13 ஜனவரி, 2011

மானமுள்ள ஒரே கவிஞன்!

தோழர்களே!

கவிஞர் காத்துவாயன் (முன்பு குமுதத்தில் கவிதை எழுதியவரா என்று தெரியாது) அவர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக நமது லக்கிலுக் ஆன்லைன் டாட் காமுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு முன்பாக சி.என்.என். டாட் காம், பி.பி.சி. டாட் காம் என்று பல டாட் காம்களுக்கு இதே கடிதத்தை எழுதி அவர்கள் பிரசுரிக்காமல் துப்பி திருப்பி அனுப்பிவிட்டதால் கடைசியாக தூர்தர்ஷன் டாட் காமுக்கு அனுப்பியிருக்கிறார். அங்கும் இந்த கடிதத்தை ஒத்துக் கொள்ளாததால் கடைசியாக நமக்கு அனுப்பி பிரசுரிக்க சொல்லி கேட்டிருக்கிறார். கவிஞர் காத்துவாயனுக்கு லக்கிலுக் ஆன்லைன், அவரது விடா முயற்சியைப் பாராட்டி, தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

இனி காத்துவாயனின் கடிதம் :


அன்புக்குரியவர்களே!

வணக்கம்.

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் கவிதை சங்கமம் ஒன்று நடக்கும். அவர்கள் கூப்பிடாமல் நானே போய் அங்கே யார் கையிலாவது காலிலாவது விழுந்து கவிதை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னை ஊர் உலகம் கவிஞன் என்று ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, நான் ஒப்புக் கொள்கிறேன். எனவே அதே இறுமாப்போடு அவர்கள் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும், கண்டாலும், கண்டுகொள்ளாவிட்டாலும் என் பணி கவிதை பாடி கிடப்பதே என்று பாடி வந்திருக்கிறேன்.

இந்த ஆண்டும் என்னை யாரும் அழைக்கவில்லை. கலந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் சென்னை வரை வந்து போக காசு இல்லை. எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதாய் நீங்கள் புரிந்துகொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் மக்களே. இதை நான் சுயவிளம்பரத்துக்காக செய்வதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். இதை என் பதிவில் போட்டிருப்பதாலோ, ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கிடைக்கும் கேப்பில் எல்லாம் போட்டிருப்பதாலோ நீங்கள் அப்படி நினைத்துவிட வேண்டாம்.

நான் புறக்கணிப்பதால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் இல்லை. நான் புறக்கணிக்கா விட்டாலும் ஒன்றும் சீரும் சிறப்புமாக நடந்தேறிவிடப் போவதில்லை. வழக்கம்போல நான் கவிதை எழுதி என்னுடைய வலைப்பூவில் பதிந்து அதை நானேதான் படித்துக் கொண்டிருக்கப் போகிறேன். யாரும் என் கவிதைகளை படித்து புரிந்து பின்னூட்டம் போடப்போவதில்லை. இருந்தாலும் இதை ஒரு எதிர்ப்பாக நீங்களெல்லாம் பதிவு செய்துக்கொண்டு, என்னை மனச்சாட்சியும் மானமும் உள்ள தமிழனாக, கவிஞனாக போற்றவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்
மானமுள்ள கவிஞர் காத்துவாயன்


அன்பிற்குரிய கவிஞர் காத்துவாயர் அவர்களே!

இனி உங்கள் பெயரை 'வாயன்' என்று 'ன்' போட்டு எவனாவது மரியாதைக்குறைவாக எழுதினால் அவனுடைய மென்னியை முறிக்க லக்கிலுக் ஆன்லைன் கொலைவெறிப்படை தயாராக இருக்கிறது. நமது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் உருப்படியாக எதையும் இதுவரை பிரசுரித்ததில்லை. இனியும் பிரசுரிக்கும் எண்ணமும் இல்லை. உருப்படாத இந்த வலைப்பூவில் உங்களுடைய உருப்படாத கவிதைகளை இட சித்தமாக இருக்கிறோம். பின்னூட்டங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாமே வெவ்வேறு பெயர்களில் பாராட்டியும், திட்டியும் எழுதி கணக்கு காட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு கவிதை எழுத பணம் மட்டும் கொடுக்க இயலாது. உங்கள் கவிதைகளை படிக்கும் துன்பகரமான உணர்வுகளுக்கு நீங்கள்தான் லக்கிலுக் ஆன்லைனுக்கு ஏதோ பார்த்து போட்டு கொடுக்க வேண்டும்.

14 கருத்துகள்:

 1. சவுக்குவுக்கு எதிர்வினை? :)கடைசி வரைக்கும் கவிதய சொல்லவே இல்லை

  பதிலளிநீக்கு
 2. காத்துவாயன் கடிதம் ஒரு லந்துன்னா, அதுக்கு உங்க பதில் கடிதம் லந்தோ லந்துங்ணா! :)

  பதிலளிநீக்கு
 3. ஆமா இவனுங்க எங்க கடிதம் அனுப்பணுமோ அங்கே அனுப்பாம எதுக்கு சவுக்கு தோப்புக்கு அனுப்பரானுங்க?

  பதிலளிநீக்கு
 4. boss the name lukcy look s wrong. its written as lucky luke. a grt comic. dont degrade him and jolly jumper by misspelling them.....

  பதிலளிநீக்கு
 5. ஆக தெளிவாக ஒரே ஸ்விங்கில் யோசிக்கிறீர்கள், ஏதோ மனிதன் அவரின் இனமான உணர்வை சற்று வெளிபடுத்தியிருக்கிறார், அதற்கு போய் இந்த வாங்கு வாங்குவதா, ஆனால் உங்களை அறியாமல் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக் கொண்டு உள்ளீர்கள் தல, நமது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் உருப்படியாக எதையும் இதுவரை பிரசுரித்ததில்லை. இனியும் பிரசுரிக்கும் எண்ணமும் இல்லை. உருப்படாத இந்த வலைப்பூவில் உங்களுடைய உருப்படாத கவிதைகளை இட சித்தமாக இருக்கிறோம். நடக்கட்டும், நடக்கட்டும்

  பதிலளிநீக்கு
 6. முழுநேர திமுக பிரச்சார பீரங்கி யாக உருவெடுக்கும் லக்கி!! பா.விஜய் ஹீரோ ஆனது போல ஒரு பத்திரிகை ஆசிரியராய் வளர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஆமா இந்த இடுகைய லக்கியா எழுதினது??? அங்கதம்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் வழக்கமான லக்கி ஸ்டைல இதுல காணோமே? அதான் கேட்டேன்...

  பதிலளிநீக்கு
 8. கருணாநிதியின் மகள் கனிமொழியின் நண்பர் ஜகத் கஸ்பர் பொறுப்பாளராக உள்ள தமிழ் மையம் அளிக்கும் சென்னை சங்கமம் பற்றி சவுக்கில் வந்த பதிவிற்கு இந்த பதில்.... உங்கள் ப்ளாக் பெயரை "karunanidhi.jaalra" என்று மாற்றி வைத்து கொள்ளுங்கள் யுவகிருஷ்ணா!!

  பதிலளிநீக்கு
 9. பட்டுவண்ண சேலைக்காரி
  என்னே தொட்டு வந்த சொந்தக்காரி
  ஒரு பெண்ணிடத்தில் என்ன என்னங்கடா புதுமை அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் திறமை
  ஹே! சிம்கா.... சிம்கா... சிம்கேளேனே சிகமா

  பதிலளிநீக்கு
 10. தலைவா,

  எனக்கு பிடிக்கிற ஆட்கள் உனக்கேன் பிடிக்கமாட்டேங்குது. முகப்புத்தகம் பெரிய விடயமா ?

  நானும் தன்னம்பிக்கையுடன் போராடி ஒரு கடை திறக்கும் வரை வளர்ந்தவன் தான். படிக்கும் வயதிலேயே வேலைக்கு வந்தவன் தான். போராடி செயித்தவன், இந்த பெயரில் கட வச்சிருக்கான் என்று எதுனாச்சும் கட்டுரை வர வைத்தால், கடைக்கு விளம்பரம் கிடைக்குமே .

  பதிலளிநீக்கு