவுசெய்து யாரும் அதை ஒரு கலை என்று சொல்லவேண்டாம்.சினிமாவில் அன்றுமுதல் இன்றுவரை எதைக் காட்டுகிறார்கள்?அரைகுறை ஆடை அணிவது,கட்டிப்பிடிக்கும் காட்சி,முத்தக்காட்சி,முதலிரவுக்காட்சி,ஆபாசக்காட்சி,கள்ளக்காதல்,திருட்டுக்கல்யாணம்,இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள்,இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இதனால் பாதிக்கப்படுவது யார்?குறிப்பாக வாலிப சமுதாயம்,நம் சகோதர சகோதரிகள்,இதை பார்த்து கெட்டுப்போவார்கள்.

  இனி கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை,ஏற்கனவே சினிமாவின் மூலம் கலை என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழித்துவிட்டார்கள்.


  கமலுக்கு யார் இத்தனை பெயர்கள் வைத்தது?மகாத்மா காந்தியா?தந்தை பெரியாரா?இல்லவே இல்லை.அவர்களும் சினிமா கூத்தாடிகள்தான்.

  இந்த சீரழிவுக்கு கமல் ஹாசனுக்கும் பெரும்பங்கு உண்டு.இதுவரை கமலுக்கு யார் உண்மையான மனைவி என்று யாருக்கும் தெரியாது!!!

  நாலு சுவருக்குள் யாருக்கும் தெரியாமல் 500,1000-க்கு படுத்தால் அதை விபச்சாரம் என்று சொல்கிறோம்,5 கோடி,10 கோடி வாங்கிக்கொண்டு அத்தனைபேர் முன்னாடி அவுத்து காட்டினால் அதுக்கு பெயர் சினிமாவா?இதுதான் கலையா?

  இந்த சினிமா துறையில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் 'விருது வழங்கும் விழா'.

  அவுத்துப்போட்டு ஆடும் இவர்களுக்கு அவார்டு எதற்கு???

  பதிலளிநீக்கு