June 3, 2011

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!!


அது எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 88 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு தமிழினத் தலைவரின் ரத்தம்!

அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுமையான வாழ்வினையும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தமிழினத் தலைவர் கலைஞர் மட்டுமே.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைத்திட வேண்டும்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி, தமிழின் முகவரியாய் வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!! வெல்க தமிழினத் தலைவரின் நெஞ்சுரம்!!!

22 comments:

 1. எங்கள் சூரியனின் புகர் என்றும் மங்காது. வாழிய வாழிய வாழியவே! மிகவும் உணர்வுபூர்வமான ஒரு பதிவு யுவா!

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும். உங்கள் கடமை , பணி செய்து கிடப்பதாகவே இருந்தால் என்ன?

  ReplyDelete
 3. மறு தேர்தலுக்கு கலைஞரின் உடல் நலம் ஒத்துழைக்க இறைவனிடம் வேண்டுவோம்.மீண்டும் ஆறாவது முறை அவர் முதல்வராக வேண்டும்.

  ReplyDelete
 4. எனது ஞானத்தகப்பன் கலைஞரை இந்நாளில் வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன்.

  ReplyDelete
 5. கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பதவியில் இருந்தாலும் , இல்லாவிடினும் நீரே எங்களின் முதல்வர். தலைவரே , எங்கள் அன்பு கலைஞரே , என்றென்றும் லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் முத்தமிழே , வாழிய நீ பல்லாண்டு

  ReplyDelete
 7. வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன் ..புரட்சியின் நாயகன்,,

  ReplyDelete
 8. /அபி அப்பா 11:20 AM, June 03, 2011

  எங்கள் சூரியனின் புகர் என்றும் மங்காது./

  'புகர்' என்றால் புள்ளி. 'புகழ்' என்று வரவேண்டும் என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 9. kuda nanpargal ... 80 days before....

  ReplyDelete
 10. நல்ல கட்டுரை . நன்றி .
  கலைஞர் காலத்தில் நாம் வாழ்வது சிறப்பு . பலர் பல சேவைகளை செய்திருக்கலாம் அழியாத காலமெல்லாம் நிலைத்து நிற்கும் எழுத்துகளை கலைஞர் மக்களுக்கு தந்துள்ளார் . கலைஞர் நெடுநாள் வாழ வாழ்த்துவோம்

  ReplyDelete
 11. செம்மொழியாம் என் தமிழ் வாழ்க , என் தலைவன் வாழ்க

  நாயுருவி புற்கள் நம் நடையை தடை செய்யுமா தலைவா?

  யாருக்கு ஓய்வு உனக்கா இல்லை
  என் தமிழுக்கா?

  ஓய்வேடுக்கும் உரிமை தமிழுக்கும் இல்லை,என் தலைவனுக்கும் இல்லை.

  உனக்கு ஓய்வு தமிழ் தரும் தக்க வேளையில்.

  தமிழ் தீர்மானிக்கும்,

  தருதலைகளும் தவளைகளும் அல்ல.

  நீ வா தலைவா,

  தமிழ் செழிக்க தமிழ் தேவை,

  நீ தேவை.

  நீ வாழ் என் தமிழ் வாழும்.


  பனையேறி

  ReplyDelete
 12. கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. கலைஞரின் அருமை அவர் இருக்கும் போது தெரியாது.

  ReplyDelete
 14. I clearly see another "chinna kuthoosi" getting ready :)...lucky you can change your name as "chinna kundoosi" and start writing...so that we know what to expect from your writing..hehehe

  ReplyDelete
 15. கலைஞரைப்பற்றிய அரிய தகவல்கள். இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். தமிழுக்காக இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டு, ஆட்சியை இழந்தவர். அதனையும் தங்கள் பாணியில் எழுதினால், இக்கால இளைஞர்கள் தெரிந்துகொள்வர். மாற்றம் வேண்டி நிழலை விட்டு வெயிலில் நிற்க விரும்பி உள்ள தமிழக வாக்காளர்களுக்கு, கூடிய விரைவில் நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். சின்னக்குத்தூசியின் கட்டுரைகள் இருப்பின் பதிவிடவும். இளைஞர்களுக்கும், புதிய எழுத்தாளர்களுக்கும் பயன்படும்.

  ReplyDelete
 16. தலைவன் வாழ்க

  ReplyDelete
 17. பதிவுலக சின்ன குத்தூசி வாழ்க!

  ReplyDelete
 18. Suresh Ramasamy3:01 PM, July 21, 2011

  I am really surprised about your blind faith in Karunanidhi (even after his disastrous/corrupt rule)..

  ReplyDelete