15 டிசம்பர், 2010

திமுகவில் சாரு?


கனிமொழி, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், குஷ்பூ என்று திமுக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். போதாதற்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அழகுப்புயலும் (?) கருப்பு சிவப்பு உடை அணிந்திருந்தார். இதெல்லாம் போதாதா, சாரு திமுகவில் சேரப்போகிறார் என்பது உறுதி. விஜய் அதிமுகவில் சேரும்போது, சாரு திமுகவில் சேரக்கூடாதா என்ன?

ஒருவழியாக இலக்கிய உலகம் எதிர்ப்பார்த்திருந்த சூறாவளிப்புயல் காமராஜர் அரங்கத்தில் கரையைக் கடந்தது.

கிட்டத்தட்ட ஆயிரத்து எட்டுநூறு இருக்கைகள் கொண்ட காமராஜர் அரங்கில் பாதிக்கு மேல் இருக்கைகள் நிரம்பி வழிந்தது. மனுஷ்யபுத்திரன் காலியாக இருக்கும் இருக்கைகளை காட்டி தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தை நொந்துகொண்டார். சாருவின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசிலடிக்கப்பட, நாணத்தால் சாரு நாணி கோணி அமர்ந்திருந்தார். எஸ்.ரா மேடைக்கு வரும்போதும் செம விசில். வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது அவருக்கு. ஃபுல்மேக்கப்பில் தமிழச்சி தங்கபாண்டியன். 'பந்தா' இல்லாத கனிமொழி கருணாநிதி. சாதாரண கிராமத்தான் தோற்றத்தில் ச.ம.உ. ரவிக்குமார். கருப்பு ஷர்ட்டில் ஸ்மார்ட்டாக மதன். கூலிங்கிளாஸ் போட்ட நந்தலாலா மிஷ்கின். தில்லானா மோகனாம்பாள் மைனர் கெட்டப்பில் நல்லி செட்டியார். கூடவே இலவச இணைப்பாக ஏ.நடராசன். செட்டியாரும், நடராசனும் அதிஷா-லக்கிலுக் மாதிரி என்று தோன்றுகிறது. எங்கும் சேர்ந்தே வருகிறார்கள். சேர்ந்தே போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புக்பாயிண்ட் அரங்கில் சாருவின் புத்தகம் வெளியிடப்பட்டபோது 125 பேர் வந்திருப்பார்கள். கடந்த ஆண்டு ஃபிலிம் சேம்பரில் 250 முதல் 300 பேர் இருந்தார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1000 பேர் வந்திருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் சாரு சூப்பர்ஸ்டார்தான். வந்திருந்தவர்களில் ஊன்னா தான்னா போன்ற ஓரிரண்டு பெருசுகளை கழித்து கட்டிவிட்டால் மீதி எல்லோருமே இளைஞர்களாகவும், இளைஞிகளாகவும் இருந்தார்கள். சாருவின் போட்டி எழுத்தாளரான
 உ.த. எழுத்தாளரின் கடந்தாண்டு புத்தக நிகழ்வில் தென்பட்ட தலைகள் முழுக்க நரைதலைகளாக இருந்தன என்பது ஏனோ இப்போது சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது.

செட்டியாரின் பேச்சு யதார்த்தமானது. அவரை ஒரு இலக்கியவாதியாகவே (!) நினைக்க முடியவில்லை. அந்த காலத்துலே மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டிலே அரைகிலோ கருவாடு ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்கிற ரேஞ்சில் இயல்பாக, படுத்தாமல் பேசினார். ஏ.நடராசன் பேச மைக் அருகில் வந்ததுமே பலர் 'தம்' அடிக்க வெளியே போனது ஏனென்று தெரியவில்லை. நானும் வெளியே போய்விட்டதால் உள்ளே என்ன பேசினார் என்பது தெரியவில்லை. ரவிக்குமார் குட்டி குட்டியாக உள்குத்து வைத்து பேசினார். சென்னையில் இருந்த சாருவை ஈ.சி.ஆரில் காரில் பார்த்ததாக ஜோக் அடித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியனின் 'சாத்தர்' புராணம் துரதிருஷ்டவசமாக இந்த வருடமும் தொடர்கிறது. சாத்தர் பாவம். கனிமொழி பேச்சு சம்பிரதாயமானது. எஸ்.ரா வழக்கம்போல 'சமகால' விஷயங்களை சமரசமின்றி அசைபோட்டார். மதனின் பேச்சு அவரது கார்ட்டூனை போலவே கலக்கலானது.

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருப்பது மிஷ்கினின் பேச்சு. அவரது பேச்சில் என்ன குற்றமென்று எனக்குத் தெரியவில்லை. நண்பர் சரவண கார்த்திகேயனின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு எப்படி பேசினாரோ, அதைபோலவேதான் இன்று மிஷ்கினும் பேசியிருக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். 'சரோஜா தேவி புக்' என்று சொன்னதால் சாரு கவலைப்படுகிறாரோ, விமர்சனங்கள் குறித்து இதுவரை கவலைப்பட்டவர் அல்லவே அவர்? "ஆமாண்டா. அப்படித்தாண்டா!" என்று சொல்லும் சிங்கமாகதான் சாருவை இதுவரை பார்த்திருக்கிறோம். உ.த.எ.வும், சாருவும் வித்தியாசப்படும் முக்கியமான புள்ளி இது. மிஷ்கின் மீது கோபம் வேண்டாம் சாரு. அவரும் உங்களைப்போல வெள்ளந்தி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்.

'தேகம்' வாங்கினோம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஒரு 'பிட்' நிச்சயம். இன்னும் முழுமையாக படிக்கவில்லை. முதல் அத்தியாயத்தை மேய்ந்ததில் ஃபேன்ஸி பனியன் நினைவுக்கு வருகிறது. இதுமாதிரி பிட்டுகளால்தான் விடலைகள் விட்டில் பூச்சிகளாய் சாருவிடம் மாட்டுகிறார்கள். பிற்பாடு அவர்கள் விஷயம் தெரிந்துகொள்வதும் சாருவிடம்தான்.

இறுதியாகப் பேசவந்த சாரு வழக்கம்போல ஜோவியலாகப் பேசினார். 'கட்சிக்கலர்' குறித்து விளக்கம் தெரிவித்தார். பல்வேறு கட்சிகளிலும் தனக்கு நண்பர்களும், வாசகர்களும் இருக்கிறார்கள். அதுபோல திமுகவிலும் இருக்கிறார்கள் என்றார். எனவே இப்போதைக்கு சாரு திமுகவில் சேரமாட்டார் என்று தெரிகிறது.

எது எப்படியோ? சாருதான் இன்றைய இலக்கிய சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த புத்தக விழாவின் மூலமாக நிரூபித்திருக்கிறார். இரவு பத்தரை மணி வரையிலும் மகுடியை கண்ட நாகமாய் கூட்டம் திரண்டிருந்ததே இதற்கு சாட்சி.

18 கருத்துகள்:

 1. //எது எப்படியோ? சாருதான் இன்றைய இலக்கிய சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த புத்தக விழாவின் மூலமாக நிரூபித்திருக்கிறார்//
  :-))

  பதிலளிநீக்கு
 2. //மிஷ்கின் மீது கோபம் வேண்டாம் சாரு. அவரும் உங்களைப்போல வெள்ளந்தி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்//

  நீங்க சொல்றதும் சரி மாதிரித்தான் இருக்கு! :-)
  ஆனா சாரு நேற்று ஆரம்பித்து விட்டாரே!

  பதிலளிநீக்கு
 3. Yessed.

  பதிவுக்கும் அந்த போட்டாவுக்கும் என்ன சம்பந்தம்?

  பதிலளிநீக்கு
 4. பாலகுமாரன் வருகை பற்றி எழுதவே இல்ல

  பதிலளிநீக்கு
 5. அப்புறம் ஏன் மிஷ்கின் மேல் இந்த பாய்ச்சல் பாய்கிறார்?

  பதிலளிநீக்கு
 6. யுவா
  கட்டுரைக்கும்,அந்த பெண் படத்துக்கும் என்ன தொடர்பு? :)

  பதிலளிநீக்கு
 7. தோழர்களே!

  charu என்று டைப் அடித்து கூகிளில் தேடியபோது இந்தப்படம்தான் அவசரத்துக்கு அகப்பட்டது :-(

  பதிலளிநீக்கு
 8. யுவா
  நானுன் Charu னு டைப் பண்ணி பார்த்தேன் இந்த பிகுரு போட்டோதான் வருது!

  பதிலளிநீக்கு
 9. நீங்கள் மிஷ்கின் குறித்து எழுதியது ஆறுதலை அளிக்கிறது.ஆனால் உங்கள் குரு அவர் மீது ஒரு வன்முறையையே
  கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
  மற்றபடி தேகம் விமர்சிக்கப்படக் கூட தகுதியில்லாத ஒரு குப்பை.
  இதை வெளியே சொல்ல பயமாய் இருக்கிறது. சொன்னால் சாரு
  மற்றும் அவரது ரசிகர்கள்(?) நம் மீது பாய்ந்து விடுவார்கள்.
  சாரு ஒரு மோசமான autocrat ஆக மாறி வருகிறார்.

  பதிலளிநீக்கு
 10. சமூக பிரக்ஞை இருப்பது போல் எழுதிவிட்டு இடையிடையே ஆபாசங்களை அவிழ்த்து விட்டால் நீங்களும் இலக்கிய சூப்பர் ஸ்டார் ஆகலாம்

  பதிலளிநீக்கு
 11. //தில்லானா மோகனாம்பாள் மைனர் கெட்டப்பில் நல்லி செட்டியார். கூடவே இலவச இணைப்பாக ஏ.நடராசன். செட்டியாரும், நடராசனும் அதிஷா-லக்கிலுக் மாதிரி என்று தோன்றுகிறது. எங்கும் சேர்ந்தே வருகிறார்கள். சேர்ந்தே போகிறார்கள்//

  அதிஷா-லக்கிலுக் ***> இதுல யாரு மைனரு? யாரு இலவச இணைப்பு?

  பதிலளிநீக்கு
 12. அடுத்த வருஷ சீசனுக்கு ஒரு புக் ரெடி...மனுஷ்ய புத்திரன் இப்பவே அட்டையை பிரிண்ட் பண்ணி வச்சுக்கலாம்...'ஒரு நண்பனின் துரோகம்'

  பதிலளிநீக்கு
 13. I can understand why tamilnadu in this stage.Most of the people are wasting time by reading your blogs.Nama munnerava mattom

  பதிலளிநீக்கு
 14. the important thing that i want to know is who is that ALAGU PUYAL?

  பதிலளிநீக்கு