26 மே, 2011

ஜிரோநிமா

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாகரிக நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க கவுபாய்களின் கதைகள் நமக்கு உவப்பானவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்ததே நமக்கு தெரியவந்தது.

நாம் வாசிக்கும் கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா என்கிற கேள்வி எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்கிற மனநோய் நமக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் ஒரு கதையிலாவது வெல்லவேண்டும் என்றே சிறுவயதில் விரும்பியிருக்கிறேன். செவ்விந்தியர்களை வெறும் முரடர்களாகவும், மூளையில்லாத முட்டாள்களாகவும் கதை எழுதிய கதாசிரியனையும், கேலிச்சித்திரம் போல செவ்விந்தியர்களை வரையும் ஓவியனையும் மனதுக்குள் சபிப்பேன்.

அதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அக்கதைகள் உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நாம் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.

அவ்வாறாக இணையங்களில் தேடியபோது தான் பல புதிய விவரங்களை அறியமுடிந்தது. நாம் வாசித்த கதைகளில் வந்ததைப் போல வெள்ளையர்கள் மதியூகத்தாலும், வீரத்தாலும் செவ்விந்திய இனத்தை வீழ்த்திடவில்லை, கேவலமான தந்திரங்களை பயன்படுத்தி கோழைத்தனமான முறையிலேயே செவ்விந்திய கலாச்சாரத்தை அழித்தொழித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக்கொள்ள பயங்கர இனப்படுகொலைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இருப்பதைப் போன்ற தகவல் தொடர்பு அப்போதிருந்தால் உலகம் அன்றே அமெரிக்காவை காறித்துப்பியிருக்கும்.

என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

அவ்வாறான குடியிருப்புகளில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் நேரத்தில் கோழைகளான வெள்ளையர்கள் தாக்குதல் நடத்துவார்கள். குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை கொன்று அந்த கூட்டத்தையே அழித்ததைப் போல தலைநகருக்கு தகவல் சொல்லுவார்கள். செவ்விந்தியர்கள் தனித்தனியான கூட்டமாக வாழ்ந்ததால் அவர்களால் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு பெரிய போர்ப்படையை உருவாக்க இயலாமல் போய்விட்டது. பொதுவாக ஒரு செவ்விந்திய கூட்டம் அறுபது முதல் நூறு வீரர்கள் வரையே கொண்டிருக்கும். மாறாக வெள்ளையர்களோ தங்களது ஒரு படைப்பிரியில் ஐநூறு முதல் ஐயாயிரம் பேர் வரை வைத்திருப்பர்.

வெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை இவர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக சிறுசிறு போர்க்குழுக்களாக வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி சிறியளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.

ஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.

1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோய்ல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே, ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவ முறையையும் கற்று மருத்துவர் ஆனார். திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வழக்கமான இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.

1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.

பதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிகோ குடியிருப்புகள் மீதும், அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை மாதிரி) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.

நம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? இருபத்தெட்டு ஆண்டுகள்! கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.

ஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.

அதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் இயற்கையான முறையில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் கலாச்சார வேர்களை இழந்து...

18 கருத்துகள்:

 1. uyva,

  did u notice that americans have coded osama's name as Geronimo while hunting him down.

  பதிலளிநீக்கு
 2. boss tex willer kathaila ellam sevvinthiyargal nanbargal pola kaatuvaanga, nalla padichu paarunga. Tex willer wife is a sevinthian. atleast lion comics didnt project them as fools....

  பதிலளிநீக்கு
 3. அடக்குமுறையே போராளிகளை உருவாக்குகிறது.....

  பதிலளிநீக்கு
 4. நானும் சிறுவயதில் காமிக்ஸ் படிக்கும்போது செவ்விந்தியர்களை என் எதிரிகளாகவே நினைத்துக் கொள்வேன்!

  //(நம்ம அமைதிப்படை மாதிரி)//
  இந்த வரிகள் செம்ம! இன்னும் பலபேர் அப்புராணித்தனமா நம்புறாய்ங்க பாஸ்!!

  பதிலளிநீக்கு
 5. Dear Yuva,
  Nice article. In fact it was an eyeopener and provided a direct link to the latest Jeronimo code for Osama.

  By the way,almost all hollywood movies during the 60's and 70's about the two world wars were mainly intended to spread a lopsided world opinion about the Americans and British.It is unfortunate that our generation were brainwashed and became pro US.
  Recently, I saw a movie called "Inglorius basterds" which shows the Nazis in very bad light.
  I think you should continue your service of educating the young.
  Good Luck

  பதிலளிநீக்கு
 6. யுவா இதுபோன்ற தன்முனைப்புத்தரும் பதிவுக்காக ரொம்ப நாள் காத்திருந்தோம். வாழ்க உங்கள் எழுத்து. வீணாப்போன மாநில அரசியலை கொஞ்ச நாள் விட்டுட்டு இது போன்ற பதிவுகளை நிறைய தாங்க

  பதிலளிநீக்கு
 7. ஒரு நல்ல பதிவு நன்றி யுவகிருஷ்ணா அவர்களே. சென்ற வாரம் நானும் எனது நண்பர் மலாய்க்காரர்( சிங்கப்பூர்) ஒருவரும் செவ்விந்தியர்கள் பற்றி பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம். இந்த வாரம் அவர்களை பற்றி உங்கள் கட்டுரையில் படிப்பது அவர்களை பற்றி நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள வழிவகுத்தது. மிகவும் நன்றி

  அன்புடன் அப்பாதுரை
  சிங்கப்பூர்

  பதிலளிநீக்கு
 8. அருமை ஐயா.
  நாடே இப்படித் தான் எதற்கு என்று தெரியாமல் அலைகிறது.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. டெக்ஸ் கதைகளில் கூட இந்த அப்பாசேக்கள் எப்போதும் வில்லன்கள் தான். நவஜோ இனம் தான் நல்லவர்கள். ஜிரோநிமா தான் காரணமோ?

  பதிலளிநீக்கு
 10. "தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம்."

  Do you know which religious followers were behind these atrocities against the native Indians? What is your opinion about that?

  பதிலளிநீக்கு
 11. அருமையான தகவல்கள். நன்றி.

  பதிலளிநீக்கு