6 அக்டோபர், 2011

கவர்ச்சிகரமான தேநீர்ச்சட்டை ஓசியில் வேண்டுமா?

இண்டிபிளாக்கர் என்பது இந்திய வலைப்பதிவர்களை இணைக்கும் ஒரு இணைய அமைப்பு. இந்த அமைப்பு அவ்வப்போது இந்திய நகரங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கம். வருடத்துக்கு ஒருமுறை சென்னையிலும் நடத்துகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்வது வழக்கம். கடந்தாண்டு நிகழ்ந்த இண்டிபிளாக்கர் சென்னை வலைப்பதிவர் சந்திப்பை யுனிவர்செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் சந்திப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டாட்டா க்ராண்டே டிகோர் வழங்கும் இண்டிபிளாக்கர் சந்திப்பு, வரும் 9, அக்டோபர் அன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை வரை நடக்கிறது.

இடம் : ஹ்யாத் ரீஜென்ஸி, 365, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

மொத்தம் 250 வலைப்பதிவர்கள் கலந்துக் கொள்ளலாம். இந்த நிமிடம் வரை சுமார் 200 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் 50 பேர் வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். எனவே பதிவுக்கு முந்துவீர்.

கடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இவ்வாண்டு கொஞ்சம் கூடுதலாக கலந்துக் கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் வலைப்பதிகிறார்கள் என்கிற செய்தியை இந்திய வலைப்பதிவர்களுக்கு கொஞ்சம் ஓங்கிச் சொல்ல முடியும்.

மறவாதீர் சந்திப்பில் ஹைடீ (உயர்ந்த தேநீர்?) வழங்கப்படும். அதுமட்டுமின்றி கவர்ச்சிகரமான தேநீர்ச் சட்டையும் இலவசம். உங்களுக்கு கார் ஓட்டத் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஓட்டுனர் உரிமமும் இருக்குமானால் ஒரு டாட்டா டிகோர் காரை ஓட்டிக்கொண்டு சந்திப்புக்கு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தமிழ் வலைப்பதிவர்களே! பந்திக்கு முந்தும் நீங்கள் இந்த சந்திப்பின் பதிவுக்கும் முந்துவீர்!! இதுவரை உங்களுக்கு இண்டிபிளாக்கர்.இன்-ல் அக்கவுண்ட் இல்லையென்றாலும், உடனடியாக ஏற்படுத்தி, இச்சந்திப்புக்கான பதிவினை உறுதி செய்யலாம்.

பதிவு செய்யப்பட வேண்டிய இணையத்தள முகவரி : http://www.indiblogger.in/bloggermeet.php?id=130

11 கருத்துகள்:

 1. பதிவு செய்துவிட்டேன் யுவா..
  கலந்து கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.30 சதாப்தியில் பெங்களூக்கு போகின்றேன்.. தக்கலில் புக் செய்தகாரணத்தால் கேன்சல் செய்ய முடியாது.. குடும்பத்துடன் செல்கின்றேன். சனி இரவு பெங்களூரில் இருந்து கிளம்பி இந்த பதிவிர் சதிப்பில் கலந்து கொள்ள சென்னைக்கு வருகின்றேன்..காரணம் ரொம்ப சிம்பிள்.. எத்தனை நாளைக்குதான் சென்னை லைட் ஹவுஸ் அருகே பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு இருப்பது..

  பதிலளிநீக்கு
 3. மதுரை டூ சென்னை ஒரு நாள் வந்து போகும் செலவை விட தேநீர் சட்டையையும் உயர் ரக தேநீரையும் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்,

  பதிலளிநீக்கு
 4. முதலில் அது 'தேனீர் சட்டை' அல்ல. டி-சட்டை என்றே எழுதவேண்டும். T-shirt, NOT Tea-shirt

  சரவணன்

  பதிலளிநீக்கு
 5. முந்தியாச்சி பாஸ்.. இன்னும் கூட 35 இருக்கைகள் இருக்கு

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பகிர்வுக்கு நன்றி.........

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 7. நான் 90 வது ஆளாய் பதிவு செய்து விட்டேன் அண்ணே

  பதிலளிநீக்கு
 8. high tea
  ==
  A meal eaten in the late afternoon or early evening, typically consisting of a cooked dish, bread and butter, and tea

  பதிலளிநீக்கு
 9. I've registered as 103 or something. :)

  Hope we'll meet there. :)

  I am gonna come in Tata Grande. :)

  Be ready with a camera to snap me with the car. :)

  பதிலளிநீக்கு