7 மே, 2011

தர்ம சங்கடம்


வாசிக்கும்போதும், பேசும்போதும் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு சொல் ‘தர்மசங்கடம்’. சங்கடம் என்கிற சொல்லுக்கான பொருள் நமக்கு புரிந்தாலும், இங்கே prefix ஆக வரும் ‘தர்ம’ என்பதின் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லை.

எழுத்தாளர் ஒருவரிடம் தர்மசங்கடத்துக்கு விளக்கம் கேட்டேன்.

“நாம் ஒன்றை சரியென்று நினைப்போம். சந்தர்ப்பச் சூழலால் அதையே தப்பு என்று சொல்ல வேண்டிய நிலை சில நேரங்களில் வரும். நம்மளவில் ‘தர்மம்’ என்று நினைப்பதை, நாமே மீறவேண்டிய சூழல் ஏற்படுவதைதான் ‘தர்மசங்கடம்’ என்று சொல்லுகிறோம்” என்று விளக்கம் அளித்தார். இவ்விளக்கம் ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

தர்மசங்கடத்தைப் பற்றி இப்போது ஏன் இவ்வளவு விளக்கமாக நான் ஆராய வேண்டியிருக்கிறது என்பதே எனக்கும், தலைவர் கலைஞருக்கும் கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். ஸ்பெக்ட்ரம்தான். வேறென்ன?

சமீபத்தில் (கனிமொழிக்காக) கூட்டப்பட்ட திமுக உயர்நிலைக் கூட்டம் முடிந்ததும் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர் : சி.பி.ஐ நடத்திவரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா, இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

கலைஞர் : தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட தர்மசங்கடம் எங்களுக்கு ஏற்படாது. அது என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.

அச்சு அசலான திராவிட மணம் கலைஞரின் பதிலில் கமழ்கிறது. தமிழ்ச்சூழலில் நாத்திகராக இருக்கும் ஒருவர், எத்தகைய சூழலிலும் இதிகாசக் கிண்டல்களை கைவிட மாட்டார் என்பதற்கு கலைஞர் மிகச்சரியான எடுத்துக்காட்டு.

கலைஞர் விவரிக்க விரும்பாத ‘சங்கடம்’ என்னவென்பதை விவரிப்பதில் நமக்கு தர்மசங்கடம் எதுவுமில்லை.

பதினைந்து, பதினாறு வயதுவரை தீவிரமான என்று சொல்ல முடியாவிட்டாலும் நானும் ஆத்திகனாகவே இருந்தேன். கேரக்டர் அடிப்படையில் கிருஷ்ணனை பிடிக்கும் என்றாலும், சிவமதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகர் இஷ்ட தெய்வம் (இதற்குப் பின்னால் தமிழ்க்கடவுள் என்கிற அரசியல் காரணமும் உண்டு). கல்யாண கந்தசாமி கோயிலுக்கு ரெகுலராக சென்றிருக்கிறேன். திருப்போரூர் முருகனை காண பயபக்தியோடு சைக்கிள் மிதித்திருக்கிறேன். நாத்திகனாக மனமாற்றம் அடைந்தபிறகும் கூட, யாராவது கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சொன்னால் பெசண்ட் நகர் அறுபடைவீடுதான் இன்றும் பர்ஸ்ட் சாய்ஸ். செகண்ட் சாய்ஸ் வடபழனி முருகன்.

காதல் தோல்வி, +2 தோல்வியென்று அடுத்தடுத்து அடைந்த தோல்விகள் கடவுள் மீதான நம்பிக்கையை சிதைத்தது. இவ்வேளையில் தேடிப்பிடித்து வாசித்த திராவிட இயக்க இனமான வரலாறு கடவுள் எதிர்ப்பாளனாய் கட்டமைத்தது. பெரியாரின் சிந்தனைகள் மீது மையல் கொண்டு, திராவிடர் கழகத் தோழர்களோடு திரிய ஆரம்பித்தேன். தோழர்களுடனான வாதங்கள், தெருமுனைக் கூட்டங்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யம் கூடி, அர்த்தம் மிகுந்ததாக மாறியது. இந்த காலக்கட்டங்களில் கேட்ட பல கதைகளில் ஒன்றுதான் ‘தர்மசங்கட’ கதை.

திராவிட இயக்கப் பெருசுகள் பலரும் ஒருமாதிரியான ’கும்ப கோணத்து குசும்பு’ பார்ட்டிகள். கேலியும், கிண்டலுமாக இதிகாசங்களையும், புராணங்களையும் அணுகுவார்கள். “அவ்ளோ இந்திரியம் கொட்டறதுக்கு, இந்திரனோட ‘அது’ என்ன மெட்ரோ வாட்டர் பைப்பா?” என்று கேள்வி எழுப்புவார்கள். இதுமாதிரி தெருமுனைக் கூட்டங்களை கோயில் வாசலில்தான் பெரும்பாலும் நடத்துவோம். எங்கள் தெருமுனை சித்தி-புத்தி வினாயகர் கோயில் வாசலில் (கோயில் அனுமதி பெற்று) சில கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

திரளாக மக்கள் கூடாவிட்டாலும், ‘என் பணி கடன் செய்து கிடப்பதே’ என்று ஃபுல் சார்ஜோடு பேசுவதுதான் திராவிடர் கழகப் பேச்சாளர்களின் ஸ்பெஷாலிட்டி. பெரியார் மாதிரியே கெட்டப்பில் இருந்த தாம்பரத்துக்காரர் ஒருவர்தான் எங்களது வழக்கமான பேச்சாளர். அவர் அப்போது சொன்ன கதைதான் தர்மசங்கட கதை.

தர்மரின் மனைவி பாஞ்சாலிக்கு, தர்மரோடு சேர்த்து ஐந்து கணவர்கள். ஏன் ஐந்து கணவர்கள் என்பதற்கு ஆபாசமான இன்னொரு கிளைக்கதை உண்டு. ஐந்து கணவர்கள் என்றாலும், கணவர்களுக்கு செய்தாகவேண்டிய ‘அந்தரங்க’ கடமைகளை செய்வதில் பாஞ்சாலி எந்தக் குறையும் வைக்கவில்லை. நாளுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில் இந்த விஷயத்தை பிரித்துக் கொண்டார்கள்.

அதாவது அர்ஜூனன் உள்ளே இருந்தால், அறைவாசலில் அவனுடைய செருப்பு இருக்கும். நகுலனோ, சகாதேவனோ ‘அதற்காக’ வந்தால், வாசலில் செருப்பைப் பார்த்துவிட்டு, ‘அண்ணன் உள்ளே இருக்கிறார்’ என்பதை புரிந்துகொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அன்றைக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. தர்மர் செருப்பு போடாமல் வந்துவிட்டார். ரூமுக்குள்ளும் நுழைந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து ஆசையோடு பீமரும் வந்திருக்கிறார். வாசலில் செருப்பு எதுவும் இல்லாததால், அவரும் உள்ளே நுழைந்துவிட.. அங்கே தர்மரோடு பாஞ்சாலியை எசகுபிசகான கோலத்தில் பார்த்துவிட்டாராம். ‘அம்மாதிரியான கோலத்தில் தம்பி நம்மை பார்த்துவிட்டானே’ என்று தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம்தான் ‘தர்ம சங்கடம்’ என்று ஆனதாம்.

தாம்பரத்துப் பேச்சாளரின் வெர்ஷன் இது. இதே வடிவில் மகாபாரதத்தில் இருக்கிறதா என்று தெரியாது. நான் வாசித்த பைகோ பிரசுரத்தின் அமர்சித்ரக் கதாவில் இந்தக் கதை இல்லை.

கலைஞர் விவரித்து சொல்ல விரும்பாத ‘தர்ம சங்கட’ கதை இதுதான்.

திராவிட இயக்கத்தாரின் கடவுள் மறுப்பு இதுமாதிரியான ஆபாசக் கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே கூட எதிர்த்தரப்பு வன்மமாக ஆத்திகத்தை வளர்க்க ஒரு நியாயமும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. “அவர்கள் ஆபாசமானவர்கள்” என்கிற ஆத்திகப் பிரச்சாரம், பிராமணரல்லாத மற்ற சாதியினரிடமும் பரவலாக எடுபட்டது. தடாலடியான திராவிட கடவுள் மறுப்புப் பிரச்சாரம் 60களிலும், 70களிலும் எடுபட்டமாதிரி.. 80களிலும், 90களிலும் ஏனோ எடுபடவில்லை. மாறிவிட்ட பிரச்சார அணுகுமுறைகளை திராவிட இயக்கத்தார் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது காரணமாக இருக்கலாம்.

அவர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் கடவுளை பரப்பினார்கள். திராவிட இயக்கத்தவர்கள் அதே சினிமாவில் கடவுளை மறுத்தார்கள். பின்னர் அவர்கள் சினிமாப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டபோதும், இவர்கள் மட்டும் தொடர்ச்சியாக எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இரு கை தட்டப்படாமல் ஓசையே எழாமல் போய்விட்டது. தினமலர் மாதிரியான அச்சு ஊடகங்கள் நவீன முறையில் மதப்பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, விடுதலை, முரசொலி வகை திராவிடப் பத்திரிகைகள் பழைய மரபு சார்ந்த பகுத்தறிவு பிரச்சார முறைகளையே தொடர்ந்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் விடுதலை முழித்துக்கொண்டு, சில காலமாக இணையத்துக்கே வந்திருக்கிறது.

தனிப்பட்ட முறையில் சொன்னால், இந்து மதத்தின் ஆபாசக் கதைகளை கைத்தட்டி, விசிலடித்து ரசிக்கிறேன். இதே மனநிலையில் இன்றைய வெகுஜனம் இல்லையென்று தோன்றுகிறது. கடவுளை எதிர்க்க, மதத்தை மறுக்க அவர்களுக்கு வேறு புதிய காரணங்கள், நவீனப் பிரச்சாரங்கள் தேவைப்படுகிறது.

அதுவும் இந்தியச் சூழலில் நாத்திகப் பிரச்சாரம் என்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானதாகும். இங்கே சிறுபான்மையினருக்கு அணுசரனையாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில், பெரும்பான்மை மதத்தை குறிவைத்து அடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. துரதிருஷ்டவசமாக பகுத்தறிவாளர்கள் அணுசரனையாக நடந்து கொள்ளும் சிறுபான்மை மதங்கள் கட்டுப்பெட்டித் தனத்தோடும், பெரும்பான்மை மதமான இந்துமதம் ஓரளவு ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருந்துத் தொலைக்கிறது. எந்த ஒரு மாற்றத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளும் பகாசுரத் தன்மையோடு இந்துமதம் வாழுகிறது. இந்த கருத்தை எனக்கு சொல்லப் பிடிக்காவிட்டாலும், இது உண்மை என்பதை ஜீரணித்தே ஆகவேண்டும்.

இந்தியாவின் சுமார் 56 மதங்களின் கூட்டமைப்புதான் இந்து மதம். இந்த 56 மதங்களில் நாத்திக மதமும் கூட உண்டு. கடவுளை மறுக்கும் முனிவர்கள் கூட இந்த மதத்தில் இருந்திருக்கிறார்கள். சார்வாஹ மஹரிஷி என்று மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் உண்டு. இந்தியாவில் நாத்திக மதத்தை ஸ்தாபித்தவர் இவர். சாமியார்களிடம் தொடர்ச்சியாக பகுத்தறிக் கேள்விகளை ஆபிரகாம் கோவூர் எழுப்பி வந்த மாதிரி, கிருஷ்ணனை நிற்கவைத்து கேள்வி கேட்டவர் சார்வாஹ மஹரிஷி.

‘யாவே த்வயக்ஷகம் ஜீவேத் ருணம் க்ருத்வா | க்ருதனி பேதஹ: பஸ்மி பூதஸ்ய தேஹ | புனராஹமன் குதஹ’ என்றொரு சுலோகம் கூட உண்டு. ‘மரணித்த உடம்பு பஸ்பமான பின்பு, சொர்க்கம் ஏது? மேலுலகம் எல்லாம் ஏமாற்று வேலை. வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இவ்வாறாக நாத்திகத்தையும் அனுமதிக்கும் மதமாக இந்து மதம் இருக்கிறது (பவுத்தமும் இப்படியான ஒரு சலுகையை வழங்குகிறது என்று நினைக்கிறேன்). மற்ற மதங்களில் நாத்திகர்களுக்கு இடமிருப்பதாக தெரியவில்லை. மதத்தை/கடவுளை மறுப்பவனை இந்து மதம் மதவிலக்கு செய்வதில்லை. சீர்த்திருத்தவாதிகளோடு உரையாட இம்மதம் எப்போதும் தயாரானதாகவே இருந்திருக்கிறது. மதமற்றவனையும் தன் மதமாக அறிவித்துக் கொள்கிறது. மதமற்ற இந்திய பழங்குடிகள் அனைவரும் ‘இந்து’க்கள் என்கிற அயோக்கியத்தமான பிரிவு இந்திய சட்டத்திலேயே இருக்கிறது.

பத்திரிகைகளில் கட்டுரை எழுதுதல், பொதுக்கூட்டங்களில் இதிகாசங்களில் இருந்து ஆபாசக் கதைகளை எடுத்துச் சொல்லுதல், பேட்டிகளில் கலைஞர் செய்வது மாதிரியான நையாண்டி போன்ற அந்தக்கால பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தற்காலத்தில் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் காலத்திலேயே இராமாயணம்/மகாபாரதம் ஒளிபரப்பானபோது ஒரு மறுமலர்ச்சியை இந்து மதம் இந்தியா முழுவதும் பெற்றதை, நானே கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.

துரதிருஷ்டவசமாக இதுமாதிரியான நேர்மறை நவீனப் பிரச்சாரத்தை இன்னமும் பகுத்தறிவாளர்கள் கைகொண்டதாக தெரியவில்லை. கலைஞரின் குடும்பத்தார் நடத்தும் தொலைக்காட்சிகளில் கூட இராமாயணம் ஒளிபரப்பாகிறது. மூடநம்பிக்கையை தூண்டும் தொடர்கள் இடம்பெறுகின்றன. கலைஞர் ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்காக சங்கடப்படுகிறாரோ இல்லையோ, திராவிடப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சரியாக கொண்டு சேர்க்க முடியாத இந்த சூழ்நிலைக்காக, பகுத்தறிவு இயக்கங்களுக்கு தலைமை தாங்குபவர் என்கிற அடிப்படையில் நிச்சயம் தர்மசங்கடப்பட்டே ஆகவேண்டும். சன் தொலைக்காட்சி வகையறாக்களில் இடம்பெறும் அபத்தமான மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு தர்மசங்கடம் கொண்டாக வேண்டும்.

பகுத்தறிவாளர்கள் என்று அறிவித்துக் கொண்டோரும் அவரோடு சேர்த்து தர்மசங்கடப்பட்டு தொலைவோம். வேறென்ன செய்வது?

47 கருத்துகள்:

 1. அசகாய சூரர்களான தம்பிகள் நால்வர் தனக்கு‍ வாய்க்கப் பெற்றும் கூட, சபை நடுவே பாஞ்சாலி துகிலுறியும் சமயம் எதுவுமே செய்ய இயலாமல் தர்மத்திற்கு‍ கட்டுப்பட்டு‍-சங்கடத்தில் தலைகுனிந்து‍ தர்மர் நின்றதுதான்- தர்ம சங்கடம் என இதுநாள் வரை எண்ணியிருந்தேன். ஆனால் நீங்களோ வேறு‍ மாதிரி கூறியிருக்கிறீர்கள். ஆனால் இதுவும் சரியாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. தர்ம சங்கடம் இல்லாமல் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையா இருந்தது... யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தாம தர்மசங்கடத்த புரியவசுடீங்க.

  பதிலளிநீக்கு
 4. Kalaingar is a great scholar in Thamizh, and an astoundingly able administrator. But as you have mentioned he hurts the sentiments of the believers of the Hindu religion. He never pokes fun of Christianity or Islam. A public figure/role model openly living with two wives, an acclaimed atheist sporting a yellow shawl (to appease planet Guru),and a coral ring to please Mars has according to me a doctoral degree in dealing with "dharma sangatam". The reporter's query was just a jujubi matter for Kalaingar.
  Very well written article.
  amas32

  பதிலளிநீக்கு
 5. can you please show any evidence in VIYASA MAHABARATHAM.
  this type of stories can be tols about anybody including karuna nidhi.
  i request you to go through mahabaratham. if you are able to understand, then you can find what is tharma sangatam.
  GOPALASAMY SAUDI ARABIA

  பதிலளிநீக்கு
 6. உங்க நாத்திகம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு...

  பதிலளிநீக்கு
 7. தலைப்பிற்கு ஏற்ற படம்தான்! கத்தரி வெய்யிலில் கறுப்பு சிகப்பு கொஞ்சம் கலர் போகுதோ?

  பதிலளிநீக்கு
 8. தர்ம சங்கடம் சூப்பர். லக்கிடச்

  பதிலளிநீக்கு
 9. Wat Nizharkudai said is correct, I think CM said in that meaning, with kanimozhi arrest concerns. Anyhow, good people see good meanings in all things.

  பதிலளிநீக்கு
 10. தர்மரோட சங்கடம்’தானா? ஹாஹா.

  பதிலளிநீக்கு
 11. Lucky,
  Its not a problem that Mr. Karunanithi criticizing Hinduism. You can do that but not him being a chief minister. He could definitely do that after giving the leadership to Mr. Stalin. He is the CM of all TN people. Being a Hindu I also do not believe in many things which could not be explained logically. I have never read an atheist article accepting the freedom Hinduism gives. Good to see that here. By the way, have you ever thought about how Mr. Karunanithi manages with two wives? I am not saying that if you criticize Hinduism you should criticize about other religions too. That depends on individuals and their opinion.

  பதிலளிநீக்கு
 12. Read starting from the last paragraph in the link
  http://www.sacred-texts.com/hin/m01/m01215.htm

  (and proceed to the next chapter)
  http://www.sacred-texts.com/hin/m01/m01216.htm

  It will answer your questions, and will tell you why Arjuna spent 12 years in the forest, even before the commencement of vana-vaasa.

  And by the way, 'dharma sankatam' has no relationship to the above incident.

  பதிலளிநீக்கு
 13. @Anon
  he can do it only to Hinduism, if he touches others his ass will be kicked...unfortunately the so called less advanced Hinduism will tolerate anything and everything

  பதிலளிநீக்கு
 14. மஞ்சள் துண்டு சங்கடமா? தர்ம சங்கடமா?

  பதிலளிநீக்கு
 15. தெளிவான , சுவையான , நேர்மையான எழுத்து

  பதிலளிநீக்கு
 16. அந்தக் கதை, ஆதி பர்வம் CCXV - அர்ஜுன வனவாச பர்வத்தில் வருகிறது: ஒரு பிராமணனின் ஆநிரையை மீட்டுத் தரத் தன் வில்லை எடுப்பதற்காக அர்ஜுனன்தான் அந்த அறைக்குள் நுழைகிறான்.

  வாசலில் செருப்பு இல்லாத கதை, பலர்காண மாட்டிக்கொண்டு இழுபடுகிற நாய்க்கலவிக்கான காரணக் கதை.

  பதிலளிநீக்கு
 17. தல
  உங்கள் தர்ம சங்கடம் பதிவை பார்த்தேன்.

  உங்கள் தலைவர் கலைஞர் புதுமை பித்தன் கூறுவது போல " கல்யாண வீட்டுல மாப்பிள்ளையாக இருக்கணும் எழவு வீட்டுல பொணமா இருக்கனும் " என்ற எண்ணம் உள்ள ஒரு மனிதர்
  அவருக்கு வேண்டும் போது இது போல எதாவது சொல்லி மக்களை குழப்புவது அவரது வாடிக்கை.
  மகாபாரத கதை என நீங்கள் எழுதி இருப்பது சரி இல்லை. சரி பார்க்கவும்.

  "அதுவும் இந்தியச் சூழலில் நாத்திகப் பிரச்சாரம் என்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானதாகும். இங்கே சிறுபான்மையினருக்கு அணுசரனையாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில், பெரும்பான்மை மதத்தை குறிவைத்து அடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. துரதிருஷ்டவசமாக பகுத்தறிவாளர்கள் அணுசரனையாக நடந்து கொள்ளும் சிறுபான்மை மதங்கள் கட்டுப்பெட்டித் தனத்தோடும், பெரும்பான்மை மதமான இந்துமதம் ஓரளவு ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருந்துத் தொலைக்கிறது. எந்த ஒரு மாற்றத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளும் பகாசுரத் தன்மையோடு இந்துமதம் வாழுகிறது. இந்த கருத்தை எனக்கு சொல்லப் பிடிக்காவிட்டாலும், இது உண்மை என்பதை ஜீரணித்தே ஆகவேண்டும்."
  இது வேறு ஒன்றும் இல்லை - மற்ற மதங்களைபற்றி பேசினால் அதில் வரும் பின் விளைவுக்களை சந்திக வேண்டும், இந்து மதம் என்பது ஒரு வாழும் வகை. நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். இங்கு நம்பிக்கை இல்லாதவர்கள் காபிர் என்றும் கொல்லபட வேண்டும் என்றும் யாரும் சொல்ல மாட்டார்கள் - இதுதான் வேறுபாடு.

  இருபதுவயதில் கம்முநிசம் பேசாதவன் முட்டாள், அதற்க்கு பிறகு பேசுபவன் அயோக்கியன் என்பது போல - உங்கள் நாத்திக வாதமும்ஒரு நாள் மாறும். ( வால்பையன் தனது இரண்டு பெண்களுக்கும் வடமொழி பேர் வைத்தது போல - தனது உணவகதிற்கும் வட மொழி பேர் தான்)

  (சன் மற்றும்) கலைஞர் தொலைகாட்சிக்கும் கலைங்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உங்கள் தலைவர் சொன்னதை நீங்கள் நம்பவில்லையா?

  Ramachandran

  ramachandran.bk@gmail.com

  பதிலளிநீக்கு
 18. Udanpirape,

  What to do we have to face this type of situations in every level (family, friendship, Official etc ...

  But we have to pass this as Survival of the fittest.

  பதிலளிநீக்கு
 19. லக்கி இந்து மதம் என்பதே தவறு. "இந்து" என்பது மட்டுமே சரி. "இந்து" என்பது வாழும் வாழ்கை முறை. எல்லா மதத்திற்கும் மத மாற்றம் தேவைப்படும். இந்துவுக்கு அது தேவை இல்லை. அதனால் என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்து நிலைக்கும். இந்துவுக்கு நிறுவனரும் இல்லை என்பது கூடுதல் பலம்.

  பதிலளிநீக்கு
 20. விகடன் வலைப்பூ பக்கத்தில் உங்கள் பெயர். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. Dinamalar Version....

  1.
  மகாபாரதத்தில் தர்மர், யட்சினியிடம் சிக்கி மாண்ட தன் தம்பி நால்வரையும் மீட்க வேண்டி, யட்சினி கேட்ட தர்மசங்கடமான கேள்விகளுக்கு, சீராக பதிலளித்து, தன் தம்பிகளை மீட்டார்.

  2.
  துரோணரைக் கொல்ல, புத்திர சோகம் மட்டுமே உதவும் என்பதால், தர்மரைக் கொண்டு, "துரோணர் மகன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்' என உரக்கக் கூறி, கடைசியில் மெதுவாக,"என்ற யானை' என்று சொல்ல வைத்தார் கிருஷ்ணர். துரோணர் சோகப்பட்டு, களத்தில் நின்றபோது கொல்லப்பட்டார்.

  3.
  அரச குடும்பத்தினர் சூதாடுவது தவறல்ல என்ற காரணத்தால், துரியோதனனுடன், தர்மர் சூதாடி, அனைத்தையும் இழந்து, கடைசியில் மனைவி திரவுபதியையும் வைத்து சூதாடி, அதிலும் தோற்றது, அவருக்கு ஏற்பட்ட பெரிய தர்மசங்கடம்.

  பதிலளிநீக்கு
 22. WOw... what a explanation Yuva!
  I got two versions of தர்ம சங்கடம்.
  one from you and other one from நிழற்குடை..
  i have one more version
  i heard from one 'Payrusu' which is very nasty.

  Thanks for your enlightening!!
  S.Ravi
  Kuwait

  பதிலளிநீக்கு
 23. //பகுத்தறிவாளர்கள் அணுசரனையாக நடந்து கொள்ளும் சிறுபான்மை மதங்கள் கட்டுப்பெட்டித் தனத்தோடும், பெரும்பான்மை மதமான இந்துமதம் ஓரளவு ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருந்துத் தொலைக்கிறது. எந்த ஒரு மாற்றத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளும் பகாசுரத் தன்மையோடு இந்துமதம் வாழுகிறது. இந்த கருத்தை எனக்கு சொல்லப் பிடிக்காவிட்டாலும், இது உண்மை என்பதை ஜீரணித்தே ஆகவேண்டும்.//

  உங்கள் நேர்மையான புரிதலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. ரொம்பவும் சுத்தி வளைச்சு பதிவெழுதி இருப்பதால் உங்களின் தர்மசங்கடம் தெளிவாக புரிகிறது.

  பதிலளிநீக்கு
 25. //அசகாய சூரர்களான தம்பிகள் நால்வர் தனக்கு‍ வாய்க்கப் பெற்றும் கூட, சபை நடுவே பாஞ்சாலி துகிலுறியும் சமயம் எதுவுமே செய்ய இயலாமல் தர்மத்திற்கு‍ கட்டுப்பட்டு‍-சங்கடத்தில் தலைகுனிந்து‍ தர்மர் நின்றதுதான்- தர்ம சங்கடம் என இதுநாள் வரை எண்ணியிருந்தேன். //

  இதுவே சரியானது என்பதாக தெரிகிறது.

  நீங்கள் சொன்னதுதான் சரி எனில் பாவம் கலைஞர்.

  பதிலளிநீக்கு
 26. அருமையான கட்டுரை. சொந்த வாழ்க்கைத் தோல்விகளே ஒருவனை நாத்திகன் ஆகுகிறது என்பதை அழகாக இயம்பியுள்ளீர்கள். சமூகப் பிரச்சினைகளைப் பார்த்து மனம் வெறுத்து நாத்திகர்கள் ஆனவர்கள் வெகு குறைவே. இராமயணத்தில் இராமன் காட்டுக்குக் கிளம்ப முடிவு செய்யும்போது ஜாபாலி முனிவர் என்பவர் நாத்திகக் கருத்துகளைச் சொல்லி அவனைத் தடுக்கப் பார்ப்பார். இராமாயணத்திலும் நாத்திகம் இருந்திருக்கிறது. ஹிந்து மதத்தில் பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவை நாத்திகத்தைப் பரப்பும் நூல்கள்.

  பொதுவாக ஹிந்துத்வா ஆதரவாளர்கள் நீ ஏன் இக்கேள்விகளை இஸ்லாமியர்களிடமும், கிருத்துவர்களிடமும் கேட்பதில்லை என்பார்கள். எனக்கு எரிச்சலூட்டும் கேள்வி இது. ஒருவன் வாழும் சமூகத்தில் எந்த மதம் பெரும்பான்மையோ அதை எதிர்த்துதான் நாத்திகர்கள் பேசுவார்கள் என்பது அடிப்படை புரிதல். இப்பொழுது அமெரிக்க நாத்திகர்களிடம் நீ ஏன் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசுவதில்லை என்று யாராவது கேட்பார்களா என்ன?

  பதிலளிநீக்கு
 27. நான் மறுபடியும் சொல்கிறேன் ஸ்பெக்டரும் என்பது கனி அவர்கள் ஐ.நா.,சபை பொது செயலர் ஆகி விட கூடாது என்பதற்காக சீன நாட்டு உளவுத்துறை செய்யும் சதி...CBI மற்றும் இந்திய நீதி துறையினர் சீனாவிற்கு விலை போய் விட்டனர்...உண்மை இந்தியன் ராம் ஜெத் மலானி மட்டுமே நீதிக்காக போராடுகிறார்...இந்த கனி.,யின் கணவருடைய ஆதரவு, என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது... court வரை கூட செல்கிறார்... தியாக ஜோடி இவர்கள்... கனி அவர்கள் ஐ.நா.,பொது செயலர் ஆவதற்காகவும், இந்த பொய் வழக்கில் வெளி வருவதற்காகவும், கட்சியின் உண்மை விசுவாசிகள் "மின் துறை வித்தகர்" ஆற்காட்டார், "பொருளாதார செம்மல்" அன்பழகன், "தமிழ் நாட்டின் விடிவெள்ளி" தங்க பாலு, "பிரசார Missile" பீட்டர் அல்போன்ஸ் மற்றும் "வாழும் உத்தமர்" வீரமணி போன்றோர்கள் மெரினாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும்... தலைவரின் மெரினா உண்ணாவிரதம் எப்படி ஈழ போரை "முடிவுக்கு" கொண்டு வந்ததோ, அது போன்று இவர்களது போராட்டமும் அமைய வேண்டும்... "மெரினா நாளை" எதிர் பார்த்து நிற்கும் அன்பு உடன் பிறப்பு

  பதிலளிநீக்கு
 28. உங்களால் ஒரு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதமுடியும்னு நினைக்கறேன். யாரும் மாறலாம், எதுவும் மாறலாம், நம் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் உட்பட. பொறுத்திருந்து பார்போம்.

  தினா

  பதிலளிநீக்கு
 29. நல்ல கட்டுரை யுவா. ஆனா, திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பென்பது இந்து மதத்தை மட்டும் சார்ந்தியங்குவதும் மிகத்தந்திரமாக மற்ற மதங்களின் கடவுளை பற்றி விமர்சிக்காமல் இருப்பதும் கூட ஒரு வகை தர்மசங்கடம் தான்.

  அதே போல, திருநல்லாறு பூஜை, மஞ்சள்துண்டு என சகலவித பரிகார மூடநம்பிக்கைகளை பின்பற்றிக்கொண்டே, தலைவர் கடவுள் மறுப்பை பேசவேண்டியிருப்பதும் தர்மசங்கடம் தான். இல்லையா?

  பதிலளிநீக்கு
 30. தர்மசங்கடத்துக்கு இப்போதுதான் விளக்கம் தெரிந்துகொண்டேன்
  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 31. ராஜராஜன் கட்டிய கலைப்பொக்கிஷமான தஞ்சை பெரிய கோயிலுக்குள் முன் வாசல் வழியாக போக தைரியம் இல்லாமல் சைட் வழியாக போன போது எங்கே போனது பகுத்தறிவு.மஞ்சள் துண்டும் சிவப்பு கல் பதித்த மோதிரமும் எதற்காக?மதம் என்பதே மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதுதான்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் எல்லா மத நூல்களிலும் உள்ளது.திராவிட இயக்கங்களின் கீழ்த்தரமான பிரச்சாரங்களை ஒரு பெரும்பான்மை மதம் வன்முறையின்றி எதிர்கொண்டது ஒன்றே இந்து தர்மத்தின் சிறப்பை உணர்த்த போதுமானது.கம்ப ராமாயணத்தை இழிவு படுத்தி அண்ணாதுரை எழுதிய புத்தகத்தை தற்போது ம்யூசியத்தில்தான் தேட வேண்டும்.ஆனால் கம்ப ராமாயணம் காலத்தை வென்று வாழும் ஒரு காவியம்.மூன்றாம் வகுப்பு கூட படிக்காத ஒரு கவுன்ஸிலர் கூட குறைந்த பட்சம் 100 கோடிக்கு சொத்து சேர்க்கும் ஒரு புதிய பொருளாதார கொள்கையை வடிவமைத்தது ஒன்றுதான் திராவிட இயக்கங்களின் சாதனை.

  பதிலளிநீக்கு
 32. ஸ்வான், டிபி ரியால்ட்டி, குசேகான், சினியுக் நிறுவனங்களோடு கலைஞர் டி.வி. படுத்து எழுந்தது இன்று ஊருக்கே தெரிந்து விட்டது. இன்னும் என்ன தர்ம சங்கடம்?

  உங்கள் கட்டுரையில் ரசித்த ஒரு எதார்த்த உண்மை: "துரதிருஷ்டவசமாக பகுத்தறிவாளர்கள் அணுசரனையாக நடந்து கொள்ளும் சிறுபான்மை மதங்கள் கட்டுப்பெட்டித் தனத்தோடும், பெரும்பான்மை மதமான இந்துமதம் ஓரளவு ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருந்துத் தொலைக்கிறது."

  பெரியார் காலத்தில் இஸ்லாமும், கிறிஸ்தவமும் கூட தாக்குதலுக்குள்ளானது. இப்போது இல்லை. பெரியார் ஒரு நேர்மையாளர். தன் மனதிற்குப்பட்டதை, பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசினார். உங்களுக்கும் அந்த தில் கொஞ்சம் இருக்கிறதென்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 33. "திராவிடப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சரியாக கொண்டு சேர்க்க முடியாத இந்த சூழ்நிலைக்காக, பகுத்தறிவு இயக்கங்களுக்கு தலைமை தாங்குபவர் என்கிற அடிப்படையில் நிச்சயம் தர்மசங்கடப்பட்டே ஆகவேண்டும். "
  அந்த அப்பாவி தொண்டன் நீங்கதானா சார் ?

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் யுவா
  உங்களைபோல் இல்லாமல், நான் முதலில் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் எந்த மதத்திலும் கடவுள் இல்லை என்றே நம்பியவன். ஆனால் சமீப காலமாக இந்து மதத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைக்காபற்றியாக வேண்டும் என்ற எண்ணம் வழுப்பெருகிறது. காரணம் இந்து மதத்தை எதிர்ப்பது தான் நாத்திகம் என்ற நிலை உருவாக்கபடுகிறது. இந்த நாட்டில் இந்து மதம் தான் பெரும்பான்மை அதனால் தான் இம்மதம் தாக்கப்படுகிறது என்று சொல்பவர்கள் இதையும் யோசிக்க வேண்டும். கிருத்தவம் மற்றும் இஸ்லாமியர்களை இந்தியாவில் நாத்திகர்களை மாற்றி விட்டால் அந்த மதங்கள் ஒன்றும் அழிந்துவிடாது. உலக அளவில் அது செயல் பட்டுகொண்டிருக்கும். மேலும் நடை முறையில் இந்துக்களை போல் அவர்களை நத்திகர்கலாய் மாற்றுவது சுலபம் அல்ல. அனால் இந்தியாவில் மட்டுமே உள்ள இந்து மதத்தை டார்கெட் செய்வதை எப்படி ஏற்றுகொள்ள முடியும். என்னை போன்றவர்கள் நாத்திகர்கள் ஆகாமல் போனதிற்கு இது போன்ற ஒரு unbalanced முறையே காரணம்.

  பதிலளிநீக்கு
 35. எப்படியோ! டே-டூட்டி,நைட்-டூட்டி
  மாறி மாறிப்பார்த்தும் ஐவருக்கும்
  பாஞ்சாலியிடத்தில் பிள்ளை பெத்துக்க
  முடியவில்லை. ஆனால் அர்ச்சுனனும்
  பீமனும் வெளிமேய்ச்சலில் உண்டான பிள்ளைகள் உண்டு.

  பதிலளிநீக்கு
 36. lucky-yin flow of writing pidikkum.seythikal ellaam araiyum kuraiyum yaro ezhuthiyathai eduthu ezhuthuvathi padikkumpothu ore tharmasangadam.pinnoottam podum koshti tharmameyillaatha SANGADAM.

  பதிலளிநீக்கு
 37. dear yuvakrishna,

  please see the following link

  http://ramanans.wordpress.com/2011/05/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

  பதிலளிநீக்கு
 38. வலைப் பதிவாளர் யுவகிருஷ்ணா பதிவில் கூறியதைப் போல “இந்தியாவின் பல மதங்களின் கூட்டமைப்புதான் இந்து மதம். இந்த மதங்களில் நாத்திக மதமும் கூட உண்டு. கடவுளை மறுக்கும் முனிவர்கள் கூட இந்த மதத்தில் இருந்திருக்கிறார்கள். நாத்திகத்தையும் அனுமதிக்கும் மதமாக இந்து மதம் இருக்கிறது”. எனவே கலைஞரும் நாத்திகர் என்றாலும், இந்து மதத்தையே சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்த மதத்தை விமர்சிக்க ஒரு பெனால்டி கார்னர் கொடுக்கலாம். மற்ற மதங்களை அவர் விமர்சனம் செய்ய அவருக்கு உரிமை இல்லாததால், அவரை ஃபவுல் செய்து கிரவுண்டுக்கு வெளியில் நிறுத்தி விடுவார்கள். மேலும் யு.கி. புராணத்தில் இருந்து ஒரு நாத்திக முனியை வேறு அறிமுகப்படுத்தி கலைஞரை பேலன்ஸ் செய்து விட்டார். வேறொரு அன்பர் பின்னூட்டத்தில் கலைஞரின், துண்டு, மோதிரத்தை எல்லாம் எழுதியிருக்கிறார் (an acclaimed atheist sporting a yellow shawl (to appease planet Guru),and a coral ring to please Mars). இவைகள் எல்லாம் வழக்கிற்கு தொடர்புடையவையாக இல்லாததால், யு.கி. மீதான இந்த வழக்கை வரும் ஆடியை முன்னிட்டு தள்ளுபடி செய்து விடலாம்.

  அன்பன்
  இராம்கரன்

  பதிலளிநீக்கு
 39. arunmullai said...
  எப்படியோ! டே-டூட்டி,நைட்-டூட்டி
  மாறி மாறிப்பார்த்தும் ஐவருக்கும்
  பாஞ்சாலியிடத்தில் பிள்ளை பெத்துக்க
  முடியவில்லை. ஆனால் அர்ச்சுனனும்
  பீமனும் வெளிமேய்ச்சலில் உண்டான பிள்ளைகள் உண்டு

  மீண்டும் தவறான ஒரு எண்ணம். ஐந்து பாண்டவர்களுக்கும் பாஞ்சாலி முலம் ஐந்து பிள்ளைகள் உண்டு. அவர்களை அஸ்வத்தாமா பாரத போரின் கடைசி நாள் இரவில் கொன்றதாக குறிப்பு உண்டு
  அன்புடன்
  ராமசந்திரன்

  ramachandran .bk @ஜிமெயில்.com

  பதிலளிநீக்கு
 40. திக வின் பெரியார் டிவி அறிவிப்பு வந்து நாட்களாகிவிட்டது;இன்னமும் சாத்தியப் படவில்லை. கலைஞர் டிவி யிலாவது சில மணி நேரங்களை ஒதுக்கி நம்மவர்களுக்கு தரலாம்.

  13,14களில் தர்மசங்கடங்கள் விலகுமென்ற நம்பிக்கை இருக்கிறது தோழர்!

  கலைஞரே!... ரெண்டு லட்டு திங்க ஆசையா!!


  www.twitter.com/AMuthuPrakash

  பதிலளிநீக்கு
 41. இரண்டு செயல்கள், இரண்டுமே தர்ம செயல்கள் - ஆனால் இந்த இரண்டில் எதை செய்வது எதை செய்யாமல் விடுவது என்கிற கட்டம் வரும்போது தர்மத்திற்கு சங்கடம் எழும்... இதை தான் தர்ம சங்கடம் என்று சொல்லவேண்டும்.

  இன்றைய வழக்கத்தில் அவசரமாக போக வேண்டும் என்றால் கூட தர்மசங்கடம் என்று தன் சொல்லுகிறோம். தர்மம் இன்று அந்த நிலையில் தான் உள்ளது.

  சார்வாஹ என்று ரிஷி எல்லாம் யாரும் கிடையாது... நீங்கள் சொல்லும் உதாரணம் ஜாவாலி என்ற முனிவரால் ராமனிடம் சொல்லப்படும் விஷயம். பரதன் அண்ணனை மீண்டும் வந்து ராஜ்யத்தை ஏற்றுகொள் என்று அழைக்க போகும் போது அவனுடன் வரும் முனிவர்களில் ஒருவர் ஜாவாலி. அவர் தான் இப்படி எல்லாம் பேசுகிறார். "அப்பன் சொல்லிவிட்டானம் இவன் செய்கிறானாம், இதெல்லாம் என்ன வேடிக்கை. கடன் வாங்கியாவது நெய் உன்ன வேண்டும். சொர்கமவது நரகமாவது" - இது போன்ற பல வாதங்களை எடுத்துரைக்கிறார். இதை போன்ற வாதங்களை சார்வாஹம் என்று கூறுகிறார்கள்.

  இந்த வாதங்களுக்கு பிறகு ராமன் பதில் உறைகிறான் அதன் பிறகு ஜாவாலி எப்படியாவது உன்னை மீண்டும் ராஜ்யத்திற்கு திருப்பவே இப்படி பேசினேன் என்றும் கூறுகிறார். அவர் இந்த பேச்சை பரதன் அண்ணனை அழைக்க மர உரி தரித்து கானகம் புறப்பட்ட பொழுது பேசவில்லை என்பதை குறிப்பிடவேண்டும்.

  புராணகள் எவ்வளவோ விஷயங்களை நடைமுறையில் எடுத்துக்காட்ட வந்தவை. ஒரு முனிவனை விட, ஒரு சிறந்த மனைவி மேம்பட்டவள் என்றும் கடும் தவம் செய்த பிராமணனை விட ஒரு வியாபாரி/ ஒரு மாமிசம் விற்கும் கசாப்பு கடை காரன் தர்மமும் தர்மத்தின் ஞானமும் நிறைந்தவன் என்றும் போற்றும் புத்தகங்கள் இதிஹசங்களும் புராணங்களும்.

  சமஸ்க்ரிததை சரியான முறையில் சரியாக மொழிபெயர்த்தால், புரிந்து கொண்டால் அவைகளில் உள்ள வாதங்கள் பிரதிவாதங்கள் ஒருவனை சீரான வாழ்கை நடத்த உதவுபவை... அவை ஒரு இனமோ ஒரு சாதியோ மட்டும் வளர எழுதப்பட்டவை அல்ல. என் அதை எழுதியவர்களே பிராமணர்கள் அல்ல.

  இன்றைய தலைவர்கள் இதை தான் பேசுவது என்று இல்லாமல் எதை வேண்டுமானால் பேசுவார்கள், அதை பற்றி கவலை படவும் யாரும் இல்லை. அதற்க்கு ஒருஅளவும் தேவை இல்லாமல் ஏதோ குறைகிறது என்று இருக்கிறோம்.

  ஒன்று மட்டும் உறுதி ஒருவன் தன் வாழ்கையில் நல்வழியில் நடக்க ஒரு ஊன்றுகோல் இதிஹசங்கள் புராணகள். பழிக்க முடிந்த வரை பழிதுகொள்ளுங்கள் பாதிப்பு அவைகளுக்கு அல்ல.

  பதிலளிநீக்கு
 42. "சமீபத்தில் (கனிமொழிக்காக) கூட்டப்பட்ட திமுக உயர்நிலைக் கூட்டம் முடிந்ததும் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசினார்.

  செய்தியாளர் : சி.பி.ஐ நடத்திவரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா, இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

  கலைஞர் : தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட தர்மசங்கடம் எங்களுக்கு ஏற்படாது. அது என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை"

  தர்ம சங்கடம் கலைஜருக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் சில பத்திரிகை நிருபர்கள் எண்பத்தி எழு வயது அனுபவம் கொண்டவரிடம் தமசங்கடத்தை பற்றி கேட்டால் அவர் எப்படி நேரிடையாக பதில் சொல்லுவார். சொன்னால் குடும்பத்தில் சிக்கல் வரும் .அதனால் தர்மர் கதையை சொல்லி அனைவரது கவனத்தையும் தர்மர் பக்கம் திருப்பி விட்டார் .
  நாமும் ப்ளோகில் பாரத கதையை அலசி பார்க்கிறோம்.
  கலைஞ்சருக்கு நன்றி............!!!!! ஸ்பெக்ட்ரம் வாழ்க..........!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 43. awaru yenathan paninar awarai ippadi poatu vambuku ilukiringa.paavan sir vidunga. vayasana kaalathula jolly irukatum

  பதிலளிநீக்கு
 44. ர.பார்த்தசாரதி-17.3.15
  முதன் முதலாக இணையத்தில் வெளிவந்த தமிழ் நாளேடு ''விடுதலை'' ஆகும். ''இ'' பேப்பரும் கூட.

  இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாது. தற்போது இந்து மதம் ஒன்று சொல்லப்படுவது பல மதங்களின் கலவையே! பாரசீகர்களால் சிந்து ஆறு பக்கத்தில் வாழ்பவர்கள்(சிந்து-திருடர்கள்) என்று அழைக்கப்பட்டு பிறகு ஆங்கிலேயர்களால் இந்தியாவில் உள்ள மதங்களை ஒட்டுமொத்தமாக அழைக்க பயன்பட்டது தான் இந்து மதம் என்கிற பெயர். சைவம்-சிவன் தான் முதலில் தோன்றியவன், ஆதி சிவன் என்கிறது. வைணவம்- மகாவிஷ்ணு தான் முதலில் தோன்றியவன், ஆதி கேசவன், ஆதி மூலம் என்கிறது. சாக்தம்-பராசக்தி தான் முதலில் தோன்றியவள், ஆதி பராசக்தி என்கிறது. காணாபத்யம்-கணபதி தான் முதலில் தோன்றியவன், முழு கௌமாரம்-சுப்பிரமணியன் தான் முதலில் தோன்றியவன் என்கிறது. சௌரம்-சூரியன் தான்முதல் கடவுள் என்கிறது. மேலேகண்ட கடவுள்கள் எதையும் கூறாமல் புருஷ என்கிற கடவுளை கூறுகிறது நான்கு வேதங்கள். புத்தம் ஒரு கடவுளை கூறுகிறது(போதி சத்துவர்), சமணம் ஒரு கடவுளை கூறுகிறது(நேமினாதர்), குலதெய்வங்கள் வலிய மதங்களால் அழிக்கப்பட்ட வழக்கொழிந்த மதங்கள் என ஒன்றுக் கொன்று முறன்பட்ட மதங்களின் கலவையே இந்த இந்து மதம். கடவுள் தத்துவத்தை மறுப்பது எங்கள் உரிமை. அதற்கு மதவாதிகளின் அனுமதி தேவையில்லை. அச்சத்தினால் தோன்றியதே கடவுள் கொள்கை.

  பதிலளிநீக்கு