3 நவம்பர், 2011

அம்மா நூலகம்

அண்ணா நூலகம் இடமாற்றம் பெறுவது குறித்து நிறைய பேர் ஆச்சரியமும், அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறார்கள் என்பதைக் காண்பதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை அம்மா மாறிவிட்டார், ஈழத்தாயாக நிலைபெற்றுவிட்டார் என்று கருதி, கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் வேண்டுமானால் இது குறித்து கொந்தளிக்கலாம், கோபப்படலாம். ‘அண்ணா திமுக’ என்கிற பெயரையே கூட ‘அம்மா திமுக’ என்று புரட்சித்தலைவி மாற்றினாலும் கூட அதுகுறித்து எந்த வியப்பும் நமக்கு இருக்கப்போவதில்லை. ‘அண்ணா’வை விட ‘அம்மா’தானே பெருசு? அண்ணாவா கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றார்? நடந்து முடிந்த திருச்சி மேற்கு இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அம்மாவால்தானே அதிமுக வெல்ல முடிந்தது? எனவே, இனிமேல் எல்லாமே இப்படித்தான். அடுத்த ஐந்து ஆண்டு காலமும் அதிர்ச்சி, வேதனை, வியப்பு உள்ளிட்ட எல்லா கருமாந்திரங்களும் தமிழர்களுக்கு பழகிப்போகும்.

வாடிக்கைதானே இது?

இது ஒரு பாட்டிக்கதை.

கட்டிக் கொடுத்தப் பெண்ணைப் பார்க்க பெற்றோர் ஊருக்கு வந்திருந்தார்களாம். பெற்றோர் எதிரில் மருமகளை மரியாதையாக நடத்த மாமியார்க்காரி ரொம்பவும் பிரயத்தனப்பட்டாளாம். வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய நேரம் வந்தது. மாமியார்க்காரி மருகளிடம் ரொம்ப தன்மையாக சொன்னாளாம்.

“போயி விளக்கேத்திட்டு வாம்மா”

மருமகள் தயங்கி, தயங்கி நின்றிருக்கிறாள்.

“விளக்கு ஏத்திட்டு வாயேம்மா. இருட்டுது இல்லே”

மீண்டும் தயங்கி மருமகள் சொல்கிறாள். “கொடுக்கிறதை கொடுங்க அத்தே. வெளக்கு ஏத்துறேன்”

“அதெல்லாம் இன்னிக்கு வேணாம். நீயா போயி வெளக்கு ஏத்திட்டு வா”

“கொடுக்குறதை கொடுத்தாதான் வெளக்கு ஏத்துவேன்”

பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு கடுப்பு. மாமியார்க்காரியிடம் கோபமாக சொன்னார்கள். “ஏங்க.. எங்க பொண்ணுக்குதான் தினமும் ஏதோ கொடுப்பீங்களாமே? அதைக் கொடுத்துடுங்க. அவ பாட்டுக்குப் போயி விளக்கு ஏத்தப்போறா...”

மாமியார்க்காரிக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஓரமாக வைத்திருந்த விளக்குமாறை எடுத்துவந்து, மருமகளை நாலு விளாசு விளாசினாள். மருமகளும் அழுதுக்கொண்டே போய் விளக்கேற்றினாள்.

தினமும் மாமியார்க்காரி மருமகளுக்கு கொடுப்பது இதுதான்.

மசோகிஸ்டுகளாக மாறிப்போன தமிழ் வாக்காளர்கள் போன சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து, விளக்கேற்றி இப்போது விளக்குமாறு அடிதான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல அடி வாங்கி, அடி வாங்கி பழகிவிட்டது. அடி வாங்காமல் இருந்தால்தான் ஏதோ இழந்தது மாதிரி இருக்கிறது.

கதையை விடுங்கள். விஷயத்துக்கு வருவோம்.

1992ல் கரசேவைக்கு செங்கல் கொடுத்தனுப்பிய அதே ஜெயலலிதாதான் கொஞ்சமும் மாறாமல் பத்தொன்பது வருடங்கள் கழித்தும் இருக்கிறார். அவரது எந்தவொரு செயல்பாடும், முடிவும் ஆரிய/ஆர்.எஸ்.எஸ்/பார்ப்பனீய கருத்தியல்களின் அடிப்படையிலேயே அமைகிறது. முதலாளித்துவத்துக்கும் இது ஒத்துப்போகும் விஷயங்கள்தான் என்பதால் கேட்க நாதியில்லாமல் போய்விட்டது.

பின்னே? புற்றீசல்களாக ஆயிரக் கணக்கில் வருடாவருடம் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், சென்னைக்கு இடம்பெயர்ந்து என்ஜினியரிங் / மருத்துவம் / ஆராய்ச்சி என்று வந்துவிட்டால், அவர்கள் ஏற்கனவே செய்துக்கொண்டிருந்த வேலைகளை யார்தான் செய்வது? இவர்களின் கல்வி தொடர்பான ஆதாரங்களில் அடி கொடுத்தால்தானே ஏற்கனவே நிலவும் அமைப்பை அப்படியே தொடரமுடியும். முன்பு சமச்சீர்க் கல்வி. இப்போது அண்ணா நூலகம்.

வசதி படைத்த உயர்சாதியினருக்கு நூலகம் பெரிய ஆதாரமில்லை. ஐயாயிரமோ, பத்தாயிரமோ, லட்சமோ செலவு செய்து அவர்களுக்கு வேண்டிய நூல்களை அவர்களே வாங்கிவிட முடியும். அண்ணா நூலகம் போன்ற அமைப்பின் சேவை அவர்களுக்கு தேவையில்லை. பாதிப்புக்குள்ளாவது முதல் தலைமுறையாக படிக்க வரும் கீழ்நடுத்தர, கீழ்த்தட்டு இளைஞர்கள்தாம்.

தமிழ்/தமிழர் தொடர்பான ஜெயலலிதாவின் அசூயைக்கு எவ்வளவோ உதாரணங்கள் உண்டு. புதிய புதிய உதாரணங்களையும் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படுத்திக் கொண்டேதான் போகிறார். புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்த அவருக்கு இருக்கும் மனத்தடைகூட ‘அது திராவிட கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டது’ என்று பெரியதாக, பெருமையாக கடந்த ஆட்சியாளர்களால் சொல்லிக் கொள்ளப்பட்டதும் கூட காரணமாக இருக்கலாம்.

புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் போன்றவை வெளிப்படையாக தெரியும் சாட்சிகள். ஜெயலலிதாவின் தமிழ் விரோதப் போக்குக்கு எடுத்துக்காட்டாக வெளியே தெரியாத எவ்வளவோ நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதே? அதன் கதி என்ன? இவ்வருடத்தில் இருந்து பழையமுறையில் ஆங்கில முறை போதிப்புதான்.

அண்ணா நூலக விஷயத்தில் எதிர்ப்பவர்களில் 99% பேரும் நூல்களின் கதி, கட்டிடத்தின் சிறப்பு, லொட்டு, லொசுக்கு என்று ஏதேதோ காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். இவ்விவகாரத்திலும் சரியாக அடையாளம் கண்டுணர்ந்து, எதிர்க்கப்பட வேண்டியது ஜெயலலிதாவின் பார்ப்பனக் கண்ணோட்டம்தான். அவருடைய இப்போக்கு தொடரும் பட்சத்தில் அண்ணா நூலகம் போன்ற ஏராளமான பன்முக மொழி/இனம் சார்ந்த பிரச்சினைகளை, அடுத்த ஐந்தாண்டுகளும் நாம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். சிங்களம் பழம்பெரும் தமிழ் நூலகத்தை எரித்தது. ஆரியம் நவீனத்தமிழ் நூலகத்தை முடக்கி வைக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம். தமிழ் விரோதத்தில் இரண்டுக்கும் மத்தியில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை. ஒருவேளை ராணுவம் அம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்குமேயானால், சிறப்புப் பெற்ற அக்கட்டிடத்தையே குண்டுவீசி தகர்த்திருக்கவும் கூடும்.

இணையத்தள நண்பர்கள் பலரும் ஆன்லைன் பெட்டிஷன்களை உருவாக்கி கையெழுத்திடக் கூறி கேட்டு வருகிறார்கள். ஏற்கனவே எழுத்தாளர்கள் இம்மாதிரியான ஒரு இயக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். சில தோழர்கள் கொஞ்சம் முன்னே போய் முதல்வர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல்/ஃபேக்ஸ் அனுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்கலாம் என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ல் தொடங்கி ஈழம் தொடர்பாக ஏராளமான ஆன்லைன் பெட்டிஷன்களில் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம். அவற்றின் கதி என்னவென்று புரியாத நிலையில், புதியதாக தொடங்கப்படும் ஆன்லைன் பெட்டிஷன்களில் ’என்னத்தை கையெழுத்திட்டு, என்னத்தைச் செய்யப்போகிறோம்’ என்று நினைக்கிறோம். ‘எதிர்ப்புகள்’ எல்லாம் அம்மாவுக்கு சும்மா. அசுரபலத்தை அளித்துவிட்ட தமிழக வாக்காளர்களைதான் இதற்காக நோக வேண்டியிருக்கிறது. நீதிமன்ற படியேறினாலும், இவ்விஷயத்தில் நீதி கிடைக்குமென தோன்றவில்லை. அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான முட்டல், மோதல் ஏற்கனவே நிகழ்ந்துக் கொண்டிருப்பதால், இவ்வாறு எண்ணத் தோன்றுகிறது. எனவே அன்ணா நூலகம் மறைந்து, குறைந்தபட்சம் நுங்கம் பாக்கத்தில் அம்மா நூலகமாவது அமைந்தால் போதும் என்றே கருதுகிறோம்.

திரும்ப, திரும்ப இதையெல்லாம் அம்பலப்படுத்திக் காட்டும்போது பார்ப்பன அன்பர்கள் சிலர் நம்மை ‘சாதி வெறியர்கள்’ என்று ஒரு சொல் விமர்சனத்தில் கடந்துச் செல்கிறார்கள். சாதியக் கண்ணோட்டத்தையும், சாதியையும் எதிர்ப்பவர்கள் எப்படி சாதிவெறியர்களாகவும், என் சாதியை மட்டும் எதுவும் சொல்லிவிடாதே என்று ‘மனு’ தர்மத்தைக் காப்பவர்கள் ‘நல்லவர்கள்’ ஆகவும் ஆகிறார்கள் என்கிற தர்க்கம்தான் நமக்குப் புரியவில்லை. பார்ப்பனரல்லாத நண்பர்களும் கூட இதற்காக நம்மை நோகும்போது, இப்படியெல்லாம் முத்திரை வாங்கி இந்த கருமங்களை எழுதித்தான் ஆகவேண்டுமா என்று சில நேரங்களில் சலிப்பு கூட தோன்றுகிறது.

அரசியலுக்குள் இரண்டறக் கலந்திருக்கும் பார்ப்பனீயத்தையும் வேறுபடுத்தி கண்டறிந்துணர, பார்ப்பனச் சாதி என்று சொல்லிக் கொள்ளப்படும் சாதியில் பிறந்த நண்பர்தான் பாடமெடுத்து நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். அவர் அந்தச் சாதியில் பிறந்துவிட்டார் என்கிற காரணத்துக்காக, அவரை பார்ப்பனீயர் என்று எதிர்த்துக் கொண்டிருக்கவா செய்கிறோம்? ‘தன்னிறைவு’ பெற்றுவிட்ட தலித்துக்குள்ளும் பார்ப்பனீயம் நுழைகிறது என்பதுதான் யதார்த்தம். ‘கடவுள்’ மாதிரி எல்லோருக்குள்ளும் கலந்துவிட்ட பார்ப்பனீயத்தை இனங்கண்டு, விலக்கி வைப்பதில்தான் சவால் அடங்கியிருக்கிறது. வாழ்நாள் முழுக்க இந்த சவாலை சந்தித்து, எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருப்பதுதான் குறைந்தபட்ச மனிதநேய வாழ்க்கைக்கு அடிகோலும்.

50 கருத்துகள்:

 1. //1992ல் கரசேவைக்கு செங்கல் கொடுத்தனுப்பிய அதே ஜெயலலிதாதான் கொஞ்சமும் மாறாமல் பத்தொன்பது வருடங்கள் கழித்தும் இருக்கிறார்.// பாயின்டப் புடிச்சாச்சு

  பதிலளிநீக்கு
 2. In this issue I thing U r wrong Yuvakrishna; Amma wants to destroy all the Evidence of DMK / Kalaignar contributions. So, that only She is Shifting the Library, Changing the Secretary to old place etc.

  But I agree with you that She is pucca Parpanan view women . .

  பதிலளிநீக்கு
 3. // இப்படியெல்லாம் முத்திரை வாங்கி இந்த கருமங்களை எழுதித்தான் ஆகவேண்டுமா என்று சில நேரங்களில் சலிப்பு கூட தோன்றுகிறது//

  Don't worry. I will support you in this till our last breathe.

  பதிலளிநீக்கு
 4. Great view...Resembles the Singhaleese activities..Jeya will never ever change ....

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் சொல்வது சரிதான் இளையகிருட்டினா!

  ஆனால் பார்பனர்களை ஒழிக்கலாம் என்று தலிவருக்கு ஓட்டளித்தால் அவர் குடும்ப சகிதம் அடிக்கும் கொள்ளையில் தமிழ்நாடே(அனைத்து சாதியினரும்) ஒழிந்துவிடும் போலிருக்கிறது.

  பயந்து போய் இவரை கொண்டுவந்தால் இவர் தன் பார்பன புத்தியை காட்டுகிறார்.

  திருடவும் செய்யாமல் அதே சமயம் பார்பனர்களையும் ஒழிக்கவல்ல தலைவர் வரும் வரை காத்திருப்போம்.அதே சமயம் தீ அணையாமல் இருக்க உங்கள் நாசியிசம்(NAZIISM)கொள்கை பரப்பு செயலை செவ்வனே தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. \\பார்ப்பனரல்லாத நண்பர்களும் கூட இதற்காக நம்மை நோகும்போது, இப்படியெல்லாம் முத்திரை வாங்கி இந்த கருமங்களை எழுதித்தான் ஆகவேண்டுமா\\
  தயவு செய்து வேண்டாம். எதற்கெடுத்தாலும் சாதியை இழுக்கும் உங்கள் போக்கு நிச்சயம் கண்டிக்கத்தக்கது. ராசா கைதா... சாதியை இழுக்கிறீர்கள். ஜெயலலிதாவின் ஆணவப் போக்கா... சாதியை இழுக்கிறீர்கள். ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் முத்தாய்ப்பான உங்கள் கட்டுரைகள், கருத்துக்கள் பலவும் உங்களது ஒரு சார்பு சொற்றொடொர்களால், ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விடுகிறது. இதற்கு நீங்கள்தான் காரணம். இதில் சாதியை பற்றி இழுக்காமல் இருந்தால் இது ஒரு சாதாரணமான ஒரு கண்டனமாக இருந்திருக்கும். இப்போது பலபேர் இதை விமர்சிக்க கூடும். நீங்கள் அதைத்தான் விரும்புகிறீர்கள் போலும்...

  பதிலளிநீக்கு
 7. எழுதுவதற்கு உங்களைப்போன்றவர்கள் கண்டிப்பாக வேண்டும்!! நல்ல அலசல் !! இந்த துக்ளக் தர்பார் 'அன்னா'ரின் ஆசியுடன் தொடரும் !! - Bloorockz

  பதிலளிநீக்கு
 8. each and every word carry the message..but who cares this...even less developed state like Bihar is politically more matured than us..sorry..but v need carry/cry for more ..55moths still left

  பதிலளிநீக்கு
 9. each and every word carry message...less developed states like bihar is now better ruled n ppl got much political awareness than us..V need 2 carry this burden for more...55 months still left...who is going 2 save us?

  பதிலளிநீக்கு
 10. \\அண்ணா நூலக விஷயத்தில் எதிர்ப்பவர்களில் 99% பேரும் நூல்களின் கதி, கட்டிடத்தின் சிறப்பு, லொட்டு, லொசுக்கு என்று ஏதேதோ காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.\\
  ஆக 99% பேர் முட்டாள்கள். புரியாமல் எதிர்க்கிறார்கள். நீங்கள் ஒரு சதவீதம் மட்டும் புத்திசாலிகள். இல்லையா ? ஜெயலலிதாவுக்கு எதிரி கலைஞர். அவர் சம்மந்தப்பட்ட எதுவும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார். இதுவே உண்மை. இதற்கு சாதிய சாயம் பூசுவது குதர்க்கமானது... ஜெயலலிதாவின் இந்த செயலை எதிர்க்கும் என்னைப் போன்றவர்களை கூட அவரை எதிர்த்து வெளியான இந்த கட்டுரையை எதிர்க்க வைப்பது உங்கள் எழுத்தின் வன்மைக்கு சான்று..

  பதிலளிநீக்கு
 11. இப்படியெல்லாம் முத்திரை வாங்கி இந்த கருமங்களை எழுதித்தான் ஆகவேண்டுமா என்று சில நேரங்களில் சலிப்பு கூட தோன்றுகிறது///


  தூற்றுவார் தூற்றட்டும் ;)

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் எத்தனை முறை அண்ணா நூலகத்திற்கு சென்றிருக்கிரீகள்? அங்கு எத்தனை புத்தகங்கள் நீங்கள் சொல்லும்படி இன்ஜினியரிங் காலேஜ் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கிறது?

  நன்றாக பேச தெரிந்த ஒரே காரணத்தினால் உம்முடைய திராவிட முன்னோடிகள் ஒரு தலைமுறையையே சூராடினர்கள்.

  உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது...

  பதிலளிநீக்கு
 13. ஜெயலலிதா இதை செய்வதற்கு காரணம் அது கருணாநிதியால் கட்டப்பட்டது என்பதுதான். எனக்கு வேறு காரணந்கள் இருப்பதாக தோன்றவில்லை.

  எதற்கெடுத்த்ாலும் பிராமணர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கென்றே உங்களப்பொன்றவர்கள் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 14. அதாவது தமிழ்நாட்டில் ரெண்டே இனம் தான். சென்னைவாசிகள், இவர்கள் எல்லாருமே பணக்காரர்கள். ரெண்டாவது தலித்கள் இவர்கள் எல்லாருமே கிராமத்தில் இருப்பவர்கள். வேற எவனும் கிடையாது! இந்த நூலக முடக்கத்தால் பாதிக்கப்படப்போவது தலித்கள் கீழ்சாதியினர் மட்டுமே. மத்தவனுக்கெல்லாம் காசு கரைபுரண்டோடுது! இதுவரை செம்மொழி தமிழுக்கென சென்னையில் ஒரு நல்ல கட்டிடத்தைகூட ஒதுக்கவில்லை முதைய திமுக அரசு. இணையத்தில் தமிசை ஏற்றியது அனைத்தும் தனியார்கலர்கள் தான்.

  இப்போதுகூட இடம் மாற்றுகிரேன் என்று தான் அம்மா சொல்லியிருக்கு. உடனே ஆரம்பித்துவிடவேண்டியது, பார்ப்பனீயம் தலித்தியம். அம்மாவின் இதுபோன்ற முடிவுகள் எவ்வளவுக்கெவ்வளவு அசட்டுத்தனமானதோ அதே அளவு கேவலமானதுதான் திமுக அபிமானிகள் உடனே எழுப்பும் இதுபோன்ற கோஷங்களும். சொன்னதுபோல் நூலகம் இடம்மாறி புழக்கத்தில் வரவில்லையெனில் நிச்சயம் போராடலாம், ஆனால் இன்று இந்த நூலகத்திற்கு எத்தனை பேர் சென்றார்காள் பயனடைந்தார்காள் எனவும் தெரியவில்லை.

  பொறியியல், தொழில்நுட்பம் குறித்த படிப்புகளுக்கும் லேடஸ்ட் கண்டுபிடிப்புக்களுக்கும் ஏராளமான நூல்கள் இணையத்திலும் ஏனைய கடைகளிலும் கிடைக்கிறது அது ஒரு பிரச்சனை அல்ல. போதாததற்கு NPTEL என்ற மத்திய அரசு நிருவனம், அனைத்து ஐஐடி பாடங்கள் அதர்கான லெக்ர்சர்களையும் வீடியோ பதிவேற்ரியுள்ளது, காசு கொடுத்து டிவிடி யும் வாங்கிக்கொள்ளலாம், முடியாத தலித் பாணவர்காள் இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஆக தொழில்னுட்ப புத்தகம், சோர்ஸ் ஒரு பிரச்சனையில்லை.

  தமிழும் இந்திய வறலாறும் பண்டை இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தான் இந்த நீதிமன்ற முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்படப்போகின்றன. எனவே மத்திய அரசின் மூட்டணியில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் திமுக உடனே அங்குள்ள அனைத்து புத்தகங்களையும் மத்திய அரசு தலையிட்டு டிஜிடைஸ் செய்து வலையேற்ற போராடவேண்டும், பின்னர் அம்மா என்ன வேணா செய்யட்டும், கவலையில்லை. திமுக செய்யுமா?!?

  பதிலளிநீக்கு
 15. A IAS COMES FROM AN VILLAGE HOW IS THIS POSSIBLE BEZ OF THIS LIBRARY. ITS ALL MAYA. NOTHING WILL HAPPEN TO JAYA HE LEADS TAMILNADU SO MANY YEARS

  பதிலளிநீக்கு
 16. Yuva, In our country only Jayalalitha is not a bramin. You are wounding all the people who belongs to Bramin community.

  பதிலளிநீக்கு
 17. இந்த இடம்பொழுதில் கலைஞர் முன்வந்து அறிவிக்க வேண்டியது, "அம்மணி, அந்த நூலகத்தில் என்பெயர் வெட்டப்பட்டு இருக்கும் வரலாற்று விளம்பரக் கற்களை வேண்டுமானால் அகற்றி விடுங்கள்; உங்கள் பெயரைக் கூடப் பொறித்துக் கொள்ளுங்கள், ஆனால் நூலகத்தை இருக்கவிடுங்கள்!" என்று.

  செய்யலாம் அல்லவா? செய்வாரா?

  'அவர் அப்படி அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?' என்று நாம் அதன் பிறகு பொங்கி எழலாம். ஆனால் அவர் செய்ய முன் வர வேண்டும்.

  ஆனால், அப்படி முன்வந்துவிட்டால் அது அரசியல் ஆகாதே!

  தீர்வு அல்ல, அரசியல்வாதிகளுக்குப் பிரச்சனைதான் வேண்டும். இது ஜெயலலிதாவுக்கும் சேர்த்துதான்.

  பதிலளிநீக்கு
 18. ராஜசுந்தரராஜன் அவர்களே!

  ஒரு தகப்பன் முன்வந்து, பெற்றது நான் தான், ஆனால் நீங்கள் உங்களுடைய இனிஷியலை இவனுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தன் குழந்தையை தத்துக் கொடுக்க வேண்டும் என்று கோருகிறீர்கள்.

  மிக அருமையான சிந்தனை! வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 19. I agree with you 100%. She is always a pro-hindutva and Anti tamil... no doubt about it...

  பதிலளிநீக்கு
 20. "ராஜசுந்தரராஜன் அவர்களே!

  ஒரு தகப்பன் முன்வந்து, பெற்றது நான் தான், ஆனால் நீங்கள் உங்களுடைய இனிஷியலை இவனுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தன் குழந்தையை தத்துக் கொடுக்க வேண்டும் என்று கோருகிறீர்கள்.

  மிக அருமையான சிந்தனை! வாழ்த்துகள்!!"

  Arumaiyaana pathil...

  பதிலளிநீக்கு
 21. Mr.Yuvakrishna, If you want to criticize some one's acts don't blame the community. You are repeating the same every time. Everyone knows the reason for demolishing the library. What ever you wrote is nonsense.

  G Hariprasad

  பதிலளிநீக்கு
 22. மிக அருமையான கட்டுரை. கையாலாகாத நம் தமிழர்களை நினைத்தால் (இதில் நாமும் அடக்கம்) வேதனைதான் மிஞ்சுகிறது.

  பதிலளிநீக்கு
 23. @vetri...enga nenga antha library pakkam thala vechu kuda pdukalangarathu theriuthu...nalla library athu...avangaluku vantha ratham...aduthavankaluku vantha thakkali chatni...ayyo amma mudiyala...

  பதிலளிநீக்கு
 24. லக்கி..., முக்கியமான பாய்ன்டை விட்டு விட்டீர்கள். 

  தேர்தல் ஓட்டு எண்ணும் தேதியை கோர்ட்டுக்குப் போகும் நாளாய்ப் பார்த்து அறிவித்து, மக்களின், பத்திரிகைகளின் கவனத்தை திசை திருப்பிய மாதிரி, 8ம் தேதி வரும் கோர்ட் விவகாரத்தைத் திசை திருப்பவே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

  பதிலளிநீக்கு
 25. எதற்க்கேடுத்தாலும் பார்ப்பனீயம் திராவிடம்.. எப்படிதான் முடிச்சு போடுறீங்க? முக வின் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்க்கு அவங்களை திட்டுங்க.

  நான் அவா அல்ல...

  பதிலளிநீக்கு
 26. ஒரு படம் ஆயிரம் விளக்கம் தரும்படி உள்ளது . கட்டுரை தேவையே இல்லை என்ற நிலைக்கு படம் முக்கியதுவமடைகின்றது

  பதிலளிநீக்கு
 27. யுவா அவர்களே,

  அது அப்படித்தான் ஒரு (சாலமன்) நீதிக் கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் அது தகப்பன் இல்லை, தாய்.

  அரசியல் எழுத்து ஆகையால், உங்களுக்கும் அந்தக் கதை மறந்துபோய்விட்டது.

  //நீங்கள் உங்களுடைய இனிஷியலை இவனுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று...//

  வைத்துக்கொண்டால் என்ன? ஏன் இந்தப் பிற்போக்குச் சிந்தனை? தத்துக் கொடுக்கையில் நம்முடைய இனிஷியலைத்தான் வைத்தாக வேண்டும் என்று யாரும் கோருவதில்லையே?

  பதிலளிநீக்கு
 28. போங்க பாசு இது எல்லாம் தெரிஞ்சது தானே..இதுகே இப்படி பீல் பண்ணுனா எப்படிஈஈஈ...

  பதிலளிநீக்கு
 29. தமிழருக்கு துரோகம் பண்ணின கருணாநிதிய விட அம்மா பரவாயில்லை....கடந்த ஐந்து ஆண்டுகள் தன் மக்கள் முன்னேற்றம் மட்டுமே முக்கிய பணியா செய்தவர்....

  பதிலளிநீக்கு
 30. நெத்திலேயே அடிச்சிட்டீங்க... Good One... Can I forward this thru my email?

  பதிலளிநீக்கு
 31. Good one Yuva!. So Mr. Karnanithi is opposing, because it is his ''pullái'and not because it is benefitting the poor. Thanks for the clarification

  பதிலளிநீக்கு
 32. http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=501421&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

  பதிலளிநீக்கு
 33. பார்ப்பனீயத்தை இவ்வுளவு கேலி பேசும் யுவா அண்ணே, பார்ப்பனர் ஒருவரின் விருதை வாங்கியதாக படத்துடன் காட்டி கொள்வது ஏன்?
  (அது சரி....நமக்கு விளம்பரம் தானே முக்கியம்)

  பதிலளிநீக்கு
 34. சுத்தமான தரையுள்ள ஹெலி பேடில் தான் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருக்கும். ஹெலிகாப்டருக்கும் காருக்கும் இருக்கும் இடைவெளி சில அடி தூரம்தான். அப்படி ஹெலிகாப்ட்டரில் இருந்து காருக்கு போகும் அம்மையார் காலிலும் செருப்பு அணிந்திருக்கிறார். ஆனால் அந்த சிறிய தூரத்தை கடப்பதற்கு கூட சிகப்பு கம்பளம் விரித்து அதன் மேல் நடந்து போகிறார் அம்மையார். இப்படி பட்ட ஒருவர் ஒரு நாட்டை ஆளும் பொழுது மக்களின் பிரச்சனைகளை எப்படி புரிந்து கொண்டு சரி செய்வார்?.

  மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதையே நானும் இங்கு சொல்கிறேன்,கலைஞரால் கட்டப்பட்ட பாலங்களை மட்டும் ஏன் இன்னும் இடிக்காமல் அதன் மீது பயணிக்கிறார்?

  கலைஞர் ஆட்ச்சியின் பொழுது இவர் ஏன் தமிழ் நாட்டில் வசித்தார்?

  கலைஞர் குடி இருக்கும் சென்னையில் ஏன் வசிக்கிறார்?

  இதற்கெல்லாம் சாமானின் மன்னிக்கவும் சீமானின் பதில் என்ன?

  பதிலளிநீக்கு
 35. யுவா,
  உங்க எழுத்தையும் ஆதங்கத்தையும் ரசித்தேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 36. யுவா,
  உங்க எழுத்தையும் ஆதங்கத்தையும் ரசித்தேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 37. //வசதி படைத்த உயர்சாதியினருக்கு நூலகம் பெரிய ஆதாரமில்லை.// -

  வசதி இல்லாத கீழ சாதியினர் சென்னையில் மட்டுமே உள்ளனரா?

  ஏன் திருநெல்வேலி, விருதுநகர்,மதுரை பக்கமெல்லாம் நூலகங்கள் திறக்கவில்லை?

  பதிலளிநீக்கு
 38. //பின்னே? புற்றீசல்களாக ஆயிரக் கணக்கில் வருடாவருடம் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், சென்னைக்கு இடம்பெயர்ந்து என்ஜினியரிங் / மருத்துவம் / ஆராய்ச்சி என்று வந்துவிட்டால், அவர்கள் ஏற்கனவே செய்துக்கொண்டிருந்த வேலைகளை யார்தான் செய்வது? இவர்களின் கல்வி தொடர்பான ஆதாரங்களில் அடி கொடுத்தால்தானே ஏற்கனவே நிலவும் அமைப்பை அப்படியே தொடரமுடியும்.//

  நீங்க சிங்கார சென்னையில் பிறந்திருக்கலாம்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த நான் வேலைக்காக தலையெழுத்தை நொந்து இங்கு வந்து அவதி படுகிறேன்..

  சென்னை-யை தவிர்த்து தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லையா?

  தமிழ் வட்டார மொழிகளில் கேலிக்கு உள்ளாவது/உபயோகபடுவது சென்னை தமிழ் மட்டும் தான்..

  சும்மா உங்க ஆளு காட்டினாரு அப்படிங்கறதுகாக பூச்சி காட்ட கூடாது..

  பதிலளிநீக்கு
 39. "மழை விட்டாலும் தூவானம் விடவில்லை!"

  "குண்டுக்கு எதிர் குண்டு, விமானத்துக்கு எதிர் விமானம் என்றில்லாமல்.."

  "சிங்களவரோடு தமிழர் இணக்கமாக வாழும் சூழல் ஏற்பட வேண்டும்..."

  என்றெல்லாம் பேசிய அயோக்கியன் கருணாநிதி-யும் தமிழின எதிரிதான்.

  தன் மகளை விட்டு ராசபக்சேவின் கையை குலுக்கி விட்டு வரச் செய்த போதெல்லாம் - "தன்மானத் தமிழர்"கள் எங்கே போனார்கள்? - என்று சில அறிவாளித் தமிழர்கள் கேட்கிறார்கள்!

  துரோகி (மு.க) -வின் கையால் சாவதா?

  அல்லது 'பரம்பரைப் பகை' பார்ப்பனர்களின் கையால் சாவதா?

  என்பதுதான் இப்போதைய தேர்வாக இருக்கும் இனத்தின் நிலையை நினைத்தால் - ராத்திரி தூக்கம் வர மாட்டேங்குது!

  பதிலளிநீக்கு
 40. //கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதே? அதன் கதி என்ன? இவ்வருடத்தில் இருந்து பழையமுறையில் ஆங்கில முறை போதிப்புதான்.//

  No boss. Still we are being taught in Tamil + English. :) This year also students are enrolled in Tamil Medium Engineering.

  Unsourced news. Please remove that point from your post.

  பதிலளிநீக்கு
 41. சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

  சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

  சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

  பதிலளிநீக்கு
 42. லக்கி,

  ரொம்ப நாட்கள் பிறகு பார்க்கிறேன், பரவாயில்லை, இன்னும் பொங்கிட்டு தான் இருக்கிங்க,இப்போ இந்த பொங்கல் அதே பொங்கலா, என்னனு தெரியலை, :-))

  அண்ணா மையா நூலகம் மூடப்படுவது, கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனைக்கதைதான்(பார்ப்பண உதாரணாம்னு என் மேல பாயாதீர்) சரி மாத்திப்போம் பெருச்சாளிக்கு தெரியுமா பீரோட டேஸ்ட்!

  அண்ணா மைய நூலகம் அருமையாகவே இருக்கு, இன்னும் அங்கு நூல்கள் வாங்கி வைக்க வேண்டுமே தவிர மூடக்கூடாது. என்ன செய்வது மதிக்கெட்டான் சோலையில் மந்தி கையிலே பூமாலை ,மாட்டிக்கிட்டு விழிப்பது நம்ம வேலை!

  //அண்ணா நூலக விஷயத்தில் எதிர்ப்பவர்களில் 99% பேரும் நூல்களின் கதி, கட்டிடத்தின் சிறப்பு, லொட்டு, லொசுக்கு என்று ஏதேதோ காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள். இவ்விவகாரத்திலும் சரியாக அடையாளம் கண்டுணர்ந்து, எதிர்க்கப்பட வேண்டியது ஜெயலலிதாவின் பார்ப்பனக் கண்ணோட்டம்தான். //

  ஹி..ஹி..பார்ப்பணக்கண்ணோட்டம் மட்டும் வைத்து பார்த்தா தான் மூடக்கூடாதுனு சொல்லணூம் சொல்றிங்க, ஏன் பொதுவா மூடக்கூடாதுனு சொன்னா ஒத்துக்கமாட்டிங்களோ?

  மாலனுக்கு இல்லாத பார்ப்பணக்கண்ணோட்டமா? எல்லாரும் ஒரே மட்டைகள் தான்.

  கலஞர் தன்னை தானே தகுதி நீக்கி கோண்ட தானைத்தலைவன்! விசயகாந்த்து இன்னும் அதுக்கு சரியா வருவார்னு மக்கள் நினைக்கலை. அப்போ இருக்கிறது இந்தம்மா தான் , என்ன கொடுமையா இது? இதான் நிலமை, இதுல உணர்ச்சி வசப்பட்டா என்ன பண்ண முடியும்.

  //ஜெயலலிதாவின் தமிழ் விரோதப் போக்குக்கு எடுத்துக்காட்டாக வெளியே தெரியாத எவ்வளவோ நடவடிக்கைகள் இருந்துவருகின்றன. கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பொறியியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதே? அதன் கதி என்ன? இவ்வருடத்தில் இருந்து பழையமுறையில் ஆங்கில முறை போதிப்புதான்.//

  இந்த விடயத்தில் வரலாறு என்னனு பார்க்கணும், ஏன் மாற்றப்பட்டது என்பதையும் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கணும்.

  1992 ல அனந்தகிருஷ்ணன் அண்ணாப்பல்கலைல இணைவேந்தராக இருக்கும் போதே தமிழ் வழி பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டது,அப்போதும் முதல்வர் அம்மையார் தான். அவங்க இருக்கும் போதே கொண்டு வந்தது தான் அப்போதே நீக்கமும் செய்யப்பட்டது. ஏன்?

  அண்ணாப்பல்கலை தன்னாட்சி பெற்றது என்பதால் அவர்கள் விரும்பிய பாடத்திட்டம் கொணரலாம், AICTE அங்கீகாரம் பெறத்தேவையில்லை, ஆனால் அரசு பல்கலை என்பதால் அவர்கள் AICTE உடன் கலந்து ஆலோசனைப்பெறுவது வழக்கம், ஏன் எனில் பிற மாநிலங்களுக்கு வேலை, மேற்படிப்பு என செல்லும் போது அங்கே AICTE நிர்ணயித்த பாடத்திட்டம், ஆங்கில வழியே இருக்கும். தமிழில் பொறியியல் படித்தவர்களால் அவர்களுடன் இணையாக செயல்பட முடியாமல் போகும் என்பதால் அப்போது கொண்டு வந்த தமிழ் வழி திட்டம் ஒரு செமெஸ்டர் உடன் மூடப்பட்டது.

  இந்திய அளவில்,உலக அளவில் அண்ணாப்பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பு வேலை என செல்ல வேண்டி இருப்பதால் ஏற்ப்பட்டது. மேலும் AICTE கடுமையாக ஆட்சேபம் செய்தது.

  இப்போது மீண்டும் ஏன் தமிழில் கொண்டு வந்தார்கள், மூடினார்கள், இது சிலரை குளிர்விக்க கொண்டு வந்தார்கள்,அந்த தலைவர் போனதும் போயிடுச்சு. மன்னர் ஜவகர் இணைவேந்தர் ஆனதுக்கு நன்றிக்கடனா கலைஞரை குளிர்விக்கவே தமிழ் வழி பொறியியல் என செம்மொழி நேரமா பார்த்து கொண்டுவந்தார், AICTE யுடன் கலந்தாலோசிக்காமலே, இத்தனைக்கும் மன்னர் ஜவகர் தான் AICTE தென்மண்டல தலைவர். AICTE அப்போவே மறுப்பு தெரிவித்து விட்டது, அண்ணாப்பல்கலை தன்னாட்சி பெற்றது என்பதால் அடிக்கடி அறிவுறுத்த மட்டுமே செய்தது AICTE .

  இநிலையில் AICTE தென்மண்டல தலைவர் பதவியின் காலமும் அவருக்கு முடிந்துவிட்டது,அப்போதே இந்த ஆண்டுடன் ஆங்கிலத்துக்கு மாறிவிடுவதாக சொல்லிவிட்டு தான் வெளியேறினார். அவரது இணைவேந்தர் காலம் முடியும் முன்னரே ,பர்னாலா பதவியில் இருந்து போக சில நாட்கள் இருக்கும் போதே மரபுக்கு மாறாக பதவி நீட்டிப்பு பெற்றுக்கொண்டார் மன்னர்.

  ஆட்சி மாறினாலும் ,மாறாவிட்டாலும் தமிழ் வழி பொறியியல் இந்தாண்டுடன் நிறுத்தி இருப்பார்கள் என்பதே உண்மை.

  இதெல்லாம் எப்படி தெரியும்னு கேட்காதிங்க, பொறியியல் கல்லூரிகளுடன் தொழில்முறை சந்திப்பு அடிக்கடி நடக்கும் அவ்வளவே.

  பதிலளிநீக்கு
 43. here nobody is criticising brahmins they are only exposing the brahmins.

  பதிலளிநீக்கு
 44. I have another technical doubt. Both the assembly and library buildings are designed to have a centralized air-conditioning system. If converted into public hospitals, will it be affordable to have a public hospital with centralized air-conditioning system. Will this continue or would be changed?

  பதிலளிநீக்கு
 45. //தத்துக் கொடுக்கையில் நம்முடைய இனிஷியலைத்தான் வைத்தாக வேண்டும் என்று யாரும் கோருவதில்லையே?//

  ஒருத்தரு புத்திர பாசத்துல திருதராஷ்டிரன மிஞ்சினவர். இன்னொருத்தர் தத்துப் பையனவே கஞ்சாக் கேஸில் உள்ளே தள்ளியவர்.

  நல்லா கொடுத்தாங்கய்யா தத்து.

  பதிலளிநீக்கு
 46. Vilakumaaru adi marumagal vaangugiraal enbadhil endha maatru karuthum illa. Aanal DMK vuku vote potu maamanaar kooda paduka vendi iruke 5 varusam, adhuku idhu thevalai pola endru thaan maathi kuthugiraargal. Karuna endra izhi piravi illai yenil kandipaga indha nilamai namaku irukaadhu, very yaaro oru maamiyaar maati irupaar

  பதிலளிநீக்கு
 47. //ஒரு தகப்பன் முன்வந்து, பெற்றது நான் தான், ஆனால் நீங்கள் உங்களுடைய இனிஷியலை இவனுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தன் குழந்தையை தத்துக் கொடுக்க வேண்டும் என்று கோருகிறீர்க//
  இதை விட மொக்கையான சிந்தனை இருக்க முடியாது. தந்தை தனது சொந்தமான அணுக்களை வைத்து பிள்ளை பெறுகிறான். நூலகம் அதே போன்றா கட்டப்பட்டது? எத்தனை கிராமப்புற நூலக நிதிகளைச் சுருட்டி, தமிழர்களின் வரிவிதிப்பிலிருந்தும் சுருட்டி கட்டப்பட்டது? இது என்ன குடும்பச் சொத்தா? அவர் சுருட்டும் போது பாராட்டியவர்கள், இவர் சுருட்டும் போது மட்டும் ஏன் கொந்தளிக்க வேண்டும்? புரியவில்லை

  பதிலளிநீக்கு
 48. Requesting participation of people in the occupy anna centenary movement ...

  https://www.facebook.com/groups/241516629236700/

  பதிலளிநீக்கு