14 செப்டம்பர், 2011

லெட்டர் டூ தி எடிட்டர்

அன்புள்ள ஆசிரியருக்கு,

என் சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் அவ்வப்போது நடைபெறும் சாதிக்கலவரங்கள் அச்சமூட்டுகின்றன.

இதுபோல ஏதாவது சாதிக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் மாநிலத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தெருப்பெயரிலிருந்து சாதியை எடுத்து தற்காலிகமாக பிரச்சினையை திசை திருப்புகிறது. தெருவுக்கும், ஊருக்கும் சாதிப்பெயரை வைத்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான்.

தெருவுக்கும், ஊருக்கும் மட்டுமல்ல. பேருந்து நிலையத்துக்கும், ரயில் நிலையத்துக்கும், ஏன் விமான நிலையத்துக்கும் கூட சாதித்தலைவர்களின் பெயரை வைத்து ஓட்டு வாங்குவதே இவர்களுக்கு பிழைப்பாகப் போய்விட்டது. தெருவுக்கு தெரு சாதித்தலைவர்களுக்கு சிலை வைத்து, போலிஸ் பாதுகாப்பு போட்டு அரசியல்வாதிகளே கலவரத்தை தங்கள் சுயநலத்துக்காக உருவாக்குகிறார்கள். நம் நாட்டில் ஊழல், சாதிப்பிரிவினை, லஞ்சம் என்று எல்லா கேடுகளுக்கும் அரசியலும், கேடுகெட்ட அரசியல் வியாதிகளுமே காரணம்.

உலகில் எங்காவது நடக்குமா இந்த அநியாயம்? அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சாதிப்பெயரில் தெருக்கள் உண்டா? சாதித்தலைவர்களுக்கு சிலைகள்தான் உண்டா?

சாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது கூட, என்ன சாதி என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பிஞ்சு மனங்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். ஏனென்றால் சாதி மூலமாக இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுத்து, அப்பாவி மக்களின் ஓட்டுகளை வெட்கமில்லாமல் வாங்குகிறார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினான் பாரதி. அவன் வாக்கு பொய்த்துப்போனது இந்த அரசியல்வாதிகளால். சாதி இல்லாத இந்தியா எப்போது சாத்தியமாகுமோ, அதை என் வாழ்நாளில் என்று காணமுடியுமோவென்று ஏங்கித் தவிக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா
yuvakrishna.iyer@gmail.com

23 கருத்துகள்:

 1. //yuvakrishna.iyer@gmail.com// adha vida idhu better uha suit aagum..!
  yuvakrishna.iyengar@gmail.com

  பதிலளிநீக்கு
 2. அடச்சே மெயில் ஐடி இப்போதான்யா பாத்தேன் ! குசும்புய்யா உமக்கு சும்புய்யா உமக்கு

  பதிலளிநீக்கு
 3. //"yuvakrishna.iyer@gmail.com"//
  யுவகிருஷ்ணா செம பினிஷிங் டச் ஹி.ஹி.ஹிஹி.//"yuvakrishna.iyer@gmail.com"//
  யுவகிருஷ்ணா செம பினிஷிங் டச் ஹி.ஹி.ஹிஹி.

  பதிலளிநீக்கு
 4. ஒரு பக்க பதிவுக்கு கடைசியா நாலு எழுத்திலே ஒரு ட்விஸ்ட்:-))) மொத்த பதிவும் பகடியாகிடுச்சு:-))

  பதிலளிநீக்கு
 5. ஏன்டா பொருக்கி! உனக்கு வேற எதுவும் கிடைக்கலையா? இப்போ அடிச்சிக்கிட்டு சாகறது ஐயரா இல்ல ஐய-ங்காரா??

  நீங்க வீனா போன தேவனும் நாடாரும் பொருக்கி தின்னும் நாயும் அடிச்சிக்கிட்டா Iyer என்னடா பண்ணுவான்?

  பதிலளிநீக்கு
 6. Yuvakrishna.dalit@gmail.com apdinnu vakka vendiyathu thane athu kooda kevalamnu therinja sari

  பதிலளிநீக்கு
 7. டிபன் பாக்ஸ் மாதிரி மொக்க கதைக்கு வந்த எதிர்வினைய பாத்து உணர்ச்சிவசப்பட்டு எழுதின கதை. பெயரிலி சொன்ன மாதிரி ஐயங்கார் இன்னும் மாஸ்டர் டச்சா இருந்திருக்கும். Letter to the Editor, The Hindu அப்படின்னு போட்டா இன்னும் கலக்கலா இருக்கும். அசத்துங்க.

  பதிலளிநீக்கு
 8. yuvakrishna.iyer saathi patri solgiraram - Naamum ketpom :(

  பதிலளிநீக்கு
 9. யாரையோ நக்கலடிக்கணும்'னு நினச்சு யாரையோ நக்கலடிச்சிருக்கீங்க.. நடத்துங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி..

  பதிலளிநீக்கு
 10. மெய்ல் அய்டில அய்யர்னு வெச்சிக்கிடற ஐயரெலாம் தமில்நாட்டவிட்டு வேற ஷ்டேட்டுகுப்போய் ரொம்பவருடமாயிருக்குஞ்சாரே

  பதிலளிநீக்கு
 11. மிகவும் நல்ல யுக்தி..
  உங்கள் பெயரையே வைத்துக்கொண்டது, மேலும் தேவர்,நாடார்,செட்டி என்றெல்லாம் போட்டு வம்பை விலைக்கு வாங்காமல் "எல்லாருக்கும்" செளகரியமான ஐயர் என்று போட்டது,வீரத்தைக்காண்பிக்கிறது.
  என்ன இருந்தாலும் "கயவர் கருணா கல்லூரி"யில் படித்து பட்டம் பெற்றரவல்லவா?இந்த அளவு குள்ளநரித்தனம் கூட இல்லாவிட்டால் எப்படி!

  பதிலளிநீக்கு
 12. செம்ம நக்கல். நம்மை திருத்தாமல் ஊரை குறை கூறினால்..

  பதிலளிநீக்கு
 13. //"சாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது கூட, என்ன சாதி என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்கிறார்கள்."//
  உண்மை வரிகள்.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 14. கடைசியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியும் சாதியின் இணைப்பு உள்ளது போல iyer

  பதிலளிநீக்கு
 15. பார்ப்பனர்கள் மீது நீங்கள் காட்டுவதின் பெயர் என்னவோ? அன்பா? பாசமா?

  பதிலளிநீக்கு
 16. Eppadi kadhayil varubavar than poli jathi ethirpai thannodaya email id moolam kaatikondaro, adhe pol yuvavum thannudaya poli jathi ethirpai oru kurippitta inathavari thakkiyathan moolam katikondu vittar.

  பதிலளிநீக்கு
 17. சாதி வேண்டாம், சாதி வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்போது கூட, என்ன சாதி என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். பிஞ்சு மனங்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். ஏனென்றால் சாதி மூலமாக இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் கொடுத்து, அப்பாவி மக்களின் ஓட்டுகளை வெட்கமில்லாமல் வாங்குகிறார்கள்.
  this is the main reason for "yar sir ippo ellam sathi paakkura" statement

  பதிலளிநீக்கு
 18. "எல்லாருக்கும்" செளகரியமான ஐயர் என்று போட்டது,வீரத்தைக்காண்பிக்கிறது.

  இந்த கருத்தை நான் வன்மையாய் ஆதரிக்கிறேன். கடுமையாய் வழிமொழிகிறேன்,
  மேலும் இதுபோன்ற வீரம் செரிந்த பதிவுகளுக்கு வலைஞன் போன்றோரின் கோழைத்தனமான பின்னூட்டங்கள் தொடர்ந்து வரவேண்டுமென்று இறுதியாக எச்சரிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. யுவா ... இதில் ஏதோ உள்குத்து இருக்கும்போல தெரியுதே ..

  பதிலளிநீக்கு
 20. அடச்சே.. கீழ உள்ள மெயில் ஐடி பாக்காம விட்டுட்டேன்... கலக்குங்க தல..

  பதிலளிநீக்கு