10 செப்டம்பர், 2011

காசேதான் கடவுளடா

எவ்வளவு நாளாச்சி நம்ம பாபிலோனாவை திரையில் பார்த்து? போலிஸ் யூனிஃபார்மில் எப்போதும் அட்டென்ஷனுடன், பரந்த மனசை அசோகர் தூண் மாதிரி நிமிர்த்துக்கொண்டு.. கூராக தீட்டப்பட்ட வேல் விழிகள். பக்காவாக திருத்தப்பட்ட வில் புருவம். எழிலான குண்டு முகம். பருவம் மின்னும் பால் வண்ணம். சந்திரன் தியேட்டருக்கு கொடுத்த 70 ரூபாய், பாபிலோனாவுக்கு மட்டும் ஓக்கே.

ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கோங்குரா சட்னி ஆந்திராவையே சிரிப்பால் அலறவைத்த ப்ளேட் பாப்ஜி, தமிழில் காசேதான் கடவுளடாவாக வெளிவந்திருக்கிறது. அப்படியே டப் அடித்திருந்தால் கூட நன்றாக டப்பு பார்த்திருக்கலாம். ஏன்தான் ரீமேக்கி மொக்கை ஆக்கினார்களோ தெரியவில்லை. இப்படத்தின் இயக்குனர் திருமலை ஏற்கனவே தீ.நகர், அகம்புறம் மாதிரியான மெகா மொக்கைப்படங்களை இயக்கியவர். ஆக்‌ஷன் போர் அடித்து, காமெடிக்கு வந்து தொலைத்துவிட்டார்.

அனேகமாக ஹீரோ சரண் தான் இப்படத்தின் மறைமுக தயாரிப்பாளராக இருந்திருக்க வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா தன்னுடைய எடையை பாதிக்குப் பாதி குறைத்தால் எப்படியிருப்பாரோ, அச்சு அசலாக அப்படியேதான் இருக்கிறார் சரண். பீரங்கி மூக்கினை கூலர்ஸ் போட்டு சமாளிக்கிறார். ஹீரோதான் த்ராபையாகி விட்டார் என்றால் ஹீரோயின் அதற்கும் மேல். காம்னா. உடம்பு கும்மென்று இலவசம்பஞ்சு மெத்தை மாதிரி இருந்தாலும், எதற்குமே ஒத்துழைக்காத அசமஞ்ச முகம். தேவுடா.


ஒரிஜினல் படமான தெலுங்கில் அல்லரி நரேஷ் ஹீரோ. இவர் ஆள் கொஞ்சம் சப்பையாக இருந்தாலும், தெலுங்கு மீடியம் பட்ஜெட் படங்களின் கில்லி. காமெடி + செக்ஸ் இவரது பலம். இவர் படங்களின் வசனங்கள் டபுள் மீனிங்கெல்லாம் கிடையாது, எல்லாமே டைரக்ட் மீனிங்தான். தமிழில் கூட விஷ்ணுவர்த்தன் அறிமுகமான குறும்பில் இவர்தான் ஹீரோ. தெலுங்கில் இவர் நடித்த ஒரிஜினலை பார்த்துவிட்டு, தமிழில் காசேதான் கடவுளடா பார்க்க ‘டொங்கு’ மாதிரியிருக்கிறது.

குறிப்பாக ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங்க் படா பேஜார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே, சூப்பர் ஸ்டார் இமேஜ் தங்களுக்கு வந்துவிடுவதாக சமகால ஹீரோக்கள் மாயையில் உழல்வது துரதிருஷ்டவசமான சோகம்.

‘ஆண் பாவம்’ பாண்டியராஜன், அந்த காலத்தில் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். இப்படியான டொக்குப் படங்களில் கட்டை வேடங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் வருமென்று. பாபிலோனா குனிந்து எதையோ தேடிக்கொண்டிருக்க, பின்னால் நின்றுக்கொண்டு இவரும், டெல்லிகணேஷும் ஏதேதோ பேசுகிறார்கள். ஆர்வமாக நாம் நிமிர, சென்ஸார்காரன் ‘ங்கொய்’ அடித்து வெறுப்பேற்றுகிறான். ‘யூ’ சர்ட்டிஃபிகேட் வாங்குவதற்காக சென்ஸார் ‘ங்கொய்’ போட்ட இடத்தையெல்லாம் மறுதலிக்காமல் பேக்கு மாதிரி தலையை ஆட்டியிருப்பார்கள் போல. ‘லூசு’ என்கிற வசனத்தைக் கூட சாஸ்திரிபவன்காரர்கள் மனச்சாட்சியே இல்லாமல் வெட்டியிருக்கிறார்கள்.

தாங்கள் வசிக்கும் குப்பத்தைக் காப்பாற்ற நாலு கோடி தேவை. நாலு நண்பர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த பணம் ரிலே ரேஸ் டார்ச் மாதிரி பலரிடம் கை மாறி, கை மாறி கடைசியாக ஹீரோ க்ரூப்பிடம் வந்து சேர்ந்ததா என்பதே கதை. க்ளைமேக்ஸில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணன் பகவத்கீதை உபதேசித்ததைப் போல ஒவ்வொரு கேரக்டரும், ஆளாளுக்கு நீதி, நியாயம் பேச.. சீக்கிரமா விடுங்கடா, பத்து மணிக்கு டாஸ்மாக் மூடிடுவான் என்று ரசிகர்கள் பிய்த்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

இடைவேளை வரை சுத்தமாக செல்ஃப் எடுக்காத படம், இடைவேளைக்குப் பிறகு கிச்சு கிச்சு மூட்டுகிறது. ஹீரோவும், ஹீரோயினும் ஒர்த் இல்லை என்பதாலேயோ என்னமோ பாண்டியராஜன், சிங்கமுத்து, மயில்சாமி, சிங்கம்புலி என்று காமெடியன்கள் படத்தை தூக்கிச் சுமக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொரு பெண் பாத்திரமும் எப்பவும் விரகதாபத்திலேயே இருப்பதைப்போல உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார்கள்.

தொப்புளுக்கு மேலே கஞ்சி என்பதைப்போல, பாக்கெட்டில் துட்டு எக்ஸ்ட்ராவாக இருப்பவர்கள் தியேட்டருக்குப் போய் பார்க்கலாம். இல்லையேல் மூன்று மாதம் கழித்து சன் டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளலாம். அரசு கேபிள் டிவி வாய்க்கப்பட்ட அதிருஷ்டசாலிகளுக்கு இந்த ஆபத்தும் இல்லையென்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

10 கருத்துகள்:

 1. //
  போலிஸ் யூனிஃபார்மில் எப்போதும் அட்டென்ஷனுடன், பரந்த மனசை அசோகர் தூண் மாதிரி நிமிர்த்துக்கொண்டு.. கூராக தீட்டப்பட்ட வேல் விழிகள்.
  //
  வர்ணிப்பு ஓவரா இருக்கு .. வீட்டுல சொல்லடுமா ?

  பதிலளிநீக்கு
 2. அப்ப படம் பாக்க வேண்டாம்னு சொல்றிங்க

  பதிலளிநீக்கு
 3. எந்த தைரியத்துல இப்படி படம் எடுக்கறாங்கன்றதுதான் எப்பவும் எனக்கு தோன்றும் கேள்வி?!


  ஒருவேளை இந்தப் பட தயாரிப்பாளருக்கு தொப்புளுக்கு மேலே கஞ்சி என்பதைப்போல, பாக்கெட்டில் துட்டு எக்ஸ்ட்ராவாக இருக்குமோ?!

  பதிலளிநீக்கு
 4. I think u r the author of "malathy teacher" and cable the author of "anbe maansi". same writing style.

  பதிலளிநீக்கு
 5. "மாலதி டீச்சர்" "அன்பே மான்சி" இவங்கெல்லாம் யாருங்க?

  பதிலளிநீக்கு
 6. தோழர் இக்கட்டுரையில் பொருள் குற்றம் இருக்கிறது. தொப்புளுக்கு மேலே கஞ்சி எப்படி சரியாகும்? தொப்புளுக்கு கீழே தானே கஞ்சி. சரியா?

  பதிலளிநீக்கு
 7. பயங்கரவாதம் என்றால் என்ன ? – தெரிந்து கொள்ளுங்கள்.

  சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் – அரசு செய்தது பயங்கரவாதம்.

  ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் – இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.

  பதிலளிநீக்கு
 8. எங்கள் காலேஜ்நாளில் "கஞ்சி"க்கான அர்த்தமே வேறு. சென்னையில் 40+ யாராவது இருந்தால் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்

  பதிலளிநீக்கு
 9. என்ன தல... கொஞ்ச நாளா ஷகீலா, பாபிலோனா பேர்லாம் அடிபடுது... னீங்கதான் நல்லா கல்லா கட்டுறீங்களே... அப்புறம் ஏன் இது மாதிரி... ரொம்ப காய்ஞ்சு போயிருக்கிற மாதிரி தெரியுது...

  பதிலளிநீக்கு
 10. சுமாரான பகிர்வு.

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு