11 ஏப்ரல், 2011

திமுக வெற்றி உறுதி!

ஒரு வழியாக திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக மெஜாரிட்டி பிடிக்கும். ஸ்வீப் அடிக்கும் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் ஒருவழியாக தரையில் கால் பதித்திருக்கின்றன. ‘அதிமுக வரும், ஆனா வராது’ என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றன. போஸ்ட் போல் சர்வேயில் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கிறது என புதுக்கணிப்பு சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் கணிப்புக்கு மிகக்கடுமையாக உழைத்தாக வேண்டும். கிட்டத்தட்ட மூன்றரைக் கோடி வாக்காளர்களின் மனநிலையை 5000 பேரின் கருத்துகளை வைத்து பொதுமைப்படுத்திவிட முடியாது. சாம்ப்ளிங் அளவு குறைந்தபட்சம் மூன்றரை லட்சமாகவாவது இருந்தால்தான் ஓரளவுக்காவது உண்மைநிலையை நெருங்க முடியும். ஆயினும் இந்த எண்ணிக்கையே கூட துல்லியமான முடிவுகளை தரப் போதுமானதல்ல. லென்ஸ் ஆன் நியூஸ் எனும் இணையத்தளம் 12 தொகுதிகளில் ‘சர்வே’ செய்து, அதிமுக தனித்தே 144 இடங்களை கைப்பற்றும் என்று கணித்த காமெடியை எல்லாம் லீசில் விட்டுவிடலாம்.

நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு துல்லியமாகவே இருக்கிறது. 98ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி தோல்வியடையும் என்று நக்கீரன் சொன்னபோது யாரும் நம்பவேயில்லை. அதுபோலவே கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் திமுக-காங் கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றபோதும் யாரும் நம்பவில்லை. இம்முறை நக்கீரனின் கணிப்பே கூட மகிழ்ச்சிகரமாக பொய்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. 140 தொகுதிகள் வரை திமுக கூட்டணி பெறும் என்று நக்கீரன் கணிப்பதாக தெரிகிறது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி 150 முதல் 160 இடங்கள் வரை வெற்றியடையும் என்பதாகவே நமக்கு தோன்றுகிறது.

ஜூனியர் விகடனின் நேற்றைய கணிப்பு திமுக கூட்டணிக்கு பெரிய மனதோடு, தாராளமாக 92 இடங்களை அளித்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜூ.வி. திமுக கூட்டணிக்கு 7 இடங்களை தந்திருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 28 இடங்களை கைப்பற்ற முடிந்தது. எனவே ஜூ.வி.யின் இப்போதைய கணிப்பை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் திமுக கூட்டணி ஸ்வீப் அடித்தாலும் (180க்கும் மேல்) ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எனவே ‘மாற்றம், மாற்றம்’ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 2014 வரைக்குமாவது கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்களுக்காக ‘பாண்டிச்சேரி’ தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம்.
தேர்தல் கணிப்புகளை வெளியிட்ட சில ஊடகங்களில், விட்டுப்போன அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்ட, முக்கியமான சில விஷயங்கள் உண்டு.

ஒன்று. அரசு ஊழியர்களுக்கு அதிமுக மீது இருக்கும் அச்சம். தமிழகத்தில் சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து, இவர்களது கட்டுப்பாட்டில் (அதாவது குடும்பம், நட்பு, சுற்றம்) தோராயமாக முப்பது லட்சம் வாக்குகள் இருக்கிறது.

இரண்டு. 21 லட்சம் குடும்பங்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித்தரும் திட்டம். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. மீதி 18 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக அடுத்த ஐந்தாண்டுகள் என்று திமுக அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் இத்திட்டம் அரோகராதான் என்று டோக்கன் வாங்கியவர்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 60 லட்சம் வாக்குகள் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை எந்த ஊடகமும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு ரூபாய் அரிசியில் தொடங்கி 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிருக்கு திருமண உதவித்திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கைம்பெண்கள் மற்றும் வயதானோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார ரீதியில் கைகொடுத்தது, விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் என்று ஏராளமான நலத்திட்டங்களால் வாக்களிக்கவிருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் ஏதோ ஒருவகையில் நேரடியாகவே திமுக அரசால் இந்த ஆட்சிக் காலத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள். எனவே அதிமுக, தேமுதிக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கூட திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக யூகிக்கிறேன்.

நலத்திட்டங்கள் மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளிலும் திமுக அரசு குறை வைக்கவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மதுரை மற்றும் 3 நகரங்களில் கைத்தறி பூங்காக்கள், உலகத் தரம் வாய்ந்த நூலகம் சென்னையில், தலைமைச் செயலகம், சென்னைக்கு மெட்ரோ ரயில், தமிழகமெங்கும் பாலங்கங்கள், கான்க்ரீட் சாலைகள், புதிய அரசுக் கட்டிடங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என்று 95 சதவிகித தாலுகாக்கள் மற்றும் யூனியன்களில் ஏதேனும் ஒரு பெரிய கட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல. திமுகவுக்கு எதிரான விஷயங்கள் என்றால் மின்வெட்டு மற்றும் விலைவாசியாக மட்டுமே இருக்கக்கூடும். விஜய்-அஜித் ரசிகர்களின் எதிர்ப்பு திமுகவுக்கு அச்சுறுத்தல் என்றொரு மகா த்ராபையான காரணத்தை கூட ஒரு பத்திரிகை கண்டுபிடித்திருந்ததை வாசித்தேன். என்னத்தைச் சொல்ல?

திமுக இம்முறை வெல்லப்போவது அதிமுக கூட்டணியை மட்டுமல்ல. திமுகவுக்கு எதிராக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கமிஷனையும் சேர்த்துதான்.

படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.

பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.

97 கருத்துகள்:

 1. // எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.//

  த‌னியாக‌ எழுத‌வில்லை. நீங்க‌ள் எழுதிய‌தை ம‌ன‌தில் வைத்துக் கொண்டேன். :)

  பதிலளிநீக்கு
 2. பதிவுலகில இருக்கும் பத்தே பத்து அதிமுக அனுதாபிகளின் போக்குதான் ஒரே அக்கப்போராக இருக்கிறது.

  உங்கள் கட்டுரையை உங்கள் அனுமதியில்லாமல் ஏற்றியுள்ளேன் உங்கள் பெயரோடு.

  விருப்பமில்லையென்றால் நீக்கிவிடுகிறேன்.


  நன்றி
  VJR

  பதிலளிநீக்கு
 3. யுவாவின் ஒவ்வொரு வரியையும் வழிமொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. You are entitled to have your views. My prediction will be it will be tight rope for DMK+Allies.

  DMK might still win and a coalition govt is maximum possibility.

  பதிலளிநீக்கு
 5. ஆத்தா தலைமையில் தனி ஈழம் மற்றும் தமிழ்த்தேசியம் சமைக்கலாம் என்றிருந்த இணைய பொரட்சியாளர்கள், மற்றும் திடீர் தமிழ் குடிதாங்கிகள், ஈழ வெறியர்கள் நினைப்பில் மண் அள்ளிப்போட்டதற்காக மேற்படி இலவு காத்த கிளிகள் சங்கம் சார்பாக
  வன்மையாக கண்டிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 6. லக்கி! உங்க வாய்க்கு சர்க்கரை போட வேண்டும். இப்போது தான் நன்னிலத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன். கிட்டத்தட்ட நான் நேற்று இரவு டிராப்டில் எழுதி வைத்த மாதிரியே இருக்கு ரிசல்ட். இருங்க என் பதிவையும் போட்டு விடுகிறேன்...

  பதிலளிநீக்கு
 7. உங்க காமெடிக்கு அளவு இல்லாம போய்கிட்டு இருக்கு. ஒரு அளவோட காமெடி பண்ணுங்க

  பதிலளிநீக்கு
 8. //தேர்தல் கணிப்புகளை வெளியிட்ட சில ஊடகங்களில், விட்டுப்போன அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்ட, முக்கியமான சில விஷயங்கள் உண்டு//

  இவை முக்கிய பங்காற்றும் என்பதை மறுப்பதற்கில்லை.

  *******************

  'அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!' என்கிற எனது பதிவை நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்களேன்.

  http://amaithiappa.blogspot.com/2011/03/blog-post_16.html

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. //சேலம்: "எங்களை விரட்டியடித்து, நிலத்தை அபகரித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதற்கு உடந்தையாக செயல்பட்ட முதல்வரும் தான் குற்றவாளிகள். தேர்தலில் ஒட்டுமொத்த தி.மு.க.,வும் தோற்கடிக்கப்பட வேண்டும்' என, சேலம் அங்கம்மாள் காலனி மக்கள் கூறினர். சேலத்தில் அவர்கள் அளித்த பேட்டி: நாங்கள் அனைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தாலும், அவரது ரவுடி கும்பலாலும் வீடுகளையும், நிலத்தையும் இழந்த 30 குடும்பத்தினர்.
  -நன்றி தினமலர் //

  இதுக்கு உங்கள் பதில் என்ன கிருஷ்ணா ?

  பதிலளிநீக்கு
 10. உண்மையினை உரக்கச் சொல்லியிருக்கிரிர்கள்..30ருபாய் சம்பளத்திற்கு பீகாரில் இருந்து தமிழகம் வருகிறான் வடஇந்தியன் இதற்க்கு என்ன அர்த்தம் இங்கே வாய்ப்பிருக்கிறது, வேலை இருக்கிறது.. வாய்ப்பையும் வேலையினையும் உருவாக்குகிறோம் என்பது நாம் முன்னேரிக் கொண்டிருக்கிறோம் என்பதன் பிரதிபலிப்பே பீகாரில் இருப்பவனுக்குத் தெரிகிறது நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று இங்கே உள்ளவர்களோ அதை கவனிக்காமல் பிதற்றுகிறார்கள்..
  உண்மையே திமுகவின் ஆட்சித் தொடரும்.. உங்கள் பதிவை ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றி..

  பதிலளிநீக்கு
 11. ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல.

  April fool

  பதிலளிநீக்கு
 12. சேம் பிளட். ஆனால் நான் நடுநிலைவாதி, எனக்குத் தோன்றியது எல்லாமே உங்களுக்கும் தோன்றியது அதிசயம் தான்!

  பதிலளிநீக்கு
 13. விஜயகாந்தின் தீவிர ரசிகரான யுவகிருஷ்ணாவே இப்படி ஓர் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார் எனும்போது மற்றவர்கள் கட்டாயம் யோசித்தே மறு பதிவு எழுத வேண்டும்.

  பதிலளிநீக்கு
 14. Very Good Comedy Post, Wait till May 13th  This is the masterpiece

  //எனவே ஜூ.வி.யின் இப்போதைய கணிப்பை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் திமுக கூட்டணி ஸ்வீப் அடித்தாலும் (180க்கும் மேல்) ஆச்சரியப்பட ஏதுமில்லை//

  hahahahahahahahahahahahahahaha

  பதிலளிநீக்கு
 15. I agree with you krishna.
  only doubt is the cong contenting seats.

  whatever JV said will reverse. DMK alone will get 105. ADMK same numbers as 2006.

  பதிலளிநீக்கு
 16. Only spineless ignorant fools will vote for Antonio Maino's congress. Sonia govt didn't lift a finger against Indian fisher men killers.
  DMK is going to lose because of Congress

  பதிலளிநீக்கு
 17. மனதைக் குளிரவைத்த உடன்பிறப்பே
  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. நானும் ஒரு காரணம் சொல்வேன். ஒரு மாசம் வாக்குசீட்டு எண்ண நேரம் இருக்கு. அதுக்குள்ளே இவங்க ஓட்டு இயந்திரத்தை மாற்றி விடுவார்கள். இதெப்படி இருக்கு ?

  பதிலளிநீக்கு
 19. என்னுடைய அரசியல் பார்வை. அலசல் மூலம் சொல்கிறேன்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஜெயலலிதா தவறிவிட்டார்.. எளிதில் வெற்றிக்கோட்டை தொட்டிருக்க வேண்டியவர் , தன் செயல்களாலேயே போட்டியை கடுமையாக்கி கொண்டு.. இன்றைய நிலையில்.. திமுகவிற்கு வழி விட்டு விட்டார் என்பதே நிதர்சனம்.. அவருக்கு கடந்த இரண்டு மாதத்தில் பக்கபலமாக நின்ற பத்திரிககள் பல ஓவர் கான்பிடன்ட் டோஸ் கொடுத்து விட்டது .. அதை தாமதமாகவே புரிந்துக்கொண்டு , இப்போது என்னனென்னமோ செய்து பார்கிறது.. ஆனால் டூ லேட்..
  மற்றொரு முக்கிய காரணி , முகவின் பிரசார வியுகம் .. ஊடகத்தை பயன்படுத்திய முறை.. வடிவேலு முதல் லியோனி, நெப்போலியன், குஷ்பு வரை கடினமாக உழைத்தது ... கலைஞ்சரின் மேடை பேச்சு.. எங்குமே அம்மையாரை திட்டாமல், அர்ச்சிகாமல் .. பழைய தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது மக்களை கவர்ந்துள்ளது.. ஸ்டாலின் சூறாவளி சுற்றுபயணனும் பெரிய பிளஸ்.

  ஜெயா டிவியிலேயே வடிவேலுவையும், அவர் கலைஞரை "இவர் தான் தலைவர் " என்று சொன்னதை திரும்ப திரும்ப காண்பிக்க வைத்திருகிறது என்றால் வடிவேலின் பிரசாரம் பற்றி புரிந்துக்கொள்ளலாம் ..

  மொத்தத்தில் பிரசார வியுகத்தில் திமுக பல்கலை கழகம் என்றால் அமரர் எம்ஜியார் உருவாக்கி வைத்த அதிமுக கோட்டை இன்னும் 6 ஆம் வக்குப்பு கூட தேறவில்லை..

  என் கணிப்பு

  திமுக - 128 - 148
  அதிமுக - 85 - 105
  மற்றவர்கள் - 1 - 3

  பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 20. //விஜயகாந்தின் தீவிர ரசிகரான யுவகிருஷ்ணாவே//

  ச‌கா..சொல்ல‌வேயில்லை..அண்ண‌னுக்கு ஒரு குவார்ட்ட‌ர் பார்சேல்ல்ல்ல்ல்ல்

  பதிலளிநீக்கு
 21. நக்கீரன் தேர்தல் பிட்ஸில் வந்த செய்தி:
  கோவை வடக்கின் தி.மு.க.வேட் பாளரான வீரகோ பால்... ரத்தினபுரி பகுதியில் ஓட்டு சேக ரிக்கச் சென்றார். வீடு வீடாகச் சென்றவர்... அ.தி.மு.க. வட்டசெய லாளர் உமர்பாய் வீடு என்பதை அறியாமல்... அவர் வீட்டுக்குள்ளும் போனார். உடன்வந்த உ.பி.க்கள்...’"அண்ணே இங்க வேண்டாம். இது அவங்கத் தரப்பு வீடு' என்று வீரகோபாலைத் தடுத்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அ.தி. மு.க. உமர்பாய்... ’உள்ளே வாங்க’ என வீரகோபாலை கை யைப் பிடித்து உரிமை யாய் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். ‘""நான் அ.தி.மு.க. காரன்தான். ஆனா இப்ப உங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறேன். ஏன் னா... போன மாசம் என் பையன் ஹாஜா.. ஒரு ஆக்ஸிடெண்ட்ல சிக்கிட்டான். அவனை கலைஞர் காப்பீட்டுத்திட் டம்தான் எங்க ளுக்கு உயி ரோட மீட்டுக் கொ டுத்திருக்கு. அதுக்கு நன்றிக் கடனா... இப்ப உங்களுக்கு பிரச்சார மும் பண்ணப் போறேன்''’என்று உருக்கமாய்ச் சொன்ன உமர்பாய்... அப்போதே .தி.மு.க . வீரகோபா லுக்கு ஓட்டுவேட்டை யையும் ஆட ஆரம் பித்துவிட்டார்.

  பதிலளிநீக்கு
 22. லக்கிண்ணா! உங்கள் கருத்துகளில் உள்ள நிதர்சனத்திற்கு-உண்மைக்கு- நக்கீரன் இதழின் இச்செய்தியே ஆணித்தரமான சான்று.............

  உங்கள் கணிப்பும் (150-160) மகிழ்ச்சிகரமாகப் பொய்த்துப்போக வாய்ப்புகள் அதிகம்.....

  திமுக கூட்டணி 200க்கு மேல் வெல்லப்போவது நிச்சயம்..........

  பதிலளிநீக்கு
 23. நன்றி யுவா! நீங்கள் இங்கு எழுதிருக்கும் கருத்தை தான் நான் எனது நண்பர்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக சொல்லிகொண்டிருகின்றேன், spectrum என்பது நகரத்தைதாண்டி வெளியே தெரியாது, விலை வாசி உயர்வும், மின் தடையுமே பாதிக்கும் என்று . மேலும் இவ்விசயம் வேண்டுமானால் ஜூனியர் விகடனுக்கும், துக்ளக்கும், குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் ஜெயா டிவி ஆகியோருக்கும் மற்றும் வடஇந்திய ஆங்கில சேனலுக்கு வேண்டுமானால் பெரிய விஷயம். நான் நக்கீரனை நம்புகின்றேன். நக்கீரனின் விளக்கங்களை பாருங்கள் மிக அருமை. காரணங்களோடு விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகும் கூட, அரசியல் தரகர் துக்ளக் சோ ராமசாமி சொல்லுவார் பெட்டியை மாற்றி விட்டார்கள் ஒரு மாத இடைவெளியில் என்று. பார்க்கலாம் தா.பா , விஜயகாந்த் மற்றும் அவர்களின் தோழமை கட்சியினர் என்ன சொல்ல போகிறார்கள் என்று. என்னுடைய கணிப்பு படி தி.மு.க கூட்டணி 135 வரை மட்டுமே பிடிக்கும் என்று தோன்றுகிறது. திட்டச்சேரி முருகவேல்.ச ஆழ்வார்பேட்டை சென்னை 18

  பதிலளிநீக்கு
 24. திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,

  தேர்தல் கருத்து கணிப்புகளை பொறுத்தவரை தலைவரின் கருத்து தான் எனக்கும். ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பதில் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஜெயிக்கப்போகிற கட்சிக்கே வாக்களிப்போம் என்பதே நடுநிலைமை வாக்களர்களின் எண்ணம். எந்த கட்சி சார்பும் இல்லாமல் தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியின்பால் சாயும் 10% மக்களான் இவர்களே வெற்றியை நிர்ணயிக்கிறார்கள் என்பது என் கருத்து. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மக்கள் ஆதரவு என்பது இப்போது(பிரசாரம் முடிந்த பிறகு)திமுகவுக்கே உள்ளது என்பதை கண்கூடாக காண்கிறேன். தேர்தல் நேரத்தில் அதிமுக அனுதாபிகளால் ஒரு கருத்து சொல்லப்படும். அது " அந்த அம்மா முன்னைப்போல ஆண வத்தோட இல்லை. எல்லா முடிவும் இனிமேல் அவங்க தான் எடுப்பாங்க" என்று. ஆனால், இந்த முறை நடந்த கூட்டணி குளறுபடிகளும், வைகோ வெளியேற்றப்பட்ட முறையும் மக்களிடத்தில் முக்கியமாக அதிமுக அனுதாபிகளிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் திமுக வின் புயல் வேக பிரசாரத்தின் முன்னால், அதிமுகவால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. என்னுடைய கணிப்பு,
  திமுக் - 95 - 105
  அதிமுக - 90 - 110
  காங் - 8- 12
  பா.ம.க. - 12 17
  தேமுதிக - 8-10
  வி.சி. 2 - 3
  பா.ஜ இந்த முறை பல தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் பெற்று தமிழகத்தில் எப்பொதும் மேறாவது அணிக்கென கிடைக்கும் 6-8% சதவிகிதம் வாக்குகளை அள்ளும். அப்போது தான் பலருக்கும் புரியும், விஜயகாந்துக்கு இத்தனை நாள் கிடைத்தது அவருக்கான வாக்கு அல்ல, 3வது அணியாக யார் நின்றாலும் கிடைக்க கூடியது தான் என்று.

  பெருவாரியான தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 5000க்கும் குறைவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. நீங்கெல்லாம் திருந்தவே மாடிங்களா .......
  ஒவ்வொரு தமிழனையும் ஏமாற்றி அழிச்சவனுக்கு
  ஒரு கட்டுரை வேற எழுதி அசிங்க படுத்திறிங்க ..
  உங்களுக்கு கடாபி கூட குல தெய்வமா தான் தெரிவான் ...
  இப்போதைக்கு தி மு க இருக்க கூடாது ,
  அபோ தான் நீங்க எவ்வளவு பெரிய குற்றத்திற்கு அதரவு செஞ்சிட்டு இருகிங்கனு தெரியும் .....

  பதிலளிநீக்கு
 26. My opinion DMK alliance 100+ , ADMK alliance 130+ .
  Who ever forms govt. , should concentrate on improving the standards Govt. schools and Hospitals . They should give importance to rainwater harvesting and irrigation facilities to farmers and power generation through renewable sources . Most importantly independence to efficient IAS and Police officials.
  We should appreciate both parties and Kamaraj for their education policies and for creating equality among genders . Whether it is DMK/ADMK TN is always in the top state list because of the educated population both parties can claim credit for this .
  Amma has lost her over whelming lead in the intitial stages of election itself due to her attitude towards alliance partners . It has created scare among independent voters , they realized JJ has not changed . This was a big blow to ADMK alliance . MDMK wouldnt have got votes for them but Vaiko would have been the star campaigner and he would have pulled votes for them . Due to her attitude DMK is on even stevens with ADMK now .
  In Tamlinadu Opinion Poll always fails as their sample is not a true sample of TN Voters . In 2001 Media predicted DMK to regain the power , in 2009 ADMK was predicted but reverse happened , let us see how it goes .
  Lucky I think DMK alliance has lost Alandur when they gave to congress , it would have been cake walk for DMK if they have contested .

  பதிலளிநீக்கு
 27. திமுக தனிப் பெரும்பான்மை பெறுவது கடினம் .... ஆனால் தனிப்பெரும் கட்சியாக இருக்கும். காங்கிரஸ் கட்சி பல இடங்களில் மண்கவ்வும் என்பதும் உறுதி... 63 இடங்களில் பல இடங்களை வீணடிக்க ப்போகிறது .... தொங்குசட்டசபை , தி.மு.க தலைமையில் கூட்டணி ஆட்சி !!!

  பதிலளிநீக்கு
 28. //பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.//

  உடன்பிறப்பே!!

  இதே வண்மையாக ...வழிமொழிகிறேன் :)

  /\*/\

  பதிலளிநீக்கு
 29. ஆழமான கருத்துக்கள்... அருமையான அலசல்.... ஊடகங்களின் ஒரு தலைபட்சமான செய்திகள் பொய்யாகும் என்றே தோன்றுகிறது.. இவர்களின் வாதங்கள் பொய்யாகும் நாள் மே பதிமூன்று... வாழ்த்துக்கள் தோழரே...

  பதிலளிநீக்கு
 30. "ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல".

  உண்மை தான். நகரங்கள் அல்லாத பகுதிகளில் பெரிய தாக்கத்தை இவை ஏற்படுத்தவில்லை. ஆனால்:

  " திமுகவுக்கு எதிரான விஷயங்கள் என்றால் மின்வெட்டு மற்றும் விலைவாசியாக மட்டுமே இருக்கக்கூடும்."

  இவை மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

  தவிர நக்கீரன் தற்போது திமுகவின் குடும்ப பத்திரிகை, எனவே அதன் கருத்துகணிப்பு நம்பத்தன்மை நிச்சயமாக ஆராய்ச்சிக்குட்பட்டது.

  எனக்கென்னவோ இலை தான் தழைக்கும்னு தோணுது.

  பதிலளிநீக்கு
 31. எல்லாருக்கும் கனவு காணும் உரிமை உண்டு. நாற்காலி கணிப்புகள் ஏட்டு சுரைக்காய்கள், கறிக்கு உதவாது!

  பதிலளிநீக்கு
 32. ma.thi.mu.ka - vinarin maraimuka vaakkukalai patri sollavae illaiyae krishnaa.....

  பதிலளிநீக்கு
 33. "' 30ருபாய் சம்பளத்திற்கு பீகாரில் இருந்து தமிழகம் வருகிறான் வடஇந்தியன்"'
  இது உண்மையா? உண்மையாக இருக்கும் பட்சம் இதைவிட உழைப்பு சுரண்டல் வேறெதுவும் இல்லை.
  ஒரு பூஜ்யம் தவறி விட்டதோ?

  "'அ.தி.மு.க. வட்டசெய லாளர் உமர்பாய் வீடு என்பதை அறியாமல்... அவர் வீட்டுக்குள்ளும் போனார். உடன்வந்த உ.பி.க்கள்...’"அண்ணே இங்க வேண்டாம். இது அவங்கத் தரப்பு வீடு' என்று வீரகோபாலைத் தடுத்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அ.தி. மு.க. உமர்பாய்... ’உள்ளே வாங்க’ என வீரகோபாலை கை யைப் பிடித்து உரிமை யாய் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். ‘""நான் அ.தி.மு.க. காரன்தான். ஆனா இப்ப உங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறேன். ஏன் னா... போன மாசம் என் பையன் ஹாஜா.. ஒரு ஆக்ஸிடெண்ட்ல சிக்கிட்டான். அவனை கலைஞர் காப்பீட்டுத்திட் டம்தான் எங்க ளுக்கு உயி ரோட மீட்டுக் கொ டுத்திருக்கு. அதுக்கு நன்றிக் கடனா... இப்ப உங்களுக்கு பிரச்சார மும் பண்ணப் போறேன்''’என்று உருக்கமாய்ச் சொன்ன உமர்பாய்... அப்போதே .தி.மு.க . வீரகோபா லுக்கு ஓட்டுவேட்டை யையும் ஆட ஆரம் பித்துவிட்டார்."'

  அவருடைய தற்போதைய நிலை என்ன ?

  பதிலளிநீக்கு
 34. ஜூனியர் விகடனின் நேற்றைய கணிப்பு திமுக கூட்டணிக்கு பெரிய மனதோடு, தாராளமாக 92 இடங்களை அளித்திருக்கிறது.
  இந்த தேர்தலில் அரசியல் தலைவர்களை விட ஜூனியர் விகடனுக்கும் தின மணிக்கும் தான் படு பயங்கரமான தோல்வி ஜுரம்.அவ்விருவரும் நல்ல தரமான வாசகர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 35. //ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல //

  adhaavadhu,
  ஸ்பெக்ட்ரம் = லொட்டு
  குடும்ப ஆதிக்கம் = லொசுக்கு

  தமிழன் = லூசு

  பதிலளிநீக்கு
 36. uva why dmk distributing money then? if you are so confident why your leader is crying in tiruvaroor?

  பதிலளிநீக்கு
 37. Nakkeeran says DMK combine will sweep elections in 2001, but the result was different. You can see the same this time too. Don't say Spectrum does not make any impact, wait and watch. The same old DMK says Rajiv was corrupt because he looted 64 crores in Bofors? Where do you show your face for Specturm Case (how ever the amount may be)?
  "ARASAN ANDRU KOLVAN, THEIVAM NINDRU KOLLUM"

  பதிலளிநீக்கு
 38. Why congress will get 24 seats?
  Is that because they protected Indian tamil fishermen against srilankan attacks

  பதிலளிநீக்கு
 39. கலைஞர் பொலம்புறது காணாதுன்னு நீங்களும் வேறயா. தேர்தல் ஆணையம் அதோட வேலைய செஞ்சா உங்களுக்கு ஏன் வலிக்குது. மடில கணம் இருந்தாதான் பயம் இருக்கணும்.

  அரசாங்கத்தோட intelligence report அப்படின்னு ஒண்ணு இருக்கு. அந்த ரிப்போர்ட் நிலவரம் உங்களுக்கு இப்போ தெரிஞ்சுருக்குமே. அதெல்லாம் பத்தி பேச மாட்டிங்களே.

  //பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது//

  ரொம்ப கரெக்டா சொன்னிங்க. நான் என்னைச்சொன்னேன் அப்பிடிங்கறத மட்டும் விட்டுட்டிங்களே.

  பதிலளிநீக்கு
 40. எல்லாரும் ஒரு விஷயம் மறந்து அல்லது மறந்தது போல பேசுகிறார்கள். சென்ற பார்லிமென்ட் தேர்தல் முடிவிலேயே தெரிந்த விஷயம் தி மு க தனது நகர செல்வாக்கை இழந்து M G R உருவாக்கி வைத்திருந்த கிராம செல்வாக்கை கைப்பற்றி விட்டது. கிட்டத்தட்ட 70 தொகுதி போக 164 தொகுதிகள் கிராம செல்வாக்கு உள்ள தொகுதிகள். நகரத்தில் உள்ள நம்மை மாதிரி ஆட்கள் நெட், பேப்பர், டிவி எல்லாம் படித்து பார்த்து ஆய் ஊய் என்று விமர்சனம் செய்வோம் அனல் பொறுமையாக வரிசையில் நின்று ஒட்டு போடா மாட்டோம். கிராமத்தில் உள்ள பாமரர்கள் இதெல்லாம் செய்யாமல் ஓட்டை மட்டு கண்டிப்பாக போடுவார்கள்.
  ஒரு சிறு arithmatic கிராம செல்வாக்கு தொகுதியில் 70 சதம் DMK (164 * 70 % = 115 )
  நகர செல்வாக்கு தொகுதிகளில் 30 சதம் DMK (70 * 30 % = 21 )
  ஆக மொத்தம் 136 தொகுதி கண்டிப்பாக உண்டு

  பதிலளிநீக்கு
 41. TN fisherman issues wont have any impact on the way people vote..wat i still donot understand is why our fisherman fishes outside Indian border and complain SL is arresting? Will India allow SL fisherman whn thy fish in our waters ?

  பதிலளிநீக்கு
 42. மிகவும் நேர்த்தியான ஆதாரப்பூர்வமான அலசல்....அருமை...!!! திமுகவின் வெற்றி உறுதி என்பது இன்னும் சிலருக்கு விளங்கவில்லை. இன்னும் ஒரு மாதம் தானே காத்திருந்து தெரிந்து கொள்ளட்டும்...

  பதிலளிநீக்கு
 43. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, செண்டிமெண்டலாக பார்த்தாலும் - 2006 ல் தி.மு.க வில் சீட் கிடைக்கவில்லை என்று ஸ்டாலினின் நண்பர் திருவாரூர் அசோகன் - கடலூர் ஓடிவந்து ' அம்மாவிடம்" சரணடைந்தார். 2011 ல் கடலூரில் சீட் கிடைக்கததால் ஐய்யப்பன்( இவரும் ஸ்டாலினின் நண்பரே ) சென்னை வந்து " அம்மாவிடம்" சரணடைந்திருக்கிறார், இது இம்முறையும் தி.மு.க வை வெற்றி பெற செய்யுமென்று செண்டிமெண்டலாக என் நண்பர்கள் சொல்லுகிறார்கள், பார்க்கலாம் இந்த MLA களின் " தாவல் " செண்டிமெண்ட் எப்படி workout ஆகிறது என்று. - திட்டச்சேரி ச.முருகவேல் ஆழ்வார்பேட்டை சென்னை 18

  பதிலளிநீக்கு
 44. ஆஹா... நக்கீரன் வாழ்க...

  எல்லாரையும் நம்பும் குணம் இன்னும் நம்மை விட்டு போகவில்லையா?

  பதிலளிநீக்கு
 45. கையக் குடுங்க லக்கி...!!! கரெக்டா சொல்லியிருக்கீங்க....


  திட்டம் போட்டு, தினமணி, தினமலர், விகடன் குழுமப் பத்திரிகைகள், இது போதாதென்று, வடநாட்டு பத்திரிகைகள் என்று அனைவரும், உண்மை என்ன, கள நிலவரம் என்ன என்பதையே தெரியாமல், ARM CHAIR ANALYSIS பண்ணி, ஒரு மாயையை ஏற்படுத்தியிருந்தார்கள். நான் விகடன் ஒரு நடுநிலையான பத்திரிகை என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவர்கள் அப்பட்டமாக, பூணூலுக்கு பூணூல் என்று ஆதரித்தது அவர்கள் மேலிருந்த அபிப்ராயத்தை சுத்தமாக போக்கி விட்டது.

  பதிலளிநீக்கு
 46. @ சென்டிமென்ட் முருகவேல் : இந்த முறை திருவாரூரில் தலைவர் நிற்கிறார் , அப்படினா உங்க சென்டிமென்ட் படி அவர் அடுத்த முறை அதிமுகவுக்கு தாவ வேண்டுமா

  @படகோட்டி : அது எப்படி தலைவர் மாதிரியே ஆதரவா சொன்னா "ஹிந்துவே சொல்லி விட்டது , விகடனே சொல்லி விட்டது " , எதிர்ப்பா சொன்னா "மவுன்ட் ரோடு மகா விஷ்ணு , பூணூலுக்கு பூணூல் , அவாள் நமக்கு சவால்"

  பதிலளிநீக்கு
 47. பாக்கலாம் பாஸ் .... பாச தலைவனுக்கு பாராட்டு விழா நடக்குதா இல்ல "கொல்றாங்கோ .... கொல்றாங்கோ" கேக்குதான்னு பாக்கலாம் ....
  நான் ஒரு பத்து தொகுதிகளுக்கு போய் வந்தேன் .... எல்லா தொகுதிலயும் யாரு உறுதியா வருவாங்கனு சொல்ல முடியல

  பதிலளிநீக்கு
 48. DEAR LUCKYKRISHNA.HERE IS MY ANALYSIS DMK ALLIANCE 155 TO 165 SEATS.ADMK ALLIANCE 65 TO 70 SEATS AND NOTHING MORE FOR THEM (VIJAYAKAMTH 3 TO 4 SEATS).

  பதிலளிநீக்கு
 49. If DMK wins it is only because of the money...Every party gives money but DMK has made it in such a large scale. People have started asking money for vote has a birth right. I'm quiet confident that DMK will win and are creating a society that is so un ethical. We are creating an un ethical society and I'm sure we will have to pay a huge price for it..We can talk nice poetic words in tamil and keep praising ourselves,if you see the image of a TAMIL outside TAMIL NADU it has detioriated a lot and DMK has a large hand to get this image. For building a grave yard next to ANNA SAMADHI for himin Marina MK has done some thing that is going to haunt TAMILS a lot. We have to be very greatful for DMK

  பதிலளிநீக்கு
 50. அப்படீன்னா நம்ம சீமான் அண்ணன் அடுத்த தடவையும் ஆட்சிய புடிக்க முடியாதா .

  பதிலளிநீக்கு
 51. CONGRESS WILL LOOSE THE 63 SEATS.
  DMK = 50-60
  TAMILAINAS ARE NOT FOOLS

  பதிலளிநீக்கு
 52. Well Said Yuva,
  This is what going to happen soon. People will know that on 13th May. DMK will be an better option among other political parties. I beleive, all these, fishermen, spectrum issues will be having minimal impact on these election.

  பதிலளிநீக்கு
 53. @ kailash - உங்களுக்கு சரியா புரிஞ்சுக்க தெரியல . தொடர்ச்சியா பாருங்களேன், திருவாரூர் to கடலூர், கடலூர் டு சென்னை அவ்வளவுதான் ( திரும்பவும் திருவாரூர் எங்கிருந்து வந்தது, வேண்டுமென்றல் ஆயிரம்விளக்கு வரலாம் ), அதுவும் அடுத்த தேர்தலில் தேர்தலில் சீட் கிடைக்காதபோது, அதுவும் தி.மு.க. அடுத்த 5 வருட ஆளும்கட்சியாக முடிந்த பின். உங்கள் கனவு மெய்பட எனது ஆசை, கருணா ஆ தி மு க வில் சேர்ந்தாலும் ஆ தி மு க, தி.மு.க வாகவிட போகிறது சரிதானே திட்டச்சேரி முருகவேல் ச . சென்னை 18

  பதிலளிநீக்கு
 54. தேர்தல் ரிசல்ட் வந்த உடனே உங்க தலைவர் சாரு சைட்டுல வந்தது மாதிரி வைரஸ் வராம பாத்துக்குங்க..

  உங்க நம்பிக்கையைப் பாராட்டுறேன்.. நம்பிக்கைதானே வாழ்க்கை..


  தி.மு.க ஸ்வீப் அடிக்கும்னா பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும்னு நானும் சொல்வேன்..10, 60 சீட் கிடைக்குமானு பாருங்க..

  எனக்கென்னமோ உங்க தலைவர் இந்நேரமே சோனியா”ஜி” ட்ட சொல்லி எப்படி வாக்குப்பதிவு எந்திரத்து ஸ்க்ருவ்வக் கழட்டுறதுன்னு ஆராய்ச்ச்சி செய்ய ஆரம்பிச்சிருப்பார். இல்லை, அதுக்கும் தனி அணி ( தேர்தல் மோசடி அணி) ஒண்ணு இருக்கா?

  பதிலளிநீக்கு
 55. இதே நக்கீரன் தான் குஷ்புவை அப்படி இப்படி என்று கன்றாவியை பேசியது அவரைத்தானே வைத்து வோட்டு கேட்கிறது உங்கள் திமுக நக்கீரன் நடுநிலயான பத்திரிக்கை என்று மனசார யாராலும் சொல்லமுடியுமா இந்த முறை தி முக ஆட்சி குப்பை கடந்த முறைய்டை விட மிக மோசமானது .... காரணம் இபோது அதிகாரம் கலைஞர் கையிலே இல்லை அவர்கள் குடும்பத்தின் எடுப்பர் கைக்குள் இருக்கிது அதுபோக அதன் கூட்டணி காங்கிரஸ் 2 சீட் வென்றால் கூட கை தட்டி பாராட்டலாம்... இந்த முறை உங்களுக்கெல்லாம் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதிமுக தான் ,..கொஞ்சம் மத்தவங்களும் தமிழ் நாட்டில் பிழைப்பை நடதடுமே பாவம்.... ஒரு குடும்பமே சம்பாதிக்கவேண்டும் என்ற விதியா என்ன?
  எனது கணிப்பு
  அதிமு க -142
  திமுக - 64
  தேமு திக -18
  காங்கிரஸ் -2

  பந்தயம் ????????????????????????

  பதிலளிநீக்கு
 56. லக்கி,தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானுலும் இருக்கட்டும் ஆனால் அரசு மருத்துவனைகள் எல்லாம் மாட்டுத்தொழுவங்களை விட கேவலமாக இருக்கும் நிலையில், கலஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கோடிகளை (இது வரைக்கும் 700கோடி ரூ) தனியார் மருத்துவனைகளுக்கு தாரை வார்ப்பதை மனசாட்சி உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த 700 கோடியை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ஏன் செலவிட்டிருக்க கூடாது.மருத்துவ காப்பீடு என்பது ஒரு மிகப்பெரிய மோசடியான திட்டம்.பெரும்பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்காவிலேயே மருத்துவ காப்பீட்டு நிறுனங்கள் செய்யும் அட்டூழியத்தால் மருத்துவ வசதி அனைத்து தரபினருக்கும் கிடைப்பதில்லை.பெரும்பாலும் ஏழைகள் வாழும் நம் நாட்டில் மருத்துவ காப்பீட்டு நிறுனங்களால் மருத்துவ வசதி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் அபாயம் உள்ளது.

  பதிலளிநீக்கு
 57. அய்யா படகோட்டி,பூணூல் பார்ப்பன ஆதிக்கம் என்று சொல்லி சொல்லியே உங்கள் தலைவரது குடும்பம் 50 தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டதே? 2ஜியில் ராசாவின் பங்கு 1500 கோடியாம். அப்படி என்றால் மற்றவர்களின் பங்கு? நினைத்தாலே கண்ணை கட்டுகிறது.ஆரோக்யமாக உங்கள் கருத்துக்களை எடுத்து வையுங்கள். தேவையின்றி ஜாதியை இழுக்க வேண்டாம்.விகடன் குழுமம் திமுகவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தது ஈழ தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடத்திய நாடகங்களுக்கு பின்னர்தான்.திமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு கருணாநிதிக்கு மாற்றாக மக்கள் ஜெவை தேர்ந்தெடுக்க தயங்குவது மற்றும் மதிமுகவை கூட்டணியை விட்டு வெளியேற்றியது ஆகியவை காரணமாக அமையும்.வெற்றி பெற்றால் ஸ்டாலினிடம் முதல்வர் பொறுப்பை கொடுத்து விட்டு கருணாநிதி ஓய்வு பெறுவது நல்லது.

  பதிலளிநீக்கு
 58. உங்கள் கருத்தே எனது கருத்தும் நண்பரே. இந்த தேர்தலுக்கான வியூகத்தை நமது சாணக்கியர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வகுத்துவிட்டார் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 59. அன்பு யு கி

  படிக்கும் பொழுதே மனம் மகிழ்ச்சியாக உள்ளது!

  உங்கள் எழுத்துக்கள் பலிக்கட்டும்!

  வாசிங்ட்டன்னில் இருந்து ஒரு இனிய பரிசு காத்து இருக்கிறது.

  நன்றி
  மயிலாடுதுறை சிவா...

  பதிலளிநீக்கு
 60. தங்கள் கருத்து ஓரளவு சரியெனவே எனக்கு தோன்றுகிறது.

  எப்படியானாலும் அதிக இடங்களைப் பெறும் தனிப்பெரும் கட்சியாக 70 முதல் 80 இடங்களை திமுக அல்லது அதிமுக பெறக்கூடும் என்பது எனது கருத்து.

  நிச்சயம் இந்த முறை தொங்கு சட்டசபை அல்லது கூட்டணி ஆட்சிதான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

  கூட்டணி ஆட்சி என்று வரும் போது 70-80 இடங்களைப்பெறும் தனிப்பெரும் கட்சி ஏதாவது 2 (அ) 3 கட்சிகளின் (தோராயமாக 15-20 இடங்களைப் பெறும் கட்சிகள்) ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைக்க முடியும்.

  இதன்படி பார்த்தால் கலைஞரால் மட்டும் தான் கூட்டணிகட்சிகளோடு சுமுகமாக இணைந்து ஆட்சியமைக்க முடியும். சென்றமுறை இருந்த அளவிற்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி சேரும் கட்சிகள் மக்கள் நலனை வலியுறுத்தி பிரச்சனைகளின் அடிப்படையில் குரல் கொடுக்கும் கட்சிகளாக இருந்தால் சிறப்பானதொரு ஆட்சி இந்தமுறை அமையும் என்பது எனது கருத்து.

  தேர்தல் கூட்டணியை கூட ஆணவத்துடன் அவமதித்தஜெயலலிதா கூட்டணி ஆட்சி நடத்த தகுதியற்றவர் என்பது என் கருத்து. ஏனெனில் அவர் ஒரு ஈகோ பிடித்த பெண்மணி. கட்சிகாரர்களின் ஆலோசனைகளையோ கூட்டணி கட்சி தலைவரிகளின் கருத்துகளையோ கேட்டு ஆட்சி செய்யும் பொறுமையோ பக்குவமோ இன்னும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை என்பதுதான் சரி அதனை நாம் அனைவருமே தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிலேயே பார்த்தோம். தனது சுயநலத்துக்காக வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதா நிச்சயம் கூட்டணி அரசு அமைக்க தகுதியற்றவர். மீறி கூட்டணி அரசு ஜெயா தலைமையில் அமைந்தால் தமிழகம் மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க தயாராக இருக்கவேண்டும்.

  எனவே இந்த முறை கூட்டணிகட்சிகளோடு திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அதன் நலத்திட்டங்கள் முன்புபோல் மீண்டும் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் யாரும் கவலையே பட வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 61. see the ND tv and TIMES now or wait till MAY 13. Your assumption is absolutly wrong.

  பதிலளிநீக்கு
 62. //வாசிங்ட்டன்னில் இருந்து ஒரு இனிய பரிசு காத்து இருக்கிறது.//

  வாசிங்க்டன்னிலேயே மொட்டையா? சரி சரி

  பதிலளிநீக்கு
 63. விஜய் அரசியலுக்கு வந்தால் நான் தமிழ் நாட்டை விட்டே ஓடிப்போய் விடலாம் என்று இருந்தேன்.நல்லவேளை!
  தப்பித்துக்கொண்டேன்.

  ஆமாம், ரஜினி ஏதோ தேர்தல் நாளன்று விலைவாசி ஏறிப்போய் விட்டது என்று பேட்டி கொடுத்திருந்தாராமே.அப்படி சொல்ல ரஜினிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. இவர் விலை வாசி ஏறிவிட்டதே மக்கள் ரொம்ப சிரமப்படுவார்களே என்று தனது கோடிகளிலான சம்பளத்தை குறைத்துக்கொள்வாரா?. அல்லது இவர் சம்பாதிக்கும் பணம் அனைத்திற்கும் ஒழுங்கான வரி காட்டியுள்ளாரா?. பெருசா பேச வந்துட்டாரு.

  ஒவ்வொரு தேர்தலிலும் இந்தாள் என்னமோ பெரிய புடுங்கி மாதிரி வாய்ஸ் கொடுக்கறது. இல்லைனா இந்தாள் பெரிய சிந்தனையாளர் மாதிரி ஓட்டுப்போடும் போது பெரிய பில்டப் கொடுக்கறது. ஆளையும் மொகரையும் பாக்கவே சகிக்கலை.

  பதிலளிநீக்கு
 64. Hope you will stop blogging if DMK loses. Both are big help to tamil makkal.

  பதிலளிநீக்கு
 65. If DMK wins.., then they successfully done Two things..

  1. Money distribution
  2. Changing the voting machine

  by
  KS

  பதிலளிநீக்கு
 66. தேர்தல் முடிவு ஒரு கணிப்பு - திமுக நூறு இடங்களுக்குக் குறையாமல் வெற்றி பெறும் என்று தெரிகிறது. விஜயகாந்த் கட்சிக்கு எதிர்பார்த்த ஓட்டு வங்கி இ்ல்லை. போன தடவை அவர் பெற்ற ஓட்டு திமுக அதிமுக இரண்டு கட்சியும் வேண்டாம் என்று போடப்பட்ட வாக்குகள். அதே அளவு வாக்குகள் இப்போது எதிர்பார்க்க முடியாது. அதிமுக ஓட்டு வங்கி முப்பது சதவீதம், விஜயகாந்த் வழியாக எட்டு சதவீதம், கம்னீயூஸ்ட் ஓட்டுகள் மூன்று சதவீதம் மற்றவை இரண்டு சதவீதம் ஆக மொத்தம் அதிமுக கூட்டணிக்கு நாற்பத்தி மூன்று சதவீத ஓட்டுகளை பெறும் . திமுக கூட்டணி ஐம்பது சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று நூற்றி ஐம்பது இடங்களுக்கு மேலே பிடிக்கும். இது என் கணிப்பு. முடிவுகள் எப்படி அமைகின்றன என்று பார்ப்போம். - கணியன் பூங்குன்றன். முடிவுகள் இப்படி அமைந்தால் மக்களே பாராட்டுங்கள். வேறு விதமாக அமைந்தால் திட்டாதீர். இது ஒரு நடுநிலையுடன் கூடிய தேர்தல் கணிப்பு.
  - கணியன் பூங்குன்றன்

  பதிலளிநீக்கு
 67. யுவகிருஷ்ணா!
  உங்கள் எழுத்துக்கள் பலிக்கட்டும்!

  Kuwait'ல் இருந்து ஒரு இனிய பரிசு காத்து இருக்கிறது.

  S.Ravi
  Kuwait

  பதிலளிநீக்கு
 68. இங்கு நான் மே-13 ம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யலாம் என்று உள்ளேன்..

  பதிலளிநீக்கு
 69. admk ஜெயிச்சிடுச்சிப்பா..ஜெயிச்சிடுச்சி

  பதிலளிநீக்கு
 70. // எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.//

  ஆகா.. அற்புதமான கருத்து. ஆழ்ந்த சொற்கள். தீர்ந்தது சந்தேகம் :-) . .

  பதிலளிநீக்கு
 71. அண்ணே... இது, திமுகவை கண்டபடி ஓட்டி, நீங்க எழுதின ஸ்பூஃப் கட்டுரைன்னு, இண்ண்ணிக்கிதான் தெரிஞ்சிது. பின்னிட்டீங்க !! சூப்பரப்பு

  பதிலளிநீக்கு
 72. //ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல.//

  ஆஹா.. அடிச்சாருய்யா எங்க தல சிக்ஸரு! கரெகிட்டா சொன்னீங்க . பின்னே? ஸ்பெக்ட்ரம், அண்டார்டிக்காவுல விளையுற கிழங்குன்னுல்ல நாம சொல்லிருக்கணும்..

  பதிலளிநீக்கு
 73. ஆனாலும் நீங்க படா புத்திசாலி.. எலுதி வெச்சிக்கங்க அது இதுன்னு சொல்லிபுட்டு, கடேசில இதெல்லாம் நடக்கலன்னா நானு அது செய்வேன் இது செய்வேன்லாம் சொல்லாம, உட்டீங்க பாருங்க ஒரு எஸ்கேப்பு

  பதிலளிநீக்கு
 74. Shame on your report...Definitely DMK deserve this..don't just support DMK blindly..POWER CUT = POWER CUT..
  and I am not a ADMK guy..just a regular reader of your blog..
  Congrats for your award..keep writing..

  பதிலளிநீக்கு
 75. இந்தப் பதிவிற்கு மே 13 க்குப் பிறகே மறுபதிவு இட வேண்டும் என்று வைராக்கியத்தோடு காத்துக்கொண்டு இருந்தேன்.. அது எப்படி திமுக காரர்களால் மட்டும் தமிழர்களை அடிமுட்டாளாகக் கருதமுடிகிறது.?. நீங்கள் கூறியது போல் திமுகவிற்கு மிக "அதிகமாகவே" இந்தத் தேர்தலில் மக்கள் கொடுத்துள்ளனர்.. எத்தனை எத்தனை குடும்பங்களின் கண்ணீருக்குக் காரணமாக இருந்திருப்பீர்கள்? அப்படியிருக்க எப்படி அவர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடும் என்று எதிர்பார்த்தீர்கள்??  கருத்துக் கணிப்புகள் எல்லாம் மனிதனால் செய்யப்படுபவை..ஆண்டவன் கணிப்பு என்று ஒன்று இருப்பதை எவ்வாறு மறந்தீர்கள்? உங்களைப் பார்த்தால் பரிதாபம் கூடப் படத் தோன்றவில்லை..

  பதிலளிநீக்கு
 76. Your prediction was from heart not from head. I hope you will agree with me now. More than ADMK winning, DMK losing was the right result. Politicians would have assumed they can get away doing anything by paying money.

  பதிலளிநீக்கு
 77. மே 13ம் தேதி பார்க்கிறேன் என்று யாரோ சொன்னாய்ங்க. அதான் பார்த்திட்டுப் போவலாம்ன்னு வந்தேனுங்கய்யா!

  பதிலளிநீக்கு
 78. ithuvarai yuvakrishna (a)lucky look avarkalin katturai,arasiyal paarvaikal,tholai nokku sinthanai,inthi ethirppu(thinippu)poraattam parriya avarudaiya anubavam ponravaikalai padiththu-nettilthaan-bramiththirukkiren.ippothu avarathu arasiyal kanippu,avar marravarkalukku vitta savaal ellam unmaiyaakivitathai paarkkumbothu melum viyappum,aachcharyamum,perumaiyum adaikiren.valarka avar paththirikai,net-thondu.vaazhka kalaignar makkalukku podum naamam

  பதிலளிநீக்கு
 79. //உங்க காமெடிக்கு அளவு இல்லாம போய்கிட்டு இருக்கு. ஒரு அளவோட காமெடி பண்ணுங்க//this become true

  பதிலளிநீக்கு
 80. இவளவு கஷ்டப்பட்டு பணம் கொடுத்தும் எல்லாம் வீணா போச்சே :)))))))))))))))))00

  பதிலளிநீக்கு
 81. 1st time to your Blog.
  Unless and until one gets some personal monitory benefits from an anti-people family Govt one wouldn't write this far

  பதிலளிநீக்கு
 82. What a biased article! How did you manage to win the Sujatha awards!?

  பதிலளிநீக்கு
 83. நக்கீரன் கோவாலு, வீரமணியாருக்கு போட்டியா இளைய தலைமுறையிலும் உங்களை மாதிரி நிறைய பேர் இருக்கிங்க போல! கலைஞர் குடும்பம் பொழச்சுக்கும்!

  பதிலளிநீக்கு
 84. yenna mr yuva ippa yena soldringa?? dmk vin maberum tholviyai patri?

  பதிலளிநீக்கு
 85. 2006 தேர்தலில் என்னுடைய அ தி மு க நண்பர்கள் ஜெயலலிதாவின் வெற்றி உறுதி என்றார்கள். ஆனால் ஜெயலலிதா தோற்றுவிட்டார். அதற்கு எனது தி மு க நண்பர்கள் யாரும் '' என்னமோ ஜெயலலிதா ஜெயித்துவிடுவார் என்று சொன்னீர்கள் ஆனால் என்ன ஆனது '' என்று மனதை புண் படுத்துமாறு கேட்கவில்லை. ஆகையால் கணிப்பு என்பது கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. யுவா கணித்தது தி மு க அரசு செய்துள்ள நன்மைகளை வைத்து. ஆனால் மக்கள் இன்னும் வேறு ஏதோ ஆட்ச்சியாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.

  ஆகையால் ஒருவர் கணித்தது தவறாகும் பொழுது அதற்காக அக்கணிப்பை சொன்னவரின் மனதை புண்படுத்திப் பேசுவதென்பது பண்படா உள்ளத்தை தான் காட்டுகிறது.

  என்றுமே மாறாதது மாற்றம் ஒன்றுதான்.

  அது கருணாநிதிக்கும் பொருந்தும் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு