October 29, 2011

காணவில்லை!

பேரன்பும், பெருங்கோபமும் கொண்டு எரிமலையாய் போஸ் கொடுக்கும் மேற்கண்ட படத்தில் இருக்கும் நபரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. இந்த தேதிக்குப் பிறகு ஒரே ஒரு நாள் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய ஈழத்தாய் டாக்டர் புரட்சித்தலைவிக்கு பாராட்டுவிழா நடத்தியபோது மட்டும் மேடையில் கண்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.

மே 13க்கு முன்பாக ‘மீனவனை அடித்தால், மாணவனை அடிப்பேன்’ என்று இவர் அடித்த பஞ்ச் டயலாக் மிக பிரபலம். மே 13க்குப் பிறகாக மீனவனை சிங்களவன் அடித்தால், பதிலுக்கு கொசுவை மட்டுமே அடித்து, இவர் காலம் தள்ளுவதாக பி.டி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.

மூவர் தூக்குத்தண்டனை நேரத்தில் காஞ்சிபுரத்தில் செங்கொடி உயிர்த்தியாகம் செய்தபோது, ஊர்வலத்தில் கலந்துக்கொள்ள மேற்கண்ட நபர் காஞ்சிக்குச் சென்றார். அங்கே திடீரென்று காங்கிரஸ் கொடி எரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததும் ‘தள்ளு தள்ளு’ என்று கூட்டத்தை தள்ளிக்கொண்டு, எரியும் கொடிக்கு முன்பாக இந்திய தேசியத்தை சாடி வீரவசனம் பேசச் சென்றார். இவர் வேகமாக சென்றுக் கொண்டிருந்தபோதே, அடிபொடி ஒருவர் “அண்ணே அதிமுக கொடியையும் சேர்த்து எரிக்கிறாய்னுங்க...” என்று தகவல் கொடுத்த, அடுத்த நொடியே கோபத்தோடு, புயல்வேகத்தில் சென்னைக்குத் திரும்பினார் என்று நமது காஞ்சி மாநகர செய்தியாளர் காஞ்சனமாலா தெரிவித்திருக்கிறார். எனவே செங்கொடி இறுதி ஊர்வலத்திலும் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்கள் யாரும் பார்த்ததாக சாட்சிகள் இல்லை.

இப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்று மத்திய அரசுடன் இணைந்து, மேற்கண்ட நபர் நித்தமும் வணங்கும் ஈழத்தாய் புரட்சித்தலைவியின் தமிழக அரசாங்கமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் இந்த தமிழின ஈழநல புரட்சிக் கோரிக்கையை பாராட்டி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மீண்டும் நடத்தப்போகும் பாராட்டு விழாவில் மேற்படி நபர் மீண்டும் தென்படலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

18 comments:

 1. உங்களிடமிருந்து அணில் மற்றும் தள்ளு தள்ளுக்கு ஏப்போது விடுதலை கிடைக்கும் ?

  ReplyDelete
 2. me the firstனு கமென்ட் போட்ட டென்ஷன் ஆவிங்களா??

  ஆரம்பத்தில் அவர் எதோ பன்னுவார்னு பார்த்தேன் ஆனா அம்மா புகழ் பட ஆரம்பிச்ச பிறகு அவர் என்ன செய்றரனு தெரிஞ்சது முதலில் காங்கிரசை எதிர்க்க அமம்வை அதறிக்கிறேன்னு சொன்னார் இப்போ அம்மாவின் நிஜ சொம்பக மாறிவிட்டார் ..
  இவரை மாதிரியே மத்தியில் ஒருத்தர் இருக்கார் அவர் பெயர் அன்னா

  ReplyDelete
 3. இதெல்லாம் ஒரு பொழப்பு. எழவு எவ்வளவு பொட்டி வாங்குனாருன்னுதான் தெரியலே.

  ReplyDelete
 4. அவரு விளையாட்டா சொன்னதெல்லாம் நீங்க நம்பி.... அய்யோ...அய்யோ....

  ReplyDelete
 5. it's good idea to comment about others to increase traffic. what you are doing
  யுவகிருஷ்ணா sir.

  ReplyDelete
 6. தள்ளு தள்ளு .
  இல்ல, இங்கே ஒரு மானஸ்தன் 'இருந்தாரு' அவரு இருக்காரான்ன பாத்தேன்!

  ReplyDelete
 7. அம்மையாரை போல ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லை.போன மாதம் தான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக பேசினார். இந்த மாதம் அந்தர் பல்டி அடித்து தூக்கு தண்டனைக்கு ஆதரவு தெரிவிக்கிறார். என்ன பொழப்பு சார் இது.

  மீண்டும் சொல்கிறேன் சாமான் மன்னிக்கவும் சீமான் தான் அணிந்திருக்கும் டி சர்ட்டில் உள்ளவரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார்.

  யுவா அம்மையாரின் பெங்களூரு வழக்கை பற்றி ஒரு பதிவு தகவல்களுடன் அதாவது என்ன செக்சன் தண்டனை எவ்வாறு இருக்கும் போன்ற தகவல்களுடன் பதிவு ஒன்றை போடுங்களேன்.

  ஒருவேளை அந்த வழக்கிலிருந்து தப்பிக்கத்தான் மத்திய அரசுக்கு இந்த தூக்கு விசயத்தில் ஆதரவு தெரிவிக்கிறாரோ?
  அப்படி ஒரு வேளை மத்திய அரசு அம்மையாரை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க நினைத்தால் அம்மையாரால் தப்பிக்க முடியுமா? வழக்கு அந்த அளவுக்கு பலகீனமாக இருக்கிறதா? அல்லது வலுவாக இருக்கிறதா? இதை எல்லாம் அடங்கிய ஒரு பதிவை சீக்கிரம் போடுங்களேன்.

  ReplyDelete
 8. இப்ப சீமானைப் பத்தி எழுதிட்டீங்ணா. இன்னும் பாருங்க... இலங்கைத் தமிழருக்காக உசுரை விடறேங்கிற இன்னும் பல கோமான்களைப் பத்தியும் இதுபோல எழுதத்தான் போறீங்க. படிப்பு, அரசியல், சாமி எல்லாம் வியாபாரமானதுகூடப் பெரிசில்லீங்ணா. இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வா, சாவா போராட்டமும் சில பேருக்கு வியாபாரமாயிடுச்சுங்ணா. அதான் கவலையாயிருக்கு. இன்னும் சில பேருக்கு இது தங்களை விளம்பரப்படுத்திக்கிற ஒரு ’நல்ல’ விஷயமாயிடுச்சு. இதச் சொன்னா, இந்தக் கிருபாநந்தினி பொல்லாதவளாயிடுவா!

  ReplyDelete
 9. இங்கே பாருங்கள்

  http://news.lankasri.com/view.php?22cIB5400jjCAceeGGRDdbb99qWbdd2233eccppa2044QQH3223VLk32

  ReplyDelete
 10. ஒரு வேளை தமிழனத்தலைவரிமிருந்து அரசியலை கற்றுக் கொண்டுவிட்டாரா சீமான்?

  ஆட்சியிலிருக்கும் போது தூக்குதண்டனையை ரத்து செய்யும் வாய்ப்பை விட்டுவிட்டு தண்டனையை உறுதிப்படுத்தியவர் நம் தமிழனத்தலைவர். ஆனா இப்போது ஒன்னுமே தெரியாதவர் போல, அம்மையார் தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சீன் போடும் அளவுக்கு சீமான் பர்பாமன்ஸ் இல்லையே.. இன்னமும் பயிற்சி வேண்டுமோ?

  ReplyDelete
 11. அழகிரி .. தேர்தலுக்கு முன் .. தேர்தலுக்கு பின்.. பற்றி எதாவது எழுதி இருந்தா.. இந்த போஸ்ட் எழுத ஒங்களுக்கு தகுதி இருக்கு.. ஏன் இந்த பாரபட்சம்.. நடுநிலையான பதிவுகளை எதிர் பார்க்கிறேன்..

  ReplyDelete
 12. உங்களுக்கு தெரியுமா?

  சாந்தனும், முருகனும் தாங்கள் தூக்கிலடப்பட்ட பிறகு தங்கள் உடலை ’அண்ணன் சீமானிடம்’ ஒப்படையுங்கள் என்று தான் கூறியுள்ளனர்.

  உங்கள் தமிழின ஈன தலைவன் கருணாவிடம் இல்லை.?! லக்கி

  உங்கள் சன் டிவியும் மீடீயாக்களும் சீமானை புறந்தள்ளிவிட்டு இப்போது வைகோவை தூக்கிபிடிக்கிறார்கள் என்பதே உண்மை. இத்தனை ஆண்டுகள் எங்கே போனார் ஜெத்மலானி??!

  செங்கொடி ஊர்வலத்தில் சீமான் ஒரு ஓரத்தில் காட்டப்பட்டார். நீங்கள் பார்க்கலையோ.! இதெல்லாம் கலீஞர் டிவில வராது. கனிமொழி மட்டும் தான் வரும்; ஆனா வராது ஜாமீன்!!

  இந்த கமெண்ட் வருமா?!

  ReplyDelete