2 ஜூலை, 2011

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

இந்த கேள்வியை நான் கேட்டுக் கொள்ளாத நாளே கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இல்லை.

சங்கர வித்யாலயாவில் எல்.கே.ஜி. சேர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவள் பூர்ணிமா. மாநிறம். பெரிய குண்டு பல்பு கண்கள். மை அப்பியிருப்பாள். புருவம் முடியும் இடத்திலிருந்து காதுக்கு மிக நெருக்கமாக ஒரு மைத்தீற்றல் ஓவியமாய் வரையப்பட்டிருக்கும். ஆனால் சரியான அராத்து. ஒருமுறை சண்டை போடும்போது கூராக தீட்டப்பட்டிருந்த பென்சிலை எடுத்து முகத்தில் கண்ணுக்கு அருகாக கீறிவிட்டாள். கேவிக்கேவி அழுதுக் கொண்டிருந்தவனை டீச்சர் கேட்டார். ”ஏண்டா அழுவுறே?”. ஏனோ அவளைப் போட்டுக் கொடுக்க வேண்டுமென்று அந்த வயதிலேயே தோன்றவில்லை. ஏதோ பொய் சொல்லி சமாளித்ததாக நினைவு. அழகான பெண், பிரம்படி படலாமா?

இப்போது அவளுக்கு பத்தாங்கிளாஸ் படிக்கும் பையனோ, பெண்ணோ இருக்கலாம். எங்கேயாவது காண நேர்ந்தால் அடையாளம் காணமுடியுமா தெரியவில்லை. ஆனால் அவளது கண்களை மட்டும் மறக்கவே முடியாது. எத்தனை லட்சம் பேருக்கு நடுவிலும், அவளது கண்களை பார்த்தால் உடனே கண்டறிந்துவிடுவேன். துரதிருஷ்டவசமாக பெண்களின் கண்களை பார்த்து பேச இன்றும் பயமாகவே இருக்கிறது (பூர்ணிமா பென்சிலால் கீறியதால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பால் இருக்கலாம்).

ஒண்ணாங்கிளாஸ் சபிதா, மூணாங்கிளாஸ் கவிதா, ஆறாங்கிளாஸ் குணசுந்தரி, எட்டாங்கிளாஸ் குமுதா, பத்தாங்கிளாஸ் அனுராதா, பண்ணிரெண்டாங் கிளாஸ் தமிழரசி என்று பள்ளிப் பருவம் முழுக்க பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் ஏராளமான அழகிகள்.

விரைவில் குழந்தை பெறப்போகும் நண்பர் ஒருவர் சொன்னார். “இதுவும் பொண்ணா பொறக்கணும்னு விரும்பறேன்”. அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. “எதுக்கு? ஒரு பையனாவது இருக்கட்டுமே?” என்று கேட்டதற்கு சொன்னார்.

“பொண்ணுன்னா நாம சாகறவரைக்கும் நமக்கு குழந்தையாவே தெரியும். பையன்னா சீக்கிரமாவே குழந்தை பொஸிஸனில் இருந்து பிரமோஷன் வாங்கிடுவான். சாவுறவரைக்கும் அவனோடு மல்லுக்கட்டி தினம்தினம் சாவணும். பொண்ணை வளர்த்து கட்டிக் கொடுக்குறதுதான் சார் இண்டரெஸ்டிங் டாஸ்க்கு. அதுவுமில்லாமே பொண்ணுன்னா கடைசிக்காலத்தில் பொறுப்பா பார்த்துக்கும். பசங்க அப்படியா? நானே என் அப்பன் ஆத்தாவுக்கு சோறு போடறதில்லை. ஆனா என் பொண்டாட்டி, அவளோட சம்பளத்துலே பாதியை அவங்க அப்பா அம்மாவுக்கு பொறுப்பா மாசாமாசம் கொடுத்திடறா”

இந்த தலைமுறையில் நிறைய பேர் இந்த நண்பரைப்போல யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்க்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால், அபார்ஷன் மாதிரியான ஆபத்துகள் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. சரி இந்த மேட்டரை லூசில் விடுங்கள். நம் டாபிக்கே வேற.

பையன்கள் எல்லாம் பச்சாக்களாக இருக்க, பெண்கள் மட்டும் ஏன் பேரழகிகளாக இருக்கிறார்கள்?

குட்டியில் குரங்கு கூட அழகுதான் என்பார்கள். பயல்களும் பிறக்கும்போது கொஞ்சம் சுமாராகதானிருக்கிறார்கள். பெற்றோர்களும் கொஞ்சக்கூடிய அளவுக்கு, அதிகபட்சம் மூணு, நாலு வயசு வரைக்கும் வளர்கிறார்கள். என்றைக்கு டவுசர் போட ஆரம்பிக்கிறான்களோ, அன்றிலிருந்து ‘பையன்’ ஆகிறார்கள். அதுவும் பதிமூன்று வயசு வாக்கில், பால்யப்பருவம் முற்றிலுமாக முடிந்து லேசாக மூக்குக்கு கீழே முடிவளரும் பருவத்தில் காண சகிக்க முடியாத தோற்றம். சிறுபையன்களாக இருந்தபோது பார்ப்பதற்கு புஷ்டியாக இருந்த பயல்கள் கூட பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தில் இருப்பார்கள் பதினெட்டு வயதில்.

மாறாக பெண்களோ பத்து வயதிலிருந்து இருபது வயதுக்குள்ளாக அவர்களது வாழ்நாளின் உச்சபட்ச பேரெழிலை எட்டுகிறார்கள். இந்த கூற்றிலிருந்து சில ஒல்லிக்குச்சிப் பெண்களை மட்டும் விலக்கிவிடலாம். முப்பது வயதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக சதை போட்டு நாற்பது வயதில் கிளியோபாட்ராக்களாக வலம் வரும் அழகான ஆண்டிக்கள் அவர்கள்.

முதன்முதலாக காதலிக்கும்போது என்னுடைய வயது பதினாறு. அவளுக்கு வயது பதிமூன்றோ, பதினாலோ. ஒரு நெருக்கமான சந்தர்ப்பத்தில், சில இன்ச் கேப்பில் ஈரமான அவளது உதடுகளை காண நேர்ந்து, கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டேன். பெண்களின் உதடை ஆரஞ்சுச் சுளையோடு ஒப்பிடும் கவிஞர்கள் பைத்தியக்காரர்கள். உண்மையில் இவர்களது உதட்டை ஒப்பிட்டுக் காட்டக்கூடிய அளவுக்கு எழில்வாய்ந்த பொருள் உலகிலேயே இல்லை. நாசி. நாசிக்கு கீழே கால் இஞ்ச் கேப். மேலுதடு. கீழுதடோடு இணையும் ஓரவாய். கீழுதடுக்கு கீழான முகவாய். ச்சே.. வாய்ப்பேயில்லை. உலகின் தலைசிறந்த ஓவியங்களான பெண்களை வரைந்த இயற்கைக்குதான் எவ்வளவு கற்பனைத்திறன், கவித்திறன்?

பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். கலைஞரின் படமோ, புரட்சித்தலைவி அல்லது புரட்சிப்புயல் அல்லது இளையதளபதி அல்லது செந்தமிழன் அல்லது தமிழகத்து பிரபாகரன் யாருடைய படமோ பிரதானமாக இருக்கும். சிறியதாக பாஸ்போர்ட் அளவில் மணமக்கள் படம் இடம்பெற்றிருக்கும். அடுத்தமுறை இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது உற்றுப் பாருங்கள். மணமகள் உலக அழகியாகவும், மணமகன் உலகமகா குரூபியாகவும் இருக்கும் யதார்த்த உண்மையை கண்டறிவீர்கள். உடனே உங்கள் திருமண ஆல்பத்தை கூட புரட்டிப் பார்த்து இந்த பேருண்மையை நீங்கள் உறுதி செய்துக் கொள்ளலாம். மணமகள் அழகு. மணமகன் சுமார் அல்லது சப்பை. ஏனிந்த நிலை?

சரி. திருமணத்தின் போதுதான் ‘பசங்க’ சுமார் ஆக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு? குழந்தை பிறந்தவுடன் ஏற்கனவே அழகாக இருந்த பெண் மேலும் அழகு பெறுகிறாள். மாறாக பசங்களோ, கிழங்களாக மாறி முன் தலையிலோ, பின் தலையிலோ முடிகொட்டி, தொப்பை போட்டு ‘அவன் இவன்’ ஹைனஸ் மாதிரி ஆகிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் பசங்களுக்கு இருபதுகளின் இறுதியிலேயே வேறு நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.

நீங்கள் உலகை உற்றுப் பார்க்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பின், வெள்ளிக்கிழமை காலைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். சாலையெங்கும் சோலைதான். சித்தாளு ஃபிகரில் தொடங்கி, சீமாட்டி ஃபிகர் வரை சீயக்காயோ, சிக் ஷாம்போ போட்டு சுத்தபத்தமாக தலைகுளித்து, ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் பட்டாம்பூச்சி மாதிரி படபடக்கிறார்கள். மாறாக, பசங்களோ வீக்கெண்டு டாஸ்மாக் பார்ட்டியை நினைத்து, நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு விலங்கினம் மாதிரி திரிகிறார்கள்.

உலகில் தோன்றிய எந்த உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆணினம்தான் அழகு. ஆண் சிங்கத்துக்கு கம்பீரமான பிடரி இருக்கும். பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும். ஆண் மயிலுக்குதான் தோகை. பெண் மயிலுக்கு அருக்காணி வால் ஸ்டைல். இப்படி நீங்கள் எந்த உயிரினத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஆணினம் அழகில் கொள்ளை கொள்ளும். மாறாக பாழாய்ப்போன இந்த மனிதக் குலத்தில் மட்டும்தான் இந்த ஓரவஞ்சனையை இயற்கை நிகழ்த்திப் பார்த்திருக்கிறது.

என் அருமைக்குரிய ஆணினமே.. அழகை நினைத்து உரலை இடித்துக் கொள்வதுதான் ஆணினத்துக்கு விதிக்கப்பட்ட விதி. சரக்கெடு. மட்டையாகு.

33 கருத்துகள்:

 1. kadumaiyaga aatchepikkiren..
  tamil pasanga thaan azhagu!

  பதிலளிநீக்கு
 2. அழகு தருவது உங்கள் உள்ளத்தினை சார்ந்தது .ஆணுக்கு பெண் அழகு . பெண்ணுக்கு ஆண் அழகு. இதனால்தான் இனக் கவர்ச்சி ஏற்ப்பட்டு, உலகமே மனித உற்பத்தியினை உருவாக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. Good analysis. Just to reinforce your statement on daughters. Sons are sons until their marriage; daughters are daughters are forever.

  பதிலளிநீக்கு
 4. ஸ்வீட் எடு கொண்டாடு என்ற மாதிரி இருக்கு..

  பதிலளிநீக்கு
 5. //ஆண் சிங்கத்துக்கு கம்பீரமான பிடரி இருக்கும். பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும். ஆண் மயிலுக்குதான் தோகை. பெண் மயிலுக்கு அருக்காணி வால் ஸ்டைல்.// நல்ல ஒப்பீடு

  பதிலளிநீக்கு
 6. எப்போதும் எதிர்பாலினரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது சகஜமான இயல்பு நிலை.
  இதே பெண்களை கேட்டால் ஆண்களை தான் சொல்வார்கள்.ஒருவேளை உதட்டில் பெண்களை சொல்லிவிட்டு உள்ளத்தில் ஏதேனும் அவளின் மனம் கவர்ந்த ஆணை நினைத்து கொண்டிருப்பாள்.அவளுக்கும் ஆறாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு, கல்லூரி இப்படி..இந்த காலங்களில் மனங்கவர்ந்த 'தோழர்கள்' இருக்கலாம். பெண்கள் இப்படி வெளிப்படையாக எழுத முடிவது இல்லை. அம்மாக்களுக்கு எப்போதும் பையன்களை தான் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 7. பாஸ், நீங்க இன்னும் நரேந்திரன பாக்கல.....அதான் இப்பிடி எழுதீர்கீங்க.. நான் தான் அது.... :)

  பதிலளிநீக்கு
 8. பெண்கள் ஆண்களை விட தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற நெனைப்பில் எப்போதும் இருப்பார்கள் அனால் ஆண்கள் அப்படி அல்ல

  பதிலளிநீக்கு
 9. பெண்கள் ஆண்களை விட தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற நெனைப்பில் எப்போதும் இருப்பார்கள் அனால் ஆண்கள் அப்படி அல்ல

  பதிலளிநீக்கு
 10. அண்டம் காக்கைகளாக திரியும்
  பாவப்டட ஆண் ஜென்மம்

  பதிலளிநீக்கு
 11. கவலை பட வேண்டாம் அடுத்த ஜென்மத்தில் மாறிடலாம் .

  பதிலளிநீக்கு
 12. i like it mataiyagin karpanai karpamayae pengal ila vitil tasmac ilayae??

  பதிலளிநீக்கு
 13. arumai arumai
  pengal ila vitil tasmac yethu
  tasmach pogum munae sipaitheduvethu yen

  பதிலளிநீக்கு
 14. //பாழாய்ப்போன இந்த மனிதக் குலத்தில் மட்டும்தான் இந்த ஓரவஞ்சனையை இயற்கை நிகழ்த்திப் பார்த்திருக்கிறது//
  நொம்ப நொம்ப கரைகிட்டு.இல்லைன்னா இந்த சின்ன வயசுல(..!!! ??? ) இப்படி முடி கொட்டி போய் சொட்ட தலையோடு திரிவனா நான்...?
  //ஷேவிங் செய்த டி.ராஜேந்தர்//
  நெனச்சுப்பார்க்கவே பயங்கரமா இருக்கு...!

  பதிலளிநீக்கு
 15. மிகச் சிறந்த கட்டுரை. என்னை அறியாமலே பல இடங்களில் சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
 16. "பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும்" -- HA HAH HAHA...I LIKE IT

  பதிலளிநீக்கு
 17. யோவ்.. ஏதும் விடைசொல்வாரான்னு பாத்து வந்தா.. சொம்மா பொலம்பிவச்சிருக்கீரே.!

  (அது எதுனா ஹார்மோன் கோளாறா இருக்கும்யா. விட்டுத்தள்ளும்.!)

  பதிலளிநீக்கு
 18. //பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?//
  ஏனென்றால் அவள் பெண்ணாக இருப்பதால்..
  லக்கி, ரொம்ப நாள் கழிச்சு உங்க பிரத்யேக நடையில் - அற்புதமாக இருந்தது. பல இடங்களில் சிரிப்போ சிரிப்பு.
  அப்புறம், இந்த ஹீரோ கல்யாணம் ஆனவரா? கல்யாணம் ஆகி ரெண்டு, மூணு வருஷம் கழிச்சும் இதே தலைப்பில் கட்டுரை எழுதுவாரா? :)
  (அப்பவும் எழுதுவார்- தனக்குப் பிறந்த குட்டிப் பாப்பாவை பார்த்து- என்று கூறி தப்பிக்காதீங்க)
  - ஜெகன், கோவை

  பதிலளிநீக்கு
 19. காமெடி நல்லா எழுதுறிங்க பாஸ்!!

  பதிலளிநீக்கு
 20. oru pennin azhagu adhai rasikkium ullaththai sarnthathu. enakku azhagai thondrum pen, mattravargalukku azhagaai theriyamal pogalam. pona sandharbangal undu. ungalin azhagu rasanaikku pallayiram vanakkangal!!! miga arumaiyana karuththu velippadu... enathu parattukkal!!!

  www.nisu8985.wordpress.com

  பதிலளிநீக்கு
 21. நீங்கள் நாளை உங்களை கடந்து செல்லும் பத்து பெண்களை கவனியுங்கள்....அதில் ஓன்று இரண்டு பெண் அழகாக தெரிவாள்...இன்னும் ஓன்று இரண்டு பெண் சுமாராக தெரிவாள்....மீதி உள்ளது மொக்கையாக தோன்றும்....
  இதன் காரணம் என்ன ?


  ஆணின் மனம் எப்போதும் அழகான பெண்களை மட்டும் விரும்பி பார்க்கும் ...நினைவில் வைத்து கொள்ளும்....எனவே பெண் எப்போதும் அழகாக உள்ளதாக தோன்றும்....

  நெட்டில் உலவும் போது கூட அழகான நடிகைகளின் போட்டோ வை தான் ஆண்கள் அனைவரும் தேடுகின்றனர்...
  எனவே ஒட்டு மொத்த பெண் குலமே அழகு என்பது போல ஆணின் மனம் நினைத்து விடுகிறது..

  திருந்துங்க பாஸ் :)

  பதிலளிநீக்கு
 22. "பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும்"
  சிங்கம் இனத்தை இப்படி கேவல படுத்த கூடாது.

  பதிலளிநீக்கு
 23. எதிர்க்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால், அபார்ஷன் மாதிரியான ஆபத்துகள் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.//
  இது நல்லாருக்கே

  பதிலளிநீக்கு
 24. கிட்டத்தட்ட ஒரு ஒற்றுமை....

  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அதே குணசுந்தரி என்ற பெயரில் எனக்கும் ஒரு தோழி கிடைத்தாள்...:)

  அவன் இவன் ஹைனஸ்... அடடே என்ன ஒரு உவமை...

  நல்ல அலசல்

  பதிலளிநீக்கு
 25. பார்க்கிற நூறு பொண்ணுங்கள்ள 99 பேரு சப்பை பிகருதான். தமிழ் நாட்டின் செக்ஸ் வறட்சியை உங்கள் பதிவு நிரூபிக்கிறது.

  பதிலளிநீக்கு
 26. //பார்க்கிற நூறு பொண்ணுங்கள்ள 99 பேரு சப்பை பிகருதான். தமிழ் நாட்டின் செக்ஸ் வறட்சியை உங்கள் பதிவு நிரூபிக்கிறது.//

  தமிழ்நாட்டு பொண்ணுக நூறு பொண்ணுங்கள்ள 99 பேரு சப்பை பிகருதான்...

  இதை நான் சொன்ன வுடன் ...சில பெண்ணியம் சால்ரா போற்றிகள் " உங்க அம்மா அக்கா வை நீ இப்படி சொல்லுவியா என்று கேக்க ஆரம்பித்து தன் பாலியல் அறிவு வறச்சியை காட்டுவார்கள்"...

  கேரளா பொண்ணுக தான் பாக்குற மாதிரி இருக்கு :)

  பதிலளிநீக்கு
 27. பெண் உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது vs Bible < > Quran

  பதிலளிநீக்கு
 28. அய்யா சாமி!!! நீ வேணும்னா அழகா இல்லாம இருக்கலாம் ஆனா அதுக்காக ஆணினமே அழகா இல்லைனு சொல்றது கேலிக்கூத்தாக இருக்கிறது.. ஒப்பனை இல்லாமல் அழகாகத் தெரிவது ஆணினமே.. பெண்களுக்கு எதுக்கப்பா இப்படி பால் காவடி தூக்குகிறாய்?

  பதிலளிநீக்கு
 29. "ஆணின் ரசனைதான் பெண்ணை அழகாக காட்டுகிறது".

  ஆண்கள் இல்லையென்றால் பெண்கள் அழகிகள் இல்லை.பெண்களுக்கு ஆண்கள் அழகாகவும் ஆண்களுக்கு பெண்கள் அழகாகவும் தெரிவது இயற்கை தான் ஆனால் ஆண்கள் அதீத ரசனையும்,அழகான சிந்தனையும் தான் பெண்களை தேவதைகளாக மாற்றியுள்ளது.

  பதிலளிநீக்கு