2 மே, 2011

’சுஜாதா விருதுகள் 2011’ - விருது வழங்கும் விழா

தோழர்களே!

இந்த விருது அறிவிக்கும்போது விளையாட்டுத்தனமாகவே இருந்தேன். இது எவ்வளவு முக்கியமான அங்கீகாரம் என்பதை எதிர்பாராத இடங்களில்/மனிதர்கள் மூலமாக வந்து விழுந்த பாராட்டுச் சுனாமியின் பின்னரே அறியமுடிகிறது. நான் பணிபுரியும் பத்திரிகை, என்னுடைய போட்டோவெல்லாம் போட்டு வாழ்த்தியிருக்கிறது. இவ்விருதினை வழங்கும் அமைப்பினரின் செயல்பாடுகளின் மூலமாக உருவாகியிருக்கும் கவுரவம் இது.

விருது கிடைத்துவிட்டது என்பதற்காக நண்பர்கள் ‘பார்ட்டி’ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பட்டியல் தயார் செய்து, பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று (டாஸ்மாக் விலை நிலவரப்படி) மதிப்பீடு போட்டுப் பார்த்தேன். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. கிடைக்கப் போகும் பணத்தை விட இது பத்து மடங்கு அதிகம் என்பதால், இப்போதைக்கு ‘பார்ட்டி’ விஷயத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவருவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. அதுவுமில்லாமல் இன்னமும் பத்து நாள் கழித்து, மே 13 அன்று தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் , இந்த எளிய தொண்டனின் சார்பாக தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தரவிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்திய/வாழ்த்தவிருக்கும் பெருந்தன்மையான உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி. எல்லோரும் அவரவர் அன்பை கடனாகவும் / ‘மொய்’யாகவும் அளித்து உதவியிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது அசலும், வட்டியுமாக நிச்சயம் திருப்பி செலுத்துவேன்.

24 கருத்துகள்:

 1. புதிய தலைமுறையில் பார்த்தேன். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. புதிய தலைமுறை பேஜ் ஸ்கேன் போடுங்களேன் தல..

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் லக்கி.விழாவில் கலந்துகொள்ள ஆவலாய் இருந்தேன்.
  சிருவிபத்தினால் இயல வில்லை..இங்கேயே வாழ்த்துகிறேன்..

  பதிலளிநீக்கு
 4. " பத்து நாள் கழித்து, மே 13 அன்று தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் , இந்த எளிய தொண்டனின் சார்பாக தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தரவிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்."


  அடுத்த வருஷம் கலைமாமணி Confirm

  Thanks

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் யுவா...ஆனால் எப்படி எஸ்கேப் ஆகுறீங்க பாருங்க....மே 13 தமிழகம் முழுக்கவே கொண்டாட்டமாகத்தான் இருக்கம்...

  பதிலளிநீக்கு
 6. பெற்ற விருதிற்காக வாழ்த்துக்கள் ஓராயிரம்.
  இனி பெறப்போகும் விருதுகளுக்காக வாழ்த்துக்கள் ஈராயிரம்.
  என்றும் உமது வாழ்வும், பணியும் சிறந்தோங்க வாழ்த்துக்கள் மூவாயிரம்.

  பதிலளிநீக்கு
 7. //புதிய தலைமுறை பேஜ் ஸ்கேன் போடுங்களேன் தல..//

  Please...

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் மீண்டும் அசத்துங்க!! வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 9. மற்றுமொரு முறை வாழ்த்திக் கொள்கிறேன் லக்கி..

  //பத்து நாள் கழித்து, மே 13 அன்று //

  ம்ம்ம்ம் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையை உங்களுக்கு ஆண்டவன் அளிக்கட்டும்..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 10. வாவ் நான் நிச்சயம் ஏதாவது பாறைக்கடியில் வசித்துக் கொண்டிருக்க வேண்டும். வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. quota systhlayavathu treat vainga boss ..athulyum enna mathri valarum eluthalarkaluku(!) munnnurimai koduthu motivate pannunga ...appo ilakkiya panniya sevaanai aatamudyum..

  may 13 thina valthukkal..... /\*/\

  பதிலளிநீக்கு
 12. பார்ப்போம், மே 13ம் தேதி பாராட்டு விழா நடக்கிறதா அல்லது வழக்கம் போல் தமிழ்நாட்டு மக்களை டாக்டர் கலைஞர் அவர்கள், வாழை மட்டை சொரணை கெட்டவர்கள் நன்றி கெட்டவர்கள் என்று திட்டும் வசைபடலம் நடக்கிறதா என்று

  பதிலளிநீக்கு
 13. அன்பின் லக்கிலுக் - பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - மேன்மேலும் முன்னேறி இன்னும் பல விருதுகள் வான்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் லக்கி லூக். நேற்று தான் உயிர்மை பார்த்தேன். உங்கள் இணையத்தளம் சுஜாதா விருதுகள்-2011 க்கு தேர்ந்தெடுக்க பட்டதிற்க்கு எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. . மென் மேலும் விருதுகள் வாங்க நல்வாழ்த்துக்கள்.சென்னையில் இருந்திருந்தால் கட்டாயம் உங்களை நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல ஒரு வாய்ப்பு கிட்டி இருக்கும். இன்று விருது வழங்கும் நிகழ்ச்சியை புகை படமாகவோ அல்லது "யூ டுபிள்" போடுங்கள் . உங்கள் நன்றி உரையையும் படித்தேன். அதிலேயே தெரிகிறது நீங்கள் எவ்வளவு விசாலமாக மற்ற எழுத்தாளர்களை அறிந்து உள்ளீர்கள் என்று. இந்த அங்கிகாரம் உங்களை மேலும் வளர்ச்சி அடைய உதவும்.

  பதிலளிநீக்கு
 15. இந்த விருதை எங்கள் அனைவருக்கும் கிடைத்த கவுரமாகவே நினைக்கிறோம்... வாழ்த்துக்கக்ள்

  பதிலளிநீக்கு
 16. நேரில் வந்து வாழ்த்தனும் என்றிருந்தேன், குறிப்பிட்ட தேதியில் வரமுடியாமல் போய்விட்டது! வாழ்த்துக்கள் யுவா

  பதிலளிநீக்கு
 17. வாசிக்கும் பழக்கத்தை என்னுள் விதைத்தவரின் பெயரால் தங்களுக்கு‍ விருது‍ வழங்கப்பட்டிருப்பது‍ சாலப் பொருத்தம். இணைய உலகின் இரண்டாவது‍ அல்டிமேட் ஸ்டார் நீங்கள்தான். (சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கியவர் - சாரு, அதனால் அ.ஸ்)

  பதிலளிநீக்கு
 18. விருது பெரும் வரை, இத்தனை நாள் பார்க்காமல் / படிக்காமல் விட்டு விட்டேன். அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. \\ மே 13 அன்று தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் , இந்த எளிய தொண்டனின் சார்பாக தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தரவிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\\

  இன்று தமிழ்நாட்டுக்கே உன்னதமான பார்ட்டி தந்த உங்கள் தலைவரையும் - உங்களைப் போன்ற எளிய தொண்டனையும் இன்னமும் 5 ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.

  அருமையான பார்ட்டிக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 20. இன்னும் வளர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு