23 ஜூலை, 2011

காஞ்சனா

பெரிய ஹீரோ. பெரிய டைரக்டர். பெரிய மியூசிக் டைரக்டர். என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்த்து முதல் நாள் முதல் காட்சியே தியேட்டருக்குப் போய் உட்கார்ந்து பல்பு வாங்கியதும் உண்டு.

என்னவோ ஒரு படம். மூன்று மணிநேரத்தை போக்கியாக வேண்டும் என்கிற கட்டாயத்தால் தியேட்டருக்குப் போய் இன்ப அதிர்ச்சியும் அடைந்தது உண்டு.

காஞ்சனா இரண்டாவது அனுபவத்தை தருகிறாள்.

சரண் தயாரிப்பில், லாரன்ஸின் இயக்கத்தில் முனி பார்த்திருக்கிறேன். முதல் தடவை பார்க்கும்போது மொக்கையாகவும், பின்னர் யதேச்சையாக டிவியில் அடிக்கடி காண நேரும்போது ‘அட சுவாரஸ்யமா இருக்கே’ என்று உட்கார்ந்தது உண்டு.

அதே கதை. அதே ஹீரோ. அதே இயக்குனர். கதாபாத்திரங்களை மட்டும் கொஞ்சம் ஷேப் அடித்து, டிங்கரிங் செய்து குலுக்கிப் போட்டால் முனி பார்ட் டூ ரெடி. முதல் பார்ட்டில் எங்கெல்லாம் ‘லாக்’ ஆகியது என்பதை கவனமாக பரிசீலித்து, காஞ்சனாவில் அதையெல்லாம் ‘ரிலீஸ்’ செய்திருப்பதில்தான் லாரன்ஸின் வெற்றியே இருக்கிறது. எந்திரன் ரிலீஸின் போதே ஜிலோவென்றிருந்த உட்லண்ட்ஸில் காஞ்சனாவுக்கு திருவிழாக் கூட்டமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழில் நிச்சயமாக ஹிட். தெலுங்கில் அதிநிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு பேய்ப்படத்தை பார்த்து தியேட்டரே வயிறு வலிக்க சிரித்துத் தீர்ப்பது அனேகமாக தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஒரு அட்டகாச காமெடி. அடுத்தக் காட்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் திகில். இப்படியே மாற்றி, மாற்றி அழகான சரமாக திரைக்கதையை தொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என்று எல்லாருமே இந்த உத்தி புரிந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவைசரளா. மனோரமாவின் உயரத்தை தாண்டுமளவுக்கு அபாரமான டைமிங் சென்ஸ் இவருக்கு.

லஷ்மிராய் மட்டும் தேவையில்லாமல் வருகிறார். ஃபேஸ் கொஞ்சம் சப்பை என்றாலும், பீஸ் நல்ல சாண்டல் வுட். அதிலும் இடுப்பு முட்டை பாலிஷ் போட்ட மொசைக் தரை மாதிரி பகட்டாக பளபளக்கிறது.

காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் ‘ரியல் மாஸ்’ என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.

முதல் பாதியின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும், இரண்டாம் பாதியில் தன் முதுகில் சுமக்கிறார் சரத்குமார், எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம். நீண்டகால திரையுலக அனுபவம் வாய்ந்த சரத் ‘அண்டர்ப்ளே’ செய்து அசத்தியிருக்கிறார். நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், கடைசி பகுதி ரத்த வெறியாட்டம் அச்சமூட்டுகிறது. படம் பார்த்த குழந்தைகளுக்கு நீண்டகால கொடுங்கனவுகளை வழங்கவல்லது. குறிப்பாக ரத்தச்சிவப்பான க்ளைமேக்ஸ் பாடல். இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தோடு ஒரு பாடலை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, பிரச்சார நெடியின்றி இயல்பாக ஒரு கமர்சியல் படத்தில் செருகியிருப்பதற்காகவே காஞ்சனாவை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்கலாம்.

காஞ்சனா – கட்டாயமா பார்க்கணும்ணா...

10 கருத்துகள்:

 1. அப்படின்னா கட்டாயமா பார்க்கக்கூடாது

  பதிலளிநீக்கு
 2. திவ்ய தர்ஷினியா
  ஐயோ சாமி,
  இணையத்தில் லட்சுமி ராய் கட்சிகள் மட்டும் பார்த்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. திகிலடிக்கும் மெகா காமெடி படம்...

  இந்த காம்பினேஷனுக்காகவே படம் சூப்பர் ஹிட் ஆகும்...

  பதிலளிநீக்கு
 4. //ஃபேஸ் கொஞ்சம் சப்பை என்றாலும், பீஸ் நல்ல சாண்டல் வுட். அதிலும் இடுப்பு முட்டை பாலிஷ் போட்ட மொசைக் தரை மாதிரி பகட்டாக பளபளக்கிறது.

  இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல

  பதிலளிநீக்கு
 5. யுவா மறந்தோ தெரியாமலோ விட்ட தேவதர்ஷினியின் நடிப்பையும் குறிப்பிட்ட காட்சிகளில் அவர் கலக்கியதையும் அர்ஜுனின் விமர்சனத்தில் சரியாக குறிப்பிட்டுள்ளார் ...மிக்க நன்றி ! நானும் வெள்ளி மாலை வுட்லண்ட்ஸில் பார்த்தேன் ! மிகவும் பிடித்தது !
  -Bloorockz

  பதிலளிநீக்கு
 6. theivath thirumagal vimarsanam engappa......nalla padaththai yellam promote pannak koodaathaaa?

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள சகோதர்/சகோதரி,

  மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

  பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

  தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

  நன்றி.

  அன்புடன்,
  அதிரைக்காரன்
  adiraiwala@gmail.com

  பதிலளிநீக்கு