28 அக்டோபர், 2011

வேலாயுதம்

இஸ்லாமியத் தீவிரவாதிகள். அவர்களுக்கு உதவும் அம்மாஞ்சி தமிழக உள்துறை அமைச்சர் என்று படத்தின் ஆரம்பம் காமாசோமாவென்று விஜயகாந்த், அர்ஜூன் படங்களின் பாதிப்பில் தொடங்கும்போதே வயிற்றிலிருந்து தொண்டைக்கு கிளம்புகிறது ஒரு கிலிப்பந்து. அடுத்து ஒரு நேர்மையான பத்திரிகையாளராக ஜெனிலியா. நேராகப் போய் அயோக்கியர்களின் கோடவுனில் நடக்கும் அட்டூழியங்களையெல்லாம் ஈஸியாக படம் பிடித்துவிடுகிறார் என்று அடுத்தடுத்து கிலி மேல் கிலி. சுறா பார்ட் டூ மாதிரியிருக்கே என்று நொந்துப்போய் சாயும் நேரத்தில், நல்லவேளையாக சீக்கிரமாகவே இளையதளபதியை அறிமுகப்படுத்தி கிலியை கிளுகிளுப்பாக்குகிறார்கள்.

நீண்டநாள் கழித்து விஜய்க்கு காமெடி செல்ஃப் எடுத்திருக்கிறது. கோழி பிடிப்பது, கிணற்றிலிருக்கும் நீரை காலி செய்வது, தியேட்டரில் பாசமலரின் ‘ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்’ சீனுக்கு ஒன்ஸ்மோர் அடித்துக் கொண்டேயிருப்பது என்று தங்கச்சிக்காக அவர் செய்யும் கோமாளித்தனங்கள் அத்தனையும் காமெடி கும்மி. ஆனால் இந்த சீன் ஒவ்வொன்றையும் ட்ரெயின் பயணத்தில் ஒருவர் தனித்தனி பிளாஷ்ஃபேக்காக சொல்லிக் கொண்டு வருவதுதான் மொக்கை.

சீட்டு பணம் வாங்க ஊரில் பாதி பேரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு வருவதும், இங்கே காமெடித் திருடன் சந்தானத்தோடு சேர்ந்து கும்மாளம் போடுவதுமாக விஜய் நீண்டநாள் கழித்து ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். விஜயை விட சந்தானத்துக்கு ரசிகர்கள் அதிகம் போலிருக்கிறது. அவர் முகத்தைக் காட்டினாலேயே சிரிக்கிறார்கள். பேசத் தொடங்கினாலேயே விசில் அடிக்கிறார்கள். கவுண்டமணி பாணி இரட்டை அர்த்த காமெடிகளில் கலக்குகிறார் மனிதர். குறிப்பாக ‘காமப் பிசாசு’ மேட்டர் செமை....

ஹன்சிகாவுக்கு கேரக்டர்தான் சப்பை. ஆளு கொழுக் மொழுக்கென்று வாட்டர்பெட் மாதிரி கிக்காக இருக்கிறார். விஜய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரேப் செய்ய நினைக்கும் காட்சியில் அவரது தொப்புள் சிறப்பாக நடித்திருக்கிறது. அது இயற்கையான தொப்புள் தானா அல்லது ஸ்பெஷலாக லண்டனில் ஆர்டர் செய்து செய்த மெழுகுத் தொப்புளா என்கிற சந்தேகம் வருகிறது. மற்றபடி ஹன்சிகாவின் ஹேர்ஸ்டைல் சூப்பர். உதடுகள் சூப்பரோ சூப்பர். நடிப்புதான் கொடுமை. வேறென்ன சொல்ல?

முதல் காட்சியில் தொடங்கிய மொக்கைக் கதையை அவ்வப்போது லேசுபாசாக காட்டினாலும், விஜய்யின் கொட்டம் தூள் கிளப்புவதால் இடைவேளை வரை பிரச்சினையில்லாமல் படம் பார்க்க முடிகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிக்குப் பிறகு இளையதளபதி ஒரு மாஸ் எண்டெர்டெயினர்.

இடைவேளைக்குப் பிறகு வழக்கமான சுறாத்தனம். விஜய் அடிக்கிறார். அனைவரும் அடிவாங்குகிறார்கள். மீண்டும் மீண்டும் அடிக்கிறார். மீண்டும் மீண்டும் அடிவாங்குகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் பத்து, பண்ணிரெண்டு ஃபைட்டு இருக்கும் போலிருக்கிறது. இந்த கொடூரங்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல க்ளைமேக்ஸ். பாடிகார்ட் சல்மான் பாணியில், தளபதி சட்டையைக் கழற்றிவிட்டு எதிரிகளை பந்தாடுகிறார். சிக்ஸ் பேக்குக்கு பதிலாக மார்புக்கு கீழே ஒன்றோ, இரண்டோ பேக்குதான் தளபதிக்கு இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் சிலர் ‘வாட் எ மேன்?’ என்று புல்லரிப்பதைப் பார்க்கும்போது படையப்பா ‘பேர் பாடி ஃபைட்’ நினைவுக்கு வருகிறது. முதல் பாதி முழுக்க காமெடியில் கலக்கி எடுத்தவர்கள், இரண்டாம் பாதியில் சீரியஸாக எதை செய்தாலும் அவல காமெடியாகவே முடிவது கொடுமை.

விஜய் திரைத்துறைக்கு வந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகிறது. சில படங்களில் திறமையான நடிப்பாற்றல் தனக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டவும் செய்திருக்கிறார். குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை அவருக்கென்று பெரிய ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வசூல் மன்னர் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படிப்பட்ட நடிகர் இன்னமும் இதுபோன்ற வீணாய்ப்போன ஸ்க்ரிப்டுகளிலேயே தன் திரையுலக வாழ்க்கையை ஏன் தொலைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த சூர்யா, ஜீவா என்று பல நடிகர்களும் வித்தியாசமான பாத்திரங்களில், வித்தியாசமான கதையமைப்புகளில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, இன்னமும் வேலாயுதம் மாதிரி பழைய ஃபார்முலா படங்களிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு என்ன? விஜய் தனது அடுத்தக் கட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

வேலாயுதம் – அணில் வெடி இடைவேளை வரை அபாரம்!

20 கருத்துகள்:

 1. எக்சாட்லி தலைவா...முதல் பாதியில் விஜயின் மாஸ் உண்மையிலேயே சூப்பர்..ரெண்டாவது பாதி கொஞ்சம் ராவவிட்டாங்க..

  பதிலளிநீக்கு
 2. //விஜய் தனது அடுத்தக் கட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.//
  மிக சரியான வார்த்தைகள்..அடுத்த கட்டம் ஆரம்பிக்க உள்ளது நண்பன்-யோகன் அனைத்துமே வழக்கமான போர்முல இல்லாதவையே

  பதிலளிநீக்கு
 3. நல்ல விமர்சனம். இடைவேளைக்கு பின் கொஞ்சம் பழைய வாடை அடித்தாலும் அவ்வளவாக சோரம்போகவில்லை

  பதிலளிநீக்கு
 4. அந்த காலத்தில் விகடனோ குமுதமோ ஞாபகமில்லை.. ஓவியத்தை வரைந்துவிட்டு அதற்க்கு கதை எழுதச் சொல்வார்கள்... அது போல் அணில் வெடி படத்தை எப்போது போட்டுவிட்டு ஒரு மாதிரி அதற்க்கேற்ப்ப விமர்சன்ம் எழுதிவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அணில் காட்டு காட்டுன்னு காட்டுவேன் என்று பஞ்ச டயலாக் மன்னிக்கவும் பஞ் டயலாக் பேசுகிறாராமே கலைஞர் சீக்கிரம் காட்டுவார் பாருங்க இவனுக்கு நரகத்தை.

  பதிலளிநீக்கு
 6. பதிவின் கடைசிப் பத்தி விஜய் பற்றிய, பண்ண வேண்டிய காரண காரியங்கள். ஆனால் அடுத்த முதலமைச்சர் கனவில் ஆழ்ந்திருக்கும், சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி விட்டதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு இவை எதுவும் காதில் ஏறுமா என்ன?

  எல்லாம் அணில் ஐயா பண்ற வேலைன்னு நினைக்கிறேன். பயங்கரமா உசுப்பேத்தி விட்டிருக்கார்.

  பதிலளிநீக்கு
 7. மரண தண்டனைக்கெதிரான குரல்கள் தமிழகத்தில் பரவலாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.

  கலைத் துறையில் மரண தண்டனைக்கெதிராக தீவிர பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு ஆவணப் படம் தயாராகியுள்ளது. இதற்கு தொடரும் நீதி கொலைகள் என தலைப்பிட்டுள்ளனர்.

  இந்த ஆவணப் படத்தின் வெளியீடு நாளை (29 October, 2011) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள கோயம்பேடு போராட்ட அரங்கில் நடக்கிறது.

  இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் இந்தப் படத்தின் குறுந்தகடை வெளியிட, முதல் பிரதியை மதிமுக பொதுச் செயலர் வைகோ பெற்றுக் கொள்கிறார்.

  பிரபல நடிகர் / இயக்குநர் சேரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஆர் பி அமுதன் இயக்கியுள்ளார்.

  தமிழ் உணர்வாளர்கள் பலரும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது.

  பதிலளிநீக்கு
 8. ஹன்சிகா படம் இல்லாமல் விமர்சனம் போட்ட உங்களை கண்டிக்கிறோம்! இவண்,
  ஹன்சிகா ரசிகன்

  பதிலளிநீக்கு
 9. YK, Please post your reviews much earlier... I have seen such reviews much much earlier than yours... :(

  பதிலளிநீக்கு
 10. Just one line about Genelia. No mention of the songs, picturization, editing, cinematography, BGM etc? Still it seems a unbiased review.

  பதிலளிநீக்கு
 11. கடைசி பாராதான் விஜயின் உண்மையான ரசிகர்களின் ஏக்கமாகவும் இருக்கும் லக்கி..

  வழக்கம்போல சுறுக்கமான, நறுக்கான விமர்சனம்..

  பதிலளிநீக்கு
 12. There was a Mankatha song in the background in a scene. Did you notice that?

  பதிலளிநீக்கு
 13. //சந்தேகமில்லாமல் ரஜினிக்குப் பிறகு இளையதளபதி ஒரு மாஸ் எண்டெர்டெயினர்//

  :))))))))))))

  பதிலளிநீக்கு
 14. //இப்படிப்பட்ட நடிகர் இன்னமும் இதுபோன்ற வீணாய்ப்போன ஸ்க்ரிப்டுகளிலேயே தன் திரையுலக வாழ்க்கையை ஏன் தொலைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இவருக்குப் பின்னால் வந்த சூர்யா, ஜீவா என்று பல நடிகர்களும் வித்தியாசமான பாத்திரங்களில், வித்தியாசமான கதையமைப்புகளில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, இன்னமும் வேலாயுதம் மாதிரி பழைய ஃபார்முலா படங்களிலேயே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு என்ன?//

  அதனால தான் அவரு ௦20 வருஷமா 'field ல இருக்காரு...
  நீங்க சொன்ன சூர்யா ஜீவா இவங்கெல்லாம் 10 வருஷம் கழிச்சு பாக்கலாம்...ஒரு சிவகுமார் நிழல்கள் ரவி ரேஞ்சிக்கு போயிருவாங்க...
  இளையதளபதி வாழ்க...

  நன்றி
  சந்துரு

  பதிலளிநீக்கு
 15. //சில படங்களில் திறமையான நடிப்பாற்றல் தனக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டவும் செய்திருக்கிறார். //

  உங்களுக்கு நெஞ்சுல ஈரமே இல்லையா?

  பதிலளிநீக்கு