23 மே, 2011

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா

தந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.

அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.

கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.

“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.

1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.

சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.

“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”

“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.

கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.

15 கருத்துகள்:

 1. கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும், தேர்தல் முடிவுகளை விடவும் வருத்தம் தரும் நிகழ்வு இது..........

  பதிலளிநீக்கு
 2. உடல் நலம் குன்றியிருந்த சின்னக் குத்தூசியாரை, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் சந்தித்த போது, கலைஞரும், தளபதியும் கண் கலங்கி நின்ற காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தீர்களா?
  மிகவும் உணர்ச்சி மயமான-உணர்வுப் பூர்வமான-நெகிழ்வான நிகழ்வு அது...........

  பதிலளிநீக்கு
 3. அய்யாவின் மறைவு பகுத்தறிவு இயக்கத்திற்குப் பேரிழப்பு...... அய்யாவிற்கு எமது இதயப் பூர்வமான அஞ்சலிகள்.............
  திராவிட இயக்கத்தின் அரிய சொத்தான அய்யாவை, இதுகாறும் கண்ணெனப் போற்றிப் பாதுகாத்த நக்கீரன் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..........

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு.
  திரு சின்னக் குத்தூசி அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 5. கலைஞரோடு முரண்பட்டு நின்ற இடத்தை இவர் இங்கு இப்படிச் சொல்லியிருக்காரு தோழா. சரியான தகவல் எது?

  பதிலளிநீக்கு
 6. தான் பின்பற்றும் , எழுதும் , பேசும் கொள்கைக்கு உண்மையாக இருப்பவர்கள் மிக சிலரே . அந்த சிலரில் ஒருவரும் , கட்சிக்கு அப்பாற்பட்டு பலரால் மதிக்கபட்டவருமான சின்னக்குத்தூசி அவர்களை சந்திக்க வாய்ப்பில்லாமல் போனது எனக்கு பேரிழப்பு . வருந்துகிறேன்

  பதிலளிநீக்கு
 7. \\இயற்கையோடு கலந்திருக்கிறார்\\
  \\அவரது பூவுடல்\\
  \\இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.\\

  பெரியாரின் திராவிடர் கழக கொள்கைக்காகவே வாழ்ந்து மடிந்தவரைப் பற்றி எழுதும் போது மேற்கண்டவாறெல்லாம் எழுதி கரை படுத்தி விட்டீர்கள். இவை அவர்களது கொள்கைக்கு எதிரானது, கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டது போல.

  பதிலளிநீக்கு
 8. அய்யா திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல.. புதிதாக வரும் இதழாளர்களுக்கும் அவர் ஒரு வழிகாட்டி அவர்களுக்கு இது ஒரு பெரிய பேரிழப்பு.. சங்கராச்சாரி யார் என்ற கட்டுரைத்த் தொகுப்பு படித்துவிட்டு 87-888 களில் அவரை அன்றைய முரசொலி அலுவலக்த்தில் சென்று பார்த்தேன்.. 92 சென்னையை விட்டு கிளம்பும் வரை அவருடனான நட்பு எனக்கு தொடர்நத்து.. கண்ணியமான மனிதர்.அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத வருத்தத்தில் இருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 9. திரு சின்னக் குத்தூசி அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 10. One of real brahmin who knows the (de)faults in Bramanium.
  Respects to you AYYA.

  Panayeri

  பதிலளிநீக்கு
 11. நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே 'நாம் ' ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் 'நாம்' ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் -

  ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

  chennai.iac@gmail.com
  iacchennai.org

  சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222


  சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
  9710201043

  சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168


  சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079


  பகத்சிங்

  பதிலளிநீக்கு
 12. //அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது//
  என்னதான் கலைஞர் அபிமானியாக இருந்தாலும், திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக இருந்தாலும், குடும்ப உறுப்பினராக இல்லாவிட்டால், அடுத்தவரை சார்ந்து தான் வாழவேண்டும் என்பதின் உதாரணமோ.

  பதிலளிநீக்கு
 13. இது எனது தனிப்பட்ட கருத்து. நமது அணியின் கருத்து அல்ல.


  மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

  ஜனாதிபதி தகுதி :
  முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர். (true ??)
  குற்ற பின்னணி உடையவர்.

  பிரதமர் :
  முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் ...

  1) 2G ஊழலா .. தெரியாது

  2) commonwealth games ஊழலா .. தெரியாது

  3) adarsh ஊழலா .. தெரியாது

  4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

  5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

  6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

  தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

  நிதி அமைச்சர்:

  மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

  உள்துறை அமைச்சர் :
  வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

  முன்னாள் உள்துறை அமைச்சர் :
  தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

  தொலைதொடர்பு துறை :

  முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
  இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G "ஜீரோ லாஸ்" என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

  மத்திய வேளாண் அமைச்சர்:
  இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இவர்களின் தலைவர் :
  என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

  முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
  பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

  முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
  இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

  கருப்பு பணம் தலைவர் :
  இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

  பாண்டிசேரி ஆளுனர் :
  மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

  தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

  எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

  தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள ஜெ

  சின்னக்குத்தூசி அவர்களை உங்களுக்கு அறிமுகமுண்டா? நீங்கள் அவரைப்பற்றி ஏதேனும் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். அவருக்குக் கலைஞர் ஏதாவது உதவிகள் செய்தாரா என அறிய ஆசை.

  அன்புமணி.கெ

  அன்புள்ள அன்புமணி,

  [விளிக்க என்ன இதமாக இருக்கிறது!]

  சின்னக்குத்தூசி அவர்களை நான் பார்த்ததில்லை. அறிமுகமும் இல்லை. ஆனால் நான் அறிந்தவரை ஒரு சராசரி தமிழ் வணிக-கட்சி இதழாளர். எந்தத் துறையிலும் நீண்டநாள் இருந்தால் அதைப்பற்றிய தகவல்கள் நினைவில் இருக்கும். அவ்வளவுதான் அவரது திறமை. அந்தத் திறமையைக் கண்மூடித்தனமான தனிநபர் விசுவாசத்துக்காக மட்டுமே செலவிட்டவர், அதுதான் அவரது தகுதி.

  மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதி பற்றி நான் என் கருத்துக்களைச் சொன்னபோது சின்னக்குத்தூசிதான் அந்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஒருநாள் முன்னர் என் நண்பரிடம் கூப்பிட்டு நான் யார், என்ன எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் ஐந்துநிமிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். அதற்கு முன் அவருக்கு என் பெயர் அறிமுகமில்லை. என் நண்பர் கொடுத்த தொலைபேசி அறிமுகத்துக்கு அப்பால் எதையும் தெரிந்துகொள்ளவும் அவர் முயலவில்லை. அவர் எழுதிவந்த வசைமாரி கட்டுரைகளுக்கு அவ்வளவே போதுமென அவருக்குத் தெரிந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவருக்கு அவ்வளவுதான் அறிமுகம். அவரது கட்டுரைகளை வாசித்தால் தெரியும்.

  அவருக்கு வரும் அஞ்சலிக்கட்டுரைகளைப் பார்க்கையில் தமிழ் இதழாளர்களின் தரம் என்னவென்று தெரிகிறது. குருநாதரே இந்த லட்சணத்தில் இருக்கிறார்.

  தீப்பொறி ஆறுமுகம் ஒரு கூட்டத்திலே சொன்னார். கருணாநிதி அவர்களுக்காக இரவுபகலாக அவர் மேடையிலே பேசியநாட்கள். பெண்ணுக்குக் கல்யாணம் வைத்திருந்தார். யாரோ சொன்னார்கள் ‘முப்பது வருஷம் கட்சிக்காகப் பேசியிருக்கிறாயே, கட்சி உனக்கு என்ன தந்தது? பெண் கல்யாணத்துக்காகப் போய் உதவி கேள்’ என்று.

  சென்னை சென்றார் தீப்பொறி ஆறுமுகம். கருணாநிதி அவர்களைச் சந்தித்தார். தீப்பொறியைக் கண்டதுமே கருணாநிதி கேட்டார். ‘’ஏய்யா கட்சியிலே முப்பது வருஷமா இருக்கியே, இந்தான்னு ஒரு ஆயிரம் ரூபா கொண்டாந்து எனக்கு குடுத்தியாய்யா நீ ?’

  ஜெ

  From jeyamohan's blog
  http://www.jeyamohan.in/?p=15498

  இந்த அன்புமணி உண்மையான வாசகரா அல்லது ஜெயமோகனின் கற்பனை வாசகரா?

  பதிலளிநீக்கு