11 ஜனவரி, 2011

சீமான்!

நாற்பது கோடியாரின் பாணியில் அம்மாவின் கூடாரத்துக்கு செந்தமிழன் சீமான் வந்திருக்கிறார். அம்மாவின் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் ஏற்கனவே அங்கிருப்பவர்களுக்கு தெரியும். ஆனானப்பட்ட தான்னா பான்னாவே ஒரு நாளைக்கு நூற்றியிட்டு முறை கொடநாடிருக்கும் திசை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்துக் கொண்டிருக்கிறாராம். செந்தமிழனுக்கும் யாராவது இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமில்லையா?

தினமும் 'தண்டால்' எடுத்துப் பழகுவது உத்தமம் செந்தமிழரே. டப்பென்று அம்மாவை எங்காவது பார்த்தால் விழுந்து எழ சிரமப்பட வேண்டியதில்லை அல்லவா? முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனைப் பாருங்கள். எவ்வளவு பெரிய மீசை வைத்திருந்தாலும், இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் சங்கோஜமா படுகிறார்?

திருப்பி அடிப்பேன், கையை முறுக்குவேன், காலை முறுக்குவேன் என்றெல்லாம் இனிமேல் சின்னப்பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கப்படாது. தப்பு. தப்பு. அம்மாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுப்பவர்கள் இனி சீமானுக்கும் அவ்வப்பொழுது எழுதிக் கொடுப்பார்கள். அதை மேடையிலோ, பத்திரிகையாளர் முன்னிலையிலோ அப்படியே ஒப்பித்தால் போதுமானது. என்றாவது திடீரென காலைச்செய்திகளில் 'தீயசக்திக்கு சீமான் எச்சரிக்கை!' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும். அதை நாம் தான் சொன்னோமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யப்படாது. ஏற்கனவே வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்டு கோஷ்டிகள் இதைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை. அந்த வேலையை எல்லாம் அம்மாவுக்கு அறிக்கை எழுதித்தருபவர் பார்த்துக் கொள்வார்.

அதென்ன சார் அசிங்கமா கருப்புச்சட்டை? ஓ.பி.எஸ்.ஸோ, ஜெயக்குமாரோ, இப்படியா சட்டை போடுகிறார்கள்? வெள்ளை வெளேரென்று 'பளிச்'சுனு இருக்க வேண்டாமா? நீங்கள் சினிமாக்காரர் இரட்டை இலை சின்னம் பொறித்த பச்சை சட்டை போடலாம். சேகர்பாபு மாதிரி சபரிமலைக்கு மாலைகூட போட்டுக்கலாம்.

அசடு மாதிரி பெரியார், எம்.ஜி.ஆருன்னு முன்னைமாதிரி பேசிக்கிட்டு திரியாதிங்க. வைகோவை பாருங்க. அம்மாவை தவிர வேற யாரை பத்தியாவது பேசுறாரா?

முன்பெல்லாம் நீங்கள் வெறும் சினிமாக்காரர். யாராவது ஸ்டில் போட்டோகிராபரை வைத்து பிரபாகரன் மாதிரி, சேகுவேரா மாதிரி, அமெரிக்க சுதந்திரச்சிலை மாதிரியெல்லாம் போஸ் கொடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டினீர்கள். இனிமே அது மாதிரி ஒட்டுனீங்கன்னா உங்க வாலை அம்மா ஒட்ட நறுக்கிடுவாங்க. பவ்யமா அம்மாவுக்கு பின்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி கிராஃபிக்ஸில் ஒரு போட்டோவை உருவாக்கி வெச்சுக்கங்க. அம்மா பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கவும், விளம்பரம் கொடுக்கவும் உதவும். அம்மா பிறந்தநாள் என்றதுமே நினைவு வருகிறது. நீங்களும் அலகு குத்தி தேர் இழுக்கணும் சாமியோவ். பேக்கு பத்திரம்.

இனிமேல் மேடையில் பேசும்போது புலி, கிலியென்று தெரியாமல் கூட பேசி அம்மாவை சீற்றப்படுத்தி விடாதீர்கள் சீமான். ஈழத்தாய் இதையெல்லாம் விரும்புவதில்லை. உங்களுக்கும், வைகோ மற்றும் நெடுமாறனுக்கும் மட்டும் தெரிந்த "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" ரகசியத்தை அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ சொல்லிவிடாதீர்கள். மறுபடியும் இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் போடணும்னு ஈழத்தாய் தீர்மானம் போடவேண்டியிருக்கும். அம்மாவைப் பொறுத்தவரை "ஈழமா? அது எங்கே இருக்கு?". நீங்கபாட்டுக்கு ஈழம், கீழம்னு எதையாவது உளறி கிளறி தள்ளிடப் போறீங்க. அப்புறம் ஆத்தா 'ஆடிட்டர் ட்ரீட்மெண்ட்' எடுத்துடுவாங்க.

கடைசியா ஒண்ணு. தினமும் காலையில் எழுந்ததுமே 1008 வாட்டி 'அம்மாவே சரணம்' எழுதிடுங்க. ஆட்டம் பழகிடும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் கஷ்டமாதான் இருந்தது. இப்போ அடிச்சு ஆடுறதில்லையா?

புலியெல்லாம் பூனை ஆகிற காலமிது. நீங்கள் வெறும் எலிதானே? தேய்ந்து கட்டெறும்பாகிப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அம்மா காலில் விழும் உங்கள் தன்மான அரசியலுக்கு வாழ்த்துகள்.

45 கருத்துகள்:

 1. ஐயோ ..ஐயோ .. இவரு பாவம் ..இப்பிடி ஆயீட்டாரே

  பதிலளிநீக்கு
 2. நேற்று சீமானை பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்த போது...
  ஒருவர் இப்படி சொன்னார்...

  திடிர்னு காங்கிரஸ் அதிமுக கூட்டனி வச்சிகிட்ட சீமான் என்ன செய்வார்னு கேட்டாங்க???

  அப்ப சீமான் யாரை ஆதரிப்பார்......??

  பதிலளிநீக்கு
 3. சீமான் என்றில்லை ராமதாஸ்,திருமாவளவன்,கி.வீரமணி, யாரய்யா அவர் புதிய தமிழகம் தலைவர் ஏதோ கி யில் ஆரம்பிக்குமே கிருஷ்ணமூர்த்தி எவரிலும் நம்பிக்கை இருந்ததில்லை வைகோ தவிர்த்து என் எண்ணத்தை இன்று வலுப்படுத்தியிருக்கிறார் 2011 இல் சட்டசபை செல்லப்போகும் சீமான். சீக்கிரமே "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" பாடலாம்

  பதிலளிநீக்கு
 4. அப்பா சாமி! முடியல......5:45 பிற்பகல், ஜனவரி 11, 2011

  சீறும் செந்தமிழன் சீமான்: யார் காலையும் நக்கிப் பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை............?

  அப்படிப் பேசியது போன வாரம்...........
  அம்மா காலடி சரணம் இந்த வாரம்...........

  பதிலளிநீக்கு
 5. சீமானுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 6. கலக்கல் பதிவு...சீமான் இதைப் படிக்க வேண்டும் என்பது என் ஆசை..

  பதிலளிநீக்கு
 7. prostration for amma. Paarattu vizha for thatha.Idhayam ezhudhalamae Yuva

  பதிலளிநீக்கு
 8. சீமான் ஜெயலலிதாவிடம் சரண்டடைந்தது தப்பென்றாலும்,அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியதில் கருணாநிதிக்குப் பெரும் பங்குண்டு என்பதும் மறுப்பதிற்கில்லை.

  பதிலளிநீக்கு
 9. well said so.....
  he is going to realise soon....
  vaanaliku thappi adupula vilunth kathaithan seeman kathai ini?!! kalathin katayam

  பதிலளிநீக்கு
 10. Did not expect this from you, very disappointed with your article.

  பதிலளிநீக்கு
 11. கவலைப்படாதீங்க யுவா அம்மா ஆட்சி மலர்ந்ததும் எப்படியும் இவர் பொடாவில் உள்ளே போவது உறுதி

  பதிலளிநீக்கு
 12. வாய்ப்பே இல்லை! அருமையான பதிவு...

  என்னைக் கவர்ந்த சில அதிரடி வசனங்கள்:

  1.என்றாவது திடீரென காலைச்செய்திகளில் 'தீயசக்திக்கு சீமான் எச்சரிக்கை!' என்று தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும். அதை நாம் தான் சொன்னோமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யப்படாது.

  2.உங்களுக்காக நீங்கள் சிந்திக்கத் தேவையில்லை.

  3.வைகோவை பாருங்க. அம்மாவை தவிர வேற யாரை பத்தியாவது பேசுறாரா?

  4.பவ்யமா அம்மாவுக்கு பின்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி கிராஃபிக்ஸில் ஒரு போட்டோவை உருவாக்கி வெச்சுக்கங்க. அம்மா பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கவும், விளம்பரம் கொடுக்கவும் உதவும்.

  5.உங்களுக்கும், வைகோ மற்றும் நெடுமாறனுக்கும் மட்டும் தெரிந்த "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" ரகசியத்தை அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ சொல்லிவிடாதீர்கள். மறுபடியும் இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் போடணும்னு ஈழத்தாய் தீர்மானம் போடவேண்டியிருக்கும்.

  இதெல்லாத்தையும் விட நீங்க சொன்ன தத்துவமே இப்பதிவை உயர்த்திக் காட்டுகிறது.

  //புலியெல்லாம் பூனை ஆகிற காலமிது. நீங்கள் வெறும் எலிதானே? தேய்ந்து கட்டெறும்பாகிப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அம்மா காலில் விழும் உங்கள் தன்மான அரசியலுக்கு வாழ்த்துகள்.//

  --
  http://goo.gl/RoMyo

  பதிலளிநீக்கு
 13. என்ன செய்ய காலத்தின் கோலம் சீமான் அவர்களுக்கு, கருணாநிதியிடம் சரண் அடைந்திருக்கலாம், அவருக்கு பிழைக்க தெரியவில்லை, எனது அருமை சீமாச்சு என்று அவரும் கர கர குரலில் வாழ்த்துப்பா பாடியிருப்பார், என்னமோ போங்கள்

  பதிலளிநீக்கு
 14. //இனிமேல் சின்னப்பிள்ளைகள் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கப்படாது. தப்பு. தப்பு.//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்........

  பதிலளிநீக்கு
 15. yuva, after 'chhee'maan interview with poiko i am eagerly came with your blog but not seen any regard that one... now i saw your blog.. wonderful.. 'chhee'maan also bark hereafter little loud more than before with poiko and bondiyan.. its all fate of tamil parambara... 2nd ETTAPAN CHHEEMAAN act well with 1st ETTAPAN POIKO and jalra bondiyan.. they all bark well more than before park @ garden..

  பதிலளிநீக்கு
 16. தம்பி சீமானுக்கு இப்படி ஒரு மானங்கெட்ட பொழப்பு தேவையா. இருந்தாலும் லக்கி அண்ணன்லாம் திமுகவை சப்போர்ட் பண்றப்ப சீமான் தம்பி அதிமுகவை சப்போர்ட் பண்ணா தப்பு இல்லைங்கிறேன். spectrum ஊழலே இல்லன்னு அண்ணன் சொல்லறப்ப, ஜெயா ஊழலே பண்ணலன்னு தம்பி சொல்லலாங்கறேன். கலைஞர் பாணில கேக்கணும்னா தம்பி சீமானை பத்தி பேச அண்ணன் லக்கிக்கு என்ன தகுதி இருக்குன்கிறேன்.

  பதிலளிநீக்கு
 17. புதிய‌ பாதை‍யில் வி.கே.ஆர். சொல்வாரே.. இந்த‌ப் புலி புல்லையும் தின்னும் புண்ணாக்க‌யும் தின்னும். ந‌ல்ல‌ வேளை.. க‌ன்னுக்குட்டியான‌ க‌ட்டுத்த‌றி காளைனு இவ‌ரைப் ப‌த்தி புக் போடாம‌ இருந்தா ச‌ரி.

  -Toto.

  பதிலளிநீக்கு
 18. இப்படி எழுதவே கடுப்பாத்தான் இருக்கு! ஆனா வேற எதுவும் சொல்ல முடியல !
  பாராளுமன்ற தேர்தலில் சீமான் அதிமுக வுக்கு ஒட்டு போட சொன்ன போது அவர் ஜெ காலில் விழுந்ததை நீங்கள் கவனிக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 19. சிலிக்கன் சில்லு12:12 முற்பகல், ஜனவரி 12, 2011

  கருணாநிதியும் அவரது சிந்தனையும் மட்டும்தான் இன்னமும் பின்னோக்கி இருக்கிறது. அவர் முற்போக்குவாதியாக இருப்பது ஊழலில் மட்டும்தான். அம்மா எவ்வளவோ மாறி விட்டார். இன்னமும் மாறுவார். நீங்கள் சொல்லும் அளவுக்கு மோசமாக சீமான் போகவேண்டிய அவசியமே இருக்காது. அறிக்கை எழுதுபவர் எழுதிய அறிக்கை தான் ராசா ராசினாமாவுக்கே அடி போட்டது. இன்னமும் தூங்கிக்கொண்டே இருந்தால் எப்படி. எழுந்தால் தான் கனவு களையும். தேர்தல் வேறு வருகிறது.

  பதிலளிநீக்கு
 20. super "யாராவது ஸ்டில் போட்டோகிராபரை வைத்து பிரபாகரன் மாதிரி, சேகுவேரா மாதிரி, அமெரிக்க சுதந்திரச்சிலை மாதிரியெல்லாம் போஸ் கொடுத்து ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டினீர்கள். இனிமே அது மாதிரி ஒட்டுனீங்கன்னா உங்க வாலை அம்மா ஒட்ட நறுக்கிடுவாங்க. பவ்யமா அம்மாவுக்கு பின்னாடி கையை கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி கிராஃபிக்ஸில் ஒரு போட்டோவை உருவாக்கி வெச்சுக்கங்க. "

  பதிலளிநீக்கு
 21. யு கி

  சூப்பர்!

  அண்ணன் சீமான் மீது எனக்கும் வருத்தமே!

  போராளி போய், தற்பொழுது அரசியல்வாதி!

  மயிலாடுதுறை சிவா....

  பதிலளிநீக்கு
 22. அண்ணனுக்கு நூறு பாக்கெட் ஈனோ பார்சல்...

  பதிலளிநீக்கு
 23. அசோக் மூர்த்தி9:04 முற்பகல், ஜனவரி 12, 2011

  அது என்னமோ வாஸ்தவம்தான்.. எல்லாம் தேர்தல் முடியற வரைக்கும்தான் ..ரிசல்ட் வேற மாதிரி போனா , போன தடவ சரத்,ராதிகா மாதிரி திரும்பவும் வந்துட வேண்டியதுதான் .. எதாவது பிரச்சனை ஆச்சுனா இருக்கவே இருக்கு கலைஞரின் கண்கள் பணிக்கும் , எதையும் மன்னித்து ஏற்று கொள்ளும் இதயம் .. பாப்போம் என்னதான் ஆகுதுன்னு ?

  பதிலளிநீக்கு
 24. அது என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல அம்மா கிட்ட போனவுடனே தமிழன், தன்மானம் இந்த வார்த்தையெல்லாம் மறந்தே போயிடுது. வரும் பதினாலாம் தேதி நம்ம சோ சார்வாள் நாட்டின் நிலவரம் பத்தியும், ஷூத்ராள் ஆட்சியின் அவலங்கள், அம்மா ஆட்சி ஏற்படுபவதன் நன்மைகள் பத்தியெல்லாம் அவாளுடைய ஷங்கீத ஷபையில பேஷப் போரறா. அதக் கேட்டுண்டு அத அப்படியே அம்மாவாண்ட ஒப்பிச்சி காமிச்சா 'பேஷ்'ந்னு ஷொல்வா!

  பதிலளிநீக்கு
 25. To show his anger against Karunanidhi for tightly clinging to his chair and coalition to not to have stopped Tamils killings, he doesn't have any option other than fall at the feet of Jayalalitha. If there was an alternate force other than Jaya, I am sure he would have gone to them. The only goal which is uniting all these people is to remove Karunanidhi from power. I am sure in your deepest of heart you may agree, but what to do, you are proclaimed DMK supporter.

  பதிலளிநீக்கு
 26. சீமான் அவர்களுக்கு நீங்கள் அ.தி.மு.க விற்கு வரும்போது திமுக கொபசே இப்படியெல்லாம் சொல்லுவார் ?!

  பதிலளிநீக்கு
 27. இத மாதிரி விடுதலை பூனை திருமாவளவனை பற்றியும் ஒரு பதிவை போட முடியுமா.. உங்களுக்கெல்லாம் கருணாவுக்கு சொம்பு தூக்கி அவர்கள் குடும்ப முறைவாசல் செய்யணும், அப்படின்னா தான் முற்ப்போக்குவாதி? ன்னு ஒத்துக்குவீங்க..

  பதிலளிநீக்கு
 28. இதே போல‌ ஒரு க‌ட்டுரை விஜ‌ய‌காந்துக்கும் எழுதி த‌யாராக‌ வைத்திருங்க‌ள். நீல‌கிரி மாவ‌ட்ட‌ தி. மு. க‌ வின‌ர் அதை துண்டுப் பிர‌சுர‌ம் வெளியிட‌ அனும‌தி கேட்டால், ஒத்துக்கொள்ள‌வும். "விஜ‌ய‌காந்த்", "தே. மு. தி. க‌" போன்ற‌ புத்த‌க‌ங்க‌ளுட‌ன் அந்த‌ க‌ட்டுரைக‌ளை இணைத்துக் கொடுப்ப‌து ப‌ற்றி சிந்திக்க‌வும்.

  கிருஷ்ண‌மூர்த்தி

  பதிலளிநீக்கு
 29. யுவ கிருஷ்ணா ,
  எலியோ புலியோ.. நீங்க (தி மு க) சீமானை கண்டு பயத்துல இருக்கீங்கனு மட்டும் தெரியுது...
  அதனால தானே இரண்டு முறை அவரை தூக்கி உள்ள போட்டாங்க..
  பயப்படாதீங்க..... தி மு க வின் 'வெற்றி' மட்டுமே இவர்களுக்கு தக்க பதிலாய் அமையும்...
  ஆமா அழகிரியை சமாதனம் பண்ணியாச்சா... ?

  பதிலளிநீக்கு
 30. திருமாவுக்கு அம்மாவோட கூட்டணியில இடமிருக்கா...

  எந்த தொகுதி வேணுமின்னாலும் கேளுங்க..... எத்தனை தொகுதி வேணுமின்னாலும் கேளுங்க...

  ஆனா ஒரே கன்டீஷன்.....
  மீசைய முறுக்காம.... எறக்கிவுட்டு வாங்கன்னு சொன்னாங்களாமே... அப்படியா?

  - சென்னைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 31. Lucky,
  Super !!!!!!!!!

  No body want to comment this post?. Opposing DMK is a fashion for intellectuals. Keep it guys !!!!!!

  பதிலளிநீக்கு
 32. நான் நினைச்சேன்... நீங்க சொல்லீட்டீங்க...

  வாழ்த்துக்கள்... சீமானுக்குத்தான்..!!

  பதிலளிநீக்கு
 33. Can expect below shall happen in due course,

  1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
  2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
  3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
  4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
  5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

  Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

  But the question is,

  BY WHOM DMK to be defeated?

  Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

  In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

  பதிலளிநீக்கு
 34. இப்ப என்ன சொல்ல வரீங்ணா..? சீமான் சீச்சீ-மான் ஆயிட்டாருங்கறீங்களா?

  பதிலளிநீக்கு
 35. >> உடன்பிறப்பு said...

  கவலைப்படாதீங்க யுவா அம்மா ஆட்சி மலர்ந்ததும் எப்படியும் இவர் பொடாவில் உள்ளே போவது உறுதி>>

  உடன்பிறப்பே, உனக்கே அம்மா
  ஆட்சிக்கு வந்து விடுவாரென்று தோன்றுகிறதா? அதுவும் உறுதியாக வேறு.

  பேஷ், பேஷ்

  பதிலளிநீக்கு
 36. தமிழ் இன துரோகிக்கியை ஆதரிக்கும் கிருஷ்ணாவுக்கு சீமானை பற்றி பதிவு எழுத தகுதி இல்லை.

  பதிலளிநீக்கு
 37. >> Can expect below shall happen in due course,

  1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
  2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
  3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
  4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
  5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

  Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

  But the question is,

  BY WHOM DMK to be defeated?

  Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

  In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.<<

  I mostly concur with Prakash.

  பதிலளிநீக்கு
 38. Daily our fishermen are either harrassed or killed by Srilankan navy ,but your leader Mu.karunaa keeps his mouth shut .... but he does everything to keep vampire sonia happy .... so .... enemy jaya is better than traitors like karunaa.

  பதிலளிநீக்கு
 39. மானமுள்ள திமுக காரன் தமிழினத்துக்கு விசுவாசமாக இருப்பான்.

  பிழைக்கத் தெரிந்தவர்கள் தேகிய நீரோட்டத்தில கலந்து மானமுள்ள தமிழனை கலாய்ப்பார்கள்.

  ராஜிவ் பேரை வச்சாச்சு..இனி என்ன - தமிழ்நாடு என்கிற பேரை சென்னை மாகாணம்னு மாத்த வேண்டியதுதான் பாக்கி.

  http://videos.desishock.net/index.php?module=item&action=show_item_full&itemid=1466802&itemurl=aHR0cDovL3d3dy55b3V0dWJlLmNvbS93YXRjaD92PXdkM2VDa1lQR04wJmZlYXR1cmU9eW91dHViZV9nZGF0YQ==

  பதிலளிநீக்கு
 40. போர்க்களத்தில் எதிரியை வெல்வதற்கு ஆயுதம் வேண்டும். அதுவும் வலிமையான ஆயுதம் வேண்டும். எங்கள் முன் நிறைய ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், வலிமையான ஆயுதம் அ.தி.மு.க.தான். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இரட்டை இலைதான் எதிர்த்து நிற்கும். அதனால் காங்கிரஸை தோற்கடிக்க இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம். இதுதான் என்பதல்ல... "கை'யை எதிர்த்து பம்பரம் நின்றாலும், மாம்பழம் நின்றாலும், முரசு நின்றாலும், அரிவாள் சுத்தியல் நின்றாலும் அதனைத்தான் ஆதரிப்போம். அதனால், காங்கிரஸை யார் எதிர்க்கிறார்களோ, அவர் களில் தோற்கடிக்கும் வலிமையுள்ளவர்கள் யாரோ அவர்களை ஆதரிப்பதுதான் எங்கள் வியூகம். எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க. ஒரு கருவி. வலிமையான கருவி. எதிரியை வெல்ல அந்த கருவியை தூக்கி சுழற்றுகிறோம். அவ்வளவு தான். அதற்காக, இவர்களது மேடையில் ஏறி முழங்குவோம் என்று அர்த்தப்படுத்திக் கொள் ளாதீர்கள். எங்கள் மேடை தனி, பாதை தனி! அதனால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இன்னும் ஒன்று சொல்கிறேன்... காங்கிரஸோடு ஜெயலலிதா கூட்டணி வைத்தால்... ஜெயலலிதாவை தோற்கடிப்பது தான் எங்களது முதல் பணியாக இருக்கும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமே கிடையாது. ஆக, காங்கிரஸோடு சேர்ந்து யார் இயங்கினாலும் அவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் எதிரிகள். பிரபாகரனை தூக்கிலிடுங்கள் என்றுதான் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இன்றைக்கு தமிழீழமே அழிந்துபோக காரணம் காங்கிரஸ்தானே!

  சீமான்

  மூலம்: நக்கீரன் - தை 14, 2011
  பிரசுரித்த நாள்: Jan 14, 2011 10:44:04 GM

  பதிலளிநீக்கு
 41. http://thatstamil.oneindia.in/news/2011/01/13/rajapaksa-calender-distributed-school-children-aid0091.html

  Please directly respond to this disgusting news about the 'inthiya thEsam' that Mu ka is trying to serve like a "pet which more loyal than the Master itself".

  Is this the Dravidian/tamil reality that you wish to uphold?

  பதிலளிநீக்கு
 42. சோற்றில் விஷம் ஊற்றியவனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்?
  களத்தில் நிற்கும் காங்கிரஸ்தான் என் எதிரி. எதிரியைக் கொல்லக் கையில் கிடைப்பது களைகொத்தோ... மண்வெட்டியோ... எதுவாக இருந்தாலும் எடுத்து அடிப்பதுதானே சரியாக இருக்கும். அந்த நேரத்தில் என் கையில் கிடைத்தது இரட்டை இலை என்கிற ஆயுதம். அதனால்தான் அதை எடுத்து அடித்தேன். இலைக்கு வாக்குக் கேட்டதை வம்பாக மாற்றியவர்கள் பம்பரத்துக்கும், மாம்பழத்துக்கும், சுத்தியல் நட்சத்திரத்துக்கும் நான் ஓட்டுக் கேட்டதை நயமாக மறந்து விட்டார்கள்.

  ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பி, என்னைக் களங்கப்படுத்தி விடலாம் என நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்... இந்தத் தேர்தலிலும் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி அ.தி.மு.க-வாக இருந்தால், இந்த சீமானின் குரல் இரட்டை இலைக்குத்தான் பரப்புரை செய்யும். இதை வைத்தே, 'அம்மையார் அள்ளிக் கொடுத்துவிட்டார்’ எனக் கிளப்பிவிடத் துடிக்கும் அரைகுறைகளே... உங்களுக்குச் சொல்கிறேன்...
  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் இந்த சீமான் இருக்கப்போவது சிறைச்சாலையில்தான்!

  ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் அவரை பற்றி விமர்சிப்பதை விட ...................... வேறு என்ன இருக்க முடியும்?

  பதிலளிநீக்கு